search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • வருகிற தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவோம்.
    • நான் பயந்துகொண்டு ஓடி ஒளிகிற ஆள் இல்லை.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் வி.கே.சசிகலா ஆதரவற்ற முதியோர்களுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார்.

    அப்போது, கேக் வெட்டி, முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, 100 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. சசிகலா முதியோருக்கு உணவு பரிமாறினார்.

    பின்னர் நிருபர்களிடம், வி.கே.சசிகலா கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்குள் அனைவரையும் ஓரணியில் இணைப்பேன். என்னால் நிச்சயமாக முடியும்.

    இருவரும் (எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ்) தனித்தனியாக இருப்பதால் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்கிறார்கள்.

    நான் எல்லோருக்கும் பொதுவாக தான் இருக்கிறேன். என்னை பொறுத்தவரை ஒரு தாய் எப்படியோ அதுபோல தான் செயல்படுகிறேன்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து, வாழ்த்து செய்தி அனுப்பி வருகிறேன். எனக்கென்று தனி ஆட்கள் கிடையாது. ஒருதாய் போல்தான் எல்லோரையும் பார்க்கிறேன். நான் இருக்கும் வரையில் தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள்.

    எல்லோரையும் இணைக்கும் முயற்சியை தொடங்கி விட்டேன். அது நடந்து வருகிறது.

    தனக்கு பிறகு யார் அ.தி.மு.க.விற்கு தலைமை பொறுப்பில் இருந்தால் சரியாக இருக்கும் என்று ஜெயலலிதாவுக்கு தெரியும். அதற்கான முயற்சியும், அப்போதே நடந்துகொண்டு தான் இருந்தது. அதற்குள் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா மறைந்து விட்டார்.

    பெங்களூர் சிறைக்கு நான் செல்லும் முன்பு, அதிமுகவை ஆட்சியில் அமர வைத்து விட்டு தான் சென்றேன். அ.தி.மு.க. கட்சியை யாராலும் அசைக்க முடியாது.

    நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் இருந்து நான் பெங்களூரில் சிறையில் இருக்கும்போது, மூன்று நிபந்தனைகளுடன் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினார்கள். அதில் ஒன்று நேரில் வர வேண்டும் அல்லது வழக்கறிஞர் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

    அதில் ஒன்று எழுத்து பூர்வமாக நான் அனைத்து விளக்கமும் அளித்து விட்டேன். அ.தி.மு.க.வில் எத்தனை பிரிவுகளாக இருந்தாலும், பாராளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்றிணைவார்கள்.

    வருகிற தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவோம். நான் பயந்துகொண்டு ஓடி ஒளிகிற ஆள் இல்லை. ஒரு வீட்டில் 10 பிள்ளைகள் இருந்தாலும் வீட்டிற்கு தாய் ஒன்று தானே?

    ஒருவரை எதிர்க்க வேண்டும் என்றால் நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் ஒரு பெண் சிங்கமாக இருந்தேன். கருணாநிதி எங்களுக்கு செய்யாத தொந்தரவா? அந்த தொந்தரவுகளை நாங்கள் தாங்கி 2 பெண்மணிகளும் சாதித்து காட்டினோம். எதிர்த்து நின்று நாங்கள் போராடினோம். எங்களுக்கு ஆட்சியை கொடுங்கள் என்று மக்களிடம் போய் கேட்டோம். நாங்கள் சண்டையிடுவதற்கு பயந்து முதுகுக்கு பின்னால் இருந்து போராடியது கிடையாது.

    நானும், ஜெயலலிதாவும் அப்படிதான் இருந்தோம். அதனால் தான் தமிழக மக்களுக்கு நிறைய நல்ல காரியங்களை செய்ய முடிந்தது. இப்போது எனது எண்ணமும் அதுதான்.

    ஜெயலலிதாவுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் நான் தெளிவாக உள்ளேன். அதை தமிழக மக்களும் புரிந்துகொண்டுள்ளனர்.

    எய்ம்ஸ் டாக்டர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள் கொடுத்த டாக்டர்கள், தனியார் மருத்துவமனை டாக்டர்கள், எங்களது அரசு டாக்டர்களும் இருந்தனர்.

