search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • நிலக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • எனவே சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 26-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் நிலக்கோட்டை, நூத்துலா புரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலீநாயக்கன்பட்டி, சுட்டிக் காலடிப்பட்டி, அவையம்பட்டி, மணியகாரன்பட்டி, பங்களாபட்டி, சீத்தா புரம், தோப்புபட்டி, சின்னமநாயக்கன் கோட்டை, கோட்டூர் மற்றும்

    அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • கடலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    • சுற்றி இருக்கும் வெயிலும் அதிகரித்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    தமிழகத்தில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, காட்டு மயிலூர், காட்டுமன்னா ர்கோவில்,வேப்பூர், லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. இப்பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்து வந்தன.

    இதன் காரணமாக கடலூர், நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மின்சார துறை ஊழியர்கள் இரவு முழுவதும் மின்தடை காரணம் குறித்து ஆய்வு செய்து மின் இணைப்பு அதிகாலை வரை வழங்கி வந்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சுற்றி இருக்கும் வெயிலும் அதிகரித்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்னும் வருமாறு:- காட்டுமன்னார்கோவில் - 44.2,எஸ்.ஆர்.சி குடிதாங்கி - 42.5, வேப்பூர் - 39.0,லால்பேட்டை - 38.0,பண்ருட்டி - 30.0 ஆட்சியர் அலுவலகம் - 21.6வானமாதேவி - 21.6 காட்டுமயிலூர் - 4.0 9. கடலூர் - 3.8 என‌ மொத்த - 244.70 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    • குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அறிவிப்பு
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் நாளை (23-ந் தேதி) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் விரிகோடு, மாமூட்டுக்கடை, நெட்டி யான்விளை, காட்டவிளை, மஞ்சக்குளம், கரைக்காடு, பரக்குன்று, சாத்தன்கோடு, துவரச்சன்விளை,

    வாழ்வச்சான்பாறை, மூடோடு, சாண்டிபாறை, செழுவன்சேரி, தூப்புர மூலை, மணப்பழஞ்சி, நுள்ளிக்காடு, அயக் கோட்டிவிளை, மடத்து விளை, மாங்கோடு, காளை விழுந்தான்கோயில், ஐந்துளி, மருதம்பாறை, பத்துகாணி, ஆறுகாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை (23-ந் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தகவல்
    • இறச்சகுளம் உயர் மின்னழுத்த பாதையில் அவசர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.

    நாகர்கோவில்:

    இறச்சகுளம் உயர் மின்னழுத்த பாதையில் நாளை (22-ந் தேதி) அவசர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதன் காரண மாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மனுவேல் மருத்துவமனை, ஸ்ரீனிவாசா மருத்துவமனை, தெற்கு திருப்பதிசாரம், தேரேக்கால் புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் மின் விநியோகம் இரு க்காது. மேற்கண்ட தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • பெரம்பலூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
    • பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது

    பெரம்பலூா் :

    பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும், பெரம்பலூா் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, சிட்கோ, துறையூா் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகா், கே.கே. நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (21-ந் தேதி) காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவத்துள்ளார்.

    • ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளகோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.
    • வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம் ஆகிய பகுதிகள் ஆகும்.

    காங்கயம்:

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின் தடை செய்யப்படும் இடங்கள்:

    ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளகோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.

    வெள்ளகோவில் துணை மின் நிலையம்: வெள்ளகோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா். நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகா், கே.பி.சி. நகா், சேரன் நகா், காமராஜபுரம்.

    தாசவநாய்க்கன்பட்டி துணை மின் நிலையம்: தாசவநாய்க்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.

    மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின் தடை செய்யப்படும் இடங்கள் : வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம் ஆகிய பகுதிகள் ஆகும்.

    • விருதுநகரில் முன்னறிவிப்பில்லாத மின்தடை ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மாதத்தில் ஒரு நாள் மின் பாதை பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. ஆனால் அன்றைய நாளில் பல நேரங்களில் மாலை 5 மணிக்கு தான் மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக முறையான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வந்தன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மின்தடை அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடியால் திடீர் திடீரென மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், குடும்ப பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    விருதுநகர் நகர் பகுதியில் இன்று குறிப்பிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் விருதுநகர் நகர் முழுவதும் இன்று மின்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். சிறு தொழில் செய்வோர், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

    எனவே இனிமேலாவது மின்வாரிய அதிகாரிகள் மின்தடை குறித்த பகுதிகள் தொடர்பான முறையான அறிவிப்பு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 16-ம் தேதி ( சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நேருஜி நகர், ஜெகநாதபுரம், அமலோற்பவ புரம், கல்லாகுத்து, தங்கேஸ்வரர் நகர், மேலஅம்பிகாபுரம், அண்ணா நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், முத்துமணி டவுன், சுப்பையா தெரு, ராணுவ காலனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.

