search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபராதம்"

    டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. #DenguFever
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் துப்புரவு மற்றும் சுகாதாரப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காக்களூர் தொழிற்பேட்டையில் இன்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் டெங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    தொழிற்சாலைகளில் உள்ள குடோன், தண்ணீர் தொட்டிகளில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கும் 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள 350 தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அபராதம் விதித்த தொழிற்சாலைகள் சீர் செய்யாவிட்டால் மேலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.

    தமிழக அரசின் ஆவின் பால் தொழிற்சாலையில் ஆய்வில் டெங்கு உற்பத்தியாகக் கூடிய வகையில் இல்லாவிட்டாலும், தூய்மையாக வைத்திருக்க நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

    ஆய்வின் போது வட்டாட்சியர் தமிழ் செல்வன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, விஜயகுமாரி மண்டலா துணை அலுவலர் சபாநாயகம் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் உடன் இருந்தனர். #DenguFever
    சென்னை மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 11,357 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.19,20,800 வசூலிக்கப்பட்டுள்ளது. #ChennaiCitybus
    சென்னை:

    சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் 3,400-க்கும் மேற்பட்ட பேருந்துகளை, 673-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கி வருகிறது.

    9.88 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கி, ஏறத்தாழ 37 லட்சம் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும்பங்காற்றி வருகிறது.

    சாதாரண பேருந்துகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்ற ஸ்டிக்கர் பேருந்துகளில் ஒட்டப்பட்டதன் பயனாக, பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை ஏறத்தாழ 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போர் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பரிசோதனையின் போது பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அபராதத் தொகை அதிகப்பட்சமாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் கடந்த ஜூலை மாதத்தில் 3,575 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.5,67,900ம், ஆகஸ்ட் மாதத்தில் 4,082 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.6,74,650-ம் வசூலிக்கப்பட்டது.

    செப்டம்பர் மாதத்தில் 3,700 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.6,78,250-ம் ஆக மொத்தம் 11,357 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.19,20,800 வசூலிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார். #ChennaiCitybus
    திருப்பூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    திருப்பூர்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொசுக்களால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாநகர பகுதிகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு மாநகருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்திருப்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி நகர்நல அதிகாரி பூபதி தலைமையில் உதவி கமிஷனர் சபியுல்லா, சுகாதார ஆய்வாளர் பிச்சை, சுகாதார அலுவலர் கோகுல்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மாநகருக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே ஆய்வு நடத்தி வந்தனர்.

    இதன்படி, திருப்பூர்-காங்கேயம் கிராஸ் ரோட்டில் உள்ள 2 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த கான்கிரீட் தொட்டி, தீயணைக்க பயன்படுத்தப்படும் வாளி உள்ளிட்டவைகளை பார்த்த போது, அதில் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நின்றது மட்டுமின்றி டெங்குவை உற்பத்தி செய்யும் புழுக்களும் அதிக அளவில் இருந்தது கண்டறியப்பட்டது.

    டெங்கு கொசு உற்பத்தி புழுக்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதத்தை மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனர். மேலும், பணிமனை கிளை மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டது. போக்குவரத்து கழகத்திற்கு அபராதம் விதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



    வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. #Facebook
    லண்டன்:

    கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

    இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 



    இதுதொடர்பாக இங்கிலாந்து தகவல் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில், வாடிக்கையாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் பயன்பாட்டுச் சட்ட விதிகளின் படி அதிகபட்ச அளவாக 4.70 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.

    பேஸ்புக் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்களின் மூலமாக சேகரிக்கப்படும் தகவல்களானது, பயனாளர்களின் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தபட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து பேஸ்புக் நிறுவனம் தவறியுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்சையைக் கிளப்பிய பின்னரும் 2018-ஆம் ஆண்டுவரை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் மூல நிறுவனமான எஸ்.சி.எல் நிறுவனம் பேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது. #Facebook
    திருவாரூரில் 2-வது நாளாக நடந்த டெங்கு ஆய்வில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளை அகற்றதாக மெக்கானிக் கடைக்காரருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.#DenguFever
    திருவாரூர்:

    தமிழகம் முழுவதும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

    சுகாதாரத்துறை, வருவாய்துறை, உள்ளாட்சித்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அந்த வகையில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி தலைமையில் திருவாரூர் நகரத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளைக் கண்டறிந்து அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று 2-வது நாளாக திருவாரூர் பழைய ரெயில்வே நிலைய சாலை, வாழ வாய்க்கால், காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் கடைகளை பார்வையிட்டு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளை அகற்ற சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி அறிவுறுத்தினார்.