    அவர்கள் தினமும் ஜெயலலிதாவின் உடல் நிலையை பற்றி அறிக்கை கொடுத்தனர். அப்படி இருந்த போதும் இதில் மறைக்க ஒன்றுமே இல்லையே.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்த வெளிநாட்டு டாக்டர்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லட்டுமா என்று அவரிடமே கேட்டனர். அதற்கு ஜெயலலிதா வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

    எங்களுக்கு ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல ஆசை இருந்தது. ஆனால் அவர் ரொம்ப தெளிவாக இங்கே நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள். எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது என்று சொல்லி விட்டார்.

    அவரது சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவர் டி.வி. பார்த்தார். எல்லோரிடமும் நன்றாக பேசினார். நர்சுகளிடமும் அம்மா அன்பாக பழகினார். டிசம்பர் 19-ந் தேதி ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து செல்ல நாள் பார்த்து இருந்தோம்.

    அதையொட்டி ஜெயலலிதா எல்லோருக்கும் பரிசு கொடுக்க வேண்டும் அதற்கு ஆர்டர் செய்ய வேண்டும் என்றார். நாங்கள் நகைக்கடையில் இருந்து வரச்சொல்லி எல்லோருக்கும் நகையை பார்த்து அவரே தேர்வு செய்தார். இத்தனை செட் எங்களுக்கு செய்து கொடுங்கள் என்பது வரை பேசினோம். டிசம்பர் 15-ந் தேதி எங்களுக்கு டெலிவரி கொடுக்க வேண்டும். அதை ஜெயலலிதா கையால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று தான் திட்டமிட்டு இருந்தோம்.

    தி.மு.க. ஆட்சி 20 மாதங்களாக நடக்கிறது. இன்னும் 4 மாதம் வந்தால் 2 வருடங்கள் பூர்த்தி செய்கிறார்கள். இனி பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதில் 3 மாதங்கள் அரசாங்கம் எந்த வேலையையும் செய்ய முடியாது. எந்த திட்டங்களையும் அறிவிக்க முடியாது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 3 மாதங்கள் போய்விடும். மொத்தம் 6 மாதங்கள் போய்விடுகிறது. அப்போது மக்களுக்கு எதை செய்ய வேண்டுமானாலும் 4 வருடத்துக்குள்தான் செய்ய வேண்டும். அதற்கு ஏற்பதான் திட்டம் வகுக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம். நீங்கள் இதை செய்யுங்கள் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் நீங்களாகவே வாக்குறுதி கொடுக்கிறீர்கள். வாக்குறுதி கொடுத்ததை செய்ய வேண்டுமல்லவா? டிவியில் விளம்பரப்படுத்தினால் அது மட்டும் ஆட்சி கிடையாது. மக்களுக்கு போய் சேர வேண்டும். அதை செய்யவில்லை என்றால் மக்களே முடிவு செய்வார்கள். நான் 1982-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் வந்தேன். அப்போது ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

    அப்போது பெண்கள் வெளியில் வருவது ரொம்ப கஷ்டம். அந்த சமயத்தில் நாங்கள் வாழ்நாள் முழுவதும் பட வேண்டிய கஷ்டத்தை பட்டு விட்டோம். அதையெல்லாம் மீறிதான் ஆட்சிக்கு வந்தோம்.

    பெண்களுக்கு அம்மா நல்லது செய்வார். நான் தீபா உள்பட யாரையும் திட்டுவதில்லை. அறிவுபூர்வமான விஷயங்களை எடுத்து செல்லுவேன். உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். இதை செய்யுங்கள் என்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.
    • அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிவிட்டேன்.

    சென்னை :

    சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா பங்கேற்றார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றோருக்கு புத்தாடைகள், கேக் உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன்.

    * நான் இருக்கும் வரை அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள்.

    * அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கிவிட்டேன்.

    * அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது

    * ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

    * தனக்கு பின்னால் யார் வந்தால் நன்றாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும்.

    * சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என ஜெயலலிதா தான் மருத்துவர்களிடம் சொன்னார்.

    * பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க அரசு முன்வரவேண்டும்.

    இவ்வாறு சசிகலா கூறினார்.

    • கடந்த சில நாட்களாகவே தோப்பு வெங்கடாச்சலம் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
    • தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய போவதாகவும் சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார்.

    பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் இவருக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை. இதையடுத்து சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை பெற்றார்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இணைந்தார். மேலும் பெருந்துறை பகுதியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.

    தி.மு.க.வில் இணைந்தும் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. இதையடுத்து கடந்த சில நாட்களாகவே அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். மேலும் அவர் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய போவதாகவும் சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தற்போது வரை நான் தி.மு.க.வில் தான் இருந்து வருகிறேன். கடந்த சில நாட்களாக வேண்டும் என்றே சிலர் நான் பா.ஜனதாவில் இணைய போகிறேன் என்று தகவல் பரப்பி வருகின்றனர். நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது எனது தொகுதிக்காக அத்திக்கடவு-அவினாசி திட்டம், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கேட்டுப்பெற்றேன்.

    இதில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் தி.மு.க. அரசின் ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. மேலும் மாவட்ட அமைச்சரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தோப்பு வெங்கடாச்சலம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நாளை நான் பா.ஜனதாவில் இணைய போவதாக செய்தி வந்துள்ளதாக சிலர் என்னிடம் தெரிவித்தார்கள். இது உண்மைக்கு மாறானது. நான் தற்போது வரை தி.மு.க.வில் தான் இருந்து வருகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
    • அ.தி.மு.க. அலுவலகம், கட்சி முத்திரை உள்ளிட்டவற்றின் சட்டப்பூர்வ உரிமை இடைக்கால பொதுச் செயலாளரிடமே உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கட்சி பெயர் மற்றும் கொடியை அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தினர்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது முகவரி மற்றும் பெரிய குளத்தில் அவரது நிரந்தர முகவரி ஆகியவற்றுக்கு அனுப்பப் பட்டுள்ள வக்கீல் நோட்டீஸ் குறிப்பிட்டிருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அ.தி.மு.க. அலுவலகம் இயங்கி வருகிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள நீங்கள் (ஓ.பன்னீர்செல்வம்) ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்று குறிப்பிட்டு கட்சியின் 'லெட்டர்பேட்'டை மோசடியாக பயன்படுத்தி உள்ளீர்கள்.

    அ.தி.மு.க. தலைமையகத்தின் முத்திரையையும் போலியாக உருவாக்கி பயன்படுத்தி உள்ளீர்கள். இப்படி செயல்பட்டுள்ளது முழுக்க முழுக்க குற்றச் செயலாகும். தண்டனைக்குரியதுமாகும். அதே நேரத்தில் பொதுமக்களையும் தவறாக வழி நடத்தியுள்ளீர்கள்.

    அ.தி.மு.க. அலுவலகம், கட்சி முத்திரை உள்ளிட்டவற்றின் சட்டப்பூர்வ உரிமை இடைக்கால பொதுச் செயலாளரிடமே உள்ளது. கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவு இதனை உறுதிப்படுத்துகிறது. எனவே அ.தி.மு.க. பெயரை பயன்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை. எனவே கட்சி பெயரை பயன்படுத்து வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

    நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டுள்ள உங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இயங்கி வருகிறது.
    • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு.

    சென்னை:

    சென்னை பெசன்ட் நகரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இயங்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணிதான் அமையும். அவரது தலைமையை ஏற்றுத்தான் எல்லோரும் வருவார்கள்.

    1989, 1991-ம் ஆண்டுகளில் ஓ.பி.எஸ். யார் என்று தெரியாது. 1996-லும் கூட அவர் யார் என்று தெரியாது. 2001-ம் ஆண்டுதான் கட்சியில் அவர் யார் என்று தெரிய வந்தது. அதற்கு முன்பு தேனி நகரத்தில் மட்டும்தான் அவரை தெரியும். நான் 1991-ம் ஆண்டே அமைச்சராகி விட்டேன்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வெளியிட்டு உள்ளது.
    • சசிகலாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ் சொல்வது முந்தைய நிலைக்கு எதிர்மாறாக உள்ளது.

