search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • துறையூர் பகுதியில் நாளை மின்தடை செய்யபடும்
    • காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    துறையூர்:

    துறையூர் கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம் மற்றும் த.முருங்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இதிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், பி.மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, மற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    • போரூர், அம்பத்தூர் பகுதிகளில் 3-ந்தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • வருகிற 2-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    சென்னை:

    சென்னையில் வருகிற 2-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி. காரிடர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    மயிலாப்பூர்-பெசன்ட் ரோடு, சண்முகம் ரோடு, தாண்டவராயன் ரோடு, தாம்பரம் மெப்ஸ்-மல்லிமா வீதி, தெற்கு மற்றும் கிழக்கு மாடத் தெரு, தங்கவேல் தெரு, சிட்லபாக்கம்-துரைசாமி நகர், சரஸ்வதி காலனி, ஆர்.ஆர்.நகர், காமராஜர் காலனி, காந்தி தெரு, போரூர்-ஜெய் நகர், குன்றத்தூர் ரோடு பகுதி, ஆபிசர் காலனி, திருமுடிவாக்கம்-முருகன் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பாலவராயன் குளக்கரை தெரு, ஜெகநாதபுரம், அய்யப்பந்தாங்கல்-மேட்டு தெரு, தனலட்சுமி நகர், பாலாஜி அவென்யூ, சுப்பிரமணி நகர், பிரின்ஸ் அப்பார்ட்மெண்ட், ராமாபுரம்-வெங்கடேஸ்வரா நகர் 2 மற்றும் 3-வது மெயின் ரோடு, தாங்கல் தெரு, சிறுசேரி-நத்தம் ரோடு, எம்.கே.ஸ்டாலின் தெரு, நாவலூர் மெயின் ரோடு, கிரீன் உட் சிட்டி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

    போரூர், அம்பத்தூர் பகுதிகளில் 3-ந்தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும். மங்களா நகர், அம்பாள் நகர், ஆர்.இ.நகர் பகுதி, பூந்தமல்லி-கரையான்சாவடி, கே.கே.நகர், வசந்தபுரி, ஜீவா நகர், காமராஜர் நகர், கோவூர்-ஏரிக்கரை, திருமலை நகர், புத்தவேடு, திருமுடிவாக்கம்-ஏ.ஆர்.ரகுமான் அவென்யூ, மாங்காடு, பட்டூர், பஜார் தெரு, பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், லீலாவதி நகர், எஸ்.ஆர்.எம்.சி. பரணி புத்தூர், தெள்ளியர் அகரம், தனலட்சுமி நகர், முத்தமிழ் நகர், ரம்யா நகர், கங்கையம்மன் கோவில் தெரு, செம்மபரம்பாக்கம், நசரத்பேட்டை ஊராட்சி, அகரமேல், மலையம்பாக்கம், அம்பத்தூர் பகுதியில் கிழக்கு முகப்பேர், கலெக்டர் நகர், கலைவாணர் காலனி, அமிர்தா பிளாட்ஸ், மெடிமிக்ஸ் அவென்யூ ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    • வாடிப்பட்டி அருகே 2-ந் தேதி மின்தடை ஏற்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள ராயபுரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை மறுநாள் (2-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • பாலமேடு அருகே நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம்ப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள வலையப்பட்டி மற்றும் எர்ரம்பட்டி பீடர்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (29-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையார் அணை, எர்ரம்பட்டி, தேவசேரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • எறையூர் துணைமின்நிலையத்தில் அவசர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    கள்ளக்குறிச்சி:

    எறையூர் துணைமின்நிலையத்தில் அவசர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எறையூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி, அயன்குஞ்சரம். பாளையகுஞ்சரம், கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை, வடுகப்பாளையம்,எறையூர், வடகுறும்பூர், எஸ்.மலையனூர், எல்லைகிராமம், கூவாடு, தேன்குணம், நெய்வனை, எதலவாடி மற்றும் பில்ராம்பட்டு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்துறை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூா் துணை மின் நிலையப் பகுதிக்கு உள்பட்ட உயரழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை 28-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: பெருமால்லூா், லண்டன் சிட்டி, வாஷிங்டன் நகா், கணக்கம்பாளைம், மீனாட்சி நகா், பொன்விழா நகா்.

    • ராமநாதபுரம் நகரில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • இந்த தடையை தவிர்க்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் பட்டணம் காத்தான் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில்10-க்கும் மேற்பட்ட முறை குறைந்தது 5 நிமிடம் முதல் 10நிமிடங்கள் வரையும், சில நேரம் அரை மணி நேரத்திற்கு மேலாகவும் மின்தடை ஏற்படுகிறது.

    கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வீடுகளில் மக்கள் சிரமப்படுகின்றனர். பகல் நேரத்தில் இது போல் ஏற்படும் மின்தடையால் வணிக நிறுவனங்களில் தொழில் பாதிக்கப்படுகிறது.

