search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    தாராபுரம் அருகே போலீஸ்காரர் மனைவி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மணி(32). இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பட்டாலியன் பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி சரண்யா(29). இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று சரண்யா உப்புத்துறைபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    ரெட்டவலசு பிரிவில் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய்லாந்தில் மாடி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #Thailand #TouristBus #Accident
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் ரோய் இட் மாகாணத்தில் உள்ள பனோம் பிராய் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பாங்காக்குக்கு மாடி பஸ் சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் கோலோங் லுவாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது.

    இந்த பஸ் கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 50 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  #Thailand #TouristBus #Accident 
    சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே விபத்தில் மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி நேருநகரை சேர்ந்தவர் ராஜா. டீ மாஸ்டர். இவருடைய மகள் தமிழ்ச்செல்வி (வயது 14). இவர், சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், திடீரென தமிழ்ச்செல்வி மீது மோதியது.

    இதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கெங்கையம்மன் கோவில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க சுரங்கப்பாதை ஒன்று அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்து வருகிறோம்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. ஆர்.டி.ஓ. அலுவலக சந்திப்பில் இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளும் அகற்றப்பட்டன. இதற்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை.

    சாலையை கடக்கும்போது, பலர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். விரைவில் இந்த பகுதியில் சுரங்கப்பாதை ஒன்று அமைத்து, விபத்தைத் தடுக்க வேண்டும், என்றனர்.

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். #BiharFogConditions #VehiclePileup
    முசாபர்பூர்:

    வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர். நெடுஞ்சாலையில் கண்ணை மறைக்கும் அளவுக்கு மூடுபனி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி விபத்துக்குள்ளாகின்றன.

    இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி உள்ளிட்ட 9 வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.

    இதேபோல் டெல்லி புறநகர்ப் பகுதியில் உள்ள கஞ்சவாலா-பாவனா சாலையில் நேற்று காலை ஒரு கார் திடீரென தீப்பற்றியது. இதனால் அந்த காரை நடுரோட்டில் அப்படியே நிறுத்திவிட்டு, அதில் பயணித்தவர்கள் வெளியேறினர். அப்போது பனிமூட்டம் காரணமாக பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு கார் மற்றும் ஒரு பேருந்து தீப்பற்றியது. சுமார் 25 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால், பலர் காயமடைந்தனர். #BiharFogConditions #VehiclePileup
    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சுரேந்திரன் (வயது 20). இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த 31-ந் தேதி நள்ளிரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாட வீட்டின் முன்பு உள்ள சாலையில் தனது பெயரை எழுதிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சுரேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த சுரேந்திரனை, அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேந்திரன், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பரமக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமக்குடி:

    பரமக்குடி பட்டாபி சீத்தாராமன் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் சீனிவாசன் (வயது 28). கைத்தறி நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்ப பிரச்சினை தொடர்பாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் ஓம்பிரகாஷ் (24) கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் அங்கு சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மாலியில் வேட்டைக்காரர்கள் நிகழ்த்திய துப்பாக்கி தாக்குதலில் பழங்குடியின மக்கள் 37 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Mali #Hunter #Farmer #Conflict
    பமாகோ:

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மோப்தி பிராந்தியத்தில் கோலோகன் என்கிற கிராமம் உள்ளது. இங்கு புலானி எனப்படும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கால்நடை மேய்ப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர்களுக்கும், ஆயுதம் ஏந்திய வேட்டைக்காரர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கோலோகன் கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த வேட்டைக்காரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளினர். மேலும் அங்கிருந்த வீடுகளுக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் பழங்குடியின மக்கள் 37 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Mali #Hunter #Farmer #Conflict 
    திருப்பூர் ராயபுரம் அருகே ஓட்டல் படிக்கட்டில் தவறி விழுந்து லாட்ஜ் உரிமையாளர் பலியானார்.
    திருப்பூர்:

    திருப்பூர் ராயபுரம் எல்.ஆர்.ஜி. லே அவுட் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 48). இவர் காதர்பேட்டையில் சொந்தமாக லாட்ஜ் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுரேஷ் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். நள்ளிரவில் வீட்டுக்கு வருவதற்காக ஓட்டல் படிக்கட்டில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. அதில் அவருக்கு பின்னந்தலையில் அடிபட்டு மயங்கி சரிந்தார்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்து பார்த்து விட்டு சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புத்தாண்டையொட்டி ஓட்டல் படியில் தவறி விழுந்து லாட்ஜ் உரிமையாளர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    திருப்புவனம் ரெயில் நிலையத்தின் ஸ்டேசன் மாஸ்டர் மோட்டார்சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    திருப்புவனம்:

    மதுரை காளவாசல் அருகே உள்ள பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 38). இவர் திருப்புவனம் ரெயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை தனது வீட்டிலிருந்து மோட்டார்சைக்கிளில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் இளையான்குடிக்கு செல்லும் ஒரு லாரி வந்தது. திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பு வந்த போது, லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் கீழே விழுந்த ரவீந்திரன் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த காரைக்குடி அருகே உள்ள சிறுவாலையை சேர்ந்த முருகன் (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார். இறந்த ரவீந்திரனுக்கு மனைவி அங்கயற்கண்ணியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். #tamilnews
    பாலக்காடு அருகே விபத்தில் கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    பாலக்காடு:

    கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் காதர் அமீன். இவரது மகன் அர்‌ஷத் (19). குனியமுத்தூர் குறிஞ்சி நகர் மொய்தீன் மகன் ரியாஸ் (18).

    இவர்கள் இருவரும் கோவை - பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்துந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் பாலக்காடு புது நகரத்தில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    அதிகாலை அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கோவை திரும்பினார்கள். தத்த மங்கலம் அருகே வந்த போது வண்ணா மடையில் இருந்து ஆலப்புழாவுக்கு ஒரு வேன் சென்றது.

    இந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். அர்‌ஷத் சித்தூர் தாலுகா மருத்துவ மனையிலும்,ரியாஸ் பாலக்காடு அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் சிகிச்சை பலன் இன்றி இருவரும் இறந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசராணை நடத்தி வருகிறார்கள். 
    ஆப்கானிஸ்தான் நாட்டின் இரு மாகாணங்களில் போலீசாருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்தனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதிகளில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
     
    இந்நிலையில், அந்நாட்டின் பலாக் மாகாணத்துக்குட்பட்ட சிம்டால் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர்.

    அருகாமையில் உள்ள தக்கார் மாகாணத்தில் உள்ள தஷ்த்-இ-காலா மாவட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வீட்டில் தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans
    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில் சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். #Buscrash #Mexico
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் ஒரு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது.

    லேகான் நகரத்தின் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நிறைமாத கர்ப்பிணி உள்பட காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Buscrash  #Mexico
    ×