search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94589"

    யோக நித்திரை மனதை கட்டுப்படுத்தவும், ஒரு நிலைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும். உதவுகிறது. பலவிதமான மன நோய்கள் நீங்கும் பயனுள்ள பயிற்சி இது.
    பெயர்விளக்கம்: யோக நித்திரை என்றால் உடலைப் பற்றிய உணர்வு இல்லாமல் தன்னிலையில் இருப்பதே யோக நித்திரை (அரிதுயில்)

    செய்முறை: சவாகனம் செய்யவும். கீழ்க்கண்ட முறைப்படி காலிலிருந்து தலை வரை உடலின் ஒவ்வொரு பகுதியாக மனதால் நினைக்கவும். காலின் இரு பெருவிரல்கள் முதல் காலின் சிறு விரல்கள் வரை இரண்டு கால்களின் ஒவ்வொரு விரல்களாக முதலில் மனதால் நினைக்கவும், அடுத்து உள்ளங்கால்கள், குதிகால்கள், கணுக்கால்கள், பாதம் முதல் முழங்காலின் கீழ்வரை முழங்கால்கள், தொடைகள், தொடைகளின் சந்து, இடுப்பு, அடிவயிறு, மேல் வயிறு, மார்பக கழுத்து, தாடை, உதடுகள், பற்கள், நாக்கு, மூக்கு, கன்னம், கண்கள், புருவங்கள், நெற்றி, தலையின் மேல்பாகம், தலையின் பின்பக்கம், காதுகள், கழுத்தின் பின்பாகம், புஜங்கள், இரு கைகளின் அக்குள் பகுதி, இரு கைகளின் கட்டை விரல்கள், ஆள் காட்டி விரல்கள், நடு விரல்கள், மோதிர விரல்கள், சிறு விரல்கள், உள்ளங்கைகள், மணிக்கட்டுகள், கைவிரல்களில் இருந்து முழங்கைகள் கீழ்வரை, முழங்கைகள், புஜங்கள் வரை ஒவ்வொன்றாக மனதால் நினைத்துப் பார்க்கவும். அடுத்து தலை பின் பாகம், கழுத்தின் பின் பாகம், முதுகு, முதுகின் கீழ்பாகம், இடுப்பு, பிருஷ்ட பாகம், தொடைகளின் பின் பாகம், முழங்கால்களின் பின் பாகம், அங்கிருந்து உள்ளங்கால்கள் வரை ஒவ்வொன்றாக மனதால் நினைக்கவும்.

    மீண்டும் ஒரு முறை மேல்கண்ட முறைப்படி உடலுறுப்புகளை மனதால் நினைத்து பார்க்கவும். பிறகு இரு கால்கட்டை விரல்களையும், இரு கைகட்டை விரல்களையும் தலையின் உச்சிப் பகுதியையும் மனதால் ஒரே நேரத்தில் நினைக்க முயலவும். இப்படி செய்வது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். அதனால் ஒன்றன்பின் ஒன்றாக கால் கட்டை விரல்களையும், கை கட்டை விரல்களையும் தலை பின் உச்சிப் பகுதியையும் 5 முறை மனதால் நினைக்கவும்.

    முடிவில் நிதானமாக கை, கால் விரல்களை அசைத்து தலையை சில முறை இடது புறமும், வலது பக்கமும் சாய்த்து வலது பக்கம் ஒருக்கலித்து சில வினாடிகள் இருந்து பிறகு இடது பக்கம் ஒருக்களித்து சில வினாடிகள் இருந்து எழுந்து உட்காரவும்.

    8 லிருந்து, 14 வயதிற்குட்பட்ட சிறு வயதினருக்கு யோக நித்திரை பயிற்சி அளிப்போர் மேற்கண்ட முறைப்படி செய்விப்பதைவிட கீழ்க்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்றை கற்பனையாக 10 நிமிடம் மனதால் நினைத்துப் பார்க்கச் சொல்லவும்.

    1. ஒரு தோட்டத்தில் தனியாக இருந்து கொண்டு தனக்குப் பிடித்தமான பூக்களின் அழகான வடிவை ரசித்தல்.
    2. தனக்குப் பிடித்தமான ஆலயத்திற்குப் போய் கடவுளை தரிசித்தல்.
    3. சுற்றுலா சென்ற இடங்களில் தனக்கு மிகவும் பிடித்தமான இடத்தை நினைத்துப் பார்த்தல்.