    சேலம்:

    அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும் தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் சட்டப்படி வழங்கும் தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்.

    பொதுக்குழு நிச்சயமாக நடைபெறும். சசிகலா உட்பட கட்சிக்கு பாடுபட்டவர்களுடன், அ.தி.மு.க இயக்கத்தை காப்பாற்றிய யாராக இருந்தாலும் இணைந்து செயல்படுவோம் என்று கூறினார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை கூறியதாவது:-

    அ.தி.மு.க. தற்போது இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது. தலைமை கழக அலுவலகம் எடப்பாடியார் வசம் உள்ளது. நீதிமன்றமே எடப்பாடியார் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. வங்கி கணக்கு இ.பி.எஸ் தரப்பு பொருளாளர் செயல்பட அனுமதி வழங்கி உள்ளது.

    சமீபத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வெளியிட்டு உள்ளது. அப்படிப்பட்ட நிலைமையில், கட்சி எடப்பாடியார் தலைமையில் இல்லை, எங்களுக்கு தான் சொந்தம் என்று ஓ.பி.எஸ் தரப்பு கொண்டாடுவது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இருக்கும்போதே கழக அமைப்பு தேர்தல் முறையாக நடத்தப்பட்டு இருவரின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது இ.பி.எஸ் தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவிலேயே நிரூபிக்கப்பட்டு விட்டது.

    அப்படி இருக்க, ஓ.பி.எஸ் தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளை நியமிப்பது மட்டும் கட்சி விதிகளுக்கு உட்பட்டதா? எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட சட்ட விதிகளை மீறுவது நியாயமா? என்று ஓ.பி.எஸ் கேள்வி கேட்கிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவி மாற்றியது சரியா? அப்போது மாற்றம் செய்யவில்லையா? பொதுவாக சட்ட விதிகள் மாறுதலுக்கு உட்பட்டதுதான்.

    பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதி நியமிப்பது சரியா? என ஓ.பி.எஸ் கேள்வி கேட்கிறார். ஜனாதிபதி தேர்தல் உட்பட பல தேர்தல்களுக்கு தகுதி நியமிக்கும்போது பொதுச்செயலாளர் என்ற உயர் பதவிக்கு தகுதி நியமிப்பதில் என்ன தவறு உள்ளது. எடப்பாடியார் தலைமை பண்பை நிரூபிக்க தனி கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

    பொதுக்குழு உறுப்பினர்கள் அவரை தேர்வு செய்துள்ளனர். கட்சி, ஆட்சி சிறப்பாக வழி நடத்தி தலைமை பண்பை எடப்பாடியார் ஏற்கனவே நிரூபித்துவிட்டார். புதிதாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. புதிய கட்சியும் அவர் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

    எடப்பாடியாரை வீதிக்கு வர சொல்வது சரியானது அல்ல. பொதுக்குழு தொடர்பாக 2 நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடியார் தலைமைக்கு சாதமாக உள்ளது. மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அந்த நிலையில் கட்சிக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் பொதுக்குழு கூட்டுவதாக சொல்வது அர்த்தமில்லை.

    சசிகலாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ் சொல்வது முந்தைய நிலைக்கு எதிர்மாறாக உள்ளது. 1½ கோடி தொண்டர்கள் தங்கள் பக்கம் உள்ளதாக கூறுவதும், இல்லாத ஒன்றை கற்பனையாக சொல்வதாக உள்ளது. எடப்பாடியார் பக்கம் தொண்டர்கள் அனைவரும் உள்ளனர். கட்சியும் அவரது முழு கட்டுப்பாடடில் உள்ளது. இனிவரும் நாட்களிலும், வரும் தேர்தல்களிலும் முழு வெற்றியை கட்சிக்கு தருவார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவல் துறையினர் தி.மு.க.வினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதும் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
    • சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில், வருகிற 29-ந்தேதி மாலை கரூர் மாநகரில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற இருந்த நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்ததால், கரூர் மாவட்ட அவைத் தலைவரும், மாவட்ட ஊராட்சிக் குழு 9-வது வார்டு உறுப்பினருமான எஸ்.திருவிகா மற்றும் அவருடன் பயணம் செய்த கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் மீது இரும்புக் கம்பியால் தாக்கி கண்ணாடியை உடைத்து, கவுன்சிலரின் முகத்தை துணியால் மூடி காரிலிருந்து கடத்திச் சென்று, தேர்தல் முடிந்தவுடன் விடுவித்து உள்ளனர்.