    காலை நேரத்தில் பணிக்குச் செல்லும் போது ஏற்படும் மின்தடையால் உணவுகளை தயார் செய்ய முடியவில்லை என்றும், பெண்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.

    இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமிழந்து அவதிப்படுகின்றனர்.மின்வாரியம் முறையாக மின்சாரம் வழங்கவும் இந்த தடையை தவிர்க்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் கம்பத்தின் கீழ் பகுதி உடைந்ததால் சாய்ந்து விழும் நிலை ஏற்பட்டது.
    • 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் மங்கலம் ரோடு அரசு கல்லூரி எதிரே உள்ள ரோட்டில் நேற்று சரக்கு வேன் ஒன்று மின் கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பத்தின் கீழ் பகுதி உடைந்ததால் சாய்ந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் - பக்கத்தினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், அந்த பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி, ஊழியர்கள் மூலம் மின்கம்பத்தை மாற்றி அமைத்து சரி செய்தனர். இதனால் மங்கலம் ரோடு பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. கோடை வெயிலால் ஏற்கனவே அவதியில் இருந்த மக்கள், மின்தடையால் மேலும் அவதிப்பட்டனர்.

    • திருக்கோவிலூர் பகுதியில் வெயில் கொடுரமாக இருப்பதால், இங்கு மின்சாரம் இல்லாமல் பொது மக்களால் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது.
    • நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 தடவை திடீர் திடீர் என மின்வெட்டு ஏற்படுகிறது.

    கள்ளக்கறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் கோரத்தாண்டவம் பொது மக்களை வாட்டி வதைக்கின்றது. குறிப்பாக திருக்கோவிலூர் பகுதியில் வெயில் கொடுரமாக அடிக்கிறது. இதனால் இங்கு மின்சாரம் இல்லாமல் பொது மக்களால் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது. ஆனால், திருக்கோவிலூர் மின்வாரய ஊழியர்களின் செயல்பாடு சுட்டெரிக்கும் சூரியனே தேவலாம் என்ற அளவில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 தடவை திடீர் திடீர் என மின்வெட்டு ஏற்படுகிறது. அவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வரும்போது கூடுதலான மின்னழுத்தத்துடன் வருகிறது. இதனால் மின்சாதன பொருட்கள் ஆங்காங்கே பழுதடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டால் பதில் ஏதும் இல்லை   கோடை காலம் தொடங்கியதால் மின் பற்றாக்குறையால் இந்த மின்தடை ஏற்படுவதாக வைத்துக் கொண்டால் கூட நாள் ஒன்றுக்கு எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும் என அறிவித்துவிட்டு மின்சாரத்தை நிறுத்தலாம். அதை விடுத்து திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதும் பின்னர் உயர் மின்னழுத்தத்தில் மின்விநியோகம் நடைபெறுவதும் பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.மேலும் 24 மணி நேரத்தில் எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும் என்பதை உடனடியாக பட்டியலிட்டு திருக்கோவிலூர் மின்வாரியம் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • சென்னையில் நாளை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக வியாசர்பாடி பகுதிகளில் கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    வியாசர்பாடி பகுதிகளான மஞ்சம்பாக்கம் பகுதி கம்மன் நகர், மந்தைவெளி 1 முதல் 6-வது தெரு, பெருமாள் கோவில் தோட்டம், ஏ.வி.எம்.நகர், தெலுங்கு காலனி, திருமுருகன் நகர், வி.ஜி.கே.நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டணம் காத்தான், பனைக்குளம், உச்சிப்புளியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மின் பகிர்மான உதவி செயற்பொறியாளர் (ஊரகம்) செந்தில்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (8-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக பனைக்குளம் சுற்றியுள்ள பகுதிகள், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், பட்டணம் காத்தான், வாணி, காரிகூட்டம், சாத்தான்குளம், கழுகூரனி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர். குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், ரெட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி, எஸ்.கே. வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம், இந்திராநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மன்தடை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது.
    • கல்வித்துறை சார்பில் மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடப்பதால் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் முழுநேர மின்தடை இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு துவங்கியுள்ளது. வருகிற 13-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும், பிப்ரவரி 6-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வும் நடத்தப்பட உள்ளது. மாணவர்கள், தேர்வுக்கு நன்கு தயார்படுத்தி கொள்ளும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை முன்னிட்டு தேர்வு காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    மார்ச் - ஏப்ரல் மாதம் முழுநேர மின்தடை இருக்காது.மிக அவசர பழுது காரணமாக மின்தடை செய்ய வேண்டியிருந்தால் குறிப்பிட்ட இடம் சார்ந்த பகுதியில் மட்டும் தற்காலிகமாக மின்தடை செய்யப்பட்டு விரைவில் பழுதுநீக்கி மின்சாரம் வினியோகிக்கப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ×