என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரி"
- சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 14-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மருத்துவமனை முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இந்தப் பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.
இங்குள்ள நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல லாரி ஒன்று வந்தது. லாரியை திருத்துறைப்பூண்டி உப்பூக்கார தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 53) ஓட்டி வந்தார்.
கொள்முதல் நிலையத்தில் லாரியை நிறுத்திவிட்டு தான் ஏற்றி வந்த சாக்குகளை இறக்க லாரியின் பின்பகுதி கதவை சுப்பிரமணியன் திறந்து விட்டார்.
அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணியன் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே ஆஸ்பத்திரி இருப்பதால் அவர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார்.
பிரசவ வலியுடனேயே அவர் சைக்கிளை ஓட்டி ஆஸ்பத்திரி போய் சேர்ந்தார். அங்கு சென்ற 10 நிமிடத்திலேயே அவருக்கு ஆழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் தற்போதும் நலமாக உள்ளனர்.
இதனிடையே பிரசவ வலியோடு சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தது குறித்து ஜூலி, பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் “முக்கியமான செய்தி! இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து முடிந்துவிட்டது. ஆச்சரியப்படும் விதமாக இப்போது எங்களிடம் நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை உள்ளது. அவளின் தந்தையை போலவே” என குறிப்பிட்டுள்ளார்.
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிகிச்சை அளிக்க லஞ்சம் பெறுகின்றனர் என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அசின்தாஜ் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குளுக்கோஸ் ஏற்ற டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ஆனாலும் அங்கு பணிபுரியும் நர்சு ஒருவர் இதற்காக 200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த லஞ்ச பணத்தை உதவியாளர் ஒருவர் பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து நோயாளியின் உறவினர் வாணியம்பாடி மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
ஏழ்மை காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறோம். இங்கும் சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்கின்றனர். பணம் வாங்கியவர் மீது புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என புகார் தாரர்கள் வேதனையுடன் கூறினர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 50), தீர்த்திகிரி (52) கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தனர். அரசு கழிவறைகள் கட்டும் பணியில் ஒன்றாக ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முருகன் கட்டிட வேலைக்கு செல்லாமல் வெள்ளக்குட்டையில் கட்சி கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட தீர்த்தகிரி அவரை தட்டிக் கேட்டார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் படுகாயமடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆண்கள் வார்டில் தனிதனியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை தீர்த்தகிரியை பார்க்க அவரது மகன் மோகன் (24) வந்தார்.
தந்தையை பார்த்து விட்டு ஆத்திரமடைந்த அவர் ஆண்கள் வார்டில் புகுந்து படுக்கையில் படுத்திருந்த முருகனை கத்தியால் வெட்டினார். அவரது தலை, கை, கால்களில் வெட்டு விழுந்தது. இதனைக் கண்ட நோயாளிகள் கூச்சலிட்டனர். இதனால் மோகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
படுகாயமடைந்த முருகனுக்கு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் புகுந்து தொழிலாளி வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று காலை முருகனின் உறவினர்கள் வெள்ளக்குட்டை பஸ் நிறுத்தத்தில் திரண்டு சாலை மறியல் செய்தனர். தப்பி ஓடிய மோகனை கைது செய்ய கோரி கோஷமிட்டனர்.
இதனால் ஆலங்காயம்- வாணியம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர்.
பெரம்பூர்:
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிபவர் மன்னர் மன்னன்.
நேற்று முன்தினம் டாக்டர் மன்னர்மன்னன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அறையில் தனது பையை வைத்து இருந்தார். ஒரு ஆபரேஷனை முடித்து விட்டு அறைக்கு திரும்பினார்.
அப்போது, லேப்-டாப் வைத்திருந்த அவருடையை பை, செல்போன், ஆகியவற்றை யாரோ திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பூக்கடை புறநகர் போலீஸ் நிலையத்தில் டாக்டர் மன்னர் மன்னன் புகார் செய்தார். இஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்தார்.
