search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • விஜயகுமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • விபிஎன்.குமார், எஸ்.எம்.பழனிசாமி, ஆண்டவர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன்எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

    அவைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், விஜயகுமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ பேசியதாவது:-

    வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும். அதற்கு எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி அதிமுக நிர்வாகிகள் துணைநிற்போம். வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தஒரு இடைஞ்சல் ஏற்பட்டாலும் அதை போக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும். யார் வதந்தியை பரப்பினாலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகாலத்தில் அம்மா அவர்களின் ஆட்சியிலும், எடப்பாடியாரின் ஆட்சியிலும் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட வதந்தி கிளப்பினால் தொழிலாளர்கள் முதல் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். யார் இதை செய்தாலும் கண்டிக்கத்தக்கது. இன்றைக்கு இந்தியாவுக்கே வேலை தரும் அளவுக்கு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம் 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி தான். ஈரோடு தேர்தல் அதிமுகவிற்கு பின்னடைவு அல்ல. அதிமுக எடப்பாடியாரின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடியார் தான் நிரந்தர பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். அம்மா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் கைவிடப்பட்டதை போல, விரைவில் இந்த திமுக அரசு 100 யூனிட் இலவச மின்சாரத்தை கைவிட தான் இந்த பணிகளை செய்து வருகிறது. மின்சார கட்டணத்தை ஏற்கனவே உயர்த்தி விட்டார்கள். தண்ணீர் வரி, வீட்டு வரி உயர்த்தி விட்டார்கள். இதனால் வீட்டு வாடகை உயர்ந்திருக்கிறது. திமுகவின் செயலாளர் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார். கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், கழக நிர்வாகிகள் அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, தம்பி மனோகரன், , எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, கருணாகரன் ,ரத்தினகுமார், திலகர் நகர் சுப்பு, பாசறை சந்திரசேகர், ஹரிஹரசுதன் சுதன், விபிஎன்.குமார், எஸ்.எம்.பழனிசாமி, ஆண்டவர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • 96-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு மத்தியில் அமைவதற்கு அ.தி.மு.க. தான் உறுதுணையாக இருந்தது.
    • அ.தி.மு.க.வை முந்த எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை.

    கோவில்பட்டி:

    பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி தர்மத்தினை மீறி செயல்படுவதாக கூறி எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பா.ஜ.க.வினர் 4 பேர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எரித்தனர்.

    இந்நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. ஐ.டி. விங் நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது. ஒரு கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளுக்கு செல்வது சகஜமான ஒன்று.

    அ.தி.மு.க.வில் இருந்து பலரும் பா.ஜ.க.விற்கு சென்று உள்ளனர். அ.தி.மு.க.விற்கு பதில் தி.மு.க.வில் நிர்மல் குமார் இணைந்து இருந்தால் என்ன செய்திருப்பார்கள்.

    கோவில்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தவர் ஒரு விளம்பர விரும்பி.

    இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுப்பது குறித்து பொறுத்து இருந்து பார்க்கலாம்.

    அண்ணாமலை என்ன எதிர்வினை ஆற்றுவார் என்று பார்ப்போம். ஒன்றிய அரசு என்று கூறும் தி.மு.க.விற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை. அ.தி.மு.க. வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது. அவர் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை. தானாக விரும்பி வந்து கட்சியில் சேருபவர்களை எந்த அரசியல் கட்சியினரும் சேர்த்துக் கொள்வார்கள்.

    இந்த அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. எங்களுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்த காரணத்தினால் தான் இன்றைக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளனர்.

    96-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு மத்தியில் அமைவதற்கு அ.தி.மு.க. தான் உறுதுணையாக இருந்தது. அ.தி.மு.க.வை முந்த எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜக வளர்ந்து வருகிறது, தலைவர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றோம்.
    • தமிழகத்தில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் இல்லை என அண்ணாமலை தெரிவித்தார்.

    மதுரை:

    பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், இரு தினங்களுக்கு முன்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நிர்மல் குமாரை தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணனும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

    இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க மதுரை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்திருக்கிறேன். தமிழகத்தில் ஒரு காலத்தில் அரசியல் களம் திராவிட கட்சிகளில் இருந்து யாராவது வந்து பாஜகவை காப்பாற்ற மாட்டார்களா என இருந்தது. ஆனால் தற்போது சில திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு பாஜக தான் கண் முன் தெரிகிறது.

    பாஜக வளர்ந்து வருகிறது. தலைவர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றோம். பாஜகவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவேன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே நான் இருப்பேன். சில முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி அளிக்கத் தான் செய்யும். கட்சி அதிர்வுகளை சந்தித்து கொண்டு தான் இருக்கும். அரசியலில் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. இப்போது பார்த்த வினையின் எதிர்வினை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நடக்கலாம். அரசியல் கட்சி அப்படித்தான் வளர முடியும். கட்சியில் இருந்து யார் விலகினாலும், பாஜகவின் பலம் குறையாது.

    தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை, ஜெயலலிதா, கருணாநிதி எப்படி முடிவு எடுப்பார்களோ அதுபோல் தான் என் முடிவும் இருக்கும். தமிழகத்தில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் இல்லை. பா.ஜ.க.வை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்த்துவதே என் நோக்கம். தமிழக அரசியலில் புதிய மாற்றம் தேவை, அதை பாஜக கொண்டு வரும். இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. தனித்து போட்டியிட நேரம் வரும்போது அது பற்றி அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை முன்னிலையில், அதிமுகவைச் சேர்ந்த சுமார் 50 பேர் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து. 

    • ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரனை தவிர்த்து மற்ற அனைவரையும் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் பிரிந்து சென்றவர்களை அ.தி.மு.க.வில் சேர்க்கும் முயற்சிகளை கட்சியினர் செய்து முடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த வரையில் அந்த பதவி அதிகாரம் மிக்க பதவியாகவே இருந்தது. அவரது மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டார்.

    இதன் பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வந்த நிலையில்தான் தற்போது அ.தி.மு.க. ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார். வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

    முதல் நாள் மாவட்ட செயலாளர்களுடனும், மறுநாள் மாநில நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டங்கள் முடிந்த பின்னர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையில் தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி புகைப்படமும் உறுப்பினர் அட்டையில் இடம்பெறும் என்கிற புதிய தகவலும் வெளியாகி இருக்கிறது. அ.தி.மு.க. நிறுவன தலைவரான எம்.ஜி.ஆர். கட்சியை ஏழை மக்களிடம் கொண்டு சேர்த்து வலுவாக்கினார். எம்.ஜி.ஆருக்கு பிறகு தலைமை பொறுப்பை வகித்த ஜெயலலிதா கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுவாக்கி அசைக்க முடியாத சக்தியாக மாற்றினார்.

    இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தி வருகிறார். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிசாமியின் படமும் புதிய உறுப்பினர் அட்டையில் இடம்பெற இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று கட்சியின் தலைமை பதவியை முழுமையாக கைப்பற்றிய பின்னரே எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பிரிந்து சென்ற அ.தி.மு.க.வினரை மீண்டும் கட்சியில் சேர்க்க முனைப்பு காட்ட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரனை தவிர்த்து மற்ற அனைவரையும் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் பிரிந்து சென்றவர்களை அ.தி.மு.க.வில் சேர்க்கும் முயற்சிகளை கட்சியினர் செய்து முடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளார். இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் ஓ.பி.எஸ். அணியில் இருந்தும், தினகரன் கட்சியில் இருந்தும் மேலும் பல நிர்வாகிகள் விலகி விரைவில் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வருகிற 9-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெறுகிறது.
    • வருகிற 17-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் வர உள்ளதால் அது பற்றி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. 43,923 வாக்குகள் தான் பெற்றது. ஆனாலும் டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது.

    கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்று கூறி வந்த அ.தி.மு.க.வுக்கு இந்த தேர்தல் சவாலாகவே இருந்தது. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தி.மு.க.வின் அதிரடி வியூகத்துக்கு முன்னால் எதுவும் எடுபடவில்லை.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வருகிற 9-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெறுகிறது.

    85 மாவட்டக் கழக செயலாளர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

    இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பது பற்றியும் கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடு பற்றியும் எடப்பாடி பழனிசாமி விரிவாக பேச உள்ளார்.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும், இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளார்.

    தற்போது அ.தி.மு.க.வினரிடம் பழைய உறுப்பினர் கார்டுதான் உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் கையொப்பமிட்ட புதிய உறுப்பினர் கார்டு இன்னும் வழங்கவில்லை. புதிய உறுப்பினர் கார்டு தயாராகி வருவதால் அதை அனைத்து உறுப்பினர்களுக்கும் சென்றடையும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் பணியாற்ற தேவையான ஆலோசனை வழங்கப்படும் என தெரிகிறது. 3 மாதத்திற்குள் இந்த பணிகளை முடித்து கட்சி தேர்தல் நடத்தவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இதுகுறித்து மூத்த மாவட்டச் செயலாளர் கூறுகையில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய உறுப்பினர் கார்டு அ.திமு.க.வினருக்கு வழங்கப்பட்டதும் இந்த பணிகள் படிப்படியாக தொடங்கும்.

    வருகிற 17-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் வர உள்ளதால் அது பற்றியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 38.41 சதவீதம் இருந்தது.
    • இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 25.75 சதவீதமாக குறைந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனது கையில் வைத்திருந்தது.

