search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுகள்"

    திருவாரூர்-தஞ்சை நெடுஞ்சாலையில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 15 ஆயிரத்து 36 குடியிருப்புகள், 3 ஆயிரத்து 965 வணிக நிறுவனங்கள் உள்ளன. வீடுகள், கடைகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக சேகரிக்கப்படும் 12 டன் குப்பைகள் திருவாரூர் நெய்விளக்கு தோப்பு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.

    இந்த நிலையில் திருவாரூர் நகரின் எல்லை பகுதியான கல்பாலம் பகுதியில் உள்ள திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி ஊழியர்கள் கடந்த சில நாட்களாக குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

    இதில் அதிகமாக உணவு பொருட்கள் கழிவுகளாக கொட்டப்படுகிறது. தற்போது மழை நீர் கழிவுகள் இடையே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் முகத்தை துணியால் மூடிச்செல்ல வேண்டிய அவலம் நிலவுகிறது. பிரதான சாலையாக உள்ள இதன் வழியாக கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது.

    இந்த நிலையில் இவ்வாறு கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வருவது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

    தேங்கி கிடக்கும் உணவு கழிவுகளிடையே மாடு, பன்றிகள் இரை தேடுகின்றன. அவை சாலையின் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அந்த பகுதியில் ஊராட்சி குப்பை கிடங்கு மக்கள் நலன் கருதி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் நகர் பகுதி குப்பை கழிவுகள் கொட்டப்படுவது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி கூறியதாவது,

    திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும், சங்கிலி பள்ளம் ஓடை, வீரபாண்டி ஓடை, ஜம்மனை ஓடை, சின்னக்கரை ஓடை, நல்லாறு ஓடை மற்றும் பிற நீர்நிலைகளின் கரையோரங்களிலும், சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும், பாய்லர் சாம்பல், சாய கழிவுகள், பின்னலாடை நிறுவன கழிவுகள், பிரிண்டிங் கழிவுகள், பேக்கே ஜிங் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பிற தொழிற்சாலை கழிவுகள், கட்டுமானக்கழிவுகள், வணிக வளாக கழிவுகள் ஆகியவை பகல் மற்றும் இரவு நேரங்களில் கொட்டப்படுவதாலும் நீர் நிலைகள் மாசுபடுகின்றது.

    சில நேரங்களில் இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுகள் சமூக அக்கறை இல்லாத வி‌ஷமிகளால் தீ வைக்கப்படுகின்றது. இதனால் காற்றும் மாசடைகின்றது.

    இவ்வாறு திடக்கழிவுகளை கொட்டும் தனி நபர்கள், வாகனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் விடுதிகள் மீது நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு சட்டங்களின் மூலமாகவும், உள்ளாட்சி விதிகளின் மூலமாகவும் மோட்டார் வாகன சட்டத்தின் மூலமாகவும், காவல் துறையின் மூலமாகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து, திருப்பூர் வடக்கு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் மூலம் திருப்பூர் முதலிபாளையம் பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் சாயக் கழிவுகளை வெளியேற்றிய வாகனங்களும் மற்றும் திருப்பூர் தெற்கு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் மூலம் காங்கயம் குட்டப்பாளையம் நொய்யல் ஆற்றின் அருகில் சாயக் கழிவுகளை வெளியேற்றிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவ்வாகனத்தின் அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையில் திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து சம்பந்தப்பட்ட அனைவரும் உருவாகின்ற அனைத்து திடக்கழிவுகளையும், செப்டிக் டேங்க் கழிவுகளையும் நகராட்சி நிர்வாகம் மூலமாகவும், மறு சுழற்சி முறையிலும் முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×