search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    விருதுநகரில் இன்று அதிகாலையில் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பேக்கரி அதிபர் மனைவியுடன் விபத்தில் பலியானார்.

    விருதுநகர், மார்ச்.21-

    பங்குனி உத்திர வழிபாட் டுக்கு சென்ற பேக்கரி அதிபர் மனைவியுடன் விபத்தில் பலியானார்.

    திருப்பூரில் பேக்கரி கடை நடத்தி வந்தவர் கோபால் யாதவ் (வயது 53). இவரது மனைவி கிருஷ்ணவேணி (48). இவர்களது மகன் சுடலைமணி (25).

    இவர்கள் பங்குனி உத்திர வழிபாட்டுக்காக குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே நடுவக்குறிச்சியில் அவர்களின் குல தெய்வமான சாஸ்தா கோவில் உள்ளது.

    விழாவில் பங்கேற்க நேற்று இரவு கோபால் உள்பட 3 பேரும், காரில் புறப்பட்டனர். காரை சுடலைமணி ஓட்டினார். இன்று அதிகாலை 1 மணியளவில் விருதுநகர் -சாத்தூர் சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அங்குள்ள நடுவப்பட்டி விலக்கில் கியாஸ் சிலிண்டர் லாரி நிறுத்தப்பட்டு இருந் தது. அதனை சுடலைமணி சரியாக கவனிக்கவில்லை.

    லாரியின் அருகே வந்ததும் சுதாரித்த சுடலை மணி, காரை நிறுத்த முயன்றார். அதற்கு பலன் இல்லை. வேகமாக வந்த கார் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காருக்குள் இருந்த கோபால் அவரது மனைவி கிருஷ்ண வேணி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரை ஓட்டி வந்த சுடலைமணி படுகாயத்துடன் மீட்கப் பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

    விபத்து குறித்து வச்சக் காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். * * * திரிபுரா மாநிலம் அகர்தலாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். பொதுக்கூட்ட மேடையில் பெண் ஒருவர் அவரை பாராட்டி சால்வை அணிவித்தார். * * * பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிளும், பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
    எலச்சிபாளையம்:

    திருச்செங்கோடு அருகே கைலாசம்பாளையம் சுப்பராயன் நகர் பகுதியில் நேற்று தனியார் கல்லூரி பஸ் ஒன்று திருச்செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், அந்த பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த தொழிலாளி வெற்றி (வயது 23) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த ராஜா (37) படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சாத்தூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் ரதிப்ராஜன் (வயது 12). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இளங்கோவன் தனது குடும்பத்துடன் நாகூர் அருகே கங்களாஞ்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    பின்னர் இளங்கோவனின் உறவினர்களுடன் ரதிப் ராஜன் அருகில் உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்தான். அப்போது திடீரென ரதிப்ராஜன் குளத்தில் மூழ்கினான். உடனே சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரதிப்ராஜனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் காயத்ரி (வயது 20). இவர் அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்டூடியோவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நண்பகலில் ஸ்டூடியோவில் தூக்கிட்டு காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    டவுன் போலீசார் காயத்ரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்பு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் காயத்ரியின் தந்தை ஆறுமுகம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் ஒரு மனு அளித்தார். அதில், எனது மகள் தற்கொலையில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை. மகளின் சாவில் முறையான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 கிளர்ச்சியாளர்கள் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistaninsurgents #insurgentskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள கெரோ மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்த பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இன்று வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் அந்த பகுதியில் இருந்த 17 கிளர்ச்சியாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Afghanistaninsurgents #insurgentskilled
    பிரேசில் நாட்டு தலைநகரான சாவ் பாலோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Brazil #Brazilschool #Brazilschoolshooting #SaoPauloschoolshooting
    சாவ் பாலோ:

    பிரேசில் நாட்டு தலைநகரான சாவ் பாலோ நகருக்குள் உள்ள சுஸானோ பகுதியில் பேராசிரியர் ரவுல் பிரேசில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது.

