search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95080"

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
    • விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ், சூர்யா மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கமல் விலை உயர்ந்த பரிசினை வழங்கினார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார்.


    அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை கமல் பரிசளித்தார். ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்தார்.


    தொடர்ச்சியாக படக்குழுவினருக்கு அன்பளிப்பு கொடுத்து வந்த கமல், தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசு கொடுத்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட உதயநிதி, நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் சாருக்கு நன்றி. விக்ரமில் உடன் பணியாற்றியதற்காக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


    • ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு பாராட்டியுள்ளார்.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    விக்ரம்

    விக்ரம்

    இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு விக்ரம் திரைப்படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ''விக்ரம்.. ப்ளாக் பஸ்டர் சினிமா! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உங்களுடன் இணைந்து விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த செயல்முறை குறித்து விவாதிக்க விரும்புகிறேன். சிறப்பான படைப்பு, விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் நடிப்பு திரையில் ஒளிர்கிறது. இதைவிட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியாது.

    விக்ரம்

    விக்ரம்

    அனிருத் என்ன மாதிரியான ஒரு இசை. உங்களுடைய பெஸ்ட் இது. இறுதியாக கமல்ஹாசன் அவர்களின் நடிப்பு குறித்து கருத்து சொல்ல எனக்கு போதுமான தகுதியில்லை. உங்களின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு, இது பெருமையான தருணங்களில் ஒன்று! வாழ்த்துகள் சார் உங்களுக்கும் உங்கள் அருமையான குழுவிற்கும்!'' என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைராலகி வருகிறது.


    • விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.
    • அந்நாட்டின் மந்திரி முபாரக் அல் நஹ்யானை, அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன் உட்பட பலர் நடித்திருந்த 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த படம் மாபெரும் வசூல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    கமல் - முபாரக் அல் நஹ்யான்

    கமல் - முபாரக் அல் நஹ்யான்

    இந்நிலையில், துபாய் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், அங்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் முபாரக் அல் நஹ்யானை, அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

    கமல் - முபாரக் அல் நஹ்யான்

    கமல் - முபாரக் அல் நஹ்யான்

    இந்த சந்திப்பின்போது, கலாசார பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளை கடந்து, மக்களை ஒன்றிணைக்கும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்களின் பங்கு பற்றி விவாதிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் விக்ரம்.
    • இப்படம் மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வசூல் ரூ.400 கோடியை தாண்டி விடும் என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. இந்த வெற்றியால் திரையுலகினர் பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். இளையராஜாவும் வாழ்த்துத்துகள் சகோதரரே என்று சமூக வலைத்தளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த வெற்றிக்கு காரணமானவர்களுக்கு பரிசு கொடுத்த கமல்ஹாசன், முதலில் கவுரவ வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை வீடு தேடிப்போய் பரிசளித்தார். உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் வாங்கிக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.

    சூர்யா - கமல்

    சூர்யா - கமல்

    இந்த நிலையில் சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் புதிதாக வாங்கிக் கொடுக்கப்பட்ட வாட்ச் இல்லை என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய சமயத்தில் முதன் முதலில் வாங்கிய விலை அதிகமான பொருள் இந்த ரோலக்ஸ் வாட்ச்தான். இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்தார். மனதுக்கு நெருக்கமான இந்த வாட்ச்சைத்தான் சூர்யாவுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன் என்று லோகேஷ் கூறியுள்ளார்.

    • விக்ரம் படத்தில் கமல் எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது.
    • திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக கமல் அறிவித்துள்ளார்.

    மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து 'விக்ரம்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். கமலின் தீவிர ரசிகரான இவர் இந்தப்படத்தை இயக்கியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பிருந்தது. அதே போல் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை 'விக்ரம்' படம் முழுவதுமாக பூர்த்தி செய்துள்ளது.

    இந்த படத்தில் கமலே எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அனிருத் இசையில் வெளியான இந்தப்பாடலை அண்மையில் பார்வைத்திறன் இல்லாத மாற்றுத் திறனாளியான திருமூர்த்தி பாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    திருமூர்த்தி - கமல்

    திருமூர்த்தி - கமல்


    இந்நிலையில் திருமூர்த்தியை நேரில் அழைத்து கமல் பாராட்டியுள்ளார். மேலும் அவரை தனது இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரகுமான் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக கமல் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார்.

    விக்ரம் படத்தின் வெற்றி அனைத்து மொழி திரையுலகையும் வியக்க வைத்திருக்கிறது. வெற்றி விழாவில் பேசிய கமல்ஹாசன், இந்த ப்படத்தின் மூலம் எனக்கு பங்கு தொகை ரூ.75 கோடி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதை இப்படி வெளியில் சொல்வதன் மூலம் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் சொல்கிறேன் என்றார்.

