search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94842"

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
    • இவர்கள் இருவரும் 2016-ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளனர்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இதனிடையே காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, "நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்று முழுவிவரமும் அறிவிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், இன்று விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின் படி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் முறையாக குழந்தை பெற்றுள்ளதாகவும் எந்தவொரு விதிமீறலிலும் அவர்கள் ஈடுபடவில்லை என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பான சான்றிதழையும் சமர்ப்பித்துள்ளனர். இந்த சான்றிதழ் பத்திரப்பதிவு துறையின் சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்யப்பட்டதாக நயன்தாரா தரப்பு விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது.
    • விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் நாளை அறிக்கை வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இதனிடையே காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, "நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்று முழுவிவரமும் அறிவிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

    மேலும், வாடகைதாய் விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இந்நிலையில், இன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்யப்பட்டதாக நயன்தாரா தரப்பு விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது.
    • விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இதனிடையே காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, "நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்று முழுவிவரமும் அறிவிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

    இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாடகைதாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று சுகாதாரத்துறை விசாரணை நடத்தவுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று திபாவளியன்று இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தனது இரட்டை குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • அப்போது அனைவருக்கும் வீடியோ பதிவின் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது என சமூக வலைத்தளங்களில் அறிவித்து பெரும் அதிர்வலையை கிளப்பினர். பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே இந்த ஜோடி இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடினர்.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் நேற்று தனது இரட்டை குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் குழந்தைகளை ஏந்தியப்படி தீபாவளி வாழ்த்தை தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • நயன்தாரா 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
    • படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா அடுத்த மாதம் தான் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன், திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். அதை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையில் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரியவந்தது. இது நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.

    வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் நயன்தாராவுக்கு குழந்தை பெறும் தகுதி இல்லை என்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். வாடகைத்தாய் தேர்விலும் ஏகப்பட்ட நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. இந்த பிரச்சினை சர்ச்சையானதும் விசாரணை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து மருத்துவ பணிகள் துறை 3 பேரை கொண்ட குழுவை நியமித்தது. இந்த குழுவினர் விசாரணையை தொடங்கிய நிலையில் நயன்தாரா 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாகவும், சட்டம் அதன் பிறகுதான் அமுலுக்கு வந்ததால் நயன்தாராவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற தகவலும் பரவி வருகிறது.

    இதுதொடர்பாக மருத்துவ பணிகள் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கடந்த டிசம்பரிலேயே ஒப்பந்தம் போட்டிருந்தாலும் மருத்துவமனை நிர்வாகம் அப்போதே முறைப்படி அரசுக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். மேலும் வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நயன்தாரா இந்த விவகாரத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா அடுத்த மாதம் தான் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    இந்த பிரச்சனை மிகப்பெரியதாக உருவெடுத்த்தால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மருத்துவமனைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிவாளம் போட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். நயன்தாரா படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பியதும் அவரிடம் நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளார்கள். அவர் தரப்பில் இருக்கும் ஆதாரங்களையும் கேட்க முடிவு செய்துள்ளார்கள்.

    • நயன்தாரா 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
    • படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா அடுத்த மாதம் தான் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்ததாக தகவல் வெளியிட்டனர். அதை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.

    வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் நயன்தாராவுக்கு குழந்தை பெறும் தகுதி இல்லை என்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

    வாடகைத்தாய் தேர்விலும் ஏகப்பட்ட நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. இந்த பிரச்சினை சர்ச்சையானதும் விசாரணை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து மருத்து பணிகள் துறை 3 பேரை கொண்ட குழுவை நியமித்தது. இந்த குழுவினர் விசாரணையை தொடங்கிய நிலையில் நயன்தாரா 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.

    வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாகவும், சட்டம் அதன் பிறகுதான் அமுலுக்கு வந்ததால் நயன்தாராவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற தகவலும் பரவி வருகிறது.

    இதுதொடர்பாக மருத்துவ பணிகள் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கடந்த டிசம்பரிலேயே ஒப்பந்தம் போட்டிருந்தாலும் மருத்துவமனை நிர்வாகம் அப்போதே முறைப்படி அரசுக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும்.

    வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நயன்தாரா இந்த விவகாரத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

    அவர் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்று விட்டார். அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா அடுத்த மாதம் தான் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    வாடகைத்தாயாக பல பெண்ணை ஈடுபடுத்தி வருவதால் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆஸ்பத்திரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிவாளம் போட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

    நயன்தாரா படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பியதும் அவரிடம் நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளார்கள். அவர் தரப்பில் இருக்கும் ஆதாரங்களையும் கேட்க முடிவு செய்துள்ளார்கள்.

    • கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு.
    • கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது.

    நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, "நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்று முழுவிவரமும் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

    • கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு.
    • கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது.

    நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 3 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர். 

    இந்த நிலையில் விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிகிச்சை மேற்கொண்ட ஆஸ்பத்திரியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
    • வாடகைத்தாயாக உதவிய பெண்ணும் யார் என்று தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்திருப்பாரோ என்று யூகம் எழுந்தது. இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் பரவியது.

    இது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாடகைத் தாய் மூலம் நினைத்ததும் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆஸ்பத்திரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவ பணிகள் துறை இயக்குனருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

    சிகிச்சை மேற்கொண்ட ஆஸ்பத்திரியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள். வாடகைத் தாயாக உதவிய பெண்ணும் யார் என்று தெரிய வந்துள்ளது. கேரளாவை சேர்ந்த அந்த பெண் நயன்தாராவுக்கு உறவினர் என்று கூறப்படுகிறது.

    துபாயில் நயன்தாரா முதலீடு செய்துள்ள சில தொழில்களை அந்த பெண் தான் கவனித்து வருகிறாராம். அந்த நெருக்கமான தொடர்பின் மூலமாகவே வாடகைத் தாயாக சம்மதித்ததாக கூறப்படுகிறது.

    துபாய் பெண்தானே. இந்திய சட்டத்தால் நடவடிக்கை எடுக்க சாத்தியமில்லை என்று தகவல்கள் வெளியாகிறது. ஆனால் துபாயில் வாடகைத்தாய் குழந்தைக்கு அனுமதி இல்லை.

    அந்த நாட்டு சட்டப்படி வாடகைத்தாய் என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செயல்படுவது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.

    எனவே வாடகைத் தாயாக அந்த நாட்டில் செயல்பட்டு இருந்தாலும் அந்த பெண்ணுக்கும், சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரிக்கும் சிக்கல்தான்.

    இந்த நிலையில் அதிகாரிகள் இதுவரை விசாரணையில் தீவிரம் காட்டவில்லை. அவர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, செலிபிரிட்டியாக இருப்பதால் விசாரணை கொஞ்சம் தாமதமாவது உண்மைதான். ஆனால் விசாரிப்போம் என்றனர்.

    இதற்கிடையில் நயன்தாரா படப்பிடிப்புக்காக இன்று ராஜஸ்தான் செல்கிறார்.

    ஷாருக்கான் 'ஜவான்' என்ற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு அடுத்த மாதம் தான் திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
    • இந்த அறிவிப்புக்கு பின்னர் பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.

    நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவர்களின் அறிவிப்புக்கு பின்னர் இதுகுறித்து பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.

    நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் யார்? என்பதை அவரும், அவரது கணவரும் ரகசியமாக வைத்து இருக்கிறார்கள். அந்த ரகசியம் மெதுவாக கசிந்து இருக்கிறது.

    இந்நிலையில் நயன்தாராவுக்கு வாடகைத்தாயாக உதவியவர் கேரளாவை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. நயன்தாரா கேரள மாநிலம் திருவல்லாவில் கல்லூரி படிப்பை படித்துள்ளார். அவரது கல்லூரி தோழிகள் சிலர் உதவியுடன்தான் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்துள்ளார்கள் என்றும் அந்த பெண் நயன்தாராவின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

    நயன்தாராவிடம் விசாரித்து பின்னர் வாடகை தாயான அந்த பெண்ணிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
    • இது குறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதலித்து கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் சில தினங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது சலசலப்பை கிளப்பி பல கேள்விகளை எழுப்பியது. இதனிடையே வாடகைத் தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை ஆண் குழந்தை விவகாரத்தில் இணை இயக்குனர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளது. எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது? என விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் தான் சிகிச்சை பெற்றாரா? தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா எனவும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மருத்தவமனையில் விசாரனை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விசாரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளனர்.

    கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் சேய் இருவரின் உடல்நிலையை கண்கானிக்க கூடிய சுகாதாரத்துறையுடைய 'பிக்மி' வரிசை எண்ணை நயன்தாரா பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கான 20 கட்டிடங்களும் திறந்து வைக்கப்படுகிறது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல்லில் மூலிகை மருத்துவ பயிரான அஸ்வகந்தா பயிர் சாகுபடி திட்ட தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமானம் மூலம் இன்று மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மூலிகை விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய நிகழ்ச்சியாக மத்திய விவசாய ஆராய்ச்சி கழகம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பில் அஸ்வகந்தா மூலிகை பயிர் சாகுபடி செய்ய நடைமுறைபடுத்தப்படுகிறது.

    மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கான 20 கட்டிடங்களும் திறந்து வைக்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை, நகர்புற உள்ளாட்சித்துறை, ஊரக உள்ளாட்சித்துறை ஆகிய 3 துறைகளின் அமைச்சர்கள், துணை செயலாளர்கள், அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தி அந்தந்த துறைகளின் சார்பில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    உள்ளாட்சித்துறை சார்பில் வீடுகள்தோறும் கண்காணித்து தேவையற்ற தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 20 நாட்களுக்கு மேலாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள், காய்ச்சல் முகாம்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

    இதில் 20 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தினமும் ஆயிரம் இடங்களில் இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் எச்.1 என்.1 வைரஸ் காய்ச்சல் தினமும் 300-க்கும் மேற்பட்டோருக்கு இருந்து வந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 30-க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் டெங்கு மற்றும் எச்.1 என்.1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லை. மதுரையில் கூட மருந்து கிடங்கு உள்ளது. நீங்களே போய் பாருங்கள். தட்டுப்பாடு இருந்தால் சொல்லுங்கள்.

    வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் எந்த மாதிரியான விதிமுறை மீறல் மற்றும் முரண்பாடுகள் உள்ளன என்பதை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×