search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • சட்டசபையில் தனக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அருகருகே இருக்கை உள்ளதால் எப்படி அருகே அமர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதங்கப்பட்டார்.
    • 63 எம்.எல்.ஏ.க்கள் நம்மிடம் இருக்கும் போது சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தமிழ்மகன் உசேன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கோகுல இந்திரா உள்பட பலரும் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் 51-வது தொடக்க விழாவை 3 நாட்கள் கொண்டாடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது மட்டுமின்றி அ.தி.மு.க. தலைமை கழகத்திலும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டன.

    இதில் அனைவருமே அ.தி.மு.க. தொடக்க விழா பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தியது குறித்து மக்களிடம் எடுத்த கூற இந்த பொதுக்கூட்டம் வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்தனர்.

    சட்டசபை கூட்டம் வருகிற 17-ந்தேதி கூடுவதால் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கைகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்பதால் அதுபற்றியும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இந்த விசாரணை அறிக்கையில் அ.தி.மு.க.வுக்கு பாதகமான அம்சங்கள் ஏதேனும் சொல்லப்பட்டிருந்தால் அதை சட்டசபையில் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதித்தனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிய நிலையில், அவர் வகித்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க கோரி சட்டசபை சபாநாயகருக்கு கடிதம் கொடுத்திருந்தது பற்றியும் கூட்டத்தில் விவாதித்தனர்.

    கடிதம் கொடுத்து 2 மாதம் ஆகியும் சபாநாயகர் இதில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் மூத்த நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கருத்து கேட்டார்.

    சட்டசபையில் தனக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அருகருகே இருக்கை உள்ளதால் எப்படி அருகே அமர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதங்கப்பட்டார்.

    கட்சி நம் வசம் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் நம் பக்கம் உள்ளனர். 63 எம்.எல்.ஏ.க்கள் நம்மிடம் இருக்கும் போது சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்.

    எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்க மீண்டும் ஒரு கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கலாமா? என்றும் ஆலோசனை கேட்டார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டதாக தெரிகிறது.

    சட்டசபை கூடும் போது சபாநாயகர் என்ன மாதிரி முடிவெடுத்து அறிவிப்பார் என்பதை பார்க்க வேண்டும். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால் சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆலோசித்தனர்

    சபாநாயகரின் முடிவை பொறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் கருத்து பரிமாறப்பட்டது.

    எனவே சட்டசபை கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் எந்த மாதிரி நடந்து கொள்வார்கள் அவரை எந்த மாதிரி விமர்சனம் செய்வார்கள் என்பது அ.தி.மு.க.வினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறார்கள்.
    • எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது-

    அ.தி.மு.க. வலுவாக இருப்பதற்கு காரணமே மக்களுடைய பெரும் ஆதரவு தான். அதனால் இன்றைக்கு அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியவில்லை. எத்தனையோ பேர் இந்த கட்சியை உடைக்க பார்த்தார்கள். முடக்கப்பார்த்தார்கள்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ அவதாரம் எடுத்து அ.தி.மு.க.வை அழிக்கப்பார்த்தார். அத்தனை அவதாரத்தையும் தவிடு பொடியாக்கிய கட்சி அ.தி.மு.க. தான். மக்கள்தான் அ.தி.மு.க.வை இயக்குகிறார்கள்.

    அ.தி.மு.கவை பொறுத்தவரைக்கும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி. இதற்காக எங்களது தொண்டர்கள், நிர்வாகிகள் உழைப்பார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதாக நாட்டு மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    மக்களுடைய எண்ணமெல்லாம் இந்த தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்பதுதான். யாரை கேட்டாலும் இப்படித்தான் சொல்கிறார்கள். தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப கிராமம் முதல் நகரம் வரை வசிக்கும் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 இடங்களில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

    மு.க.ஸ்டாலின் நீங்கள் சொன்ன எந்த திட்டமாவது நிறைவேற்றி இருக்கிறீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்றி கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டுகிறார்கள்.

