search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95169"

    அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் அகன்றுவிடும்.
    வில்லிவாக்கத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் உள்ளது. புராண காலத்தில் வில்வ வனமாக விளங்கிய இப்பகுதி தற்போது வில்வலன், வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து ‘வில்லிவாக்கம்’ என அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெருஞ்சிறப்புக் கொண்ட இந்த சேத்திரத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் ஆக எழுந்தருளியுள்ளார்.

    திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்க விரும்பும் பெண்கள், விரதம் இருந்து இங்குள்ள அமிர்தவல்லித் தாயாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை தரிசனம் காண்பது சிறப்பு. தொடர்ந்து ஐந்து வாரம் இந்த ஊஞ்சல் தரிசனம் செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை வரும் உத்திர நட்சத்திரத்தில் மகாலட்சுமி சகஸ்ர நாமம், அஷ்டோத்ரம், அம்ருதவல்லி ஸ்தோத்திரம் சொல்லி தேன், பேரீச்சம்பழம் நிவேதனம் செய்வது நன்று.

    அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் அகன்றுவிடும். புதன் கிழமை அன்று அர்ச்சனை செய்து, பச்சைப்பயறு, சுண்டல் அல்லது பால் பாயசம் (அக்கார வடிசல்) குழந்தைகளுக்கு தானம் தருவது சிறப்பு.

    மிதுனம், கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 5 புதன்கிழமை விரதம் இருந்து, தாமோதர காயத்ரி மந்திரம் ஜெபம் செய்து (காலை 6-7, 9-10, மாலை 5-6 மணிக்குள்) பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தை ஐந்து முறை வலம் வர வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் அடைவார்கள். உத்திர நட்சத்திரம் வரும் புதன்கிழமையிலும், அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் வழிபடுவது உத்தமம்.

    முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரம் அமைந்துள்ள வளாகத்தில் திருப்பதி ஏழுமலையானுக்காக தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
    திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால்தான் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்ய தினம், தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தப்படி உள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையானை நினைத்தவுடன் சென்று, பார்த்து தரிசனம் செய்து விட இயலாது. ஏழுலையான் எப்போது நம்மை அழைக்கிறாரோ, அப்போதுதான் திருப்பதிக்கு சென்று அவரை தரிசனம் செய்ய முடியும் என்று சொல்வார்கள்.

    ஒரு தடவை திருப்பதிக்கு சென்றாலே போதும், மனம் இனம் புரியாத வகையில் ஆனந்தமும், அமைதியும் அடையும். நீண்ட வரிசையில், மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று கடும் நெரிசல்களுக்கு மத்தியில் “கோவிந்தா.... கோவிந்தா...” என்று உள்ளம் உருக முன் மண்டபத்துக்குள் நுழைந்த அடுத்த ஓரிரு நிமிடங்களில் நம்மை வெளியில் கொண்டு வந்து விடுவார்கள்.

    அழகாக, ஆஜானுபாகுவாக நின்று அருள்பாலிக்கும் ஏழுமலை சில வினாடிகளே கண்குளிர்பாலித்து தரிசிக்க முடியும். சில சமயம் ஓரிரு நிமிடங்கள் ஏழுமலையானை நிதானமாக பார்த்து நம் கோரிக்கைகளை முன் வைத்து விட முடியும். அந்த நேரத்தில் நமக்கு கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது.

    இந்த ஆனந்தத்தை அனுபவிக்கவும், இந்த பிறவியில் எல்லா செல்வங்கள் பெற்று வாழவும், மறுபிறவி வேண்டாம் என்ற முக்திக்காகவும்தான் தினந்தோறும் ஏழுமலையானிடம் சரண் அடைய லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி நோக்கி அலை, அலையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    சில பக்தர்கள் வாரம் தோறும் ஏழுமலையானை பார்த்து ஆனந்தம் கொள்வார்கள். சில பக்தர்கள் மாதம் தோறும் ஒரு தடவை சென்று ஏழுமலையானை பார்த்து வருவார்கள். சிலர் ஆண்டுக்கு ஒரு தடவை புரட்டாசி மாதம் மட்டும் திருப்பதிக்கு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.