    கடந்த 20-ந்தேதி மாலை, கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலாளர் கே.என்.ஆர். சிவராஜ், கரூர்-ஈரோடு வேலுச்சாமி புரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தி.மு.க.வை சேர்ந்தவர்கள் காரில் ஆயுதங்களுடன் வந்து அவரை கடத்தி சென்று, ஆயுதங்களால் கடுமையாக தாக்கி விட்டு பின்னர் கீழே தள்ளி விட்டுச் சென்றுள்ளனர்.

    சிவராஜை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். படுகாயமடைந்த சிவராஜ் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். சிவராஜ் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இந்த செயல்களை தி.மு.க. அரசின் முதலமைச்சர் வேடிக்கை பார்த்து வருவதும், காவல் துறையினர் தி.மு.க.வினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதும் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசின் முழு ஒத்துழைப்போடு, தி.மு.க.வினர் இத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கு, எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க.வினரின் வன்முறை செயல்களை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்குக் காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும், அ.தி.மு.க. சார்பில், வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை கரூர் மாநகரில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.

    இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, எம்.ஆர். விஜய பாஸ்கர் ஆகியோர் பங்கேற்பார்கள்.

    இந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொது மக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 27-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார்.
    • கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்ற விடமாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர் ஒருங்கிணைப்பாளர் என்கிற பெயருடன் ஆதரவாளர்களை திரட்டி தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது அணியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளையும் நியமித்துள்ள ஓ.பி.எஸ். நேற்று அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ.பி.எஸ். உள்பட முன்னணி நிர்வாகிகள் அனைவருமே எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு தனிக்கட்சி தொடங்க தைரியம் உள்ளதா? என்று ஓ.பி.எஸ். சவால் விடுத்தார். தாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், அதற்கு கடும் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகாரம் செய்யும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது.

    அ.தி.மு.க.வின் 2021-2022ம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கை கடந்த அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஆணையம் தங்களது இணையதளத்திலும் வெளியிட்டு உள்ளது. இதனை மிகப்பெரிய அங்கீகாரமாக எடப்பாடி அதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் வக்கீலுமான ஐ.எஸ்.இன்பதுரை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இனியெல்லாம் ஜெயமே" என்று குறிப்பிட்டு இடைக்கால பொதுச்செயலாளராக அண்ணன் எடப்பாடியார் கையெழுத்திட்ட 2021-2022ம் ஆண்டுக்கான கட்சியின் தணிக்கை அறிக்கையை ஏற்றுக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று சுப்ரீம் கோர்ட்டிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றே அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே 4 முறை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இதுவே இறுதி விசாரணையாக இருக்க வாய்ப்புள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும், பொங்கலுக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.

    இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், அ.தி.மு.க.வில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

    • மாநில அந்தஸ்து பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கபட வேடம் போடுகின்றன.
    • மாநில அந்தஸ்து என்பது நம் உரிமை பிரச்சனையாகும். அதில் தயவு செய்து எந்த அரசியல் கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் 1989-ல் பா.ஜனதா ஆட்சியில் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது மத்தியில் பா.ஜனதா ஆட்சி உள்ளதால் மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசின் முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது பா.ஜனதாவின் கடமையாகும்.

    மாநில அந்தஸ்து பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கபட வேடம் போடுகின்றன.

