search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் ஆண்டில் ஒதுக்கிய ரூ.5 கோடியில் ரூ.4 கோடிதான் செலவழித்து இருக்கிறார்கள். ரூ.1 கோடி பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
    • ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம். நீங்கள் செய்தால் சரி. நாங்கள் செய்தால் தவறா?

    சென்னை:

    சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.) பேசினார். அப்போது மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு திட்டத்தை கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

    இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம்தான் அ.தி.மு.க. ஆட்சியின் போது மாணவ-மாணவிகளுக்கு உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

    தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினமும் பல பகுதிகளில் இலவசமாக சாப்பாடு கொடுக்கிறார்கள். அந்த வகையில்தான் அ.தி.மு.க. ஆட்சியில் உணவு கொடுக்கப்பட்டு இருக்கிறதே தவிர அதை அரசு சார்பில் கொடுத்ததாக கூற முடியாது" என்றார்.

    அப்போது மா.சுப்பிரமணியன் ஆட்சேபகரமான ஒரு வார்த்தையை தெரிவித்ததற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

    மேலும் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அரசு சார்பில் காலை உணவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி அதை செயல்படுத்தினார்" என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, "2018-19-ம் ஆண்டு கவர்னருக்கு ரூ.50 லட்சம் ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    2019-20-ம் ஆண்டில் ரூ.50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி கவர்னருக்கு வழங்கி இருக்கிறார்கள். அந்த பணத்தில் இருந்துதான் தன்னார்வ தொண்டு நிறுவனமான அட்சய நிறுவனத்துக்கு காலை உணவு வழங்கியதற்காக பணம் கொடுத்து இருக்கிறார்கள்.

    அதுவும் முதல் ஆண்டில் ஒதுக்கிய ரூ.5 கோடியில் ரூ.4 கோடிதான் செலவழித்து இருக்கிறார்கள். ரூ.1 கோடி பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு கவர்னர் ரூ.1 கோடி தான் உணவு வழங்க செலவழித்துள்ளார்.மீதி ரூ.4 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை. அதற்கான கணக்கும் இதுவரை இல்லை", என்றார்.

    இதற்கு மீண்டும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "இது ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம். நீங்கள் செய்தால் சரி. நாங்கள் செய்தால் தவறா?" என்று விளக்கம் கொடுத்தார்.

    இதனால் காரசார விவாதம் நடந்தது.

    அப்போது அமைச்சர் துரைமுருகன் எழுந்து,"கவர்னருக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி பணம் பற்றி கவர்னர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.

    • கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் ஏகோபித்த அன்பை பெற்ற எடப்பாடி பழனிசாமி இரவு வரை வீட்டுக்கு வந்த அனைவரையும் சந்தித்தார்.
    • எந்த கெடுபிடியும் இன்றி எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்த அனைவரையும் பாதுகாவலர்கள் உள்ளே அனுமதித்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமி வழக்கத்தை விட மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

    தலைமை கழகத்தில் நேற்று அவர் பதவி ஏற்றதும் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை வினியோகிக்கும் அறிக்கையில் கையெழுத்து போட்டு தனது பணியை தொடங்கினார்.

    தலைமைக் கழகத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், டி.ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி அடையார் வீட்டுக்கு சென்றார். அங்கும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான பேர் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் ஏகோபித்த அன்பை பெற்ற எடப்பாடி பழனிசாமி இரவு வரை வீட்டுக்கு வந்த அனைவரையும் சந்தித்தார்.

    எந்த கெடுபிடியும் இன்றி அவரது வீட்டுக்கு வந்த அனைவரையும் பாதுகாவலர்கள் உள்ளே அனுமதித்தனர். இதனால் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    எடப்பாடியை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என வீட்டுக்கு வந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி காணப்பட்டது.

    அடையார் வீட்டில் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசுகையில், ' அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகளை மீண்டும் நம் பக்கம் வரவழைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள். அடுத்தக்கட்ட பணி அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ளதால் அ.தி.மு.க.வை மீண்டும் வலுவான இயக்கமாக மாற்ற இப்போதே ஒன்று சேர வேண்டும். உங்களுக்கே தெரியும். குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர மற்றவர்களை மீண்டும் நம் பக்கம் கொண்டுவந்து விடுங்கள்.

    தி.மு.க. மிரளும் அளவுக்கு நமது கட்சிப் பணி இருக்க வேண்டும். நாம் நினைத்தால் எதுவும் முடியும். தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். என்ன பிரச்சினை இருந்தாலும் என்னிடம் வந்து தெரிவியுங்கள்.

    உங்களுக்கு உதவ நான் தயாராக உள்ளேன். இந்த இயக்கத்துக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த தொடங்கிவிட்டார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
    • பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த மனுவை இன்று விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பயோவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என மாற்றம் செய்துள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொத்தும், நினைவு பரிசும் வழங்கினர்.

    அப்போது, கட்சி நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர் பாணியில் தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பயோவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என மாற்றம் செய்துள்ளார்.