    லஞ்சம் வாங்குவதில் முதன்மை தி.மு.க. அரசாக உள்ளது. கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் இதுதான் இந்த ஆட்சியில் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    முதன்மை முதன்மை என்று தி.மு.க. சொல்வது லஞ்சம் வாங்குவதை தான் முதன்மை என்று சொல்கிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பொதுக்குழு கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து பார்க்கின்றபோது ஏதாவது நடந்து விடுமோ என அச்சத்தில் தேடி பார்க்கிறேன் என்கிறார். அப்படினா அவருடைய நிலைமை பரிதாபமாக உள்ளது. அவர் கட்சிக்காரரை பார்த்து பயப்படுகின்றார். ஏனென்றால் தினந்தோறும் ஊடகங்களில் வருகின்ற செய்தியே தி.மு.க.காரர்கள் செய்கின்ற பிரச்சினை தான். அதை பார்த்து பயந்து நடுங்கி காலையில் எழுகின்றபோது எதுவுமே நடக்கக்கூடாது என வேண்டுகின்றேன், என அவரே கூறுகிறார். கட்சிக்காரர்களை பார்த்து பயப்படுகின்ற நிலைமைக்கு இன்று தி.மு.க. தலைவர் போய்விட்டார்.

    5 மாத காலத்திற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதிகாரியாக இருப்பேன் என சொன்னார். ஒழுங்காக கட்சியில் பணி செய்யவில்லை என்றால் யாராக இருந்தாலும் பார்க்க மாட்டேன். கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என சொன்ன அதே மு.க.ஸ்டாலின் இன்று கட்சியினர் மத்தியில் கெஞ்சுகின்ற நிலைமையை பார்க்கின்றோம். ஆகவே திறமை இல்லாத முதல்-அமைச்சர் நாட்டை ஆளுகின்றார்.

    நான் முதல்-அமைச்சராக இருந்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் அளித்தேன். கொரோனா தொற்றின்போது சிறப்பாக செயல்பட்டோம். டாக்டர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்து விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றிய அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் முக்கியமான பிரச்சினைகள் பற்றி விவாதிக்கிறார்கள்.
    • முக்கியமாக ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது.

    ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் முடிவை பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரித்ததால் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அவர் பக்கம் சென்றனர்.

    இதையடுத்து சட்ட ரீதியாக வழக்கு தொடுத்து கட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம் இறங்கினார். கோர்ட்டு உத்தரவுகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்தன. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

    எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தை செல்லாததாக அறிவிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி நடைபெறுகிறது.

    எனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் முக்கியமான பிரச்சினைகள் பற்றி விவாதிக்கிறார்கள். முக்கியமாக ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்கிறார்கள். அதாவது ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால் சட்டமன்றத்தில் அவர் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியும் அனுபவிக்க முடியாது.

    இதுபற்றி அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாரை அந்த பதவியில் அமர்த்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இதுதொடர்பாக சபாநாயகர் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால் சட்டமன்ற மரபுப்படி முடிவெடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.

    எனவே இந்த விவகாரத்தில் உறுதியான முடிவெடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி புதிய வியூகத்தை அமைத்துள்ளார். சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு 66 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 2 பேர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    அதாவது ஓ.பி.எஸ்.சையும் சேர்த்தால் அந்த அணிக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் பலம் தான் இருக்கிறது. மீதமுள்ள 63 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள்.

    எனவே இன்று மாலையில் நடைபெறும் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பதவியை பறிக்கும் வகையில் 63 எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர்.

    அனைவரது கையெழுத்துடன் கூடிய கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்து துணைத்தலைவர் பதவிக்கு ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    மேலும் வழக்கு நிலவரங்கள் பற்றியும் நிர்வாகிகளிடம் விளக்க திட்டமிட்டுள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் இன்னும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியில் இருப்பதாகவும், கட்சியில் இருந்து நீக்க முடியாது என்றும் கூறி வருகிறார்கள்.

