search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95042"

    பாரதீய ஜனதாவுக்கு துணைபோகும் அதிமுக-பா.ம.க. கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ப.சிதம்பரம் பேசியுள்ளார். #PChidambaram #pmk #admk #congress

    சென்னை:

    மத்திய அரசின் ரபேல் ஊழலை கண்டித்தும், ஜி.எஸ்.டி., பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கியும் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    மோடி தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சிறு, குறு தொழில் துறை உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படும் வகையில் வருமான வரி, ஜி.எஸ்.டி., சுங்கவரி ஆகியவற்றில் இருந்து நோட்டீசுகளை அனுப்பி கதறவைக்கின்றனர். இது தான் வரி பயங்கரவாதம்.

    ஜி.எஸ்.டி. வரியை சிதைத்ததால் ஏராளமான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. பொருளாதாரரீதியாக இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு பின்னாக தள்ளி இருக்கிறது பா.ஜ.க. அரசு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 31 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு ஏற்றுமதி இருந்தது. இதை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தாண்டியதே இல்லை. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு சென்றது அதைவிட கேவலமானது.

    ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று கூறும் பா.ஜ.க.வுக்கு துணைபோகும் அ.தி.மு.க., பா.ம.க.வை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் ஒருபோதும் வரவேற்பு இருக்காது.


    மாணவர்கள், விவசாயிகள், குடும்ப தலைவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் தெரிவித்த கருத்துகள், கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையாக வெளிவரும். நாங்கள் செய்ய முடிந்தவைகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு முன்பு தந்ததுபோல 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், விஜயதரணி எம்.எல்.ஏ., தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார்.

    மாங்கா சேகர், தரமணி கோபி, நாச்சிக்குளம் சரவணன், கோடம்பாக்கம் ராஜசேகர், விருகை ராமசந்திரன், சைதை முத்தமிழ், கிண்டி லோகநாதன், கோபால் சுந்தரம், ஆதிநாராயணன், இஸ்மாயில்

    அடையார் துரை, சாந்தி, மலர்கொடி, மகேஷ்வரி, மயிலை நாராயணன், திருவான்மியூர் சீத்தாராமன், காலனி சரவணன், ராயப்பேட்டை ஆரிப், சைதை கோகுல், சைதை சசிகுமார், பி.டி.சி. ஏழுமலை, நொச்சிக்குப்பம் பாண்டியன், மயிலை தாமஸ், அப்பு ஜெயபால், சீனிவாசபுரம் ரகுகுமார், வக்கீல்கள் சித்தார்த்தன், மயிலை பாலு, மீனா வெங் கட்ராமன், சுசீலா கோபாலகிருஷ்ணன், மகேஸ்வரி, கோட்டூர் ஜான்சன், விக் னேஷ்வரன்,

    திருவான்மியூர் கதிரேசன், பழனி, சீத்தாராமன், தரமணி சீனு,, அடையார் மாதவன், தங்கராஜ், பட்டினபாக்கம் பன்னீர் செல்வம், கவுரிசங்கர், தங்கம், விஜி, சிவகுமார், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். #PChidambaram #pmk #admk #congress 

    தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #NEET #NEETExam #Sengottaiyan
    நெல்லை:

    தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நெல்லை வந்தார். தொடர்ந்து அவர் நெல்லையப்பர் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாகவும், மின் மிகை மாநிலமாகவும் உள்ளது. அடிப்படை திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 3 லட்சத்து 4 ஆயிரத்து 31 கோடி செலவில் புதிய தொழில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



    இதன் மூலம் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. ‘நீட்’ தேர்வுக்காக 16 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மிகச்சிறந்த 4 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி தமிழகத்தில் உள்ள 10 கல்லூரிகளில் நடைபெறும். பொதுத்தேர்வு முடிந்தவுடன் பயிற்சி நடக்கும்.

    இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பின் 4-ல் ஒரு பங்கினர் வரி செலுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் 2 லட்சத்து 81 ஆயிரம் சி.ஏ. படித்த ஆடிட்டர்கள் உள்ளனர். இது போதுமானது அல்ல. மேலும் காமர்ஸ் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே பிளஸ்-2 வில் காமர்ஸ் எடுத்து படிக்கும் மாணவர்கள் சி.ஏ. படித்து ஆடிட்டராக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே விரைவில் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய வண்ண சீருடை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் தமிழகத்திலேயே எழுதலாம். இதற்காக வெளிமாநிலம் செல்ல அவசியமில்லை.

    தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் 1½ லட்சம் பேர் தேர்வு எழுதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NEET #NEETExam #Sengottaiyan
    சரக்கு சேவை வரி மூலம் கடந்த 9 மாதங்களில் மட்டும் தமிழக அரசுக்கு வருவாயாக 31 ஆயிரத்து 350.63 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. #GST #TNgovernment
    சென்னை:

    பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வெவ்வேறு வரி விகிதங்கள் இருந்து வந்தன. அதோடு, மாநில ஆட்சிக்கு நிலவும் நெருக்கடிக்கு ஏற்ப வரிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. இந்த மாறுபட்ட மாநில விற்பனை வரிகள், தேசிய அளவில் நடக்கும் வர்த்தகங்களுக்கு உகந்ததாக இல்லை.

    பின்னர் அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட அளவில் மதிப்பு கூட்டு வரி என்ற வாட் வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்த வாட் வரி விதிப்பு முறை மாற்றப்பட்டு, ஜி.எஸ்.டி. என்ற சரக்கு சேவை வரி, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கான மசோதா, 2015-ம் ஆண்டு மே 6-ந் தேதி பாராளுமன்றத்தில் பெருமளவு எம்.பி.க்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

    அதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, இந்தியா முழுவதிலும் அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைப் பற்றி ஆலோசிப்பதற்காகவும் வரி விதிப்பில் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதை செயல்படுத்துவதற்காகவும் மாநில அளவில் உறுப்பினர்களைக் கொண்ட ஜி.எஸ்.டி. குழு அமைக்கப்பட்டது. டெல்லியில் 30-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி. குழு கூட்டம் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.

    இந்தக் குழு கூட்டத்தில் மாநில அரசுகள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து, சில பொருட்களுக்கான வரி விதிப்பை மாற்றி வருகின்றன. ஆரம்பகட்டத்தில் விதிக்கப்பட்ட வரி விகிதம் தற்போது இல்லை என்பதால், ஜி.எஸ்.டி.க்கு முதலில் இருந்த எதிர்ப்பு குறைந்துள்ளது. இந்த வரி விதிப்பினால் மத்திய மற்றும் மாநில அரசுகள் வருவாயை ஈட்டி வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை, மத்திய அரசு அவ்வப்போது ஈடுகட்டி வருகிறது.



    இந்த நிதி ஆண்டின் தொடக்கமான கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதிவரை 9 மாதங்களில் தமிழக அரசுக்கு எவ்வளவு வருவாய் மற்றும் இழப்பீடு கிடைத்துள்ளது என்ற தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் தமிழக அரசுக்கு ரூ.3,161.57 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ரூ.2,864.29 கோடி, ஜூனில் ரூ.4,718.51 கோடி, ஜூலையில் ரூ.3,072 கோடி, ஆகஸ்டில் ரூ.3,593.15, செப்டம்பரில் ரூ.3,014.26, அக்டோபரில் ரூ.4,159.91, நவம்பரில் ரூ.3,116.53, டிசம்பரில் ரூ.3,650.42 என 9 மாதங்களில் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.31 ஆயிரத்து350.63 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    இந்த காலகட்டத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு இழப்பீட்டை வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும், அக்டோபரிலும் இழப்பீடாக ஒரு ரூபாயைக்கூட மத்திய அரசு வழங்கவில்லை. செப்டம்பரில் ரூ.308 கோடி, நவம்பரில் ரூ.77 கோடி, டிசம்பரில் ரூ.1,470 கோடி என மொத்தம் ரூ.1,855 கோடியை தமிழக அரசுக்கு இழப்பீடாக மத்திய அரசு வழங்கியுள்ளது. #GST #TNgovernment

    28, 18 சதவீத ஜி.எஸ்.டி.யை முழுவதும் நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். #Vikramaraja #GST

    சேலம்:

    சேலம் லீ பசார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    36-வது வணிகர் சங்க மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மகாலில் விரைவில் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி எங்களது கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற மாநாட்டில் வலியுறுத்தப்படும்.

    ஜி.எஸ்.டி. பாதிப்பில் இருந்து மீண்டு வர 28 மற்றும் 18 சதவீத வரிகளை முற்றிலும் நீக்க வேண்டும், ஜி.எஸ்.டி. மூலம் வசூல் செய்து எங்களுக்கு திருப்பி தர வேண்டிய 96 ஆயிரம் கோடியை திருப்பி தர வேண்டும், மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகளை புறந்தள்ளி வருகிறது.

    உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கோரிக்கைகளை உறுதி மொழியாக எழுதி கொடுப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

    1 கோடிக்கும் அதிகமானோர் வியாபாரத்தை நம்பி உள்ளனர். 60 வயதை கடந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பிளாஸ்டிக் தடையில் அத்துமீறும் அதிகாரிகளை எதிர்த்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Vikramaraja #GST

    வட சென்னை பகுதியில் 2 தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைதானார்கள்.
    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் அதனை கண்காணிப்பதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்காக நாடு முழுவதும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வட சென்னை பகுதியில் 2 தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக வடசென்னை ஜி.எஸ்.டி. வரி கமி‌ஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக சீனிவாசலு, போஸ் ஆகிய 2 தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களது நிறுவனத்துக்கு பொருட்கள் வாங்கியதாக போலியாக கணக்கு காட்டி இருவரும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்தே அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தொடர்பாக 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.569 கோடி வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. #GST
    2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார். #Mayawati #bjp #parliamentelection
    லக்னோ:

    பகுஜன் சமாஜ்  கட்சியின் தலைவர் மாயாவதி இன்று தனது 63 வது பிறந்த நாளை கொண்டாடினார்.  பிறந்த நாள் பரிசாக  கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என தொண்டர்களை மாயாவதி கேட்டு கொண்டார்.

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம்.  சமீபத்தில் முடிவடைந்த  5 மாநில தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு பாடக் புகட்டபட்டது. இது காங்கிரசுக்கும் ஒரு பாடம் ஆகும்.. மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் அரசு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர், ஆனால் அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 

    நாங்கள் எப்பொழுதும் ஏழைகளுக்கும், மிதமிஞ்சி வேலை செய்து வருகிறோம். தொடரும் விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க  100% விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஒரு வலுவான விவசாய கடன் தள்ளுபடி கொள்கை திட்டம் கொண்டு வரவேண்டும்.

    பயிர் விலைகளை உயர்த்துவதற்காக சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். நிலமுள்ள மற்றும் நிலமற்ற விவசாயிகள் கடன் வாங்கியுள்ளனர், ஆனால் அவர்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்கான கொள்கை திட்டம் இல்லை. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவையும் அவர்களது துயரத்தை அதிகரித்து உள்ளது என கூறினார். #Mayawati #bjp #parliamentelection
    சிறு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் ஜி.எஸ்.டி. விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார். #TaxExemption #SmallBusiness #ArunJaitley #GST
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை செயல்படுத்தும் வகையில் பல்வேறு மறைமுக வரிகளுக்கு பதிலாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி அமலாக்கம் குறித்த ஆலோசனை மற்றும் முடிவுகள் எடுப்பதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கவுன்சிலின் 32-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், சிறு வணிகத்தை பாதுகாப்பதற்காக அவற்றின் ஜி.எஸ்.டி.க்கான விலக்கு வரம்பை இரு மடங்காக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. இது வருகிற நிதியாண்டு (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் அமலுக்கு வருகிறது.



    தற்போது ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை விற்று முதல் கொண்ட சிறு வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் இந்த வரம்பை ரூ.40 லட்சமாக அதிகரிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    வடகிழக்கு மாநிலங்களில் ரூ.10 லட்சமாக இருந்த இந்த விலக்கு வரம்பு, இனிமேல் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5,200 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    இதைப்போல ஜி.எஸ்.டி. கூட்டு திட்டத்துக்கான ஆண்டு விற்று முதல் வரம்பும் ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சிறு வணிகர்கள் தங்கள் விற்றுமுதலுக்கு ஏற்ப 1 சதவீத வரி செலுத்தினால் போதுமானது என அருண் ஜெட்லி கூறினார்.

    இதைப்போல ரூ.50 லட்சம் வரை விற்று முதல் கொண்டிருக்கும் சேவை வழங்குவோர் மற்றும் வினியோகஸ்தர்கள் (சரக்கு மற்றும் சேவை) 6 சதவீத வரியுடன் ஜி.எஸ்.டி. கூட்டு திட்டத்தை தேர்வு செய்ய முடியும் என்று கூறிய அருண் ஜெட்லி, இந்த 2 திட்டங்கள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளம் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

    இதைத்தவிர ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரி துறைகளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மந்திரிகள் கொண்ட 2 குழுக்கள் இந்த கவுன்சில் கூட்டத்தில் அமைக்கப்பட்டது. மேலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு 2 ஆண்டுகள் வரை 1 சதவீத பேரிடர் வரி வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.  #TaxExemption #SmallBusiness #ArunJaitley #GST 
    பாராளுமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றினாரா? என்பது பற்றி ஒரு கருத்துகூட கூறவில்லையே ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. #congress #parliamentelection #pmmodi

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டி தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சூரஜ்வாலா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    நரேந்திரமோடி ஒரு தோல்வி அடைந்த பிரதமர். தனது பேட்டியில் முழுமையாக தன்னை முன்னிலைப்படுத்தியே தகவல்களை கூறியிருக்கிறார். எல்லாவற்றிலும் நான், எனது, என்னுடையது என்ற வார்த்தைகளையே பயன்படுத்தி அத்தனையையும் பொய்யான தகவலாக வெளியிட்டுள்ளார்.

