search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94803"

    • 20 பின்னலாடை நிறுவன அணிகளுடன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறுகின்றன.

    திருப்பூர் :

    என்.பி.எல்., எனப்படும் நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட்போட்டி திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்றுவருகிறது. 20 பின்னலாடை நிறுவன அணிகளுடன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று முன்தினம் முதல் போட்டியில் போஸ் எக்ஸ்போர்ட்ஸ் - அமேஸிங் ஏக்ஸ்போர்ட்ஸ் கார்பரேஷன் அணிகள் மோதின. முதலில் ஆடிய போஸ் எக்ஸ்போர்ட்ஸ், 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமேஸிங் 107 ரன்னுடன் வாகை சூடியது. அதிரடியாக விளையாடி 40 பந்தில் 73 ரன் எடுத்து தனது அணியின் வெற்றிக்கு கைகொடுத்த அமேஸிங் அணியின் பேட்ஸ்மேன் அழகர் சாமி, ஆட்டநாயகனாக தேர் வாகினார்.

    வார்ஷா இன்டர்நேஷனல் - டெக்னோ ஸ்போட்ஸ்வேர் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வார்ஷா 12.3 ஓவரில் 62 ரன் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய டெக்னோ 65 ரன் எடுத்து வெற்றிபெற்றது. 2ஓவர் பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்திய டெக்னோ அணி பவுலர் இசாக் ராஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.வருகிற 11-ந்தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற8அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறுகின்றன. வருகிற 18 மற்றும் 25-ந் தேதிகளில் காலிறுதி போட்டிகள்,ஜூலை 2-ந் தேதி அரையிறுதி போட்டிகளும், 9-ந் தேதி இறுதிப்போட்டிகளும் நடைபெறுகின்றன.

    • மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் போட்டியை துவக்கி வைத்தார்.
    • மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, எஸ்வந்த்ராவ், கணேசன், சுகுமாரன், பூங்குழலி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றியம் சார்பில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் 120 அணிகள் பங்கேற்கும் இரண்டு மாத கிரிக்கெட் போட்டி துவங்கியது. மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் போட்டியை துவக்கி வைத்தார்.

    முதல் பரிசு ரூ.40ஆயிரம், 2வது ரூ.30ஆயிரம், மூன்றாவது ரூ.20ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. தொடக்க விழாவில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் ராகவன், எஸ்வந்த்ராவ், கணேசன், சுகுமாரன், பூங்குழலி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • பா.ம.க சார்பில் கோடைகால கிரிக்கெட் திருவிழா நடைப்பெற்றது.
    • 15 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 986 அணிகளில், 14 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பா.ம.க சார்பில் கோடைகால கிரிக்கெட் திருவிழா நடைப்பெற்றது.

    இத்திருவிழாவில் கோடை விடுமுறை காலத்தில் இளைஞர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் நல்வழிபடுத்தும் விதமாக பா.ம.க மாநில தலைவர் அன்புமணிராமதாசின் ஆலோசனைப்படி மாவட்ட அளவிலான தொடர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் வீரர்களுக்கும் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களுடன் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

    15 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 986 அணிகளில், 14 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் பா.ம.க நகர செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க மாநில துணைத் தலைவர் பாடிசெல்வம், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மேலும் கணபதி ஊராட்சிமன்ற தலைவர் சுப்பிரமணி, முன்னாள் பாமக நகர தலைவர் ராஜவேல், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சிலம்பு, மாவட்ட துணைத் தலைவர் ராஜா , கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கப்பலில் கிரிக்கெட் விளையாடும் குழுவினர்களில் ஒருவர் பந்தை ஓங்கி அடிக்கிறார். பந்து கடலில் விழுகிறது.
    • பந்தில் கயிறை கட்டி இருப்பதால், கடலுக்குள் விழுந்த பந்தை வெளியே எடுப்பது போன்று காட்சிகள் உள்ளது.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் மாறி உள்ளது. சிறிய இடம் கிடைத்தாலும் கூட அதில் 4, 5 பேர் சேர்ந்து ஒரு குழுவாக கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க முடிகிறது. ஆனால் கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பலில் ஒரு குழுவினர் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    அதில் கப்பலில் கிரிக்கெட் விளையாடும் குழுவினர்களில் ஒருவர் பந்தை ஓங்கி அடிக்கிறார். பந்து கடலில் விழுகிறது. ஆனால் அந்த பந்தில் கயிறை கட்டி இருப்பதால், கடலுக்குள் விழுந்த பந்தை வெளியே எடுப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.

    • சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • ரூ.1500 விலையிலான டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே விற்கப்பட்டன.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் ஆட்டம் சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை தோற்கடித்தது.

    சேப்பாக்கம் எம்.ஏ.சிதம் பரம் ஸ்டேடியத்தில் 2-வது ஐ.பி.எல். ஆட்டம் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிக்கு ரசிகர்களின் ஆர்வம் அதிகமாக இருந்தது. முதல் போட்டியில் சி.எஸ்.கே. வீரர்கள் சிறப்பாக ஆடியதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

    இதனால் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நேற்று இரவில் இருந்தே ஸ்டேடியம் முன்பு திரண்டனர். காலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அவர்கள் டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர். ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ஒருவருக்கு 2 டிக்கெட் வழங்கப்பட்டது.கவுண்டரிலும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் விற்பனை நடந்தது.

    குறைந்தபட்ச டிக்கெட்டான ரூ.1500-யை வாங்குவதற்கு தான் ரசிகர்கள் பெரும் அளவில் வரிசையில் காத்திருந்தனர்.

    சி, டி, மற்றும் இ கேலரிகளுக்கான கீழ்தளத்தின் டிக்கெட் விலை ரூ.1500 ஆகும். இதுதவிர ரூ.2 ஆயிரம் (ஐ, ஜே, மற்றும் கே கேலரிகளின் மேல்தளம்), ரூ.2500 (ஐ, ஜே மற்றும் கே கேலரிகளின் கீழ்தளம்), ரூ.3000 (டி, இ கேலரிகளின் மேல்தளம்) டிக்கெட்டுகள் விற்பனையானது.

    ரூ.3 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்பனையாகின. ரூ.2 ஆயிரம், ரூ.2500 விலையிலான டிக்கெட்டுகள் கவுண்டர் மற்றும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.1500 விலையிலான டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே விற்கப்பட்டன. 

    • இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
    • சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.


    கிரிக்கெட் விளையாட்டை நேரில் பார்த்த அனிருத்

    இந்நிலையில் இந்த போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் சென்று பார்த்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் பார்வையிட்டனர்.
    • போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடி கண்டு களித்தனர்.

    நேபாளம் - அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் ரசித்தனர்.


    மேலும் போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர்.


    இந்த கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் நேரில் பார்வையிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.



    • டிராவிஸ் ஹெட் 3 ரன்னுடனும் குனேமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
    • ஆஸ்திரேலியா 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்து இருந்தது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.

    முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா (180 ரன்), கேமரூன் கிரீன் (114ரன்) ஆகியோர் சதம் அடைத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. விராட் கோலி 186 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 128 ரன்னும், அக்ஷர் படேல் 79 ரன்னும், கே.எஸ்.பரத் 44 ரன்னும் எடுத்தனர்.

    91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 3 ரன்னுடனும் குனேமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. டிராவிஸ் ஹெட், குனேமேன் தொடர்ந்து விளையாடினார்கள்.

    இந்த ேஜாடியை அஸ் வின் பிரித்தார். அவரது பந்துவீச்சில் குனேமேன் (6 ரன்) எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து ஹெட்டுடன் லபு சேன் ஜோடி சேர்ந்தார்.

    ஆஸ்திரேலியா 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்து இருந்தது. ஹெட் 12 ரன்னுடனும், லபுசேன் 3 ரன்னுடனும் ஆடி கொண்டிருந்தனர்.

    இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்கிறது.

    • நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து வருகிறது.
    • சுமார் 3½ மணிக்கு நேரத்துக்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 355 ரன்னும், நியூசிலாந்து 373 ரன்னும் எடுத்தன.

    18 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 105.3 ஓவரில் 302 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 17 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்து இருந்தது.

    நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 257 ரன்கள் தேவை. கைவசம் 9 விக் கெட்டுகள் உள்ள நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. சுமார் 3½ மணிக்கு நேரத்துக்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

    இரவு 7 மணி வரை ஆட்டம் ஒரே செஷனாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 53 ஓவர்கள் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் டாம் லாதம், வில்லியம்சன் தொடர்ந்து விளையாடினர்.

    டாம் லதாம் 25 ரன்னிலும் அடுத்து களம் வந்த நிக்கோல்ஸ் 20 ரன்னிலும் அவுட் ஆனார்கள். நியூசிலாந்து 90 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் எஞ்சியுள்ள விக்கெட்டுகளை கைப்பற்ற இலங்கை பந்து வீச்சாளர்கள் கடுமையாக முயற்சித்தனர். இதனால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தில் உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி திறந்து வைக்கிறார்.
    • இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி பங்கேற்கிறார்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ஐ.பி.எல். உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்காக சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியன் பகுதி இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டன.

    சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி திறந்து வைக்கிறார். இதற்கான விழா அன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐ.சி.சி. சேர்மனும் இந்திய கிரிக்கெட் சங்க தலைவருமான என்.சீனிவாசன், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேன்டிற்கு (இருக்கை பகுதி) முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்படுகிறது. அந்த ஸ்டேடியத்திற்கு 'கலைஞர் கருணாநிதி ஸ்டேன்டு' என்று பெயர் சூட்டப்படுகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.ஸ்டேடியத்தில் உள்ள அண்ணா பெவிலியனை கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் புதிய ஸ்டான்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்கு பிறகு இந்தியாவில் 2-வது மிக பழமையான கிரிக்கெட் மைதானம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதிப் போட்டியில் திட்டச்சேரி எம்சிசி அணியினரும், சூப்பர் ஸ்டைக்கர்ஸ் அணியினரும் மோதினர்.
    • நிறைவு விழா ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் தலைமையில் நடைபெற்றது

    துபாய்:

    துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பில் E8 நாக்அவுட் கிரிக்கெட் போட்டி துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள கோல்டை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திட்டச்சேரி எம்சிசி அணியினரும், சூப்பர் ஸ்டைக்கர்ஸ் அணியினரும் மோதினர். இதில் திட்டச்சேரி எம்சிசி அணியினர் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

    நிறைவு விழா ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் தலைமையில், பொதுச் செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நவாஸ்கனி எம்பி, லீப் ஸ்போர்ட்ஸ் ரமேஷ், கிரீன் குலோப் ஜாஸ்மின், மனநல ஆலோசகர் பஜிலா ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஈமான் அமைப்பின் சார்பில் அஸ்கர், சமீர், சேக், யாகூப், ஹாஜா அலாவுதீன், ஹாஜி, நிஜாம், ஜலால், தமீம், ஜமால்தீன், சமீம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஜீரோ டிகிரிக்கும் குறைவான காலநிலைக்கு மத்தியில் ராணுவ வீரர்கள் குளிர்கால உடை அணிந்து விளையாடினர்.
    • இந்த விளையாட்டின் சில படங்கள் இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டன.

    லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு அருகே இந்திய ராணுவ வீரர்கள், உயரமான பகுதியில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    அதில் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு தற்காலிக ஆடுகளத்தில் இந்திய ராணுவ வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். ஜீரோ டிகிரிக்கும் குறைவான காலநிலைக்கு மத்தியில் ராணுவ வீரர்கள் குளிர்கால உடை அணிந்து விளையாடினர். 

    இந்த விளையாட்டின் சில படங்கள் இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டன. 

    இவ்வளவு உயரமான இடங்களில் ராணுவம் விளையாட்டில் ஈடுபடுவதைப் பார்த்து பலர் ஆச்சரியப்பட்டனர்.

    ×