search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் தீரன் சின்னமலை சிலை அமைந்துள்ளது.
    • சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268-வது பிறந்தநாளான 17-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிஅளவில் சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களுடைய திருஉருவ சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    நந்திவரம் கூடுவாஞ்சேரி அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞர் கேசவலு தலைமையில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் ஆர்.கலைச்செல்வன், தேவி தனசேகரன், எம்.கண்ணன், முன்னாள் கவுன்சிலர் என்.சரவணன் நிர்வாகிகள் பார்கவி வெங்கடேசன், பெருமாள், டெய்லர் கன்னியப்பன், டி.பிரபு, ஆர்.முருகன், அருள் குமரன், பப்பு, அசோகன், குமரன், செல்வராஜ், அரவிந்தராஜா, ஆதித்தன், எம்.கோதண்டம், கே.எஸ்.விஜயகுமார், பினகபாணி, எஸ்.நட்ராஜ், என்.மாணிக்கவாசகம், சுந்தரம், தங்கவேல், வி.கார்த்திக், எம்.கே.முனியாண்டி, மகேஷ், மாரி, தணிகாச்சலம், தனசேகர், அருண், மணிகண்டன், பிரவின், தினேஷ், நித்தியானந்தம், ராஜ்குமார்,சூர்யா,எஸ்.வினோத், வி.விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டணியை பொருத்தவரை அ.தி.மு.க. தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும்.
    • பா.ஜ.க. உடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையத்தில் இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டபோது தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று கூறியது அவரது கருத்து. இது பா.ஜ.க. உடனான கூட்டணி க்கு நெருக்கடியா என்பதற்கு பதில் கூற முடியாது. ஊழல் பட்டியலை கவர்னரிடம் அ.தி.மு.க. கொடுக்குமா என்பது குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார்.

    2024-ம் தேர்தலில் அதிக சீட் பெறுவதற்காக அ.தி.மு.க.வை பயமுறுத்த அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளரா என்பதற்கு அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை தெளிவாக உள்ளது. கூட்டணியை பொருத்தவரை அ.தி.மு.க. தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் கூட்டணியை முடிவு செய்ய வாய்ப்பில்லை. அ.தி.மு.க. மீதான ஊழல் குற்றச்சாட்டு வெளியானால் பா.ஜ.க. உடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது.

    கர்நாடாகவில் அ.தி.மு.க. போட்டியிடுவது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்ய வேண்டும். பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இட நெருக்கடி காரணமாக அவதிப்பட்டு வருவதால் 25 ஏக்கர் நிலம் வனத்துறை சார்பில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. விரைவில் நிலம் தருவதாக அரசு சார்பில் உத்தரவாதம் தரப்பட்டு உள்ளது.

    அத்திகடவு-அவினாசி திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது. செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்கு பல்வேறு இடர்பாடுகள் இருப்பதாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். கனிம வளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். அதேபோன்று மண்பாண்டம் செய்பவர்களுக்கு குளத்தில் இருந்து இலவசமாக மண் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை மதியம் நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற பலப்பரீட்சையில் எடப்பாடி பழனிசாமியின் கை தொடர்ந்து ஓங்கி உள்ளது.

    இதன்காரணமாக சமீபத்தில் அவர் பல்வேறு சட்ட ரீதியிலான சவால்களை உடைத்தெறிந்துவிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. நிர்வாகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அணுகி உள்ளார். அதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அதுபோன்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

    இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு நாளைய செயற்குழு கூட்டத்தில் ஒப்புதலும், அங்கீகாரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் அ.தி.மு.க.வில் கொள்கை ரீதியிலான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானமும் செயற்குழு கூட்டத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடக சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் எத்தனை தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடலாம் என்று நாளை தீர்மானிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் பற்றியும் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    மேலும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. தேர்தல் கமிஷனில் புதிய பதிவுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்க உள்ளனர்.

    நாளை செயற்குழு கூட்டத்தில் சுமார் 300 பேர் பங்கேற்பார்கள் என்று தெரியவந்துள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள். மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது பற்றியும் முடிவு செய்யப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதலான அதிகாரம் வழங்கப்படுவதால் எதிர்வரும் நாட்களில் அவர் கட்சி பணிகளில் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவார். எனவே நாளை நடைபெறும் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம்.
    • ஊழல் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என அறிவிப்பு விட வேண்டும்.

    மதுரை :

    மதுரை விமான நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும் என்கிற உறுதியை அம்பேத்கரின் பிறந்தநாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்கள் குறித்து வெளியிட்டுள்ள ஊழல் பட்டியலை நான் வரவேற்கிறேன். இது ஒன்றும் புதிது இல்லை. அவர்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது, அது எப்படி அவர்களுக்கு கிடைத்தது? என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி உள்ளது. அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்திருப்பதால், அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் அனைவரும் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள். அ.தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். இரண்டு பக்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊழல் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என அறிவிப்பு விட வேண்டும். அண்ணாமலைக்கு நான் வைக்கும் வேண்டுகோள் இது. அ.தி.மு.க.வின் ஊழலையும் வெளியிட்டு நடுநிலையாக இருக்க வேண்டும்.

    அங்கு கூட்டணி வைத்து இருப்பதால் வாயை மூடி இருந்தால் ஊழல் செய்த கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேள்வி கேட்போம். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அ.தி.மு.க. சொத்து பட்டியலை தயவு செய்து வெளியிடுங்கள், நடவடிக்கை எடுங்கள்.

    மோசமான ஆட்சி நடைபெறுவதற்கு தலைவர்கள் காரணம் இல்லை, அந்த தலைவர்களை தேர்வு செய்த மக்கள்தான் காரணம் என ஆபிரகாம் லிங்கன் சொல்கிறார். இந்த மாதிரி ஆட்களை சட்டசபைக்கு அனுப்பியது யார்?. எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது. அதை விட்டுவிட்டு ஐ.பி.எல். பார்ப்பதற்கு டிக்கெட் கேட்கிறார்கள்.

    மதுரை திருமங்கலத்தில் ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் குதித்து தற்கொலைசெய்து கொண்ட விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால்தான், இதுபோன்ற சம்பவங்கள் அடுத்து நடைபெறாமல் இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பி.எஸ். விவகாரத்தில் சட்டசபையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகின்றனர்.
    • தேர்தல் காலங்களில் எதிர்கட்சி என்பதை வெளிப்படுத்தி மக்களிடம் ஆதரவு கேட்போம்.

    சென்னை:

    சசிகலா தி.நகரில் உள்ள இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. உட்கட்சி பூசலை தி.மு.க. பயன்படுத்தி வருகிறது. அனைவரும் ஒன்று சேர கூடாது என தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    ஓ.பி.எஸ். தீர்மானம் குறித்து பேசுகிறார். உடனடியாக அ.தி.மு.க.வை சார்ந்த நபர்கள் எப்படி பேச விடலாம் என கேட்கின்றனர். அதற்கு சபாநாயகர் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில்தான் பேச சொன்னேன் என கூறினார். அவர் அ.தி.மு.க. அதனால் பேச சொன்னேன் என கூறவில்லை.

    தி.மு.க. எப்போதும் இரண்டு வண்டியில் மட்டுமே பயணம் செய்வார்கள். ஓ.பி.எஸ். விவகாரத்தில் சட்டசபையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகின்றனர். தேர்தல் காலங்களில் எதிர்கட்சி என்பதை வெளிப்படுத்தி மக்களிடம் ஆதரவு கேட்போம்.

    ஆட்சியை மக்கள் கொடுத்த பின் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஆனால் தி.மு.க. ஆட்சி அமைத்தது முதல் ஏதோ சந்தைக்கு போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். இதற்கு காரணம் என்ன என்று யோசித்து பார்த்தால் தற்போது உள்ள அரசு சட்டபேரவை என்றால் திரையரங்குக்கு வந்து செல்வது போல வந்து செல்கின்றனர்.

    இந்த சண்டையை பெரிதாக்கி பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க நினைக்கின்றனர்.

    மக்களுக்காக வந்த அரசாக இந்த அரசு தெரியவில்லை. 5 ஆண்டு காலம் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என செய்கின்றனர்.

    கொடநாடு வழக்கை தி.மு.க. அரசியலுக்காக பயன்படுத்துகிறது. வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் கேட்டால். நிச்சயம் சந்திப்பேன். ஓ.பி.எஸ். மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால், அதன் பின் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்வேன்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் பணி முடியும்.

    நான் ஜாதி அரசியல் செய்யவில்லை. ஜாதி பார்த்து அரசியல் செய்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-அமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன்.

    கவர்னர் மோதலை பெரிதாக மாற்றுவதை விட்டு விட்டு எடுத்து கூறி மக்களுக்காக நல்லதை செய்ய வேண்டும். எதிர்கட்சியாக பிரச்சினைகளை சரியான நேரத்தில் எடுத்து சொல்லாமல் உள்ளனர்.

