search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94689"

    • தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
    • ராயப்பேட்டை மணிக்கூண்டு நோக்கியும், மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலையை நோக்கியும் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.

    சென்னை:

    சென்னையில் கோடை வெயில் கடந்த சில நாட்களாகவே வாட்டி எடுத்தது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் தலை காட்டமுடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாகவே இருந்தது.

    வெளிமாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்த போதிலும் சென்னையில் மட்டும் வெயில் மக்களை வாட்டி எடுத்தது.

    இந்நிலையில் சென்னை யில் நேற்று பகலில் திடீரென மழை பெய்தது. காலை 11.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    வேப்பேரி, எழும்பூர், கோடம்பாக்கம், பெரம்பூர், மாதவரம், எண்ணூர், மூலக்கடை, கோயம்பேடு, விருகம்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சென்னை மாநகர் முழுவதும் பலத்த மழை கொட்டியது. இதே போன்று தாம்பரம் மற்றும் ஆவடி சுற்று வட்டார பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக இன்று காலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அண்ணா சாலையை யொட்டியுள்ள ஜி.பி ரோட்டில் முட்டளவுக்கு மழை நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக அந்த சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து முடங்கியது. தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகம் இருக்கும் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    இன்று காலையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அண்ணா சாலையில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு நோக்கியும், மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலையை நோக்கியும் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.

    சாலையின் இரு புறமும் தடுப்பு கம்பிகளை வைத்து போலீசார் மூடினர். இதனால் இந்த சாலையை நோக்கி வந்தவர்கள் மாற்று பாதைகளில் திருப்பிவிடப்பட்டனர்.

    பட்டாளம் சந்திப்பு அருகிலும் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றது. அதில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மயிலாப்பூர் திரு.வி.க. சாலையிலும் தண்ணீர் குளம்போல தேங்கி நின்றது. சென்னையில் இதே போன்று பெரும்பாலான பகுதிகள் இன்று வெள்ளத்தில் மிதந்தன.

    இன்று காலையிலும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. சாரல் மழை போன்று தூரலும் போட்டது. இதனால் சென்னையில் இதமான சூழல் நிலவியது.

    • கோழிபோர்விளையில் 95.4 மில்லி மீட்டர் பதிவு
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது. நேற்று காலையில் வழக்கமாக வெயிலடித்து வந்த நிலையில் மாலையில் சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

    இரவு மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் நேற்று 7 மணிக்கு மழை பொய்ய தொடங்கியது. இரவு 9 மணி முதல் சுமார் 1 மணி நேரமாக மழை கொட்டியதையடுத்து ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. கோழிப்போர்விளையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 95.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி, கொட்டாரம், கன்னிமார், மயிலாடி, குளச்சல், தக்கலை, இரணியல், முள்ளங்கினா விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. குலசேகரம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அந்த பகுதியில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக குளிர் காற்று வீசியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டிய மழையின் காரணமாக அருவியல் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.87 அடியாக இருந்தது. அணைக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 71 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டமும், பாசன குளங்களின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்னை, ரப்பர் விவசாயி களுக்கும் மழை பயனுள்ளதாக அமைந்து ள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பேச்சிப்பாறை 35.8, பெருஞ்சாணி 9, சிற்றார் 1-21.4, சிற்றார் 2 -32.2, பூதப்பாண்டி 82, கன்னிமார் 38.6, கொட்டா ரம் 30.4, மயிலாடி 17.4, நாகர்கோவில் 59.4, புத்தன் அணை 7.6, சுருளோடு 11, தக்கலை 72.3, குளச்சல் 4.6, இரணியல் 28.2, பாலமோர் 8.6, மாம்பழத்துறை யாறு 53, திற்பரப்பு 73, ஆரல்வாய் மொழி 18, கோழி போர்விளை 95.4, அடையாமடை 37.2, குருந்தன்கோடு 34, முள்ளங்கினாவிளை 84.6, ஆனைக்கிடங்கு 50.4, முக்கடல் 28.7.

    • சென்னை வானிலை மையம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தது.
    • சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து நகரில் வெப்பம் தணிந்துள்ளது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை செண்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மதுரவாயல், முகப்பேர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    • பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
    • தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்தே காணப்படுகிறது.

    தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் கனமழை, சில இடங்களில் லேசான மழை கடந்த ஒரு வார காலமாக பெய்து வருகிறது. கோடை வெயிலுக்கு விடுமுறை அளிக்கும் வகையில், மழை பெய்து வருவதால் வழக்கத்தை விட தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்தே காணப்படுகிறது.

    இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 1) துவங்கி முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம். சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி போன்ற 17 இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குழித்துறை பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    சுமார் 2 மணி நேரத்திற் கும் மேலாக கொட்டி தீர்த்த மழை காரணமாக அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை, புத்தன் அணை, கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, குலசேகரம், களியல், சுருளோடு பகுதியிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் வாழை, தென்னை, அன்னாசி, ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்கலை, சரல்விளை, வண்ணான்விளை பகுதியை சேர்ந்த சுஜுன் என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியதில் வீட்டின் மேல்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார்கள்.

    தொடர் மழையின் கார ணமாக திற்பரப்பு அருவி யில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.47 அடி யாக உள்ளது. அணைக்கு 206 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.55 அடியாக உள்ளது. அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 15.8, பூதப்பாண்டி 3.2, களியல் 4.6, கன்னிமார் 6.8, குழித் துறை 62.2, புத்தன்அணை 15, சுருளோடு 7, தக்கலை 20, பாலமோர் 4.2, திற்பரப்பு 5.8, ஆரல்வாய்மொழி 16, கோழிபோர்விளை 38.5, அடையாமடை 24, முள் ளங்கினாவிளை 22.4.

    • கடந்த வாரத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் 100 டிகிரியை கடந்து பதிவானது.
    • கோடை வெயிலுக்கு இதமாக சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு இதமாக சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் 100 டிகிரியை கடந்து பதிவான நிலையில், கடந்த 3 நாட்களாக கரூர், ஈரோட்டில் மட்டுமே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தென்னிந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத்திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழ்நாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    அதற்கு மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில், கொடைக்கானலில் 11 செ.மீ., மழையும், ஈச்சன்விடுதியில் 5 செ.மீ., மழையும், சோத்துப்பாறையில் 4 செ.மீ., மழையும், மஞ்சளாறு, கயத்தாறு, பெரம்பலூர், கடம்பூர், ராமநதி அணைப்பிரிவு, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

    • சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
    • அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வரு கிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து இரவு நேரங் களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

    அடையாமடை, கோழிப் போர்விளை, முள்ளங்கினாவிளை, இரணியல், புத்தன்அணை, பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதி களில் பரவலாக சாரல் மழை பெய்தது. அடையா மடையில் அதிகபட்சமாக 22 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவு கிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியல் குளிப்ப தற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை கொட்டி வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    அணைகளுக்கும் மித மான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட் டம் இன்று காலை 36.35 அடியாக இருந்தது. அணைக்கு 178 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக் களின் குடிநீருக்காக 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 2.6, பூதப் பாண்டி 5.2, கொட்டாரம் 3.8, நாகர்கோவில் 1.4, புத்தன் அணை 4, சுருளோடு 1.6, தக்கலை 1.2, இரணியல் 6.4, பாலமோர் 1.4, மாம்ப ழத்துறையாறு 2, ஆரல் வாய்மொழி 1.2, கோழிப் போர்விளை 13.4, அடையா மடை 22, முள்ளங்கினவிளை 12.8, ஆணைக்கிடங்கு 1.2, முக்கடல் 1.4.

    கோடை மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிர மாக ஈடுபட்டு உள்ளனர். சுசீந்திரம், தேரூர், அருமநல்லூர், பூதப்பாண்டி, தக்கலை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வயல் உழவுப்பணி மற்றும் நாற்று பாவும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விவசாயிகளுக்கு தேவை யான விதை நெல்களை தங்குதடை இன்றி வழங்க வும் அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு உள்ள னர். இந்த ஆண்டு மாவட் டம் முழுவதும் 6,500 ஹெக்டோரில் கன்னி பூ சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    • கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கு மத்தியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் பீதர், கலபுரகி, யாதகிரி மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, சிவமொக்கா, மைசூரு, துமகூரு மாவட்டங்களில் சாரல் மழையும், பெங்களூரு, ஹாசன், கோலார் மாவட்டங்களில் வருகிற 30-ந் தேதி வரை மழை பெய்யும். எனவே இந்த மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டது.

    • பெருஞ்சாணியில் 59 மில்லி மீட்டர் பதிவு
    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்ன லுடன் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் காலையில் வழக்கமாக வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மழை பெய்தது. புத்தன் அணை, குழித்துறை, தக்கலை பகுதியில் மாலையில் வானத்தி சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    நேரம் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. அதன்பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலபகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. பெருஞ்சாணியில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 59 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவி யில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்னம் நிலவியது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிக ரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.25 அடியாக உள்ளது. அணைக்கு 320 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ் சாணி அணையின் நீர்மட்டம் 37.45 அடியாக உள்ளது. அணைக்கு 242 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நாகர் கோவில் நகர குடிநீருக்காக 51 கன அடி தண்ணீர் திறக் கப்பட்டு உள்ளது.