    பயன்கள் : மனதை கட்டுப்படுத்தவும், ஒரு நிலைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும். உதவுகிறது. உடல், மன சோர்வை, நீக்குகிறது. சிறு வயதிலிருந்து போக நித்திரை பழகும் மாணவர்கள் ஒழுக்க முடையவர்களாக அமைவார்கள். புத்தி மந்தம் நீங்கும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

    உயர் ரத்த அழுத்தம், இருதய பக்க கோளாறுகள், தூக்கமின்மை மற்றும் பலவிதமான மன நோய்கள் நீங்கும் பயனுள்ள பயிற்சி இது. 
    இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வந்தால் கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். பார்வை தெளிவாகும். உறக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு நீங்கும்.
    பெயர் விளக்கம்: கண்களை தூய்மைபடுத்தும் பயிற்சியே த்ராடகா.

    செய்முறை: ஒரு சிறிய முக்காலி அல்லது நாற்காலியின் மேல் எரியும் குத்து விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஒன்றை வைக்கவும். அங்கிருந்து ஒரு மீட்டருக்கு பின்னால் அனுகூலமான தியான ஆசனத்தில் உட்காரவும். தீபத்தின் சுடர் கண்களுக்கு நேராக இருக்கட்டும். கைகளை நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும்.

    மெதுவாக கண்களை திறந்து இமைக்காமல் தீபத்தின் சுடரை உற்றுப் பார்க்கவும்.  பயிற்சியின் போது தீபத்தின் சுடர் அசையாமல் ஒரே சீராக எரிய வேண்டும்.

    முதலில் 1 முதல் 2 நிமிடம் உற்றுப் பார்க்க பழகவும் தொடர்ந்த பயிற்சியில் நேரத்தை அதிகப்படுத்தி 10 முதல் 15 நிமிடம் வரை செய்யவும்.

    பயிற்சியின் இடை, இடையில் கண்களை மூடி புறத்தில் பார்த்த அக்னி சுடர், புருவ நடுவில் பிரகாசிப்பது போல் கற்பனையாக நினைத்துப் பார்க்கவும். பயிற்சியின் முடிவில் கண்களை மூடவும். உள்ளங்களையும் நன்றாக தேய்த்து மூடிய கண்களின் மேல் இரு உள்ளங்களையும் சில நிமிடம் வைத்திருக்கவும். சில நிமிடங்களுக்கு பிறகு முகத்திற்கு முன்பாக இருக்கும் கைகளை எடுத்து வலது உள்ளங்கையை கண்ணால் பார்க்கவும்.

    பயன்கள்:
    கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். பார்வை தெளிவாகும். உறக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு நீங்கும். நினைவாற்றல் மிகும். மன ஒருநிலைப்பாடு அதிகரிக்கும். மனதின் ஆற்றல் அதிகரிக்கும்.

    இந்த முத்திரையை செய்து வந்தால் மன ஒரு நிலைப்பாடு அதிகரிக்கும். கோபம் கட்டுப்படும். பலவிதமான மனக்கோளாறுகளுக்கு நன்மை அளிக்கிறது. மனம் அமைதி பெறும்.
    பெயர் விளக்கம்: ‘அகோசரம்’ என்றால் ஸ்தூலமான கண்களுக்கு புலப்படாதது என்று பொருள்படுகிறது. இம்முத்திரை புறக்கண்களுக்கு புலப்படாத சூட்சும நாடிகளில் பிராண சஞ்சாரத்தை மிகைப்படுத்தி மூலாதார சக்கரத்தை தூண்டுவதால் அகோசரி முத்திரை என்றுஅழைக்கப்படுகிறது.

    செயல்முறை: வசதியான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும். கண்களை மெதுவாக திறந்து கருவிழி இரண்டடையும் மூக்கு நுனியை பார்க்கும்படி வைக்கவும்.

    கண் தசைகளை அழுத்தாமல் வைத்துக் கொள்ளவும். முக தசைகள் இறுக்கமடையாதபடி பார்த்துக்கொள்ளவும். சில விநாடிகளுக்குப் பிறகு கண்களை மூடி ஓய்வு பெறவும்.

    இம்முத்திரையில் மூச்சு சாதாரணமாக இருக்கட்டும். அல்லது சில விநாடிகள் மூச்சுக்காற்றை உள்ளுக்குள் இழுத்து நிதானமாக வெளியே விடவும். ஆரம்பத்தில் ஒரு சுற்றுக்கு சில விநாடியென 5 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்த பயிற்சியால் 10 சுற்று வரை அதிகரித்து 10 நிமிடம் வரை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: கருவிழிகள் இரண்டும் கீழ் நோக்கி இணைந்திருப்பதின் மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயன்கள்: மன ஒரு நிலைப்பாடு அதிகரிக்கும். கோபம் கட்டுப்படும். பலவிதமான மனக்கோளாறுகளுக்கு நன்மை அளிக்கிறது. மனம் அமைதி பெறும்.
    முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
    முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.

    முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
    நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.

    * பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.

    * நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.

    * முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.

    * எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.

    * ஆரம்பத்தில் 10- 15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும். 
    யோகா செய்தால் ஆயுள் கூடும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார். #ADMK #TNMinister #RajendraBalaji
    சிவகாசி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கியமான சுகாதார உணவை சாப்பிடுவதை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான சைக்கிள் பேரணி நடந்து வருகிறது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை வந்து, கன்னியாகுமரி வழியாக சிவகாசி வந்தடைந்தது.

    மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகாசியில் பேரணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

    ராதாகிருஷ்ணன் எம்பி, கலெக்டர் சிவஞானம், எஸ்.பி. ராசராசன், சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    ஸ்வஸ்த் யாத்திரை என்ற பெயரில் நடக்கும் இந்த பேரணியில், ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த சைக்கிள் பேரணி பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்து அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி டெல்லி சென்றடைய உள்ளது.

    மேற்கிந்திய உணவுகளை சாப்பிடுவதால், உடல் பருமன் அதிகமாகி, பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளது. மாணவர்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனை ஆரோக்கியமான முறையில் பேணிகாக்க வேண்டும்.

    சுகாதாரமான வாழ்கை வாழ்வதற்கு, சிறிது சிறிதாக வாழ்கை முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். சுகாதாரமான வாழ்கை என்பது, சரியான உடற்பயிற்சி, சரிவிகித உணவு முறைகள் ஆகியவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும். தினமும் யோகா செய்ய வேண்டும். நான் 25 ஆண்டுகளாக யோகா செய்து வருகிறேன்.

    இன்றைய தலைமுறையினர் யோகா செய்வதை பழகிக்கொள்ள வேண்டும். அதனால் ஆயுள் கூடும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    பின்னர் நகரின் முக்கிய வீதி வழியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, நகர செயலாளர் பொன்சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #TNMinister #RajendraBalaji
    இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.
    மருந்துகளைச் சாப்பிட்டு, உடலைச் சுத்தம் செய்வது போலவே, முத்திரை செய்தும் உடலைச் சுத்தம் செய்துகொள்ள முடியும். உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு வயிற்றில் தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக் காரணம். சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில், கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால், வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும் செயல் துரிதமாகும்.

    செய்முறை :

    கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இருவிரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு, ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

    பலன்கள்

    வயிறு, குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். வயிறு, குடல் சுத்தமாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடையும்.

    பள்ளிச் செல்லும் மாணவர்கள் இரவில் 20 நிமிடங்கள் செய்துவர, காலையில் மலம் கழிக்கும் பிரச்சனை இருக்காது. மந்த குணம், பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

    மூலக்கடுப்பு உள்ளவர்கள் கடுப்பு குறையும் வரை செய்யலாம். மூலத்துக்காக அறுவைசிகிச்சை செய்தவர்கள், ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த முத்திரையைச் செய்துவர, மீண்டும் மூலத்தில் கட்டி, மூலம் தொடர்பான பிரச்னைகள் வராது.

    முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.

    மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க, 5-10 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

    சிறுநீரகக் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறிது சிறிதாகச் சிறுநீர் வெளியேறுதல் போன்ற  பிரச்சனையிருப்பவர்கள், தண்ணீர், இளநீர், கரும்புச் சாறு போன்றவற்றை அருந்திய அரை மணி நேரத்தில், நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை என்ற கணக்கில், 20 நிமிடங்கள் செய்யலாம்.

    மூக்கடைப்பு, தலைபாரம், தலையில் நீர் கோத்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
    காமதேனு முத்திரை முத்திரைக்கு மற்றொரு பெயர் சுரபி முத்திரை. இந்த முத்திரை செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.
    சுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இதில் பஞ்ச பூதங்களும் மாறி மாறித் தூண்டப்படுவதால், காரணம் தெரியாத பல்வேறு நோய்கள் குணமாகின்றன. உடலில் உள்ள குணமாக்கும் சக்திகள் தூண்டப்படுகின்றன.