    சில வருடங்களுக்கு முன்பு தனது ராஜ்கமல் நிறுவனத்தின் புதிப்பிக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்தபோது அந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அலுவலகத்தை திறந்து வைத்து ரஜினி பேசியபோது, நல்ல கதை அமைந்தால் நான் கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறிரியிருந்தார். அப்போது ரஜினி பேசிய விஷயம் பரபரப்பானது. இதை மனதில் வைத்து கமல்ஹாசன் சில பூர்வாங்கப் பணிகளை செய்தார்.

    கமல் - ரஜினி

    கமல் - ரஜினி

    முதலில் ரஜினியும்-கமல்ஹாசனும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்தின் பட்ஜெட் யாரும் எதிர்பார்க்காதச் வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டாக இருக்கும் என்பதே. அதற்கு செலவிட கமல்ஹாசனிடம் பணம் இல்லை என்பதால் கமல்ஹாசனே சில இடங்களில் சொல்லியிருக்கிறார். இதனால் அவருக்காக சில நண்பர்கள் பைனான்ஸ் திரட்டும் பணியில் ஈடுபட்டார்கள். அது அன்றைய சூழலுக்கு மேலும் நகராமல் அப்படியே நின்றுபோனது.

    முதலில் கதை எழுதலாம் என்ற கமலின் யோசனையில் தோன்றியதே விக்ரம் படத்தின் முழு ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த கதை. இதற்கு அவர் முதலில் வைத்தப் பெயர் வேறு. லோகேஷ் கனகராஜ் கதை சொல்ல வந்த போது அவர் சொன்ன கதையை கேட்டு விட்டு தன்னிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என்று கமல்ஹாசன் சொல்ல, லோகேஷ் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்டார்.

    கமல் - ரஜினி

    கமல் - ரஜினி


    இந்தக் கதையில் ரஜினியையும் சேர்க்க வேண்டும் என்பதே கமல்ஹாசனின் திட்டமாக இருந்தது என்கிறார்கள். ஆனால் ஒரு முழுக்கதையில் ரஜினி-கமல் இருவருக்குமே சமபங்கு ஆக்‌ஷன் காட்சிகளும், பில்டப் காட்சிகளும் வைத்து எடுக்கபடுவது என்பது இன்றைய சூழலுக்கு நடக்காத காரியம். இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் சிக்கலான விஷயமாக இருந்தது. ஒருவர் ஹீரோவாக நடிக்க, இன்னொருவர் கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ரசிகர்களை திருப்திபடுத்த முடியும்.

    அந்த வகையில் சூர்யா நடித்த பாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள். நிஜமாகவே தியேட்டர் அதிர்ந்துதான் போயிருக்கும். இதன் தொடர்ச்சியாக ரஜினியே அடுத்தப் படத்தில் முழுமையாக நார்கோடிக் ஆபிசராக நடித்தால் எப்படியிருக்கும் என்று கேட்கிறார்கள். ஆனால் இந்தத்திட்டம் ரஜினியின் பாலிசிக்கு ஒத்துவராது.

    கமல் - ரஜினி

    கமல் - ரஜினி


    அவரைப்பொருத்தவரை எந்தப் படத்திற்கும் இரண்டாம் பாகம் நடிக்கக்கூடாது. தனது மொழிமாற்றுப் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்கக்கக்கூடாது என்பதே. இதனால்தான் அந்த இடத்தில் சூர்யா நடித்தார் என்கிறார்கள். ஆனால் இப்போதும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும் என்கிற ரஜினியின் முடிவில் எந்தவித மாற்றம் இல்லை என்கிறார்கள்.

    அதற்கு தகுந்த கதையும், காலச்சூழலும் அமைய வேண்டும். அதற்கான முயற்சியை கமல்ஹாசன் எடுப்பார் என்கிறார்கள். விக்ரம் படத்தின் நிகழ்ச்சிகளில் கூட நானும் ரஜினியும் சேர்ந்து நடிக்கத் தயாராக இருக்கிறோம் கதைதான் அமைய வேண்டும் என்று பதிலளித்தார். இந்தக் கதையையும் கமல்ஹாசனே எழுதினால்தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் விரைவில் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள்.

    • கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • விக்ரம் படத்தின் புரமோஷன் நிகழ்சிகளுக்கு கமல் நேரில் சென்று ரசிகர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வெற்றி திரையுலகில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தயாரிப்பு முதல் வெளியீடு வரைக்கும் எப்படியெல்லாம் ஒரு படத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதை விக்ரம் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேச வைத்திருக்கிறது. இது மாநிலங்கள் கடந்த வெற்றியாகவே இருக்கிறது. எந்த படத்திற்கும் இல்லாமல் விக்ரம் படத்தின் ஐந்து மொழிகளுக்கும் புரமோஷன் நிகழ்சிகளுக்கும் கமல்ஹாசனே நேரில் சென்று பேசி வந்தது ரசிகர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    கமல்

    கமல்

    இந்த நிலையில் கொல்கத்தாவில் கிதிர்பூர் நகரில் இருக்கும் ரசிகர்கள் கமல்ஹாசனுக்கு கோவில் ஒன்றை கட்டி வருகிறார்கள். விக்ரம் வெளியாவதற்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தக் கோவில் விக்ரம் வெற்றி பெற்றதும் கட்டுமானப்பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் கோவிலை திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு கடிதம் மூலம் அழைப்பும் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொல்கத்தா ரசிகர்கள் கோவில் கட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடவுள் மறுப்புக் கொள்கையில் ஊறிப்போன கமல்ஹாசன் தனக்காக கட்டப்பட்டு வரும் கோவிலை திறந்து வைக்க கொல்கத்தா செல்வாரா? என்பது கேள்விக்குறி தான். 

    • விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
    • இப்படத்தின் வசூல் ரூ. 300 கோடியை தாண்டியுள்ளது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும் இப்படத்தின் வசூல் ரூ.300 கோடியைத் தாண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் 'விக்ரம்' படக்குழு கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


    கமல் - ரவிக்குமார்

    கமல் - ரவிக்குமார்


    இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். இது குறித்து ரவிக்குமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், "நான் வியந்து பார்த்த ஆளுமை. அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்து வைத்ததும், டைம் டிராவல் பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம். நன்றி லோகேஷ்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 


    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'.
    • உலகம் முழுவதும் விக்ரம் படம் புதிய வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. மேலும் இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1986-ல் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பூமியில் இருந்து வான்வெளிக்கு பறக்க இருந்த ராக்கெட்டை கடத்துவது போன்ற கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது. தற்போது 2022-ல் வெளியாகியுள்ள புதிய 'விக்ரம்' திரைப்படம் போதை பொருள் கடத்தலையும், போலீஸ் துரத்தலையும் பற்றிய கதையம்சம் கொண்டதாக உருவாகி இருக்கிறது.

    விக்ரம்

    விக்ரம்

    கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வார இறுதியில் உலகளவில் ரூ.150 கோடி வசூலை வெற்றிகரமாகத் தாண்டியது. வர்த்தக வட்டாரங்களின்படி, இப்படம் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் ஆனால், படத்தின் ஹிந்திப் பதிப்பு எதிர்பார்த்த அளவில் இல்லை எனவும் வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

    விக்ரம்

    விக்ரம்


    தமிழகத்திலும் 130 கோடிக்கு மேல் வசூலையும், சென்னையில் மட்டும் 10 கோடிக்கும் மேல் வசூலையும், கேரளாவில் 30 கோடிக்கும் மேல் வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் விக்ரம் படத்திற்கு கிடைத்துள்ளது. கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது.

    இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதும் விக்ரம் ரூ.300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்ரம் அக்‌ஷய் குமார் நடித்த சாம்ராட் பிருத்விராஜ் மற்றும் அதிவி சேஷ் நடித்த மேஜர் படங்களின் வசூலை முறியடித்துள்ளது. விக்ரம் அமெரிக்க பாக்ஸ் ஆபிசில் 2.5 மில்லியனை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • விக்ரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர் இப்படம் குறித்து நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கை கமல் பரிசளித்தார். ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்திருந்தார்.


    சிரஞ்சீவி - லோகேஷ் கனகராஜ் - கமல் - சல்மான் கான்

    சிரஞ்சீவி - லோகேஷ் கனகராஜ் - கமல் - சல்மான் கான்


    இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியை அவருடைய இல்லத்தில் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் படக்குழு சந்தித்துள்ளனர். அப்பொழுது இவர்களுடன் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான் கான் உடன் இருந்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இதனுடன், சந்திப்பில் எடுத்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, முழுமையான மகிழ்ச்சி, எனது அன்பான பழைய நண்பரான கமல்ஹாசனை விக்ரம் பட வெற்றிக்காக என் அன்பான சல்மான்கானுடன் கொண்டாடி கௌரவிக்கிறேன். நேற்றிரவு எனது வீட்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விக்ரம் படக்குழு. என்ன ஒரு தீவிரமான மற்றும் த்ரில்லான படம் இது!! பாராட்டுக்கள் நண்பரே!! என்று பதிவிட்டுள்ளார்.



    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • 'விக்ரம்' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க கமல் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ஹாட்ரிக் வெற்றிகளைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய்சேதுபதி, சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், 'விக்ரம்' படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அதில் ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கமல் அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது.


    ரஜினி - கமல்

    ரஜினி - கமல்


    கமல் கூறுகையில், 'ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினியிடம் கூற வேண்டும். பின்னர் லோகேஷ்யிடம் கூற வேண்டும். நாங்கள் மூன்று பேரும் பேசிய பின்னரே உங்களிடம் கூற முடியும். ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போது தயார்' என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விக்ரம்'.
    • இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவுக்கு கமல் பரிசளித்துள்ளார்.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    கமல் - சூர்யா

    கமல் - சூர்யா


    இதையடுத்து விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு கார் பரிசாக வழங்கினார். அதன்பின் விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கை கமல் பரிசளித்தார். இந்நிலையில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து சூர்யா நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

    ×