    2014 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றினாரா? என்பது பற்றி ஒரு கருத்துகூட கூறவில்லை. அந்த தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதி என்ன ஆனது.

    ஜி.எஸ்.டி. வரி, பண மதிப்பிழப்பு வங்கி முறைகேடு, கருப்பு பணத்தை மீட்பதாக சொன்னதில் ஏற்பட்ட தோல்வி, நாட்டின் பாதுகாப்பு மோசமான நிலை, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு போன்றவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.


    இன்றைய நிலையில் பிரதமர் மோடி தனக்கு உதவி இல்லாத நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நபராக இருக்கிறார். அடுத்து அவர் எங்கு தேர்தலில் நிற்கப்போகிறார் என்பதற்கே பதில்சொல்ல முடியவில்லை.

    இவ்வாறு சூரஜ்வாலா கூறியுள்ளார்.

    காங்கிரஸ் மேல்சபை துணைத்தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

    முன்கூட்டியே ஏற்பாடு செய்த பேட்டி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்திருக்கிறார். அவரால் பாராளுமன்றத்திலோ, பத்திரிகையாளர் கூட்டத்திலோ பதில் சொல்ல முடியவில்லை. எனவே அந்த நிகழ்வுகளை தவிர்த்துவிட்டு தனிப்பட்ட பேட்டிக்கு ஏற்பாடு செய்து அதில் தனது கருத்துக்களை கூறியிருக்கிறார்.

    அவர் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதை மக்கள் மறந்துவிடவில்லை. இந்த நிலையில் புத்தாண்டில் புதிய பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். அவர் சொன்ன அத்தனையும் பொய்.

    2019 பாராளுமன்ற தேர்தலுக்காக கதை விடுகிறார். இதுபோன்ற பேட்டி மூலம் மக்களை ஏமாற்றிவிட முடியாது. உண்மையிலேயே தைரியம் இருந்தால் பாராளுமன்றத்திலும், பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் விவாதிக்கட்டும்.

    மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கிவிட்டு இப்போது தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கடவுள் ராமரை அழைக்கிறார். அவர் பொய் சொல்வதை ராமர் கேட்கமாட்டார் என்று அவர் நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #congress #parliamentelection #pmmodi

    ஜி.எஸ்.டி. வரி விகிதம் சீரமைப்பு மூலம் விலை குறைக்கப்பட்ட டி.வி., கம்ப்யூட்டர், கேமரா உள்பட 23 பொருட்களை இன்று முதல் பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். #GST
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதத்தில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சினிமா டிக்கெட் கட்டணம், டி.வி., கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் உள்பட 23 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது.

    அதிகபட்சமாக விதிக்கப்படும் 28 சதவீத வரி விகிதத்துக்குள் ஆடம்பர பொருட்கள், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள், சிமெண்ட், பெரிய திரையுடன் கூடிய தொலைக்காட்சி பெட்டி, ஏ.சி., பாத்திரம் கழுவும் எந்திரம் ஆகியவை மட்டும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


    பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருட்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சரக்கு வாகன 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100-க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

    32 அங்குலம் வரை கொண்ட டி.வி. பெட்டி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    இந்த வரி சீரமைப்பு குறித்த ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவை நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து இன்று முதல் மேற்கண்ட 23 வகையான பொருட்கள் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. #GST
    சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகள் நேற்று முடக்கப்பட்ட நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போது முன் அறிவிப்பு இல்லாமல் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக மகேஷ்பாபு குற்றம்சாட்டியுள்ளார். #MaheshBabu
    ஐதராபாத்:

    தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனான விளங்குபவர் மகேஷ்பாபு. கடந்த 2007-08-ம் ஆண்டுகளில் பிராண்ட் அம்பாசிடராக இருந்து விளம்பரங்களில் தோன்றிய தற்கான சேவை வரி ரூ.18.5 லட்சம் செலுத்தவில்லை என்று ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி ஆணையகம் அவரின் வங்கிக் கணக்கு களை முடக்கியது.