    செய்முறை

    விரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.

    ஸ்டெப் 1: நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.



    ஸ்டெப் 2: இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.

    ஸ்டெப் 3: இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.

    பலன்கள்

    * அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்.

    * தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.

    * ‘கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.

    * செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.
    இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    யோக சாஸ்த்திரத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைகளில் கருட முத்திரையும் ஒன்று. இதுவும் கருடாசனத்தைப்போலவே செய்வதற்கு மிகவும் எளிமையான ஒன்று. ஆனால் பலனோ மிகவும் அதிகம். அவற்றை எவ்வாறு செய்வது என்பதையும், அதன் பலன்களையும் கீழே காண்போம்.

    செய்முறை :

    1. முதலில் இடது கையின் மேல் வலது கையை வைக்கவும்.

    2. பிறகு வலது கையின் பெருவிரலை படத்தில் காட்டியபடி இடது கையின் பெருவிரலோடு மடக்கிப் பிடிக்கவும்.

    3. இனிமற்ற விரல்கள் அனைத்தையும் நேராக இறக்கையைப் போல் விரிக்கவும். இதுவே கருட முத்திரையாகும்.

    கடைசியாக இறக்கையை விரித்தாற்போல் உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.

    இரண்டு கட்டை விரல்களைத்தவிர உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.

    குறிப்பு

    இந்த கருட முத்திரையை வெறும் வயிற்றில் செய்வது கூடுதல் பலனை அளிக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

    பலன்கள்

    1. உடல் அசதி, சோர்வு நீங்கும்.
    2. உடலில் புத்துணர்ச்சி பெருகும்.
    3. நினைவாற்றலை அதிகரிக்கும்.
    4. பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும்.
    வீரபத்ராசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையும். மேலும் கால்கள், தோள்பட்டைகள் வலுப்பெறும்.
    செய்முறை :

    விரிப்பில் நேரகா நில்லுங்கள். மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை விரிக்க வேண்டும். மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரிக்கலாம். இடது கால் பாதத்தை 45 முதல் 60 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது கால் பாதத்தை 90 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது குதிகாலும் இடது குதிகாலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

    இப்போது உடலை வலது புறம் திருப்ப வேண்டும். கைகளை மேலே கொண்டுசென்று இரு உள்ளங்கைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வலது காலை மடக்குங்கள். வலது தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இடது கால் எந்த நெளிவும் இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.

    உடல் சற்றே பின்னால் வளைய வேண்டும். தலை சற்றுப் பின்புறம் சாய வேண்டும். இந்த நிலையில் 10 முதல் 30 விநாடிகள் வரை இருக்கலாம். உடலில் வலி ஏற்பட்டால் ஒரு சில விநாடிகள் மட்டும் நின்றுவிட்டுப் பழைய நிலைக்கு வரலாம். சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டலாம்.

    இதே போல் இடது பக்கம் செய்யவும். இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யலாம். இடுப்பு, கழுத்து, முழங்கால், பாதம் ஆகிய பகுதிகளில் வலி இருக்கும்போது இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும். இந்த ஆசனம் செய்யும் போது கழுத்தும் உடலும் விறைப்பாக இல்லாமல் இலகுவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

    பலன்கள் :

    இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையும். மார்பு விரிவடைந்து சுவாசம் எளிதாகும். கால்கள் வலுப்பெறும். தோள்பட்டைகள் வலுப்பெறும். மொத்த உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
    கபாலபதி பிராணாயாமம் செரிமானத்தைத் தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. அனைத்து குடல் பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
    முதலில் யோகா விரிப்பில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும்.

    இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும். இதேபோல் 5 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

    பலன்கள்

    மூச்சை இழுத்து விடும்போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இரத்தத்துக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைப்பதால் ரத்தம் சுத்தமாகிறது. செரிமானத்தைத் தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. அனைத்து குடல் பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.