இதையடுத்து, உதவி கமிஷனர் லட்சுமணன், மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று டாக்டரிடம் திருடிய வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அவருடைய பெயர் விமல்பாபு (39). விசாரணையில் இவர், கே.எம்.சி., ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்களிடம் திருடியது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 3 லேப்-டாப், 2 டேப்லட், 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விமல்பாபு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே மலையப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதன் ஏதிரே உள்ள ரோட்டில் செல்லப்பன் மற்றும் அவரது 7 வயது குழந்தை காரில் சென்றனர்.
அப்போது எதிர்பாரத விதமாக கார் விபத்தில் சிக்கியது. இதில் இருவரும் காயம் அடைந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றனர்.
அப்போது அங்கு மருந்தாளுனராக பணிபுரிபவர் தீனதயாளன் (வயது 27). மருத்துவர் இல்லை மீட்டிங் சம்மந்தமாக நம்பியூர் சென்று உள்ளார் என கூறினார். நான் முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அனுப்பி வைக்கின்றேன் என கூறினார்.
இதற்கு செல்லப்பன் தீனதயாளனை தாகத வார்த்தையால் பேசினாராம். மேலும் கையால் தாக்கி, கல்லை வீசி கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
மேலும் அவர் கல் வீசியதில் மருத்துவமனையில் சுவரில் மாட்டி இருந்த கண்ணாடி உடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல் விடுத்த செல்லப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தீனதயாளன் கொடுத்த புகாரின் பேரில் வரப்பாளையம் போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் என்ஜினீயர் இவரது மனைவி கோகிலா (வயது 24). கர்ப்பிணியான இவருக்கு உடல்நிலை காரணமாக 7-வது மாதத்தில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 7 நாட்களுக்கு முன்பு பிரசவமானது. அப்போது கோகிலாவுக்கு அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டது. நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து கோகிலாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதயம் சென்னை மலர் ஆஸ்பத்திரிக்கும் கிட்னி, கண்கள், ஆகியவை சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தவர் நிவேதா (வயது 20).
இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகும். தந்தை பெயர் வீரசேகர் விவசாயி. சத்தியமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்த நிவேதா ஆஸ்பத்திரியின் பின்னால் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற நிவேதா மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார். பிறகு யாரும் இல்லாத ஒரு வார்டு அறையில் உள்ள பேன் கம்பியில் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வார்டு அறை தனி அறையாக யாரும் செல்லாத அறையாக இருந்ததால் உடனடியாக இதை யாரும் கவனிக்கவில்லை.
சில மணி நேரம் கழித்து சக ஊழியர்கள் நிவேதா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணமாக தொங்கிய நிவேதா உடலை போலீசார் மீட்டு பிரேதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிவேதா ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், இந்த காதலுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதால் அதிலிருந்து மனம் உடைந்த நிலையில் காணப்பட்டாராம். இதனால் காதல் விவகாரம் தொடர்பாக நர்சு நிவேதா தற்கொலை செய்து இருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் நர்சு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு புதுநகரை சேர்ந்தவர் நடராஜன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி விமலா (வயது 48). இவர்களுக்கு ஜிப்மரில் நர்சாக பணிபுரிந்து வரும் அனிதா உள்பட 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.
இதற்கிடையே விமலாவுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதுபோல் சம்பவத்தன்றும் விமலாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி நடராஜனிடம் கூறினார். ஆனால், விமலாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் நடராஜன் வெளியே சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த விமலா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலிமருந்தை (விஷம்) தின்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த நடராஜன் அங்கு மனைவி விஷம் தின்று மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் ஜிப்மரில் நர்சாக பணிபுரிந்து வரும் தனது மகள் அனிதாவுக்கு தகவல் தெரிவித்து விட்டு விமலாவை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விமலா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை:
மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரம் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாநகராட்சி நகர்நல பிரிவுக்கு புகார்கள் வந்தன.
இது குறித்து நகர்நல அதிகாரிகள் அண்ணா நகர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவத்தன்று சவுராஷ்டிரா புரம் பகுதியில் குறிப்பிட்ட கிளீனிக்குக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ஆனந்தன் என்பவர் மருத்துவம் படிக்காமல் கிளீனிக் நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆனந்தனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்