    வட்டி, அபராதம் உள்ளிட்டவைகள் உட்பட அவர் ரூ.73.5 லட்சம் வரி பாக்கி வைத்துள்ள தாகவும் கூறப்பட்டது.

    இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் வரி பாக்கி எதுவும் வைக்கவில்லை என்று விளக்கம் கொடுத் தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ஜி.எஸ்.டி ஆணையகம் அறிக்கையின்படி கடந்த 2007-08-ம் ஆண்டில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கான வரியைக் கட்ட வில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.



    அப்போதைய கால கட்டத்தில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை. 2010-ம்ஆண்டில்தான் அந்த சேவைக்கு வரி விதிக்கப் பட்டது. வரி கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பான பல்வேறு விதிமுறைகள் வரி செலுத்துவோருக்கு ஆதரவாக இருக்கிறது.

    ஆனால் ஜி.எஸ்.டி ஆணையகம் எந்த முன் அறிவிப்பும் இன்றி எனது வங்கிக் கணக்கை முடக்கி இருக்கிறது’’ என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார். #MaheshBabu #GST #ServiceTax

    சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகளை முடக்கி, ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். #MaheshBabu #GST #ServiceTax
    ஐதராபாத்:

    மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு சட்டத்தின்கீழ் நடிகர்களும், தொழில் செய்பவர்களாக கருதப்படுகிறார்கள்.

    எனவே அவர்கள் சேவை வரி செலுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சேவை வரி செலுத்தாமல் இருந்தார். 2007-08ம் ஆண்டில் அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரிபாக்கிவைத்துள்ளார்.

    சேவை வரி செலுத்தும்படி அவருக்கு ஜி.எஸ்.டி. ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியபடி இருந்தது. ஆனால் நோட்டீசுகளுக்கு நடிகர் மகேஷ்பாபு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.



    இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நடிகர் மகேஷ்பாபுவின் 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றில் உள்ள அந்த 2 கணக்குகளிலும் ரூ.73.5 லட்சம் பணத்தை நடிகர் மகேஷ்பாபு சேமித்து வைத்து இருந்தார். அந்த பணத்தில் இருந்து சேவை வரிக்கான தொகை மற்றும் வட்டியை வசூலிக்க ஜி.எஸ்.டி. ஆணையரகம் முடிவு செய்து உள்ளது. #MaheshBabu #GST #ServiceTax

    வரிவசூல் அதிகரிக்கும்போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #GST
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி 18 மாத ஜி.எஸ்.டி. செயல்பாடு குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி.யில் 1,216 பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படும் 183 பொருட்களுக்கு 0 சதவீதமும், 308 பொருட்களுக்கு 5 சதவீதமும், 178 பொருட்களுக்கு 12 சதவீதமும், 517 பொருட்களுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போது 28 சதவீத வரி முடிவுபெறும் நிலையில் உள்ளது.

    சினிமா டிக்கெட் வரி 35 மற்றும் 110 சதவீதத்தில் இருந்து 12 மற்றும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், சொகுசு வாகனங்கள், ஏர்கண்டிஷனர்கள், குளிர்பானங்கள், பெரிய டி.வி.க்கள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரிவிகிதம் 18 மற்றும் 12 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

    சிமெண்டு மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள் மட்டும் தொடர்ந்து 28 சதவீத வரிவிகிதத்தில் உள்ளன. மற்ற அனைத்து கட்டுமான பொருட்களின் வரிவிகிதம் ஏற்கனவே 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.யில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனாலும் முதல் வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் முதல் 6 மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. முதல் வருடத்தில் சராசரி மாத வரி வசூல் ரூ.89,700 கோடியாக இருந்தது. 2-வது வருடத்தில் சராசரி மாத வரி வசூல் ரூ.97,100 கோடியாக உள்ளது.



    ஜி.எஸ்.டி. மூலம் வரி வருவாய் கணிசமாக உயரும்போது வரிவிகிதம் மேலும் குறைக்கப்படும். நாட்டில் இறுதியாக ஜி.எஸ்.டி.யில் 0 மற்றும் 5 சதவீதம் ஆகிய இரு வரிவிகிதங்கள் மட்டுமே இருக்கும்.

    ஆடம்பர பொருட்கள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இதில் விதிவிலக்கானவை. அவைகளுக்கு 18 மற்றும் 12 சதவீதங்களுக்கு பதிலாக ஒரு புதிய வரிவிகிதம் உருவாக்கப்படும். இதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArunJaitley #GST
    ×