search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94803"

    இலங்கையில் நடைபெற்ற முதல்தர போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் மலிந்தா புஷ்பகுமாரா 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். #Cricket
    இலங்கையில் நடைபெற்ற முதல்தர கிரிக்கெட்டில் கொழும்பு கிரிக்கெட் கிளப் - சராசென்ஸ் அணிகள் மோதின. இதில் கொழும்பு கிரிக்கெட் கிளப் அணி சராசென்ஸ் அணியின் வெற்றிக்கு 349 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    கொழும்பு கிரிக்கெட் கிளப் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மலிந்தா புஷ்பகுமாராவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சராசென்ஸ் அணி 113 ரன்னில் சுருண்டது. புஷ்பகுமாரா 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தினார். சராசென்ஸ் அணி 36.4 ஓவர்கள் எதிர்கொண்டது. இதில் புஷ்பகுமாரா 18.4 ஓவர்கள் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்புவதற்கு அப்ரிடி முட்டுக்கட்டை போட்டார் என முன்னாள் கேப்டன் சமான் பட் குற்றம்சாட்டியுள்ளார். #Afridi #SalmanButt
    பாகிஸ்தான் அணி கடந்த 2010-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது முகமது அமிர், சல்மான் பட், முகமது ஆசிப் ஆகியோர் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இந்த விவகாரத்தில் மூன்று பேருக்கும் தலா ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்த பின்னர் முகமது அமிர் சர்வதேச அணிக்கு திரும்பினார். மற்ற இருவர்களும் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில் 2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் நான் இடம்பிடித்திருப்பேன். ஆனால் கேப்டனாக இருந்த அப்ரிடி அதற்கு முட்டுக்கட்டை போட்டார் என்று சல்மான் பட் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து சல்மான் பட் கூறுகையில் ‘‘தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் ஆகியோர் என்னை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்தனர். அப்போது என்னை வலைப்பயிற்சி எடுக்கச் சொல்லி உடற்தகுதியை பரிசோதனை செய்தனர்.

    அப்போது வக்கார் யூனிஸ் என்னிடம் ‘‘பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாட மனதளவில் தயாரா?’’ என்று கேட்டார். நானும் ‘‘தயாராக இருக்கிறேன்’’ என்றேன்.

    ஆனால், கேப்டனாக இருந்த ஷாகித் அப்ரிடி நான் அணிக்கு திரும்புவதற்கு முட்டுக்கட்டை போட்டார். அவரைத் தூண்டியது யார் என்பது எனக்குத் தெரியாது. அதே சமயத்தில் நான் அவரிடம் சென்று, இதுகுறித்து பேசவில்லை. அது சரியான விஷயமாக இருக்கும் என்று நான் கருதவில்லை. ஆனால், நான் தெரிந்து கொண்டது 2016 உலகக்கோப்பையில் விளையாடுவேன் என்று வக்கார் யூனிஸ், பிளவர் கூறிய நிலையில், அப்ரிடி அதை தடுத்தார் என்பதைத்தான்’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்ஸ் விளாசி அசத்தியுள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோ கிரிக்கெட் அணி - நார்தர்ன் டெர்ரிடோரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோ கிரிக்கெட் அணி பேட்டிங் செய்யும்போது ஆலிவர் டேவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 115 பந்தில் 207 ரன்கள் குவித்தார். 74 பந்தில் சதம் அடித்த அவர், 39 பந்தில் இரட்டை சதம் அடித்தார்.

    40-வது ஓவரை ஆஃப் ஸ்பின்னர் ஜேக் ஜேம்ஸ் வீசினார். இந்த ஓவரில் டேவிஸ் தொடர்ச்சியாக 6 இமாலய சிக்ஸ் விளாசினார். இந்த 6 சிக்சரையும் ஸ்லாக் ஸ்வீப் திசையில் அசராமல் அடித்தார். இதன்மூலம் 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    2011 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறித்துள்ளார்.
    குஜராத்தை சேர்ந்த 35 வயதான முனாப் பட்டேல் 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் மொகாலியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டில் உலககோப்பையை வென்ற இந்திய அணியில் அவர் இடம் பிடித்து இருந்தார்.

    13 டெஸ்ட் போட்டியில் விளையாடி 35 விக்கெட்டும், 70 ஒருநாள் போட்டியில் விளையாடி 86 விக்கெட்டும், மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடி 4 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.



