search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை .
    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் தெக்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் கே.ஆா்.சபரிராஜன் தெரிவித்துள்ளாா்.

    மின் தடை ஏற்படும் பகுதிகள்: வடுகபாளையம், சென்னியாண்டவா் கோயில், வினோபா நகா், விராலிகாடு, ராயா்பாளையம், தண்ணீா்பந்தல், செங்காளிபாளையம், திம்மினியாம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சாவக்காட்டுப்பாளையம், சேவூா், குளத்துப்பாளையம், வளையபாளையம். காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகலில் நாளை 22-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டுவலசு.பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

    காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், பொன்னங்காளிவலசு, சேவூா், வடுகபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    சேவூா் துணை மின் நிலையம்: சேவூா், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா்,போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா் பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம், மாரப்பம்பாளையம்.வடுகபாளையம் துணை மின் நிலையம்: வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகள் ஆகும். 

    • லட்சுமணம்பட்டி துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (22-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    வேடசந்தூர் அருகே லட்சுமணம்பட்டி துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (22-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை லட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காலணம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காேதாப்பு, சேடபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
    • இதனால் மின்தடை ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார் மின்சாரத்துறை அமைச்சர்.

    கரூர்:

    தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் ரூ.5,100 கோடி பாக்கி நிலுவைத் தொகை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு மின்சாரம் வாங்க தடை விதித்துள்ளதால் மின்தடை ஏற்பட்டுவிடும் என பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்தார்.

    • தேவகோட்டை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (20-ந் தேதி) 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே மேற்கண்ட நேரத்தில் தேவகோட்டை டவுன், உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை, உதையாச்சி, கோட்டூர், அனுமந்தக்குடி, புளியால் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    திருப்பூர் :

    கருவலூர் துைண மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துைண மின் நிலையத்துக்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால் பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பப்பாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பன்பாளை யம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளார்பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
    • அரசு மருத்துவமனை, உக்கடம் பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    முத்துக்கவுண்டன் புதூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன் புதூர் ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, குரும்ப பாளையம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    உக்கடம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு 20-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி வெரைட்டி ஹால் ரோடு பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர் மற்றும் டாக்டர் முனிசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம் பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை மூலம் உக்கடத்தில் நடைபெறும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கும் பொருட்டு உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் பாதைகளை அகற்றி புதியதாக அமைக்கப்பட்டு உள்ள 110 கி.வோ. புதைவட கேபிள் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சூலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு 20-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட உள்ளது. சூலூர், டி.எம். நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ். நகர், கண்ணம் பாளையம், காங்கேயம் பாளையம், ராவத்தூர் பகுதிகளில் அன்று மின் தடை செய்யப்பட உள்ளது. 

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒருசில கிராமங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராம பொது மக்கள் இருளில் தவித்த னர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேல்வளி மண்டல சுழற்றி காரண மாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஒருசில இடங்களில் பயிர் வகைகள் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஆழ்ந்த கவலை அடைந்தனர். இதனிடையே நேற்று நள்ளிரவு திடீரென கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக கடலூர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம், திருவந்திபுரம், நடுவீரப் பட்டு, பாலூர் ஆகிய பகுதிகளில் கொட்டி தீர்த்தது. இதனால் நகர் பகுதியில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது. இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒருசில கிராமங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராம பொது மக்கள் இருளில் தவித்த னர். ஏற்கனவே தொடர் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர் மண்ணில் சாய்ந்து உள்ளது. இத னால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • பண்ருட்டி கோட்டமின்வாரிய செயற்பொறியாளர் பழனி ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • நாளை (18-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    கடலூர்:

    பண்ருட்டி கோட்டமின்வாரிய செயற்பொறியாளர் பழனி ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (18-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்த மின் நிறுத்தும் பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்கு ப்பம், இருளங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என். புரம், வ.உ.சி நகர், கந்தன்பாளையம், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கண்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிளும் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துக் வித்தனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் நிறுத்தம்
    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

    மடத்துக்குளம் :

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப்பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 18-ந்தேதி( வியாழக்கிழமை ) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற் பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    உடுமலை பகுதியில் (காலை 9 மணி முதல் பகல் 2 மணி) மின்தடை ஏற்படும் பகுதிகள்: போடிபட்டி, அண்ணா நகா், பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை, சுண்டக்காம்பாளையம், இராகல்பாவி, கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டப்பட்டி, ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, ராமசாமி நகா், யுகேசி நகா், தீயணைப்பு நிலையம் பகுதி. மடத்துக்குளம் பகுதியில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூா், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையாா்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூா், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூா், கருப்புசாமிபுதூா், அ.க.புத்தூா், எஸ்.ஜி.புதூா், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனூா், மடத்தூா், மயிலாபுரம் நல்லண்ணகவுண்டன்புதூா், குளத்துப்பாளைய நல்லூா்.

    பல்லடம் மின் கோட்டம் காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ஜி.ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா். மின் தடை ஏற்படும் பகுதிகள்: செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகா், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகா், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி.

    • குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளர் தகவல்
    • பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுகோல்

    கன்னியாகுமரி:

    குழித்துறை கோட்டத்துக்கு உட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் நாளை (17-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரி விளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டணம், ராமன்துறை,

    சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மின்தடை நேரத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடை யூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் நடை பெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாளையம் மற்றும் வள்ளிப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை(17-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குஜிலியம்பாறை:

    பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை(17-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பாளையம் வான்ராயன்பட்டி, ஆணைப்பட்டி, கூடலூர், குஜிலியம்பாறை, வடக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் வள்ளிப்பட்டி துணைமின்நிலையத்தில் 18-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை அம்மாபட்டி, ராமகிரி, தலிப்பட்டி, மல்லப்புரம், உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், வள்ளிப்பட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதநாயக்கனூர்,

    இடையபட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூர், திருநகர், ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி துணை மின்நிலையங்களில் நாளை 16-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், கே.வி.ஆர்.நகர், மங்கலம் ரோடு, அமர் ேஜாதி கார்டன், கே.என்.எஸ்.கார்டன், ஆலங்காடு, வெங்கடாஜலபுரம், காதிகாலனி, கே.ஆர்.ஆர்.தோட்டம், கருவம்பாளையம், எஸ்.ஆர்.நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க.நகர், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், எஸ்.பி.ஐ.காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம்நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கள்ளம்பாளையம், அணைப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதேேபால் ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அபாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூர், தொட்டியவலசு, வயக்காட்டுப்புதூர், ஏ.கத்தாங்கண்ணி.

    செங்கப்பள்ளி துணை மின்நிலையத்திற்குட்பட்ட செங்கப்பள்ளி, விரும்மாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளப்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூர், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளிலும் நாளை 16-ந்தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×