search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • பாண்டி கோவில் பகுதியில் நாளை மின் தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    வண்டியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாண்டிகோவில் பகுதிகளில் நாளை (14.12.22) அன்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கருப்பாயூரணி, சீமான் நகர், நூல் பட்டறை தெரு, பாரதிபுரம் 1-9 தெருக்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    • நாளை 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
    • அவினாசி வட்ட மின் செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை 14-ந் தேதி (புதன்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்கு பகுதி, வலசுபாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை அவினாசி வட்ட மின் செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் தகவல்
    • உயர் அழுத்த மின்பாதையில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி:

    இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செம்பொன்விளை துணை மின் நிலையம் குளச்சல் விநியோக பிரிவுக்குட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் வரும் 14-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடப்பதால் உடையார்விளை, கோணங்காடு, அஞ்சாலி ஆகிய பகுதியிலும், 15-ந்தேதி செம்பொன்விளை மின் பிரிவுக்குட்பட்ட பாலப்பள்ளம், மிடாலக்காடு, நீர்வக்குழி, மத்திக்கோடு, பிடாகை, சகாய நகர், குப்பியந்தறை, நெடுவிளை பகுதியிலும், 16-ந்தேதி குளச்சல் விநியோகத்திற்குட்பட்ட நரிக்கல், கீழ்கரை பகுதியிலும், 21-ந்தேதி குளச்சல் விநியோகத்திற்குட்பட்ட இலப்பைவிளை, மரமடி, கொட்டில்பாடு, குழந்தை ஏசு காலனி, ஆசாத்நகர், காரித்தாஸ் காலனி பகுதியிலும், 22 ம் தேதி செம்பொன்விளை விநியோகத்திற்குட்பட்ட இரும்பிலி, கணேசபுரம், பனவிளை, சலேட்நகர், கண்டர்விளாகம், வாணியக்குடி, ஆலஞ்சி, குறும்பனை ஆகிய பகுதியிலும் மேற்கூறிய நேரங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி துணைமின்நிலையம் மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் துணைமின்நிலையங்களில் மழைகால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகள் மின்தடை ஏற்படும்.

    ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவத நல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர். கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு. எஸ்.எம்.பி.காலனி, முந்திரிதோப்பு மற்றும் கேசவப்பெருமாள் கோவில் பகுதிகள்.

    தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி- தெப்பக்குளம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை. ஏ.பி.டி.சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எ.ம்.ஆர்.ரோடு, கொண்டித்தொழு.

    சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிசர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1, 2-வது தெருக்கள் வரை, பச்சரிசிக்காரத்தோப்பு, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி, மேல அனுப்பானடியின் கிழக்குபகுதி, தமிழன் தெரு.என்.எம்.ஆர்.புரம்,ஏ.ஏ.ரோடு,பி.பி. ரோடு,டி.டி. ரோடு, மீனாட்சி அவன்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைடிபெறவுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் : 

    பல்லடம் மின் கோட்டம் காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற 13-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகா், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகா், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பசூர் துணை மின் நிலையத்தில் நாளை 12-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதி–யம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- பசூர் துணை மின் நிலையத்தில் நாளை 12-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் கானூர் புதூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கானூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர்,ஆலத்தூர், தொட்டிபாளையம்,குமாரபாளையம், மொண்டிபாளையம்,தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அலகுமலை துணை மின்நிலையத்தில் நாளை 12-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அலகுமலை துணை மின்–நிலையத்திற்குட்பட்ட பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சிவலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ. பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 12-ந்தேதி (திங்கட்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

     எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடுகபட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட வடுகபட்டி, குமாரபாளையம், மூக்குத்தரிச்சான்பாளையம், சுள்ளப்பெரிக்காபாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டணம் மற்றும் அதைசார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாண்டஸ் புயலின் மையப்பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
    • காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் மின்தடை ஏற்படும்

    விழுப்புரம்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், சில இடங்களில் 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதனால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உள்ளாட்சி, பொதுப்பணி, மின்சாரம், வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கிழக்கு கடற்கரை சாலையில் சின்னமுதலியார்சாவடி, பெரியமுதலியார்சாவடி, பிள்ளைச்சாவடி, அனுமந்தை, கூனிமேடு, நடுக்குப்பம், கீழ்புத்துப்பட்டு, தந்திராயன்குப்பம், அழகன்குப்பம், வசங்குப்பம், கைப்பாணிக்குப்பம் ஆகிய 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடல் சீற்றத்தின் காரணமாக கடந்த 3 நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று மாலை முதலே இப்பகுதிகளில் மிதமான வேகத்தில் காற்று வீசத் துவங்கியது. இது படிப்படியாக அதி கரித்து இன்று காலை முதல் 30 கி.மீ., வேகத்தில் வீசி வருகிறது. இது படிப்படியாக உயரும் எனத் தெரிகிறது. வழக்கத்திற்கு மாறாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் தங்களது படகுகளை மேடான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இருப்பினும் பலத்த காற்றினால் கடல் சீற்றம் அதிகரித்து மேடான பகுதி வரை கடல் நீர் வருகிறது. இதனால் மீனவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

    மேலும், விழுப்புரம் மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மின்தடை உள்ளது. இன்று காலை 8 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் மின்தடை ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ஒரு சில கிராமங்களில் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

    • சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூா் சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (9-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அரண்மனைப்புதூா், தட்டான்தோட்டம், எம்.ஜி.புதூா், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.ஜி.நகா், கே.எம்.நகா், பட்டுக்கோட்டையாா் நகா், திரு.வி.க. நகா், கவுண்டம்பாளையம், கோபால் நகா், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகா், கே.வி.ஆா். நகா், பூச்சக்காடு, மங்கலம் சாலை, பெரியாா் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி சாலை, யூனியன் மில் சாலை, மிஷின் வீதி, காமராஜா் சாலை, புதுமாா்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதா்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூா் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது.
    • காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

    வீரபாண்டி : 

    திருப்பூர் வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில்நாளை (8-ந்தேதி) காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- 

    வீரபாண்டி துணை மின் நிலையம்: வீரபாண்டி, பாலாஜி நகா், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகா், நொச்சிபாளையம் (வாய்க்கால் தோட்டம்), குளத்துப்பாளையம், கரைபுதூா், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகா், லட்சுமி நகா், சின்னக்கரை, முல்லை நகா், டி.கே.டி.மில்ஸ்.

    ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்: இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகா், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகா், இடுவாய் கிழக்குப் பகுதி, ஜீவா நகா், சின்னியகவுண்டன்புதூா், கே.என்.எஸ்.நகா், முல்லை நகா், இடும்பன் நகா், ஆா்.கே.காட்டன் சாலை, காமாட்சி நகா், செல்லம் நகா், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகா், அம்மன் நகா், தாந்தோணியம்மன் நகா், எவா்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி காா்டன், தனலட்சுமி நகா், லிட்டில் பிளவா் நகா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இதுசார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    தாராபுரம் :

    தாராபுரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 8-ந் தேதி (வியாழக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல் பாளையம், கள்ளிவலசு, சிக்கினாபுரம், ரஞ்சிதாபுரம் வட்டமலைபுதூர் மற்றும் இதுசார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

    • கொளத்துப்பாளையம், கன்னிவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை 6-ந் தேதி நடைபெறுகிறது.
    • மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மூலனூர், கொளத்துப்பாளையம், கன்னிவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை 6-ந் தேதி நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் காலை 9மணி முதல் பகல் 2மணி வரை அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, நொச்சிக்காட்டு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, போளரை, வலசு, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதுார், கிளாங்குண்டல், அரிக்கான்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, மாலமேடு, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெரமாள்வலசு, உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 5-ந்தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.

    திருப்–பூர், டிச.4-

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வேலம்பாளையம், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 5-ந்தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திகலர்வீதி, அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, தண்ணீர் பந்தல்காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேரு நகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாந–கர், லட்சுமிநகர்,

    இந்திராநகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன்கோவில் பகுதி, சொர்னபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லே அவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டி.டி.பி. மில் பகுதி, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், துலுக்க முத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்–பா–ளை–யம், ஆயிகவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலைநகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×