    முன்னதாக, பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு 1989-ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா அமர்ந்தார்.
    • 27 ஆண்டுகள் 300 நாட்கள் என அதிகாரம் மிக்க இந்த பதவியை ஜெயலலிதா தனது ஆளுமையால் அலங்கரித்தார்.

    அ.தி.மு.க.வில் அதிகாரம் மிக்க பெரிய பதவியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இன்று அமர்ந்தார்.

    1972-ம் ஆண்டு அ.தி.மு. க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். கட்சியின் நிறுவன தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். 1978-ம் ஆண்டு வரையில் எம்.ஜி.ஆர். வசமே இருந்த இந்த பதவியில் பின்னர் நாவலர் நெடுஞ்செழியன் அமர்ந்தார்.

    2 ஆண்டுகள் அவர் இந்த பொறுப்பில் இருந்தார். இவரை தொடர்ந்து 3-வது பொதுச்செயலாளராக ப.உ.சண்முகம் 4½ ஆண்டுகள் வரையில் இருந்தார்.

    அவரை தொடர்ந்து ராகவானந்தம் 1½ ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவியை வகித்தார். இதையடுத்து மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர். மறையும் வரை அந்த பொறுப்பில் இருந்தார்.

    எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு 1989-ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா அமர்ந்தார். 27 ஆண்டுகள் 300 நாட்கள் என அதிகாரம் மிக்க இந்த பதவியை ஜெயலலிதா தனது ஆளுமையால் அலங்கரித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா 48 நாட்கள் மட்டுமே பொதுச்செயலாளராக இருந்தார். இன்று 7-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கட்சியில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் இறுதியாக பொதுச்செயலாளரே கையெழுத்திட வேண்டும் என்பது அ.தி.மு.க. விதிகளில் முக்கியமானதாக இருந்து வருகிறது.

    இதன்மூலம் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை இன்று எட்டிப்பிடித்துள்ளார் என்றால் அது மிகையல்ல.

    • ஓ.பி.எஸ்.சின் சட்டப் போராட்டங்களை வென்று எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமையாக அதிகாரமிக்க பதவியில் இன்று அமர்ந்திருக்கிறார்.
    • ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

    சென்னை :

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே நடந்து வந்த நீயா? நானா? போட்டியில் எடப்பாடி பழனிசாமி அணி தொடர் வெற்றி பாதையில் பயணித்து வருவது இன்றைய ஐகோர்ட்டு உத்தரவின் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதியாகி இருக்கிறது.

    அதேநேரத்தில் ஓ.பி.எஸ். அணிக்கு சோதனை மேல் சோதனையாக எடப்பாடியின் தொடர் வெற்றி அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்து உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது. இதன் பின்னர் கடந்த 9 மாதங்களாக ஓ.பி.எஸ்.சும் அவரது அணி னரும் எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே வந்தனர்.

    ஜூன் மாதம் கடைசியில் இருந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பி.எஸ். அணியினர் குரல் கொடுக்க தொடங்கி விட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இதுபோன்று தொடர்ச்சியாக நடந்து வந்த சட்ட போராட்டங்களில் வென்று அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இன்று வாகை சூடிக்கொண்டிருக்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். இடையே இதுவரை நடந்து வந்த சட்ட யுத்தத்தை திரும்பி பார்ப்போம்.

    கடந்த ஆண்டு ஜூன்-22: ஜூன் மாதம் 23-ந்தேதி தேர்தல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் ஐகோர்ட்டில் மனுதாக்கல். ஆனால் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோர்ட்டு மறுப்பு. நிபந்தனையுடன் பொதுக்குழுவுக்கு அனுமதி.

    ஜூன்-23: வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முன் வைக்கப்பட்டிருந்த 23 தீர்மானங்கள் நிராகரிப்பு. ஜூலை 11-ல் புதிய தீர்மானங்களுடன் பொதுக்குழு நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவிப்பு.

    ஜூலை-11: ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு.

    ஜூலை-29: பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ். முறையீடு. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையை ஐகோர்ட்டுக்கு மாற்றி விரைந்து முடிக்க உத்தரவு.

    ஆகஸ்ட்-3: பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்ற வலியுறுத்தி தலைமை நீதிபதியிடம் ஓ.பி.எஸ். தரப்பு முறையீடு.

    ஆகஸ்ட்-5: வேறு நீதிபதியை நியமிக்க வசதியாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழு வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

    ஆகஸ்ட்-6: அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

    ஆகஸ்ட்-11: எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.

    ஆகஸ்ட்-17: ஜூலை 11-ல் நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி உத்தரவு. ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்தார். (ஓ.பி.எஸ். அணியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்).

    ஆகஸ்ட்-18: தனிநீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு.

    ஆகஸ்ட்-25: எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தேதி குறிப்பிடாமல் எடப்பாடி தொடர்ந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

    செப்டம்பர்-2: ஜூலை 11 -ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என 2 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு உத்தரவு. (எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாக கொண்டாட்டம்).

