search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    • விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்தில் படுகாயமடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் பாஹிமர் அருகே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 41 பேர் பயணம் செய்தனர். இதில் பெரும்பாலானோர் பக்தர்கள். இவர்கள் பீகாரின் கயாவில் இருந்து ஒடிசாவுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

    29 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    • கார் எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது.
    • வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான தாய்-மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களது மகன் மவுலி (25). இவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக வாடகை காரில் புறப்பட்டு சென்றனர். அந்த காரை குணசேகரன் (27) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த கார் இன்று காலை 6 மணி அளவில் விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள அக்ரஹாரப்பட்டியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி, அவரது மகன் மவுலி ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் கண்ணன், கார் டிரைவர் குணசேகரன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    அவர்களை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான தாய்-மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கார் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற தாய்-மகன் பலியான சம்பவம் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரியங்கா அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார்.
    • பிரியங்காவுக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

    திருப்பதி:

    காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பிரியங்கா. இவர் அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார்.

    பிரியங்காவுக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதி திருமலையில் உள்ள மண்டபத்தில் கல்யாணம் நடத்த பிரியங்கா குடும்பத்தார் முடிவு செய்தனர்.

    நேற்று பிரியங்கா, அவரது தந்தை, தாய், சகோதரர் உட்பட 4 பேர் காரில் திருப்பதிக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் செல்வம் காரை ஓட்டி வந்தார். பின்னர் பிரியங்கா காரை ஓட்டினார். திருப்பதி அடுத்த வடமால பேட்டை அஞ்சேரம்மா கோவில் அருகே கார் வந்தது.

    வேகமாக காரை ஓட்டி வந்த பிரியங்கா சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காததால் அதில் கார் வேகமாக ஏறி இறங்கியது. கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

    இதில் காரின் இடுப்பாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பிரியங்கா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வடமால பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் பிரியங்காவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் நிச்சயித்த பெண் பலியான சம்பவம் காஞ்சிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது.
    • காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்

    புதுடெல்லி:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை அரசு பஸ் (எண் 14) புறப்பட்டு சென்றது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    காலை 8.10 மணியளவில் அச்சரப்பாக்கம் அடுத்த தொழப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது முன்னால் இரும்பு கம்பியை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை அரசு பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் இடது புறத்தில் இருந்த லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் இடதுபுறம் முழுவதும் நொறுங்கியது.

    இடதுபுற இருக்கைகளில் ஜன்னல் ஓரம் இருந்த 3 ஆண்கள், 2 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில், மேல் மருவத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மற்றொரு ஆண் பயணியும் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில், விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

    எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது. காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தாக்குதலை தொடங்கியது. 5 மாதங்களுக்கு மேல் இந்த தாக்குதல் நீடித்து வருகிறது.

    இந்த போரில் ஏராளமான வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகிவிட்டனர். பல நகரங்கள் ரஷியாவின் மும்முனை தாக்குதலால் சீர்குலைந்து போய் உள்ளது.

    உயிருக்கு பயந்து பொதுமக்கள் அங்கிருந்து காலி செய்து ஓடி விட்டனர்.

    ரஷியபடைகள் தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது தங்கள் கவனத்தை திருப்பி உள்ளது. அங்குள்ள பெரும்பாலான நகரங்களை ரஷியா கைப்பற்றிவிட்டன. லிவிசான்ஸ்சா நகரத்தை பிடிக்க தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனுக்கு சொந்தமான ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிவிட்டன.

    இந்த தீவில் இருக்கும் ரஷியபடைகளுக்கு உணவு மற்றும் பொருட்கள் ஏற்றி சென்ற படகுகள் மீது உக்ரைன் படையினர் ஆளில்லாத விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    உக்ரைன் வீரர்களின் உக்கிரமான தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறியதாக உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இதனால் ஸ்னேக் தீவை உக்ரைன் தன் வசப்படுத்தி உள்ளது.

    ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிய சில மணி நேரங்களில் உக்ரைன் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான ஓடேசாவில் உள்ள பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

    இந்த தாக்குதலில் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உள்பட 6 பேர் இறந்தனர்.

    இதுபற்றி அறிந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மேலும் 4 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் பெயர் உடனடியாக தெரியவில்லை.

    இந்த தாக்குதலில் மேலும் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • திடீரென லாரியும், சரக்கு வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்தானது.
    • சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஹரிஸ்குமார், கிளீனர் மஞ்சுநாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி பெங்களூரு நோக்கி சென்றது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம் ஈசல்பட்டியை சேர்ந்த கருணாகரன் (32) என்பவர் ஓட்டி சென்றார்.

    இதேபோல் கர்நாடகாவில் இருந்து கேரளாவை நோக்கி ஒரு சரக்கு வாகனம் புறப்பட்டது. இதை கர்நாடகா மாநிலம் டுங்கூரை சேர்ந்த ஹரிஸ்குமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனராக அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (30) என்பவரும் வந்தார்.

    தேங்காய் லாரியும், சரக்கு வாகனமும் இன்று அதிகாலை 2.45 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியும், சரக்கு வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்தானது.

    இதில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஹரிஸ்குமார், கிளீனர் மஞ்சுநாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். லாரி டிரைவர் கருணாகரன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காயத்துடன் உயிருக்கு போராடிய லாரி டிரைவர் கருணாகரனை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் பலியான டிரைவர் ஹரிஸ்குமார், கிளீனர் மஞ்சுநாத் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தின் காரணமாக பவானி-மேட்டூர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் மூலம் விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்து தொடங்கியது.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஹாபூர்:

    உத்தரப் பிரதசே மாநிலம் ஹாபூரில் மின்னணு பொருட்கள் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வெடிவிபத்தில் ஏற்பட்ட தீயில் தடுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படியுங்கள்.. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை- துப்பாக்கிகள் பறிமுதல்

    நெல்லை அருகே மழையால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    நெல்லை:

    தாழையூத்து காமராஜர் நகரை சேர்ந்தவர் புதியவன் செல்வன் (வயது 28). தொழிலாளி. நேற்று மாலை இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மேலப்பாட்டம் அருகே சென்றபோது பலத்த மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.

    அப்போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    சிவகங்கை அருகே அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியான சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    சிவகங்கை மாவட்டம் இளமனூர் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் மகன் சுரேஷ் (வயது30). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் சாலைகிராமம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் பணிமுடிந்து திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இளையான்குடி போலீசார், அவரது உடலை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து பற்றி இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    சந்தவாசல் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள அனைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. அவரது மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர், கண்ணமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சதீஷ்குமார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    நெல்லையில் மாடு மீது ஆம்புலன்ஸ் மோதி நோயாளி பலியானார். அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள ஆய்குடியை அடுத்த அகரகட்டு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி லதா (வயது 31). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    நேற்று இரவு மேல் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாளை மண்டல அலுவலகம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, எதிரே ரோட்டில் திடீரென மாடு குறுக்கே பாய்ந்தது. இதனால் ஆம்புலன்ஸ், மாடு மீது மோதி, கவிழ்ந்தது.

    இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி லதா மற்றும் அவரது தாயார் செல்வி, சகோதரர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிறிது நேரத்தில் நோயாளி லதா பரிதாபமாக இறந்தார். அவரது தாயார் செல்வி மற்றும் சகோதரர் கிருஷ்ணமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேளச்சேரியில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவரை கிண்டி போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.
    வேளச்சேரி:

    வேளச்சேரியை சேர்ந்தவர் சங்கீதா(வயது 37). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் வேளச்சேரி 100 அடி சாலை, குருநானக் கல்லூரி சந்திப்பில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்து திரும்பிய தனியார் பஸ் சங்கீதாவின் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய சங்கீதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான உளுந்தூர்பேட்டையை சேர்ந்த புஷ்பராஜை கிண்டி போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

    ×