search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது
    • ஒட்டிவாக்கம், தாங்கி, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை மற்றும் அவைகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரையில் வாலாஜாபாத், புத்தகரம், ஊத்துக்காடு, நத்தாநல்லூர், தேவரியம்பாக்கம், வாரணவாசி, தென்னேரி, கட்டவாக்கம், புளியம்பாக்கம், சங்கராபுரம், தொள்ளாழி, களியனூர், தம்மனூர், அவளுர், அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், வரதராஜபுரம், வெங்குடி, பூசிவாக்கம், ஒட்டிவாக்கம், தாங்கி, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை மற்றும் அவைகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.

    இந்த தகவலை செயற்பொறியாளர் பிரசாந் தெரிவித்து உள்ளார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மதுரை திருப்பாலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை திருப்பாலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (13-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்டை ஏற்படும். திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்தி காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய காலனி, சொக்கிகுளம், சண்முகாநகர், விஜய் நகர், கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம் துணை மின்நிலையத் தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • வட்டமலைபுதூர் மற்றும் அதைச் சார்ந்த ஊரக பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    தாராபுரம்:

    தாராபுரம் கோட்டம் மின்வாரிய செயற் பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம் துணை மின்நிலையத் தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பா ளையம், சென்னாக்கல்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல்பாளையம், கள்ளிவலசு, சிக்கினாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் மற்றும் அதைச் சார்ந்த ஊரக பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 12-ந்தேதி( புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    பெருமாநல்லூா் துணை மின் நிலையம்: பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பெரிச்சல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

    பழங்கரை துணை மின் நிலையம்: அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூா், தங்கம் காா்டன், விஸ்வ பாரதி பாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகா், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டி புதூா் ஒரு பகுதி, ரங்கா நகா் ஒரு பகுதி, ராஜன் நகா், ஆா்.டி.ஓ. ஆபீஸ், கமிட்டியாா் காலனி,

    குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகா், திருநீலகண்டா் வீதி ,நெசவாளா் காலனி, எம்ஜிஆா் நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா், தன்வா்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வியாபாரிகள் கடும் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அதிபெரமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மின்வாரியம் சார்பில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் சிறு தொழில் செய்யும் தொழிற்சாலைகளும் அடிக்கடி மின்தடையால் மிகவும் அவதிப்பட்டு பாதிக்கப்படுகின்றன இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் இல.குருசேவ் மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்தார்.

    மேலும் தொடர்ந்து நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மதுரை

    மதுரை தெற்கு கோட்டத்திற்குட்பட்ட ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவில், அரசரடி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1-வது 2-வது தெருக்கள், ஓர்க் ஷாப் ரோடு. பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரஹாரம்,தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1மற்றும் 4-வது தெருக்கள், விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எச். காலனி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திரா மெயின் ரோடு 1-வது, 2-வது, 3-வது தெருக்கள், பொன்னகரம் பிராட்வே.

    வடக்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்கு ஆவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணிமூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு,தெற்கு ஆவணிமூல வீதி, கீழச்சித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூலவீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம்,கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சிகோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தைபொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், மேல சித்திரை வடக்கு வீதி, நேதாஜி மெயின்ரோடு, திருமலை நாயக்கர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி. தெற்குச் சித்திரை வீதி, தெற்கு காவல் கூடதெரு, மேல கோபுரம் வீதி.