    மாநில அந்தஸ்து என்பது நம் உரிமை பிரச்சனையாகும். அதில் தயவு செய்து எந்த அரசியல் கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம். தி.மு.க.வும், காங்கிரசும் போலித்தனமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றாமல் மாநில மக்கள் நலனுக்காக அமைதி காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • நகர செயலாளர் செல்வகுமார், நகர துணை தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    பொன்னேரி:

    சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, நெய் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகர அதிமுக சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார்.

    இதில் நகர செயலாளர் செல்வகுமார், நகர துணை தலைவர் விஜயகுமார், முன்னாள் பேரூர் தலைவர் பா. சங்கர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத், ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் செல்வழகி எர்ணாவூரான், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், பொன்னேரி நகராட்சி கவுன்சிலர்கள் மணிமேகலை, சுரேஷ்,, அபிராமி சரண்யா, ஆனந்த், மீஞ்சூர்மாரி, ஆரணி ஓம் சக்தி குணபூபதி, பொன்னேரி யுவராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார போக்கை உணர்ந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும்.
    • எடப்பாடி பழனிசாமியும் ஒரே தலைமையின் கீழ் வர வேண்டும் இல்லையென்றால் அவரை நீக்கி விட்டு தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், நாங்களே உண்மையான அ.தி.மு.க. என்று தெரிவித்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில் அந்த பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் நீடிக்கிறார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி இன்று ஆலோசனை நடைபெற்றது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என மொத்தம் 200 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று ரித்தர்டன் சாலையில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கையெழுத்து போட்டு விட்டு அரங்கத்துக்குள் சென்றனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் பெயரிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சட்டப் போராட்டம் நடத்தி வரும் அவர் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு முன்னணி நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காட்டமாக பேசினார்கள்.

    முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலோசனை கூட்டத்துக்கு என்னை தலைமை ஏற்க வைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்குதான் நாம் கூடி உள்ளோம். உழைப்பவரே உயர்ந்தவர் என்று எம்.ஜி.ஆர். கூறுவார்.

    எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கும் போது, இதனை அவர் குறிப்பிடுவார். இலக்கியத்தில் இடம் பெறும் செருகல்களை புலவர்கள் நீக்குவார்கள். இலக்கியத்தில் மட்டுமல்ல இயக்கத்திலும் இடைச்செருகல்கள் வந்துள்ளன. அவைகளை அப்புறப்படுத்த வேண்டும். காப்பியங்களில் எவ்வாறு இடைச்செருகல்கள் அகற்றப்பட்டதோ அதே போன்று நம் இயக்கத்தில் உள்ள இடைச்செருகல்களையும் நீக்க வேண்டும். நான் இடைச்செருகல் என்று குறிப்பிட்டது எடப்பாடி பழனிசாமியை அல்ல.

    வைத்திலிங்கம்:- தவழ்ந்து சென்று முதல்-அமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி. அவர் கூட்டிய பொதுக்குழு, செயற்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தை நீக்க அதிகாரம் இல்லை. அது பொதுக்குழு அல்ல. பொய் குழு. கட்சியினரால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 2026-ம் ஆண்டு வரை உள்ளது. வருகிற தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி தனி மரமாகி அரசியல் அனாதையாகி விடுவார்.

    எடப்பாடி பழனிசாமியை நீக்கி விட்டு அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    புரட்சித்தலைவியின் ஒரே அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம்தான். இந்த இயக்கம் வேறு ஒருவரின் கைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகவும் குடும்ப அரசியலை வீழ்த்துவதற்காகவும் ஓ.பன்னீர்செல்வத்திடம் புரட்சித் தலைவி 2 முறை ஆட்சியை ஒப்படைத்தார்.

    இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து போராடி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டு கால ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர் ஓ.பன்னீர் செல்வம். தன்னை விட கட்சிதான் முக்கியம் என்று கருதி விட்டுக் கொடுத்தவர். பிரிந்து சென்ற தொண்டர்கள் மீண்டும் திரும்ப வர வேண்டும் ஒற்றை குடையின்கீழ் ஓ.பி.எஸ். தலைமையில் திரள வேண்டும்.