    பின்னர் கடந்த 2021-ம்ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கோபி செட்டிபாளையம், பவானிசாகர், பவானி, பெருந்துறை ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், மொடக்குறிச்சியில் கூட்டணி கட்சியான பா.ஜனதாவும் வெற்றி பெற்றது. 8 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி 5 இடங்களை கைப்பற்றியது.

    இதில் அந்தியூர், ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் தி.மு.க.வும், கிழக்கில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசும் வெற்றிபெற்றது. கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனாலும் 38.41 சதவீத வாக்குகள் கிடைத்தது.

    இந்த நிலையில் திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து இந்த தொகுதிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 66 ஆயிரத்து 233 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 38.41 சதவீதம் இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 25.75 சதவீதமாக குறைந்தது.

    தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 1432 வாக்குகள் பெற்றார். இது 0.84 சதவீதமாகும். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 110156 வாக்குகள் பெற்றார். இது 64.58 சதவீதமாகும். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 43923 வாக்குகள் பெற்றார். இது 25.75 சதவீதமாகும். இதே போல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10827 வாக்குகள் பெற்றார். இது 6.35 சதவீதமாகும். கடந்த தேர்தலை விட அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த தேர்தலை விட அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் குறைந்தது கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கணிசமாக அ.தி.மு.க. தொண்டர்கள் நிறைந்து காணப்படும் இந்த தொகுதியில் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம் செய்தனர். மேலும் பல்வேறு வியூகங்களும் அமைத்து அ.தி.மு.க.வின் ஓட்டுகளை காங்கிரசுக்கு விழ வைத்துள்ளனர். இதனால் கடந்த தேர்தலை விட அதிக ஓட்டு வித்யாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    • அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகள் கூறப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று முதலில் தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 23-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து உரிமையியல் வழக்கு தொடருவதற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும், உரிமையியல் வழக்கை தொடரலாம் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தனர். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

    எனவே அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே உள்ளது என்று கூறி எடப்பாடி பழனிசாமி அணியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக வர்ணித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களையும் ஒட்டினார்கள்.

    இப்படி அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு வந்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருந்தது.

    இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார்.

    இதன் காரணமாக ஐகோர்ட்டு விசாரணையின் போது எந்த மாதிரியான உத்தரவை ஐகோர்ட்டு வழங்க போகிறது என்பது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. எழுச்சியாகவே இருக்கிறது. அதே நேரத்தில் வேகமாகவும் இருக்கிறது.
    • வரும் காலங்களில் வீறு கொண்டு மகத்தான வெற்றியை பெறும் வகையில் கட்சி எழுச்சியாக உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க.வில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றரை கோடி தொண்டர்கள் என அனைவருமே ஒற்றுமையாக ஒருங்கிணைந்தே செயல்படுகிறோம்.

    காமாலைக்காரர்கள் கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரிவதை போல சிலரின் காமாலை கண்களுக்கு மஞ்சளாக தெரிகிறது.

    அ.தி.மு.க. எழுச்சியாகவே இருக்கிறது. அதே நேரத்தில் வேகமாகவும் இருக்கிறது. வரும் காலங்களில் வீறு கொண்டு மகத்தான வெற்றியை பெறும் வகையில் கட்சி எழுச்சியாக உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொருத்தவரை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பெரிய அளவில் பயந்தன. எந்த தேர்தலிலும் அவர்கள் இதுபோல் பயந்தது கிடையாது. இதனால் ரூ.350 கோடி செலவு செய்து போலியாக வெற்றியை பெற்றுள்ளனர். பணத்தை வாரி இறைத்தனர். இதனால் பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் தோல்வியை கண்டு துவண்டு விடாமல், நம்பிக்கையோடு இருங்கள்.
    • விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன்.

    சென்னை:

    சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள். இது ஜனநாயக முறையில் நேர்மையாக கிடைத்த வெற்றியாக கருத முடியாது. இது மக்களை ஏமாற்றி, எதிர்க்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியாகத்தான் பார்க்க முடிகிறது.

    அ.தி.மு.க. இன்றைக்கு இருக்கும் நிலைமையை பயன்படுத்தி கொண்டு தி.மு.க. அதில் குளிர் காய்வதால் பெற்ற வெற்றியாகத் தான் பார்க்க முடிகிறது.

    தி.மு.க.வினர் எதிர்க்கட்சியினரை வலுவிழக்க செய்து அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு நம் இயக்கத்தின் பிளவை பயன்படுத்தி கொண்டு ஒன்றிணையாமல் பார்த்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். நம் இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் இதை எல்லாம் கொஞ்சமும் சிந்தித்து பார்க்காமல் தனது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக, கோடான கோடி தொண்டர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்குவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் அ.தி.மு.க. இன்றைக்கு வெற்றி பெற்று இருக்கும். தி.மு.க. கூட்டணி படுமோசமாக தோல்வியை தழுவி இருக்கும்.

    எனவே தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு இணங்க, ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு வலிமையான, ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை அமைத்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை நமது இருபெரும் தலைவர்களுக்கும் சமர்பிப்போம்.

    எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இந்த தோல்வியை கண்டு துவண்டு விடாமல், நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • முதல் 5 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    • அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 13,515 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,620, தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 290 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் 5 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 13,515 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,620, தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 290 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்றுவிட்டது என தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி அணியினரின் வேகம் ஓ.பன்னீர்செல்வம் அணியினரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
    • ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது தெரியாமல் இருக்கும் நிலையில், ஆதரவாளர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார மோதல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டதும், அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்கிற சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு ஓ.பி.எஸ். அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர் மிகுந்த உற்சாகத்தோடு அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அடுத்த அடியை கொடுக்க அவர்கள் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஓ.பி.எஸ். அணியில் அவருடன் சேர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், அய்யப்பன் என 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் ஓ.பி.எஸ்.சை தவிர மற்ற 3 பேரையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவிலேயே எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஓ.பி.எஸ்.சை மட்டும் இனி எந்த சூழலிலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியும் அவரது அணியினரும் உறுதியாக உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவியை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி அணியினர் கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட தொடங்கியுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு சட்டப்பூர்வமாக தெரிவித்துவிட்டதை மையமாக வைத்தே எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

    பேரவை விதிகளை பயன்படுத்தி 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறிக்க முடியும் என்றாலும் அதனை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

    ஓ.பி.எஸ். தவிர 3 எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சு நடத்தி அவர்களை அ.தி.மு.க.வுக்குள் மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் தொடங்கி இருக்கிறார்கள். இதன்படி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட்டால் ஓ.பன்னீர் செல்வம் தனி மரமாகி விடுவார் என்பதே எடப்பாடி பழனிசாமி அணியின் கணிப்பாக உள்ளது.

    அப்படி ஒரு நிலை ஏற்பட்டதும் ஓ.பன்னீர் செல்வத்தை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற மனுவை சட்டப் பேரவை செயலாளர் மற்றும் சபாநாயகரிடம் அ.தி.மு.க. அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    தற்போது எம்.எல்.ஏ. வாக இருப்பதால்தானே ஓ.பன்னீர்செல்வத்தால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் நீடிக்க முடிகிறது.

    அந்த எம்.எல்.ஏ. பதவியை பறித்து விட்டால் அவரால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறுகிறார்கள்.

    இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்ளாவிட்டால் அடுத்த கட்டமாக கோர்ட்டு உதவியை நாடவும் எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி அணியினரின் இந்த வேகம் ஓ.பன்னீர்செல்வம் அணியினரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது தெரியாமல் இருக்கும் நிலையில், ஆதரவாளர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள்.

    அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் அடுத்த கட்ட நடவடிக்கை என்கிற அறிவிப்பை விரைவில் வெளியிட்டு ஆதரவாளர்களை திரட்டி பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது எந்த அளவுக்கு எதிர்கால அரசியலில் கை கொடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள்.
    • பண்ருட்டியார் கூறியது போல தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது.

    பெரியகுளம்:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவால் கடந்த 24-ந்தேதி காலமானார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மற்றும் புகழேந்தி ஆகியோர் ஓ.பி.எஸ். வீட்டுக்கு வந்து தாயார் பழனியம்மாள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    அதன் பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    3 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. இது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எதிர்கட்சியினர் கூட இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தி சென்றனர். அரசியலில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். இக்கட்சியை வழிநடத்தி மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி அவரது துக்கத்தில் பங்கெடுத்துள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவின் போது ஓ.பன்னீர்செல்வம் இறுதிவரை இருந்து அவரது துக்கத்தில் பங்கெடுத்தார். தற்போதைய நடவடிக்கை ஒரு நிரந்தர பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் பிளவு என்பது உறுதியாகி விட்டது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள். இனிமேல் அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. ஒரு காலத்தில் ஸ்தாபன காங்கிரசின் நிலைப்பாடு குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியபோது, முதலில் ஏற்றுக்கொள்ளாத எம்.ஜி.ஆர். பின்னர் உணர்ந்து கொண்டார்.

    பண்ருட்டியார் கூறியது போல தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது. ஓ.பி.எஸ்.சின் அடுத்தகட்ட ஆட்டம் இனிமேல்தான் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×