    மேலும் மெக்கானிக் கடைக்காரருக்கு ஒன்றுக்கு ஆயிரம் அபராதம் விதித்தார். நேற்று தொடங்கி நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை சுமார் 5 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் நகரம் முழுவதும் இதுபோன்று டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் குப்பைகளையும் தண்ணீரையும் தேக்கி வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி தெரிவித்தார். #DenguFever
    முத்துப்பேட்டை அருகே அலையாத்தி காடுகளில் பறவைகளை வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினர் ரூ.15 ஆயிரம் அபராதமம் விதித்துள்ளனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கடைசி எல்லையான அலையாத்திக்காட்டை ஒட்டியுள்ள காப்புக்காடு அருகே சிலர் பறவைகளை வேட்டையாடுவதாக முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் வந்தது. 

    இதனையடுத்து வன அலுவலர் தாகீர் அலி தலைமையில் வனவர் செல்லையன், வனக் காப்பாளர் மாரிமுத்து, வனவர் ஜீவாராமன், வன காவலர் சின்னப்பா மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சென்று கண்காணித்தனர். இதில் அப்பகுதியில் வலை விரித்து பறவைகளை பிடித்துக் கொண்டிருந்த 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து வலை மற்றும் 10 கொசு உள்ளான் பறவைகளை பறிமுதல் செய்தனர். 

    இதில் 8 கொசு உள்ளான் பறவைகள் இறந்திருந்தது. 2 பறவைகள் மட்டும் உயிருடன் இருந்தது. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூவரும் முத்துப்பேட்டை அடுத்த கீழவாடியக்காட்டை சேர்ந்த சரவணன்(வயது 44), முத்துக்குமார்(39), விஜயகுமார்(38) என்பது தெரியவந்தது. 

    இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர் வன சட்டப்படி அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 15 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்து விடுவித்தனர். பிறகு உயிருடன் மீட்ட 2 பறவைகளையும் வனத்துறையினர் பறக்கவிட்டனர்.
    கடற்கரையில் குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும் என்று கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி விட்டு செல்கின்றனர். அவ்வாறு வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பாறை குவியல்களுக்குள் சிக்கி கொள்கின்றன.

    மேலும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் (கேரி பேக்குகள்) காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலக்கிறது.

    அதோடு கடற்கரை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கலந்து அலங்கோலமாக காட்சி அளிப்பது அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. இதனால் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி நேற்று அதிகாலை கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்கரை சாலை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக துப்புரவு தொழிலாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை வரவழைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து 3 மணி நேரம் கவர்னர் கிரண்பேடி துப்புரவு தொழிலாளர்களுடன் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    புதுவையில் தூய்மை, பாதுகாப்பு, பராமரிப்புக்காக கடற்கரையில் இனி கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரையில் கூடுதலாக ஸ்வட்ச் பாரத் துப்புரவு தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

    கடற்கரையில் குப்பைகளை வீசாமல் இருக்க, ரோந்து செல்லும் போலீசார் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்வார்கள். அதனையும் மீறி குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #PondicherryGovernor #Kiranbedi
    குலசேகரம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டெம்போ டிரைவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.
    நாகர்கோவில்:

    குலசேகரம் அருகே உள்ள வண்டிபிலாங்கால விளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 32). டெம்போ டிரைவர். இவர் 8.1.2016-ந் தேதி பக்கத்து ஊரை சேர்ந்த 13 வயது சிறுமியை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். 

    இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோசம் குற்றஞ்சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.
    எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFishermen #SriLankanCourt
    ராமேசுவரம்:

    இலங்கை கடல் எல்லைப்பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தை இலங்கை அரசு சில மாதங்களுக்கு முன்பு இயற்றியது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இலங்கை அரசு இயற்றிய சட்டத்தில் எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.50 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் விசைப்படகுகள் திரும்ப அளிக்கப்படாது போன்ற கடுமையான சரத்துகள் இடம் பெற்றிருந்தன.

    இந்த நிலையில் முதன்முறையாக எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு அபராதம்- சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 18-8-2018-ந் தேதி கடலுக்குச் சென்றனர். அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள சர்வதேச கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது.

    8 பேரும் கல்பெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அத்துமீறி எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

    விசாரணையின் முடிவில் 8 மீனவர்களுக்கும் தலா ரூ.60 லட்சம் மற்றும் வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை சிறைத்தண்டனை விதித்து கல்பெட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    கேரளாவில் சைக்கிளில் வேகமாக சென்றதாகவும், ஹெல்மெட் அணியாததாலும் இளைஞர் ஒருவரிடம் போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KeralaPolice #CycleOverspeedFine
    திருவனந்தபுரம்:

    உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காசிம் என்ற இறைஞர் கேரளாவின் கும்பாலாவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவரை மறித்த நெடுஞ்சாலை காவல்துறையினர், வேகமாக சைக்கிள் ஓட்டியதாகவும், ஹெல்மெட் போடவில்லை என்றும் கூறி 2000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.



    2000 ரூபாய் அபராதம் வாங்கிவிட்டு 500 ரூபாய்க்கு மட்டும் ரசீது கொடுத்து அந்த இளைஞரை அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KeralaPolice #CycleOverspeedFine


    உத்தரபிரதேசம் மாநிலத்தில் புரியாத கையெழுத்தில் மருந்து சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. #UPDoctorsPoorHandwriting
    லக்னோ:

    பெரும்பாலன டாக்டர்கள் புரியாத கையெழுத்தில் மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ பரிசோதனை குறிப்புகளை எழுதுகின்றனர். தற்போது அது ஒரு பிரச்சினையாகவும், கிரிமினல் குற்றமாகவும் ஆகிவிட்டது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிதாபூர், உன்னாவோ, கோண்டா ஆகிய 3 மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ குறிப்புகளும், மருத்து சீட்டுகளும் எழுதி கொடுத்தனர். ஆனால் அவர்களின் கையெழுத்து புரியவில்லை. இதனால் சரியாக மருந்து மாத்திரை வாங்க முடியவில்லை. வேறு இடத்தில் மேல்சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.

    இதையடுத்து டாக்டர் டி.பி.ஜெய்ஸ்வால் (உன்னாவோ) டாக்டர் பி.கே. கோயல் (சிதாபூர்) டாக்டர் ஆஷிஸ் சக்சேனா (கோன்டா) ஆகியோர் மீது அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு புரியாத கையெழுத்தில் மருத்துவ குறிப்பு மற்றும் மருந்து சீட்டு எழுதிய 3 டாக்டர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். அதை கோர்ட்டு நூலகத்தில் செலுத்தும் படியும் உத்தரவிட்டனர்.

    அதிக வேலைப்பழுவின் காரணமாகவே மருந்து சீட்டு மற்றும் மருத்துவ குறிப்பு எழுதுவதில் பிழைகள் ஏற்பட்டது. என விசாரணையின்போது டாக்டர்கள் தெரிவித்தனர். அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    தெளிவான கையெழுத்தில் மருத்துவ குறிப்புகள் எழுதினால் மற்ற அனைத்து டாக்டர்கள் புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்க முடியும். கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சில மருத்துவ குறிப்புகளை வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

    எனவே அனைவருக்கும் புரியும்படி தெளிவான கையெழுத்துடன் மருத்துவ குறிப்புகள் எழுதுவது டாக்டர்களின் கடமை என்று தெரிவித்தனர். #UPDoctorsPoorHandwriting
    பொன்னேரி, சோழவரம் பகுதியில் லைசன்ஸ் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 253 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    சென்னை:

    பொன்னேரி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், லைசன்ஸ் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 253 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. #tamilnews
    ×