    சிற்றார்-1 நீர்மட்டம் 8.20 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 8.30 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 13.70 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது. முக்கடல் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாகவே இருக்கிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 19.10 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்து மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 28.6, பெருஞ்சாணி 59, சிற்றார்-1-30, சிற்றார்-2-6.4, பூதப்பாண்டி 30.4, களியல் 12, கன்னிமார் 18.2, குழித்துறை 20, நாகர்கோவில் 4, புத்தன் அணை 57.8, சுருளோடு 55.4, தக்கலை 30.3, இரணியல் 22, பாலமோர் 24.2, மாம்பழத் துறை ஆறு 25, திற்பரப்பு 7.4, ஆரல்வாய்மொழி 3, கோழிபோர்விளை 4.7, குருந்தன்கோடு 36, ஆணைக் கிடங்கு 23, முக்கடல் 21.2.

    நேற்று மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலை யில் இன்று காலையில் மீண்டும் வெயில் அடித்தது.

    • சிவகிரி உள்ளிட்ட இடங்களிலும் லேசான சாரல் மழை பெய்தது.
    • கயத்தாறு பகுதியில் 5.5 சென்டிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று சாரல் மழை பெய்தது. மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை பகுதியில் பலத்த மழை கொட்டியது.

    அங்கு அதிகபட்சமாக 19 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சேர்வலாறு, பாபநாசம் அணை பகுதிகளில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 20 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி அணை பகுதியில் நேற்று முன்தினம் 5 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், நேற்றும் 2-வது நாளாக பலத்த மழை பெய்துள்ளது. அங்கு 4.5 சென்டிமீட்டர் மழை இன்று பதிவாகி உள்ளது.

    அடவிநயினார், சிவகிரி உள்ளிட்ட இடங்களிலும் லேசான சாரல் மழை பெய்தது. தொடரும் கோடை மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நேற்று பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த காற்று அடித்தது.

    கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மதியத்திற்கு பின்னர், வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 5.5 சென்டிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டியில் 10 மில்லிமீட்டரும், கடம்பூரில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    • குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது.
    • வளி மண்டலத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. அக்னி நட்சத்திரத்தை நினைவு படுத்தும் வகையில் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வளி மண்டலத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது. பகலிலும் வெப்பம் குறைந்து மேகமூட்டமாகவே காணப்பட்டது. நேற்று 2-வது நாளாக அணைப்பகுதிகளில் பரவலாக மழை நீடித்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து இரவிலும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    பெருஞ்சாணியில் அதிக பட்சமாக 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புத்தன் அணையில் 30.2, சுருளோட்டில் 27, பூதப்பாண்டியில் 22.4, சிற்றாறு-1 பகுதியில் 20.6, பேச்சிப்பாறையில் 16.8, முக்கடல் அணையில் 10, தக்கலையில் 9.2, ஆரல்வாய் மொழியில் 6.2, நாகர்கோவிலில் 5, பாலமோரில் 4.2, கன்னிமார், சிற்றாறு-2 பகுதிகளில் தலா 2.2, மாம்பழத்துறையாறு 1 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    மழையின் காரணமாக சிற்றாறு-1 அணைக்கு விநாடிக்கு 6 கன அடி நீரும், சிற்றாறு-2 அணைக்கு 10 கன அடி நீரும், பேச்சிப்பாறை அணைக்கு 244 கன அடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 34 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

    77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையில் தற்போது 36.90 அடியும், 48 அடி கொண்ட பேச்சிப்பாறையில் 36.05 அடியும் தண்ணீர் உள்ளது. சிற்றாறு-1 அணையில் 8.10 அடியும், சிற்றாறு-2 அணையில் 8.20 அடியும், பொய்கை அணையில் 13.70 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 2.30 அடியும் தண்ணீர் உள்ளது. இதில் பெருஞ்சாணி அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அறந்தாங்கி பகுதிகளில் மிதமான மழை பெய்தது
    • இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி மற்றும் தா.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் இளநீர், தர்பூசணி போன்ற குளிர்ச்சியூட்டும் பழச்சாறுகளை அருந்தி வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வெப்ப சலனம் காரணமாக திடீரென கோடை மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் இன்று காலை முதல் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    ×