    இது தவிர கட்சியின் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவை செல்லாது என்றும் கூறுகிறார்கள். ஆனால் கட்சியில் எம்.ஜி.ஆர். வகுத்து வைத்துள்ள விதிப்படி கட்சிக்கு எதிராக யார் கோர்ட்டுக்கு சென்றாலும் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

    அந்த விதிப்படி தான் ஓ.பி.எஸ். நீக்கப்பட்டுள்ளார். மேலும் பொதுச்செயலாளருக்கு மட்டும்தான் தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும். அந்த ஒரு விதியை தான் திருத்த முடியாது.

    வேறு எல்லா விசயங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இருக்கிறது. இந்த தகவல்கள் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கப்படும் என்றும் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கும் போதே, மற்ற கட்சிகளைப் போல இல்லாமல் சிறப்பான சட்ட விதிகளை உருவாக்கினார்.
    • ஒரு ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இப்படி யொரு கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே நீயா? நானா? போட்டி நடந்து வருகிறது.

    பெருவாரியான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தன் பலத்தை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்து வருகிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் சட்ட போராட்டத்தின் மூலம் சாதிக்க துடிக்கிறார்.

    இந்தச் சூழலில் சென்னை எழும்பூரில் மாற்றுக் கட்சியிலிருந்து 1000-க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணையும் விழா நடைபெற்றது.

    முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து எடப்பாடி பக்கம் சென்ற நிலையில், இப்போது அவர் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு திரும்பி உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக விமர்சித்தார்.

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கும் போதே, மற்ற கட்சிகளைப்போல இல்லாமல் சிறப்பான சட்ட விதிகளை உருவாக்கினார். தொண்டர்கள் தான் தலைமை பொறுப்பைத் தீர்மானிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர். அதற்கு ஏற்ப சட்டவிதிகளை உருவாக்கினார். அப்படித்தான் கட்சியில் உள்ள தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்வு செய்யப்பட்டது. இதைத் தேர்தல் அதிகாரியே ஏற்றுக்கொண்டார்.

    இந்தச் சூழலில் அ.தி.மு.க.வில் ஏன் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். எம்ஜிஆர் உருவாக்கித் தந்த விதிகளை மாற்றி, பொதுக்குழு என்ற பெயரில் ஒன்றை நடத்தினார்கள். அதை நீங்கள் அனைவரும் டிவியில் பார்த்து இருப்பீர்கள்.

    இரண்டு பொதுக்குழுக் கூட்டத்திலும் என்ன நடந்தது என்பதையும் பார்த்து இருப்பீர்கள். ஒரு ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இப்படியொரு கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை.

    தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்குச் கார எண்ணம் வரக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் இந்த சட்ட விதிகளை உருவாக்கினார். ஆனால், அதையெல்லாம் அவர்கள் மதிக்காமல் நடந்து வருகிறார்கள்.

    தங்களுக்கு தகுந்தாற் போல் விதிகளை திருத்தி இருக்கிறார்கள். இப்போது நடைபெறும் தர்மயுத்தம் அதற்குத்தான். நீதியை நிலைநாட்ட! இந்த யுத்தம் தொடரும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதைத் தர்மமே வெல்லும்'.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடக்க விழா நிகழ்ச்சியை தென் மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
    • சமீபத்தில் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தென் மாவட்டங்களில் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் தலைமை பதவிக்கு எழுந்த போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. கட்சியை கைப்பற்ற போவது யார்? என்பதில் தொடர்ந்து மல்லு கட்டுகிறார்கள்.

    கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

    பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நடத்திய சட்ட போராட்டங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

    ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருந்தன. ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்ட போராட்டத்தை கைவிடவில்லை.

    எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டியதையோ, அவரை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்ததையோ கோர்ட்டுகள் தவறு என்று சுட்டிக்காட்டவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டும் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் நிலையில் பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசரப்படுவது ஏன்? என்று தான் கேள்வி எழுப்பியது.

    அதைத் தொடர்ந்து கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை தேர்தல் நடத்த மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    கோர்ட்டு தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்டமாக ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுகுவார். அவரது தரப்பிலும் புதிய நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யும்படி மாவட்ட செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். அடுத்த வாரத்துக்குள் பட்டியலை தயார் செய்து அனுப்ப கூறி இருக்கிறார்கள்.

    ஏற்கனவே பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் தனக்கு ஆதரவாக இருப்பதை உறுப்பினர்களின் கையெழுத்துடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இருக்கிறார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் தொடர் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

    முதற்கட்டமாக ஓ.பன்னீர்செல்வம் படம் நீக்கப்பட்டு புதிய அடையாள அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பொதுச்செயலாளர் தேர்தலில் இந்த உறுப்பினர் அட்டை இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அட்டை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மாவட்ட வாரியாக உறுப்பினர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

    உறுப்பினர் அட்டை விநியோகம், கட்சியின் 51-ம் ஆண்டு விழா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை இழுத்து அவரை தனிமைப்படுத்துவது, சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்படுகிறது.

    மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) தலைமை கழகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    முக்கியமாக கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்ய உள்ளார்கள்.

    தொடக்க விழா நிகழ்ச்சியை தென் மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். ஏற்கனவே சமீபத்தில் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தென் மாவட்டங்களில் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    தேவர் குருபூஜையின் போது தங்க கவசத்தை பெறுவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை பற்றியும் விவாதித்து மேல் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்க உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சட்டசபையில் இதனை அங்கீகரிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எடப்பாடி பழனிசாமி அதிரடி வியூகம் வகுத்துள்ளார்.

    தமிழக சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை அமர வைத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

    இதற்காக ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்தது தொடர்பான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை சபாநாயகரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 10-ந்தேதி நடைபெறும் கூட்டத்துக்கு பிறகு இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

    • ஜெயலலிதா நிதி தொடர்பாக பேச டெல்லி சென்ற போதெல்லாம் ஓ.பன்னீர்செல்வத்தை உடன் அழைத்து செல்வார்.
    • பழனிசாமி ஒரு நாளும் ஓ.பி.எஸ்.சை அழைத்து செல்லவில்லை.

    சென்னை:

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தை கட்சி ரீதியாக 3 ஆக பிரித்து மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்து உள்ளார். கட்சி வரலாறு தெரிந்தவர்கள் தங்கமணியால் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்ட, பல காலமாக கட்சியில் பல்வேறு பொறுப்பில் இருந்தவர்கள் புதிய நிர்வாகிகளை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

    அதை பார்த்து முன்னாள் அமைச்சர் தங்கமணி கவலையும், அச்சமும் அடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து தங்கமணி பொய்யான தகவல்களை பேசி வருகிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவரை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் சந்தித்தனர். அப்போது மீதம் இருக்கும் காலத்தில் பழனிசாமி முதல்வராக இருக்கட்டும், அடுத்த முதல்வர் நீங்கள்தான் என ஓ.பன்னீர் செல்வத்திடம் கூறியவர் தங்கமணி.

    ஆட்சியை கவிழ்க்க டி.டி.வி. தினகரன் தீர்மானம் கொண்டு வந்த போது ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு அவர்கள் நன்றியுடன் இருந்ததில்லை.

    ஜெயலலிதா நிதி தொடர்பாக பேச டெல்லி சென்ற போதெல்லாம் ஓ.பன்னீர்செல்வத்தை உடன் அழைத்து செல்வார். ஆனால் பழனிசாமி ஒரு நாளும் ஓ.பி.எஸ்.சை அழைத்து செல்லவில்லை.

    பிரதமர், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரையும் அழைத்தாலும், தனியாக சென்று சந்தித்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. பல அவமானங்களை ஓ.பன்னீர் செல்வம் தாங்கிக் கொண்டிருந்தார். அவரை திட்டமிட்டு கட்சியில் இருந்து வெளியேற்றினார்.

    விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பன்னீர் செல்வம் நடத்த உள்ளார். தொண்டர்கள் அவரது பக்கம் உள்ளனர். நீதி, நியாயம் என அனைத்தும் அவர் பக்கம் உள்ளன.

    தங்களை காப்பாற்றிக் கொள்ள விரும்பும் சில பேர் இந்த கட்சியை கையில் வைத்திருப்பதன் மூலமாகத் தான் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நோக்கத்தில் ஒற்றை தலைமை என்ற உத்தியை பயன்படுத்துகின்றனர். ஒருவரை ஒதுக்கி வைத்து விட்டு தான் மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கும் காரணத்தால் தான் இந்த கட்சி பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறது.

    வழக்கில் சிக்கி விடாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பேரம் பேசிய உண்மைகள், யார் தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறார்கள், யார் தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்பது பற்றி விரிவான விளக்கங்கள் வரும் மாதங்களில் தெரியவரும்.

    நவம்பர் 21-ந்தேதிக்கு முன்பாகவே அந்த தகவல்கள் வெளிக்கொண்டு வரப்படும். ஓ.பி.எஸ். அனுமதி அளித்தால் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன். அப்போது வெட்ட வெளிச்சமாக இந்த நாட்டு மக்களுக்கு தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்களுக்கு படிப்பறிவு இல்லை என பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தெரிவித்திருப்பது வன்மையான வார்த்தை.
    • நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை கருதி கொண்டே ஜே.பி. நட்டா படிப்பறிவில்லை என தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    பாளை யூனியன் நொச்சிகுளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் காந்தியை கொன்றவர்களை மதிக்க கூடாது. அவர்களை மதிப்பது வேதனைக்குரியது.

    அ.தி.மு.க 4 அணிகளாக உள்ளது. அ.தி.மு.க. பிளவால் எந்த பிரச்சினையும் சட்டப்பேரவையில் வராது. இந்த மாதம் கூட இருக்கும் சட்டசபை கூட்டத்தின் போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும்.

    தி.மு.க அரசின் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அமைச்சர்களின் சாதாரணமாக பேச்சு வழக்கில் பேசுவது கூட பெரிதாக்கப்படுகிறது.

    தமிழகத்தில் அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்களுக்கு படிப்பறிவு இல்லை என பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தெரிவித்திருப்பது வன்மையான வார்த்தை. நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை கருதி கொண்டே ஜே.பி. நட்டா படிப்பறிவில்லை என தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் பட்டதாரிகளின் சராசரி 24 சதவீதம் என்றால் தமிழகத்தில் 51 சதவீதம் ஆக உள்ளது. ஜே.பி. நட்டா தமிழகத்தில் இருப்பவர்களை விட அதிகம் படித்தவர். அவர் எய்ம்ஸ் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்தாக கூறுகிறார். அங்கு சிகிச்சை பெற செல்ல முடியுமா?.

    ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதுபடுத்தாமல் அரசின் திட்டங்களை சிறப்பாக செய்ய ஆலோசனை வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய உறுப்பினர் அடையாள அட்டையை ஓ.பி.எஸ்.அணியினருக்கு வழங்காமல் புறக்கணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
    • அ.தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்வில் கலந்துகொண்டு வாக்கு அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் சட்ட ரீதியிலான போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளன.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பொதுச்செயலாளர் தேர்வை நடத்தக் கூடாது என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 21-ந்தேதிக்கு தள்ளி வைத்து உள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தற்காலிகமாக நிம்மதி பெருமூச்சுடன் உள்ளனர். என்றாலும் அடுத்த கட்டமாக எத்தகைய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள். புதிய நிர்வாகிகள் நியமனம், சுற்றுப்பயணம் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு பதிலடி கொடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் அடுத்தக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உள்ள சிலரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளிலும் எடப்பாடி பழனிசாமி அணியினர் ஈடுபட்டு உள்ளனர்.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தங்களுக்கு அனுமதி வழங்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை தயாரிக்கும் பணியில் அவர்கள் ஓசையின்றி ஈடுபட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு எம்.ஜி.ஆர். காலத்தில் முழுமையான அளவில் அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு அவரது படம் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வானதால் அவர்களது படமும் சேர்க்கப்பட்ட புதிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த அடையாள அட்டையைத்தான் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

    தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். எனவே அவரது படம் இல்லாத புதிய அ.தி.மு.க. அடையாள அட்டை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்காக ஓசையின்றி புதிய உறுப்பினர் அடையாள அட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் ஓ.பன்னீர் செல்வம் படம் நீக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி படம் மட்டுமே அதில் இடம்பெற்று உள்ளது. லட்சக்கணக்கில் இந்த அடையாள அட்டையை தயார் செய்து வருகிறார்கள்.

    அச்சடிப்பு பணி முடிந்ததும் மாவட்ட வாரியாக அந்த அடையாள அட்டைகள் பிரிக்கப்படும். பிறகு அவை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பு இந்த புதிய அடையாள அட்டைகளை அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு வழங்க ஆலோசித்து வருகிறார்கள்.

    புதிய அடையாள அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்பது உறுதியாக இன்னும் தெரியவில்லை. அடுத்த மாதம் 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் பொதுக்குழு கூட்டம் தொடர்பான இறுதி விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு வந்த பிறகே புதிய உறுப்பினர் அடையாள அட்டை வினியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    புதிய உறுப்பினர் அடையாள அட்டையை ஓ.பி.எஸ்.அணியினருக்கு வழங்காமல் புறக்கணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்வில் கலந்துகொண்டு வாக்கு அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைக்கருத்தில் கொண்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி ஓசையின்றி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் இந்த ரகசிய நடவடிக்கை வெளியில் கசிந்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்தை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. தொடர்பான அனைத்து கடித போக்குவரத்துகளும் அந்த அணிக்கே இருக்கிறது. இந்தநிலையில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வினியோகம் மூலம் அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

    இதை முறியடிக்க என்ன செய்யலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி அ.தி.மு.க. முன்னாள் மூத்த தலைவர்களை ஒருங்கிணைக்கவும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தீவிரமாகி உள்ளனர்.

    புதிய உறுப்பினர் அடையாள அட்டை காரணமாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க ஓ.பி.எஸ். தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
    • வழக்கு விசாரணை முடிந்த பிறகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றதையொட்டி, முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம், வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் டெல்லி சென்றிருந்தனர்.

    கோர்ட்டு விசாரணைக்கு பிறகு சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க ஓ.பி.எஸ். தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதை கோர்ட்டு உத்தரவாதம் பிறப்பிக்கவில்லை. எங்கள் தரப்புகள் கூறும்போது, பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான எந்தவித நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை என்று கோர்ட்டில் தெரிவித்து உள்ளோம்.

    பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பையே நாங்கள் வெளியிடவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளபோது தேர்தலை எப்படி நடத்துவோம். நாங்கள் சட்டபடியே செயல்படுகிறோம்.

    வழக்கு விசாரணை முடிந்த பிறகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். வழக்கை விரிவான விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோர்ட்டு உத்தரவை ஏற்று பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என்று இ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம் அளித்தது.
    • வழக்கின் இறுதி விசாரணை வருகிற நவம்பர் மாதம் 21-ந்தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

    சென்னை, செப். 30-

    அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச் சினையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பலத்தை காட்ட களம் இறங்கினார்கள்.

    இதில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. கடந்த ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செய லாளராக தேர்வு செய்யப் பட்டார்.

    ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவா ளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து முன்னாள் முதல்-அமைச் சர் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

    சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச் சந்திரன் கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது என்று தீா்ப்பளித்தாா்.

    தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனி சாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தார், அதேபோல ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான அம்மன்.பி.வைரமுத்து சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் விசாரணையின் போது, கட்சிக்கு தேவையான எல்லாவற்றையும் செய்ய தயாராக இருந்தேன். ஆனால் என்னை வெளியே தள்ளிவிட்டு பொதுக்குழுவை கூட்டி னார்கள். இந்த பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணானது என்று வாதிட்டனர்.

    ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு வில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

    4 மாதத்துக்குள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது போன்று தேர்தலை நடத்தினால் எங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

    மேலும் பொதுக்குழு கூட்டப்படுவதற்கு 15 நாட்க ளுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அந்த விதிமுறையும் மீறப்பட்டுள் ளது. கட்சியின் எந்த பதவிக்கும் ஒருங்கி ணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே நியமிக்க முடியும் என்றனர்.

    இதையடுத்து வாதிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கீல்கள், "பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் அதுபோன்று செய்தால் 1.50 கோடி தொண்டர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்றும் வாதிட்டனர்.

    இரு தரப்பு வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 'எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் போது பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த அவசரப் படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

    அதைத் தொடர்ந்து நீதிபதிகள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    மேலும் ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறை யீட்டு வழக்கில் பதில் அளிக் கும் படியும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து கோர்ட்டு உத்தரவை ஏற்று பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என்று இ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம் அளித்தது.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற நவம்பர் மாதம் 21-ந் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். அன்றைய தினம் இந்த வழக்கில் விரிவான விசாரணை நடைபெறும்.

    • மூதாட்டி பிரீயா கொடுக்கும் டிக்கெட் எனக்கு வேண்டாம். என்னிடம் காசை பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடு என்றார்.
    • மூதாட்டியை வேண்டும் என்றே அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் கேட்டு தகராறு செய்யுமாறு சிலர் வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் இந்த பஸ் காந்திபுரத்தில் இருந்து பாலத்துறையை நோக்கி புறப்பட்டது. பஸ்சில் வால்பாறையை சேர்ந்த வினித் கண்டக்டராக இருந்தார்.

    இந்த பஸ் மதுக்கரை மார்க்கெட் அருகே வந்தபோது பஸ்சில் 70 வயது மூதாட்டி ஒருவர் ஏறினார். இந்த பஸ்சில் பயணிக்க பெண்களுக்கு டிக்கெட் இலவசம் என்பதால், பஸ்சில் ஏறியதும் மூதாட்டிக்கு கண்டக்டர் இலவச டிக்கெட்டை கிழித்து கொடுத்தார்.

    அப்போது அந்த மூதாட்டி டிக்கெட்டுக்கான பணத்தை கண்டக்டரிடம் நீட்டினார். அதற்கு அவர் இந்த பஸ்சில் பெண்களுக்கு இலவசம். எனவே பணம் வேண்டாம் என மறுத்தார்.

    ஆனால் மூதாட்டி விடாப்பிடியாக தொடர்ந்து கண்டக்டரிடம், நான் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன். நான் டிக்கெட்டுக்கு பணம் தருவேன். காசு இல்லாம தரும் டிக்கெட் எனக்கு வேண்டாம் என அடம் பிடித்தார்.

    கண்டக்டர் மீண்டும் முயற்சி செய்து மூதாட்டியிடம் டிக்கெட்டை நீட்டினார். ஆனால் மூதாட்டி தமிழ்நாடு முழுவதும் பிரீயா போகட்டும். நான் பிரீயா போக மாட்டேன். பிரீயா கொடுக்கும் டிக்கெட் எனக்கு வேண்டாம். என்னிடம் காசை பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடு என்றார்.

    கண்டக்டர் பணம் வாங்க மறுத்தார். ஆனால் மூதாட்டி வலுக்கட்டாயமாக கண்டக்டரின் கையில் பணத்தை திணித்தார்.