    கண்களில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்குகிறது. உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறையும். மனதை அமைதிப்படுத்தி மனப்பதற்றத்தையும் குறைக்கிறது.
    இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம். இந்த ஆசனம் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.
    ஒருவருக்கு ஹீமோகுளோபின் அளவு குறையும்போது தலைசுற்றல், தலைவலி, சோர்வு மற்றும் அசதி ஏற்படும். இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிலவகை மூச்சுப்பயிற்சிகளையும், யோகாசனங்களையும் தொடர்ச்சியாக செய்து வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

    உஜ்ஜயி பிராணாயாமம்

    யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும்.

    இப்போது மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும். அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும். வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும். பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.

    பலன்கள்

    இந்த பிராணாயாமம் மூச்சினை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், உடலினுள் வெப்பத்தையும் உருவாக்குகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது. உடல், மனம் இரண்டும் புத்துணர்வு அடைகிறது.

    நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. உள்ளே சேர்ந்திருக்கும் சளி இதனால் வெளியேறி விடும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
    ‘பவன’ என்றால் பிராணவாயு ‘முக்த’ என்றால் விடுவிப்பது. ‘ஆசனம் என்றால் இருக்கை உடலில் பிராண வாயு செல்லும் பாதைகளில் ஏற்படும் அடைப்பை நீக்கி பிராண வாயுவை மிகச் செய்வதால் இப்பயிற்சிக்கு பவன முக்தாசனம் என்று பெயர்.
    பெயர் விளக்கம்: ‘பவன’ என்றால் பிராணவாயு ‘முக்த’ என்றால் விடுவிப்பது. ‘ஆசனம் என்றால் இருக்கை உடலில் பிராண வாயு செல்லும் பாதைகளில் ஏற்படும் அடைப்பை நீக்கி பிராண வாயுவை மிகச் செய்வதால் இப்பயிற்சிக்கு பவன முக்தாசனம் என்று பெயர்.

    பயிற்சி 1 : கால் விரல்களை வளைத்தல் :

    தரை விரிப்பின் மேல் கால்கள் இரண்டையும் நீட்டி வைத்து (தண்டாசனத்தில்) அமரவும். மூச்சை வெளியே விட்டபடி இருகால் விரல்களையும் முன் நோக்கி நிதானமாக வளைக்கவும். மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி நிதானமாக இரு கால் விரல்களையும் பின்னோக்கி வளைக்கவும்.
    இது ஒரு சுற்று பயிற்சி ஆகும். இப்படி 10 சுற்று பயிற்சி செய்யவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: பவன முக்தாசனத்தில் வரும் ஒவ்வொரு பயிற்சியிலும் உடலின் எந்த பகுதிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதோ அந்த பகுதியை மனதால் நினைத்து செய்யவும்.

    பயிற்சி 2 குதிகாலை வளைத்தல் : தண்டாசனத்தில் அமரவும். மூச்சை வெளியே விட்டபடி இருபாதங்களையும் நிதானமாக முன்னோக்கி வளைக்கவும்.
    மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி இருபாதத்தையும் பின்நோக்கி வளைக்கவும். இது ஒரு சுற்று ஆகும். இப்படி 10 சுற்று பயிற்சி செய்யவும்.

    பயிற்சி 3 குதிகாலை சுழற்றுதல்: தண்டாசனத்தில் அமரவும். நிதானமாக இரு பாதங்களையும் இடமிருந்து வலமாக 10 முறை சுழற்றவும். பிறகு இரு பாதங்களையும் வலமிருந்து இடமாக 10 முறை சுழற்றவும். இப்பயிற்சியில் கீழ்நோக்கி கொண்டு போகும் போது மூச்சை வெளியே விடவும். பாதத்தை நேராக கொண்டு வரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.

    பயிற்சி 4 : குதிகாலை முன்னுக்கும், பின்னுக்குமாக சுழற்றுதல் : தண்டாசனத்தில் அமரவும். வலது முழங்காலை மடக்கி குதிகாலை நீட்டி வைத்திருக்கும் இடது காலின் தொடைக்கு வெளியே வைக்கவும். வலது கை விரல்களால் வலது கால் மேல்பகுதியை பிடிக்கவும். நிதானமாக பாதத்தை இடமிருந்து வலமாக 10 முறையும், வலமிருந்து இடமாக 10 முறையும் சுழற்றவும். பிறகு இடது காலை மடக்கி மேல் கண்ட முறைப்படி செய்யவும். இப்பயிற்சியில் பாதத்தை மேலே தூக்கும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். கீழே இறக்கும்போது மூச்சை வெளியே விடவும்.
    ×