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பல கட்டங்களாக விசாரணை நடத்தியது. கடந்த 6 மாதங்களாக நடந்த இந்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்தது.

    பிப்ரவரி-23: அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி மனுதாக்கல் செய்தனர்.

    வைத்திலிங்கம் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

    ஓ.பன்னீர்செல்வமும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக மனுதாக்கல்.

    இந்த வழக்குகள் மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி மட்டும் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என மீண்டும் ஓ.பி.எஸ். அணி மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த ஐகோர்ட்டு ஓ.பி.எஸ். தரப்பு மனுக்கள் அனைத்தையும் இன்று தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    மார்ச்-28: இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இப்படி ஓ.பி.எஸ்.சின் சட்டப் போராட்டங்களை வென்று எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமையாக அதிகாரமிக்க பதவியில் இன்று அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதேநேரத்தில் ஓ.பி.எஸ்.சுக்கு இது கடும் பின்னடைவாக மாறி இருக்கிறது. இதன்மூலம் அவரது அரசியல் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

    • பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மாதவரம் மூர்த்தி இனிப்பு ஊட்டினார்.
    • எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதையொட்டி அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவரை தொண்டர்கள் வரவேற்றனர். பட்டாசு வெடித்து உற்சாகப்படுத்தினர். காரை விட்டு இறங்கிய எடப்பாடி பழனிசாமி மீது மலர்களை தூவி வரவேற்றனர். அவர் முதலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு முன்பு நின்று கைகூப்பி வணங்கினார்.

    பின்னர் 2 தலைவர்களின் கால் அடியில் தலை வைத்து மரியாதை செலுத்தினார். அவர் மன உருக்கத்துடன் இருவரையும் வணங்கிய பின்னர் கட்சி அலுவலகத்துக்குள் சென்றார்.

    பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மாதவரம் மூர்த்தி இனிப்பு ஊட்டினார். அதையடுத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர். அவ்வை சண்முகம் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    தலைமை கழகத்தில் திரண்டு இருந்த தொண்டர்கள் ஒவ்வொருவரும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    அ.தி.மு.க.வினர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய் சுந்தரம், டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், பா.வளர்மதி, கோகுல இந்திரா, சின்னையா மற்றும் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், வி.என்.ரவி, வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி. கந்தன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதனிடையே எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதை கொண்டாடும் விதமாக 150 கிலோவில் தயாரிக்கப்பட்ட லட்டுவை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்ற எடப்பாடி பழனிசாமி பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

    • அ.தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைப்படி, கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிக்கலாம்.
    • புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும்.

    அ.தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைப்படி, கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 (புதன்கிழமை) முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.

    கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ. 10 வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களாலும், பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
    • அனைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களாலும், பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அனைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி என கூறினார்.

    பொதுச்செயலாளர் ஆனதன் மூலம், அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடி பழனிசாமி வசம் வந்தது.

    முன்னதாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க நீதிபதி மறுப்பு.
    • அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதன்மூலம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தெரிய வந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வானார்

    பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வானார்.

    இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். பொதுச்செயலாளர் சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.

    அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
    • தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றியை கொடுத்துள்ளது.
    • ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தகவலை அறிந்ததும் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    மேலும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கும் அவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை.

    இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ந்தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பெயரில் ஏராளமான அ.தி.மு.க.வினர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

    எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட இருந்த நிலையில் இந்தத் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கனவே இது தொடர்பான வழக்கு மார்ச் 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று ஏப்ரல் 11-ந் தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்னர் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசியம் என்றும், ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவசர வழக்காக பதிவு செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

    மேலும், பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளைத் தொடரலாம். ஆனால், முடிவை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மார்ச் 22-ந் தேதி இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    அதேவேளையில் மார்ச் 24-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எழுத்து பூர்வமான வாதம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்க்கும் வழக்குகளின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

    ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லுபடியாகும்.

    அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதும் செல்லும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளும் செல்லும். இவற்றை எதிர்த்து தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

    இவ்வாறு நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை கேட்டதும் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதே சமயத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றியை கொடுத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தகவலை அறிந்ததும் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கையில் அ.தி.மு.க. தேர்தல் நடத்தும் குழுவினர் ஈடுபட்டனர்.

    தீர்ப்பு வெளியான அரை மணிநேரத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.

    பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

    வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழும் அவரிடம் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று தொண்டர்கள் வெற்றிக்கோஷம் எழுப்பினார்கள்.

    தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையில் அ.தி.மு.க. தேர்தல் நடத்தும் குழுவினர் ஈடுபட்டனர்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினார்கள். தீர்ப்புக்கு பின்னர் அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தலைமை கழகத்தில் திரண்ட கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்கள். இதனால் தலைமைக் கழகம் களை கட்டியது.

    இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அப்பீல் செய்தார். நாளை அந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.

    ×