search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.வி.சிந்து"

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி இந்தோனேசிய ஜோடியிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது.
    பாலி:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்தித்தார். 

    இதில், பி.வி.சிந்து 21-15, 9-21, 14-21 என்ற செட் கணக்கில் ராட்சனோக்கிடம் வீழ்ந்து தோல்வியைச் சந்தித்தார்.

    சமீபத்தில் நடந்த இந்தோனேசியா மாஸ்டர்ஸ், பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் பி.வி.சிந்து அரையிறுதியில் தோற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி மலேசிய ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    பாலி:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் சிம் யுஜினுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் சிந்து 14-21, 21-19, 21-14 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

    ஆண்கள் இரட்டையர் போட்டி ஒன்றில், இந்தியாவின் சாத்விக்சாய் ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, மலேசியா நாட்டின் கோ ஜே பெய் மற்றும் நூர் இஜுதீன் இணையை எதிர்த்து விளையாடியது. இதில் 21-19, 21-19 என்ற செட் கணக்கில் போராடி இந்திய இணை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
    பாலி:

    இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள யோனி லியை (ஜெர்மனி) சந்தித்தார். 37 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-18 என்ற நேர்செட்டில் யோனி லியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். 

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-17, 14-21, 21-19 என்ற செட் கணக்கில் கிறிஸ்டோ போபோவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.
    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    பாலி:

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. 

    இத்தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், தாய்லாந்தின் சுபநிதா கடேதாங்கும் மோதினர்.

    இதில், பி.வி.சிந்து 21-15, 21-19 எனும் செட் கணக்கில் சுபநிதா கடேதாங்கை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    அடுத்த சுற்று போட்டியில் ஸ்பெயினின் கிளேரா அசர்மெண்டிசை சிந்து எதிர்கொள்கிறார். 

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் உலகின் 10-ம் நிலை வீரரான ஜப்பானின் கண்டா சுநேயாமாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    அடுத்த போட்டியில் 2 முறை உலக சாம்பியனான ஜப்பானின் கெண்டோ மொமோடாவை எதிர் கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
    முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு அவரது மரணத்திற்கு பிறகு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

    நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. 

    அவ்வகையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

    விளையாட்டுத் துறையில்  சிறந்த பங்களிப்புக்காக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு அவரது மரணத்திற்கு பிறகு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ் பெற்றுக்கொண்டார். 

    7 பேருக்கு பத்ம விபூஷன், 10 பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் என இந்த ஆண்டு மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. 
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நான்ஜிங் நகரில் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா முத்திர பதிக்க வாய்ப்பு இருக்கிறது. #WorldBadminton #pvsindhu #saina

    நான்ஜிங் (சீனா):

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நான்ஜிங் நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்டு 5-ந்தேதிவரை இந்தப்போட்டி நடக்கிறது.

    இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பி.வி. சிந்து, சாய்னா நேவால் உலக பேட்மின்டன் போட்டியில் முத்திரை பதிப்பார்களா? என்று எதிர்பார்க்கப்டுகிறது.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் சிந்து 2016-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் 2017-ம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும், 2013 மற்றும் 2014-ல் வெண்கல பதக்கமும் பெற்றார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    உலக தர வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்று இருந்தார். உலக பேட்மின்டன் போட்டியில் 2 பதக்கம் பெற்று இருந்தார். 2015-ம் ஆண்டு வெள்ளியும், 2017-ல் வெண்கலமும் பெற்றார்.

    வீரர்களில் ஸ்ரீகாந்த் கடாம்பி மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் உலக தர வரிசையில் 7-வது இடத்தில் உள்ளார். #WorldBadminton #pvsindhu #saina

    ×