    புது ஜெயில் ரோடு, ஜெயில் காலனி, முரட்டன் பத்திரி, கிரம்மர்புரம், மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, இளந்தோப்பு 1-வது, 2-வது மற்றும் 3-வது தெருக்கள், மில்கேட், பொன்னகரம் ஒரு பகுதி, மணிஅய்யர் சந்து, ஸ்காட் டு, எல்.ஐ.சி., குட்செட்தெரு, மேல மாரட் வீதி, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, சம்பந்தமூர்த்தி தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • உச்சிப்புளி, ஏர்வாடி பகுதியில் 11-ந்தேதி மின்தடை ஏற்படுகிறது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் (ஊரகம்) செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெருங்குளம் துணை மின் நிலையத்தில் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், பனைக்குளம் சுற்றியுள்ள பகுதிகள், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்பேகி, அழகன்குளம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் ஏர்வாடி, தர்கா, கடற்கரை மற்றும் புல்லந்தை, மாயாகுளம், இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், மல்லல், நல்லிருக்கை, மல்லல் மட்டியரேந்தல், இளங்காக்கூர், வளநாடு பகுதிகளில் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • மாதாந்திரப் பாராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை 1-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    பல்லடம் நகரம், வடுகபாளையம், வடுகபாளையம்புதூா், அனுப்பட்டி, சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம், சின்னூா், கொசவம்பாளையம், வெங்கிட்டாபுரம்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள தெத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    சமயநல்லூர் துணைமின் நிலையத்தில் உள்ள பெப்சி பீடர் மற்றும் வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள தெத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை பரவை, பேங்க் காலனி, ஆகாஷ் கிளப், சரவணா நகர், சந்தோஷ் நகர், வித்யாவாகினி அபார்ட்மெண்ட், எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்துவபுரம், தடாகநாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதேபோன்று மதுரை அரசரடி துணைமின் நிலையத்தில் உள்ள கூடல் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொன்னவாயன் சாலை, சிங்கம்பிடாரி கோவில் தெரு, இந்திரா நகர், மேல மற்றும் கீழ வைத்தியநாதபுரம், மருதுபாண்டியர் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • மின் துறை ஊழியர்கள் காலவறையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

    புதுச்சேரி:

    மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்த காரைக்காலில் மின் துறை ஊழியர்கள் காலவறையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்தப்போராட்டத்தால், காரைக்காலின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டு, மின் ஊழியர்கள் அதனை சரி செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் காரணமாக, காரைக்காலின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். அதேபோல், காரைக்கால் அருகே அம்பகரத்தூரில், நேற்று நள்ளிரவு 2 மணிக்கு ஏற்பட்ட மின்தடை பகல் 2.30 மணிவரை சரிசெய்யப்ப டவில்லை யென கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் தண்ணீர் விநியோகமும் தடைபட்டது. வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். 

    தொடர்ந்து, அத்திர மடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் அம்பகரத்தூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த திருநள்ளாறு போலிசார், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், சம்பவ இடத்திற்குசென்று, மின் ஊழியர்களிடம் பேசுவதாகவும், தண்ணீர் விநியோகத்தை டீசல் மின் மோட்டார் மூலம் சரி செய்வதாக உறுதியளித்ததையடுத்து, பொது மக்கள் சாலைமறியலை கைவிட்டு சென்றனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 28-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகா், அண்ணா நகா், ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஜி.வலசு ரோடு, சேரன் நகா், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம்.

    புதுப்பை துணை மின் நிலையம்: புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, செம்மடை, புள்ளசெல்லிபாளையம்.

    • பழுதான மின் கம்பிகள் மற்றும் மின் தளவாட சாதனங்களை மாற்றி புதிதாக அமைக்கும் பணி நடைபெற உள்ளது
    • குளச்சல் மெயின் ரோடு, அரசு மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குளச்சல் விநியோகப் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மின் பாதையில் பழுதான மின் கம்பிகள் மற்றும் மின் தள வாட சாதனங்களை மாற்றி புதிதாக அமைக்கும் பணி நாளை (27-ந் தேதி) மற்றும் மறுநாள் (28-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளச்சல் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், நெசவாளர் தெரு, பள்ளி விளாகம்அழகனார் கோட்ட விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளச்சல் மெயின் ரோடு, அரசு மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேற்கண்ட தகவலை இரணியல் மின் விநியோகம் உதவி செயற் பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    கன்னியாகுமரி உப மின்நிலையத்திலும் நாளை (27-ந் தேதி) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி,திருமூலநகர், வழுக்கம்பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம்,கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சு கிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர், சின்னமுட்டம் மற்றும் பால்குளம் பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.

    மேற்கண்ட தகவலை நாகர்கோவில் மின்விநியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணன்கோவில் விநியோக பிரிவிற்குட்பட்ட டென்னிசன் ரோடு உயர்அழுத்த மின்பாதையில் நாளை மறுநாள் (28-ந் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டென்னிசன் ரோடு, மணி மேடை, நாகராஜா கோவில் குறுக்கு சாலை பகுதிகளில் மின்சாரம் இருக்காது என பார்வதிபுரம் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் ரமணிபாய் தெரிவித்து உள்ளார்.

    ×