    இதையடுத்து கண்டக்டர் வேறுவழியில்லாமல் மூதாட்டியிடம் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் மற்றும் மீதி சில்லரையை கொடுத்து சென்றார்.

    இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். தற்போது அந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில் மூதாட்டியை வேண்டும் என்றே அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் கேட்டு தகராறு செய்யுமாறு சிலர் வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக மதுக்கரை போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில், மதுக்கரை பகுதி தி.மு.க.வி.னர் புகார் மனு அளித்துள்ளனர்.

    மதுக்கரை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் 2 பேர் வேண்டுமென்றே துளசியம்மாள் என்ற மூதாட்டியை பஸ்சில் வரவழைத்து பெண்களுக்கு இலவச டிக்கெட் என்றும் தெரிந்தும், கண்டக்டரிடம் சண்டை போட வைத்துள்ளனர்.

    மேலும் தற்போதைய தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு வீடியோ காட்சிகளை எடுத்து, அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மதுக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முதற்கட்டமாக மதுரை, சிவகாசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
    • பிரசார வாகனத்தில் எழுந்து நின்று மக்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு இரட்டை விரல்களை காண்பித்தவரே மக்கள் வெள்ளத்தில் எடப்பாடி பழனிசாமி நீந்தி சென்றார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கினாலும் தென் மாவட்டங்களில் தங்களுக்குத்தான் செல்வாக்கு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகிறார்கள்.

    ஆனால் தென்மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். எனவே ஓ.பன்னீர்செல்வத்தை தென் மாவட்டங்களிலும் வீழ்த்தி தன் பலத்தை காட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். இதை 'ஆபரேசன் சவுத்' என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

    அதில் முதற்கட்டமாக மதுரை, சிவகாசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

    காலை 7 மணியளவில் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் சென்றடைந்தார். அதிகாலையிலேயே அவரை வரவேற்க ஏராளமானவர்கள் விமான நிலையத்தில் திரண்டு இருந்தார்கள்.

    விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி .உதயகுமார் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, மா.பா.பாண்டியராஜன், விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, மற்றும் மாவட்ட செயலாளர்கள் செந்தில்நாதன், முனியசாமி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    ரிங் ரோடு வழியாக பிரசார வாகனத்தில் மேலக்கோட்டை அருகே சென்றபோது ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் சாலையின் இருபுறமும் சித்திரை திருவிழா போல் மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர்

    பிரசார வாகனத்தில் எழுந்து நின்று மக்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு இரட்டை விரல்களை காண்பித்தவரே மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றார்.

    சிவரக்கோட்டை பகுதியில் விவசாயிகள் ஏராளமாக திரண்டு விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் சிறக்க பல்வேறு திட்டங்களை வழங்கியும், தொடர்ந்து கடந்த அம்மா ஆட்சி காலத்தில் சிப்காட்டுக்கு எதிரான அரசாணை ரத்து செய்து எங்கள் விளைநிலங்களை பாதுகாத்த எடப்பாடியார் வாழ்க என்று கோஷமிட்டனர்,

    கள்ளிக்குடியில் பிரம்மாண்ட முறையில் எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தொழிலாளர்களும், இளைஞர்களும் திரண்டு இருந்தனர்.

    மாலையில் சிவகாசி பொதுக்கூட்டத்தில் பேசினார். ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்து எடப்பாடி பழனிசாமி பேச்சை கேட்டனர். இதை தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவருக்கு வெள்ளி செங்கோல் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று நிரந்தர பொதுச்செயலாளர் என்றும் வருங்கால முதல்வர் என்றும் கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர். முதல்முறையாக சென்ற தென்மாவட்ட சுற்றுப் பயணம் மிகப்பெரிய எழுச்சியாக அமைந்தது எடப்பாடி பழனிசாமி தரப்பை உற்சாகப்படுத்தியது.

    இரவு பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு அவர் காரில் சேலம் சென்றார்.

    ×