    ஓய்வு குறித்து முனாப் பட்டேல் கூறுகையில் ‘‘என்னுடன் விளையாடிய வீரர்களில் டோனி தவிர மற்ற அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். எனவே ஓய்வு பெறுவதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. எனக்கு கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் தெரியாது. கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற விரும்புகிறேன்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்?, சமீபத்திய டெஸ்ட் தோல்வி ஆகியவை குறித்து எம்.எஸ் தோனி பேசியுள்ளார். #MSDhoni #TeamIndia
    ராஞ்சி:

    இந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டி கேப்டனாக தோனி இருந்த கால கட்டத்தில் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி ஆகியவற்றை இந்திய அணி வென்றது. 2017-ம் ஆண்டு ஜனவரியில் திடீரென ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 

    மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு அணியின் முன்னேற்றத்துக்கு அவர் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது.

    இந்நிலையில், ராஞ்சியில் ஒரு விழாவில் பேசிய போது இதைப் பற்றி கூறியுள்ளார். "எனக்கு அடுத்து வரும் கேப்டன் 2019 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய தேவையான நேரத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே நான் விலகினேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

    “புதிய கேப்டன் சரியான நேரத்தை வழங்காமல் ஒரு வலுவான அணியை தேர்வு செய்வது சாத்தியமில்லை. நான் சரியான நேரத்தில் கேப்டனியை விட்டுவிட்டேன் என்று நம்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் 4-1 தோல்வி குறித்து பேசிய அவர், “இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதை தவறவிட்டது. அதனால் தான் வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர். எனினும், தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இந்தியா தற்போது தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது என்று நாம் மறந்துவிடக் கூடாது” என தோனி பேசினார். 
    பிரிட்டனில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியினர் சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளனர். #IndependenceDayIndia #TeamIndia #ENGvIND
    லண்டன்:

    இந்திய அணி தற்போது பிரிட்டனில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், சுதந்திர தினத்தை ஒட்டி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு வெளியே தேசியக்கொடி ஏற்றப்பட்டு அனைத்து வீரர்களும் மரியாதை செலுத்தினர். இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவு செய்து அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
    நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. #NEDvNEP #NepalCricket

    கடந்த மார்ச் மாதம் நேபாளம் அணி சர்வதேச அணிக்கான அந்தஸ்தை பெற்றது. இதன் பின்னர் முதன் முறையாக அந்த அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நடந்தது. 

    முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 216 ரன்கள் எடுத்தது. சோம்பால் காமி 51, கேப்டன் பராஸ் காட்கா 51 ரன்கள் எடுத்தனர்.

    அடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு ரன்னில் நேபாளம் வென்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் நெதர்லாந்து இருந்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பவுலிங் செய்த பராஸ் காட்கா, நெதர்லாந்து அணியின் கடைசி விக்கெட்டை ரன் அவுட்டாக்கினார்.

    இந்த வெற்றியின் மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற தொடர் சமனானது.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பான்யா, தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா (வயது 24). இங்கிலாந்திற்கு எதிரான 3வது மற்றும் இறுதி சர்வதேச டி20 போட்டியில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற புள்ளி கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.  நேற்று நடந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பாண்ட்யா சிறப்புடன் செயல்பட்டார்.

    அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டி20 போட்டிகளை வேடிக்கையான ஒன்றாகவே நான் காண்கிறேன்.  பந்து வீச்சில் யார்கர்களுக்கு பதிலாக வேறுபட்ட வகையில் பந்து வீசுவதிலேயே நான் கவனம் செலுத்தினேன்.

    நான் ஒவ்வொரு போட்டியிலும் எனது தவறுகளில் இருந்து கற்று கொள்கிறேன் என்பதனை உறுதி செய்து கொள்கிறேன். அது எனக்கு உதவிடுகிறது என கூறியுள்ளார்.

    எனது பந்து வீச்சில் முதல் ஓவரில் 22 ரன்கள் எடுக்கப்பட்ட தருணத்தினை நான் நினைவில் கொள்கிறேன்.  நான் இயல்புடனேயே இருந்தேன்.  நீங்கள் சரியான தொலைவில் பந்து வீசினால் விக்கெட்டுகளை கைப்பற்றி, மிக பெரிய அளவில் ரன்கள் விட்டு கொடுப்பதனை நிறுத்திடலாம் என அவர் கூறியுள்ளார்.
    ஐசிசி உலகலெவன் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 போட்டியில் புத்தம் புதிய முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட மைதானத்தின் உள்ளே நின்று வருணனை செய்யும் முறையானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

    ஷகீத் அப்ரிடி தலைமையிலான உலக லெவன் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அப்ரிடி விளையாடும் கடைசி சர்வதேச போட்டியான இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. உலக லெவன் அணி பந்திவீச்சில் ரஷித் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 

    இதன்மூலம் உலக லெவன் அணியின் வெற்றிக்கு 200 ரன்களை இலக்காக வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயித்தது. இதையடுத்து உலக லெவன் அணி பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சில் உலக லெவன் அணி 16.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

    வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்களும், சாமுவேல் பத்ரி, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஐசிசி ஒரு புதிய அம்சத்தை சேர்த்தது.