    விசுவாசத்துக்கு அடையாளமாக ஓ.பி.எஸ். உள்ளார். தொண்டர்களை பாதுகாக்கும் வகையில் 1 ½கோடி தொண்டர்களுக்காக பாடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி நோயாக உள்ளார். அவரிடமிருந்து மருந்தாக ஓ.பி.எஸ். கட்சியை மீட்டு வருகிறார்.

    இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது டெண்டர் படை. ஓ.பி.எஸ்.சிடம் இருப்பது தொண்டர் படை. தொண்டர்கள் நினைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு அ.தி.மு.க. சட்ட விதிகளில் இடம் உள்ளது.

    இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரியாக ஆள நினைக்கிறார். இதனை பார்த்துக் கொண்டு தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர் சூழ்ச்சி, தந்திரத்துடனேயே கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். இது போன்ற சர்வாதிகார போக்கு தலைதூக்குவதை நாம் அனுமதிக்க முடியாது. அதனை அனுமதித்தால் அ.தி.மு.க. அழிந்து விடும்.

    நியாயமானவர்கள், தர்மத்தை உணர்ந்தவர்கள், மனசாட்சிக்கு பயந்தவர்கள் ஓ.பி.எஸ்.சை ஆதரித்து வருகிறார்கள். 14 ஆண்டுகளாக கட்சியின் பொருளாளராக இருந்த ஓ.பி.எஸ். கட்சியின் கடனை அடைத்து, 236 கோடி ரூபாயை இருப்பு வைத்தவர். ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு வந்த வாய்ப்பை தட்டி பறித்தனர்.

    வருகிற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குவார். அதற்கான காலம் கனிந்து வருகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார போக்கை உணர்ந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும். எடப்பாடி பழனிசாமியும் ஒரே தலைமையின் கீழ் வர வேண்டும் இல்லையென்றால் அவரை நீக்கி விட்டு தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    • சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம்.
    • அதிமுகவில் நடக்கும் ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தவே இந்த கூட்டம்.

    மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இதன்படி இன்று ஆலோசனை நடைபெற்றது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

    இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    எனக்கு ஏற்பட்ட சோதனையின்போது என்னை தாங்கி பிடித்து நின்று, எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி.

    நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக ரே்வு செய்யப்பட்டேன்.

    எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்தவர் ஜெயலலிதா. கட்சியை கட்டுக்கோப்புடன் நடத்திய அவர், அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றியவர்.

    மனிதாபிமானம் கூட இல்லாமல், சர்வாதிகார போக்கில் ஒருவர் செயல்படுகிறார். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பதை நீக்கியவர்களை நாடு மன்னிக்காது. ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், அதை யாராலும் மாற்ற முடியாது.

    திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்த்த ஏராளமான தியாகங்களை செய்தவர் எம்ஜிஆர். தலைமை பதவிக்கு வருபவர்களை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என கூறியவர் எம்ஜிஆர். அவர் கொண்டு வந்த சட்ட விதிகளை யாராலும் மாற்ற முடியாது.

    அதிமுகவில் நடக்கும் ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தவே இந்த கூட்டம்.

    எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்தி பார்க்கட்டும். அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. எம்ஜிஆரை நேரில் பார்த்து ஈபிஎஸ் பேசியது உண்டா?

    பொதுக்குழுவில் என்னை பங்கேற்க விமாம் தடுக்க சதி நடந்தது. பொதுக்குழுவில் என்னை கண்டுகொள்ளாமல் ஈபிஎஸ் சென்றார்.

    அதிமுக வங்கி கணக்கில் ரூ.256 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. டெபாசிட் பணத்தில் இருந்து வரும் வட்டியில்தான் கட்சி நடக்கிறது. கட்சி நிதியை முறையாக பயன்படுத்தாவிட்டால் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கட்சி நிதியில் இருந்து ரூ.2 கோடியை என்னிடம் கேட்டு பெற்று திரும்பி கொடுத்தார் ஜெயலலிதா.

    தினகரன் கட்சியை உடைத்தபோது ஆட்சியை நான்தான் காப்பாற்றினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×