    இவ்வாறு சசிகலா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது என குற்றச்சாட்டு
    • கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு மாஸ்க் அணிந்து கொண்டு பங்கேற்றனர். எதிர்க்கட்சியினர் பேசுவது சட்டசபையில் நேரலை செய்யப்படுவதில்லை, கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க அரசு அலட்சியம் காட்டுகிறது, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கருப்பு மாஸ்க் அணிந்து சபைக்கு வந்தனர்.

    தமிழக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது நேரலை செய்யப்படவில்லை என்பதால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக சபையில் விவாதம் நடந்தது. பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ் அப் மட்டும் முகநூலில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது.
    • செந்தில்குமார் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்குமலை சொசைட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு துவாக்குடி நகர செயலாளராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ் அப் மட்டும் முகநூலில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து மேற்கண்ட துவாக்குடி வடக்குமலை அக்பர் சாலை பகுதியைச் சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஜெய்னுதீன், அ.தி.மு.க. பிரமுகர் செந்தில்குமார் மீது துவாக்குடி போலீசில் புகார் செய்தார்.

    அதில், நான் துவாக்குடி பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி செயலாளராகவும், திருவெறும்பூர் வட்டார ஜமாத் உலமா கௌரவ தலைவராகவும் இருந்து வருகிறேன். இந்நிலையில் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் செந்தில்குமார், வாட்ஸ்அப்பில் என்னை இஸ்லாமிய துரோகி என்று இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி, துவாக்குடி நகராட்சித் தலைவர் காயம்பின் பினாமியாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

    மேலும் இந்து முஸ்லிம் மதக் கலவரத்தினை ஏற்படுத்தும் வகையில் தி.மு.க. கட்சியில் உள்ள இந்து முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

    ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் துவாக்குடி போலீசார் செந்தில்குமார் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசுவது நேரலையில் ஒளிபரப்பாமல் அரசு புறக்கணிப்பதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினார்கள்.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    சென்னை:

    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவது நேரலையில் ஒளிபரப்பாமல் அரசு புறக்கணிப்பதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினார்கள்.

    இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலையில் ஒளிபரப்ப மறுப்பதை கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்துக்கு எதிராக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது.
    • வழக்கு 20 மற்றும் 21-ந்தேதிகளில் விசாரிக்கப்படும். வழக்கின் இறுதி விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை தனி நீதிபதி குமரேஷ்பாபு கடந்த மாதம் தள்ளுபடி செய்தார்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை வருகிற 20-ந்தேதி இறுதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

    இந்தநிலையில், அ.தி.மு.க. செயற்குழுகூட்டம் வருகிற 16-ந்தேதி நடைபெறும் என்று அ.தி.மு.க. தரப்பில் கடந்த 6-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முறையிடப்பட்டது.

    இதையடுத்து மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் இன்று விசாரணைக்கு எடுத்தனர். அப்போது நீதிபதிகள், ''இந்த வழக்கை அவசரமாக இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மணிசங்கர், ''கர்நாடகா தேர்தலில் போட்டியிடவும், வேட்பாளர்களை தேர்வு செய்யவும், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காகவும் செயற்குழு கூட்டப்படுகிறது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருடன் கலந்து பேசி பொதுக்குழுவில் முடிவு எடுக்க உத்தரவிட்டது. கடந்த 6-ந்தேதி அறிவிப்பில் அழைப்பிதழுடன் செயற்குழு கூட்டத்துக்கு வர வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எனவே, இதில் மனுதாரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு ஆகியவை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு கட்சியில் எந்த முடிவு எடுத்தாலும், அது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டுள்ளது.

    எனவே, இது தேவையில்லாத கோரிக்கை. மேலும், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை, கர்நாடகா தேர்தலுடன் சம்பந்தப்படுத்த முடியாது'' என்று வாதிட்டார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பின் மற்றொரு மூத்த வக்கீல் விஜய்நாராயண், ''சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது, ஈரோடு தேர்தல் நடந்ததால், அப்படி ஒரு இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.

    அந்த சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனரா? அவருக்கு பொதுக்குழுவில் கூட செல்வாக்கு இல்லை. வெறும் 4 பொதுக்குழு உறுப்பினர்கள்தான் அவருக்கு ஆதரவாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர்'' என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், செயற்குழுவில் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மூத்த வக்கீல் விஜய்நாராயண், கர்நாடகா மாநில தேர்தலில் பங்கேற்பது. கூட்டணி முடிவு செய்வது, தொகுதிகள், வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்ய போகிறோம் என்றார்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 4 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கலாம். ஆனால், அவர் கட்சிக்குள் வந்து விட்டால், 4 என்பது 400 ஆக மாறும். ஏற்கனவே, இடைக்கால வழக்கு தனி நீதிபதி முன்பு நிலுவையில் இருந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் கேட்டு விட்டு, பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தனர். அதுபோல, ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எதிர் தரப்பினர் எடுக்கின்றனர்'' என்றார்.

    அதற்கு மூத்த வக்கீல் விஜய் நாராயண், அரசியலில் அன்றாட நடவடிக்கை முக்கியமானது. கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, கட்சியின் நிலை குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதனால் செயற்குழு கூட்டம் கூட்டப்படுகிறது என்றார்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வக்கீல் மணி சங்கர், ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, இதுபோலத்தான் கூறினார்கள். கூட்டங்களையும், முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்தனர் என்று கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், தற்போது அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தின் தற்போதைய நிலை என்ன? என்று கேள்வி கேட்டனர்.

    அதற்கு மூத்த வக்கீல் மணிசங்கர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்று பதில் அளித்தார்.

    உடனே நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் சொந்த கட்சிக்கு எதிராக சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்'' என்றனர்.

    இதற்கு பதில் அளித்த மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ''ஓ.பன்னீர்செல்வம் மாணவர் பருவத்தில் இருந்தே அதிமுகவில் உள்ளார். ஆனால், அவரை சிலர் நீக்கியுள்ளனர்'' என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்துக்கு எதிராக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கு 20 மற்றும் 21-ந்தேதிகளில் விசாரிக்கப்படும். வழக்கின் இறுதி விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை அ.தி.மு.க.வில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவானாலும், அது இந்த தீர்ப்புக்கு கட்டுப்பட்டது'' என்று உத்தரவிட்டனர்.

    • கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
    • ஏற்கனவே கர்நாடகாவில் முன்பு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு முடிவுகளை அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே கர்நாடகாவில் முன்பு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அ.தி.மு.க. தரப்பில் வாதிடப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. எனவே இந்த கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி தரப்பு வக்கீல் ஏற்கனவே பலமுறை இதுபோன்ற பதிலையே தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. கடந்த ஜூலை 2022 முதல் இதனையே கூறுகின்றனர். ஆனால் முடிவெடுக்கவில்லை. மேலும் கர்நாடக தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். எனவே 10 நாட்கள் அவகாசம் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல் "சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பான மூல வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை தற்போதைக்கு விசாரிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

    தங்கள் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ், ஏற்கனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் கேட்டிருந்த நிலையில் அந்த அவகாசத்தை வழங்குவதாகவும் 10 நாட்களில் அ.தி.மு.க. சட்டவிதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

    மேலும், அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை முடித்து வைப்பதாகவும் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் முன்பாக நின்று குப்பை வரி பிரச்சனையை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர்.
    • அ.தி.மு.க.வை குறை கூறுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தகுதி இல்லை என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் 2023-2024 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி பேசினார். அவர் மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. குறிப்பாக அம்மா உணவகத்தால் ஏராளமான ஏழை பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் அதற்கான போதிய நிதி ஒதுக்கவில்லை. அதேபோல் குப்பை வரியை குறைக்க வேண்டும் என பல கூட்டங்களில் வலியுறுத்தி வருகிறோம். குப்பை வரிவிதிப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கான வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த குறைபாடுகளை களைய வேண்டும் என்று பேசினார்.

    அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் செல்வராஜ், கடந்த ஆட்சியின்போது தான் வரி உயர்த்தப்பட்டது என்று தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் முன்பாக நின்று குப்பை வரி பிரச்சனையை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர். அப்போது மேயர், கவுன்சிலர்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து பேசும்படி கூறினார். அப்போது விவாதத்தின் போது நீங்கள் பதில் கூறுங்கள். உறுப்பினர்கள் பதில் கூறக்கூடாது என்றனர். இதனால் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    தொடர்ந்து பேசிய மேயர் தினேஷ் குமார், அவையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் இருக்கையை விட்டு எழுந்து வந்து பேசக்கூடாது. அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே வெளிநடப்பு செய்கிறார்கள் என்றார். தொடர்ந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மீண்டும் உள்ளே வந்தனர். அப்போது அ.தி.மு.க.வை குறை கூறுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தகுதி இல்லை என்றனர். இதனால் மீண்டும் இரு தரப்பு கவுன்சிலர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. 

    ×