    மைதானத்தில் ஒரு அறையில் அமர்ந்து வருணனையாளர்கள் ஆட்டத்தை நேரலையாக வருணனை செய்வார்கள். ஆனால், இந்த போட்டியில் களத்திற்கே வருணனையாளர் நாசர் உசைன் சென்று ஆட்டத்தை வருணனை செய்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில், பிரகாஷ் ராஜ் செய்யும் சண்டைக்காட்சி ஒன்றை ரேடியோவில் ஹீரோ சிவகார்த்திகேயன் களத்தில் இருந்தே நேரலையாக வருணனை செய்வார்.

    இதேபோல, டி20 ஆட்டம் தொடங்கியதும் வருணனையாளர் நாசர் உசைன் கையில் மைக் உடன் களத்தில் இறங்கினார். முதல் ஓவரில் ஸ்லிப் திசையில் நின்று கொண்டு ஆட்டத்தை வருணனை செய்தார். இரண்டு ஓவர்கள் களத்தில் இருந்த அவர் பின்னர், பார்வையாளர்கள் வேலி பக்கம் நின்று கொண்டு வருணனை செய்தார்.

    அவ்வப்போது, பீல்டிங் நின்று கொண்டிருந்த வீரர்களிடம் மைக்கை நீட்டி கேள்விகளையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த புதிய வருணனை முயற்சி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. பலர் இந்த முயற்சியை வரவேற்ற நிலையில், ஒரு சிலர் ஆட்டத்தின் போக்கை இது சீர் குலைக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டிவில்லியர்ஸ் இடத்தை நிரப்புவது கடினம் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் பேட்ஸ்மேன் பேரிரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். #ABDevilliers
    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அவரது இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    “ஆற்றல் தீர்ந்து விட்டது களைப்படைந்து விட்டேன்” என்று தனது ஓய்வு குறித்து டிவில்லியர்ஸ் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

    மைதானத்தின் அனைத்து புற்றுகளிலும் (360 டிகிரி) பந்துகளை அடித்து ஆடும் 34 வயதான டிவில்லியர்ஸ் பல்வேறு உலக சாதனைக்கு சொந்தக்காரர். ஒரு நாள் போட்டியில் அதிவேக அரை சதம் (16 பந்து), விரைவான சதம் (31 பந்து), அதிவேகத்தில் 150 ரன் (64 பந்து) ஆகிய 3 சாதனைகளை படைத்துள்ளார்.

    டிவில்லியர்சின் ஓய்வு முன்னாள், இந்நாள் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது இடத்தை நிரப்புவது கடினம் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் பேட்ஸ்மேன் பேரிரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டிவில்லியர்சின் ஓய்வு தென் ஆப்பிரிக்காவுக்கு மட்டுமல்ல உலக கிரிக்கெட்டுக்கே இழப்பாகும். இந்த விளையாட்டின் தூதுவர் ஆவார். டிவில்லியர்ஸ் இடத்தை நிரப்புவது மிகவும் கடினமானது.

    இவ்வாறு பேரிரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார். #ABDevilliers #ABDevilliers17 #BarryRichards
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக், 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். T20WorldCup #Pakistan #ShoaibMalik
    கயானா:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான சோயிப் மாலிக் 2015-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

    தற்போது சோயிப் மாலிக் வெஸ்ட்இண்டீசில் வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் கரிபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் போட்டியில் கயானா அமாசோன் வாரியர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



    இந்த நிலையில் 36 வயதான சோயிப் மாலிக் அளித்த ஒரு பேட்டியில், ‘2019-ம் ஆண்டு ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எனது கடைசி உலக கோப்பை போட்டியாகும். ஆனால் 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புகிறேன்.

    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அது தான் எனது இலக்காகும். இந்த இரண்டும் பெரிய இலக்காகும். அதனை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். இது எப்படி போகும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் இந்த இரண்டு உலக கோப்பை போட்டியிலும் விளையாட முடியும் என நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார். #T20WorldCup #Pakistan #ShoaibMalik
    ×