    திருச்சி :

    திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 16-ம் தேதி ( சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான

    கீழக்குறிச்சி, ஆலத்தூர், காந்திதெரு, அக்கரகாரம், ஸ்ரீராம் நகர், காருண்யா நகர், சோமசுந்தர் நகர், மகாலட்சுமி நகர், நியூ மகாலட்சுமி நகர், ஆனந்தம் நகர், எஸ்.ஆர்.எம். அவன்யூ,

    மேல கல்கண்டார்கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, பரமசிவம் தெரு, உடையார் தெரு, மூகாம்பிகை நகர், தமிழர் தெரு, மாருதி நகர், மகாலட்சுமி நகர், காமராஜர் ரோடு, அர்ச்சுணன் தெரு, திருமலை நகர், அண்ணா நகர், காவிரி நகர், தொழில்பேட்டை, அம்பிகாபுரி, அரியமங்கலம், நேருஜி நகர், ஜெகநாதபுரம், அமலோற்பவ புரம், கல்லாகுத்து, தங்கேஸ்வரர் நகர், மேலஅம்பிகாபுரம், அண்ணா நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், முத்துமணி டவுன், சுப்பையா தெரு, ராணுவ காலனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதாந்திர மின்சார பாராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்

    திருப்பூர் :

    திருப்பூர், பல்லடம், வீரபாண்டி, ஆண்டிப்பாளையம், குமார்நகர், சந்தைப்பேட்டை,பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர், வீரபாண்டி, ஆண்டிப்பாளையம், குமார்நகர், சந்தைப்பேட்டை, பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    வீரபாண்டி, ஆண்டிப்பாளையம்

    வீரபாண்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம், (வாய்க்கால்மேடு) குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சினனக்கரை, முல்லைநகர், டி.கே.டி.மில்.

    ஆண்டிப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட இடுவம்பாளையம், ஆண்டிப்பாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர்,லிட்டில் பிளவர் நகர்.

    குமார்நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ராமமூர்த்திநகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்குநகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம்,என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமிநகர்.

    சந்தைப்பேட்டை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அரண்மனைபுதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி. நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதி புரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின்வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகள்.

    பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம், பலவஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடைசெய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பல்லடம் நாரணாபுரம், பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேடபாளையம், 63வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகர், சேகாம்பாளையம், ஆட்டையம்பாளையம், தெற்குபாளையம், கல்லம்பாளையம், இந்திராநகர், மங்கலம் ரோடு ஒரு பகுதி, பனப்பாளையம், மாதப்பூர்,கணபதிபாளையம், குங்குமம்பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், நல்லா கவுண்டம்பாளையம், மாதேஸ்வரன் நகர், ராயர்பாளையத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.இந்த தகவலை பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

    • அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார நிறுத்தம் செய்யப்படும்.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காங்கயம் நகரம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகள்.

    சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், படியூர், மொட்டரபாளையம், ராசாப்பாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர் வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசி பாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டு தோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம், ஆலாம்பாடி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்தி ரெட்டிபாளையம் நெய்க்காரன் பாளையம், கல்லேரி.

    முத்தூர் கடைவீதி, காங்கயம் சாலை, ஈரோடு சாலை, வெள்ளகோவில் சாலை, கொடுமுடி சாலை, ஈரோடு சாலை, நத்தக்காடையூர் சாலை, வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலாம்பாளையம், சக்கரபாளையம், புதுப்பாளையம், செங்கோடம்பாளையம், வேலாயுதம்பாளையம், மேட்டுக்கடை, கரட்டுப்பாளையம், மலையத்தாபாளையம், வேலம்பாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
    • காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை வீரபாண்டி பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர் :

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கருவலூர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கே.ஜி.பாளையம் பீடர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை வீரபாண்டி பொதுசுத்திகரிப்பு நிலைய பகுதிகள், பொரையகவுண்டர் தோட்டம்,அம்மன் டையிங் பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

    • ஜூலை 15 காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது
    • மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள்

    கன்னியாகுமரி :

    குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 15) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டணம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் இருக்காது.

    இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது.

    மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×