    (உள்ளூர் நேரப்படி) இன்று காலை இந்தப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கியவுடன் கைகளில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த இருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த தகவலை சாவ் பாலோ மாநில கவர்னர் ஜோவோ டோரியா உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவம் நடந்த பள்ளிக்கு போலீசாரும், ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவர்களும் விரைந்து சென்றனர். இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாக பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் கொல்லப்பட்டதாகவும் சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. #Brazil #Brazilschool #Brazilschoolshooting #SaoPauloschoolshooting
    உடையார்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் அருகே தத்தனூர்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் மகள் தீபா(வயது 18). இவர் தத்தனூர் பொட்டகொல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்து வருகின்றது. தீபா தேர்வுக்கு படித்த கேள்விபதில் அனைத்தும் மறந்துவிடுவதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனையில் இருந்த தீபா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துவிட்டு மயக்க நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுசேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    வள்ளியூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வள்ளியூர்:

    குமரி மாவட்டம் நெய்யாற்றின் கரையை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது33). இவரது மனைவி மோனிஷ் (28). இவர்களுக்கு கிரிஷ் (3) என்ற மகன் உள்ளான். நேற்று அவர்கள் காரில் குடும்பத்துடன் மதுரைக்கு சென்றிருந்தனர். அவர்களுடன் உறவினர்கள் அம்மு, சூர்யா, சகி உள்ளிட்டோரும் சென்றனர்.

    பின்பு அவர்கள் நள்ளிரவு காரில் ஊர் திரும்பினர். கார் பணகுடி அருகே உள்ள புண்ணியவாளன் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே இரும்பு லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. எதிர்பாராத விதமாக காரும், லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வாலிபர் உன்னிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மனைவி மோனிஷ், குழந்தை கிரிஷ் மற்றும் கார் டிரைவர் ரெஜி உள்ளிட்ட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான உன்னிகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்த வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேலூர் அருகே அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர்.
    ஆற்காடு: 

    வேலூர் அருகே அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    வேலூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய் னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் ஆற்காடு நோக்கி காய்கறி களை ஏற்றிக் கொண்டு மினிவேன் சென்றது. தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் விபத்துகளை தடுக்க வாகனங்களின் வேகத்தை குறைக்க டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அரப்பாக்கம் அருகே கன்டெய்னர் லாரி சென்ற போது டிவைடர்கள் சாலையின் குறுக்கே இருந்ததால் டிரைவர் அதன் வேகத்தை குறைத்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மினிவேனின் டிரைவர் இதனை கவனிக்கவில்லை.

    இதனால் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதியது. மோதிய வேகத்தில் மினி வேனின் முன்பகுதி நொறுங்கியது. மினி வேனுக்குள் டிரைவரும், உடன் இருந்த மற்றொரு நபரும் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மினிவேனில் இருந்த தக்காளிகள் சாலையில் சிதறியது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மினிவேனில் சிக்கி இருந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இரு வாகனங்களையும் அப்புறப்படுத்தி சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் போக்கு வரத்தை சீர் செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில், ஆற்காட்டை சேர்ந்த டிரைவர் பாஸ்கர் (வயது 34) மற்றும் கோபிநாத் (53) என்பது தெரியவந்தது. மேலும், இந்த விபத்து குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணியம்பாடி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    சென்னை போரூரை சேர்ந்த உமாபதி. அவரது நண்பர்கள் 4 பேர் காரில் ஏலகிரி மலைக்கு சென்றனர். இன்று மதியம் ஊருக்கு புறப்பட்டு வந்தனர்.

    வாணியம்பாடி அருகே தாலிஅறுத்தான்மேடு என்ற இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் செல்வபிரகாசம், சிவா, ஜானகிராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். சுப்பிரமணி என்பவர் படுகாயத்துடன் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உமாபதி லேசான காயத்துடன் தப்பினார்.

    வாணியம்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியானவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆசிரியர் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    இளையான்குடி:

    இளையான்குடியை அடுத்த பூச்சியேந்தல் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் தனபாபு (வயது 35). இவர் திருவேங்கடம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலா (27) என்பவருடன் ஒரு மோட்டார்சைக்கிளில் காளையார்கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    இளையான்குடி-காளையார்கோவில் நெடுஞ்சாலையில் மாதவநகர் அருகே எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத நிலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் தனபாபு தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். பாலா பலத்த காயத்துடன் இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் மோதிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமின்றி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வேலூர் அருகே விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அலுமேலு ராங்கபுரம் குளத்துமேட்டை சேர்ந்தவர் முனிவேல் (வயது 37) ஆட்டோ டிரைவர். இவர் நேற்றிரவு வீட்டின் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றோரு பைக் மோதியது. இதில் முனிவேல் படுகாயமடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தனர். அங்கு முனிவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×