    ஏழுமலையானை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ள வியாபாரிகள், தங்களது கடை வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை ஏழுமலையானுக்கு கொடுத்து விடுவதுண்டு. ஏழுமலையானை அவர்கள் தங்கள் கடையின் ஒரு பங்குதாரர் போல கருதி இந்த கைங்கர்யத்தை செய்து வருகிறார்கள். இப்படி திருப்பதி ஏழுமலையானுக்கு பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையானை அடிக்கடி தரிசனம் செய்பவர்களில் பெரும் பாலானவர்கள் ஆந்திராவின் தென் பகுதியையும் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள்தான். மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு திருப்பதி ஏழுமலையானை அடிக்கடி பார்த்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

    அத்தகைய பக்தர்கள் “எப்போது திருப்பதிக்கு போவோம்?” என்ற ஏக்கத்துடன் இருப்பார்கள். சில பகுதி மக்களுக்கு திருப்பதி ஏழுமலையானை ஆண்டுக்கு ஒரு தடவை தரிசிப்பது கூட இயலாத காரியமாக இருக்கும்.

    அப்படிப்பட்ட மக்களை திருப்பதி ஏழுமலையானே தேடி வந்து, ஓரிடத்தில் நிலை கொண்டு அருள்பாலித்தால் எப்படி இருக்கும்? “ஏழுமலையானே... வந்து விட்டாரா.... இதை விட வாழ்வில் வேறு என்ன பாக்கியம் வேண்டும்” என்று மனம் குதூகலம் கொள்ள, கண்ணீர் மல்க சொல்வார்கள்.

    அப்படி ஒரு ஆன்மிக குதூகலத்தை தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் அனுபவிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. ஆம் திருப்பதி ஏழுமலையான் தென் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரம் அமைந்துள்ள வளாகத்தில் திருப்பதி ஏழுமலையானுக்காக தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் எத்தகைய ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகிறதோ, அவை அனைத்தும் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி ஆலயத்திலும் கடைபிடிக்கப்படுகிறது.
    இத்துதியை தினமும் அல்லது ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும்.
    ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே
    காவேரீ மத்ய தேஸே ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே
    நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம்
    பத்மாதாத்ரீகராப்யாம் பரிசிதசரணம் ரங்கராஜம் பஜேஹம்.

    (பராசரபட்டர் அருளியது)

    பொதுப்பொருள்:

    ஏழு மதில்களால் சூழப்பட்ட பிராகார மத்தியில் தாமரை மொட்டுப் போன்ற விமானத்தின் கீழ் மிகவும் மிருதுவான ஆதிசேஷனுடைய சரீரமாகிய கட்டிலில் யோக நித்திரை கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம். அழகு வாய்ந்தவரே, இடது கையை இடுப்பில் வைத்து ஒய்யாரக் கோலம் காட்டுபவரே, ஸ்ரீதேவி- பூதேவி இருவரும் பற்றி, மிருதுவாகப் பிடித்து வருடும் பாதங்களைக் கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் நடைபெறும் வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் கோவில் அருகே உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் வருகிற 16-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.

    முதல் நாளான 16-ந் தேதி உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதைத் தொடர்ந்து உற்சவர்களை தெப்ப தேரில் வைத்து தெப்ப குளத்தை 3 முறை சுற்றி வரப்படும்.

    17-ந் தேதி ருக்மணி சமேத கிருஷ்ணர் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது. 18-ந் தேதி உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 19-ந் தேதி உற்சவரான மலையப்பசாமியை தேரில் வைத்து தெப்ப குளத்தை 5 முறை சுற்றி வரப்படும்.

    கடைசி மற்றும் 5-வது நாளான 20-ந் தேதி உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்ப குளத்தை 7 முறை சுற்றி வரப்படும். தெப்ப உற்சவத்தையொட்டி 5 நாட்களுக்கும் வசந்த உற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முற்பிறப்பில் சிறந்த விஷ்ணு பக்தராக வாழ்ந்த மன்னன் கஜேந்திரன். அகத்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திரன் யானையாக பிறந்தார். அதே போன்று முனிவர் தேவலாவின் சாபத்தால் கந்தர்வன் ஒருவன் முதலையாக பிறந்தார். இருவருக்கும் சாப விமோசனம் அளிக்க பெருமாள் வந்தருளுவார் என்று முனிவர்கள் வரமளித்தனர்.

    அதன்படி இருவரும் திரிகூடமலையில் வசித்தனர். தாகம் தணிக்க யானை தனது கூட்டத்துடன் குளத்திற்கு வந்தது. அப்போது அங்கிருந்த கந்தர்வனான முதலை மன்னன் கஜேந்திரனான யானையின் காலை கவ்விப் பிடித்தது. மற்ற யானைகள் எவ்வளவு முயன்றும் முதலையிடம் இருந்து யானையை காப்பற்ற முடியவில்லை. முதலையும், யானையின் காலை விடுவதாக தெரியவில்லை.

    தனது இறுதிகாலம் நெருங்குவதாக உணர்ந்த மன்னன் கஜேந்திரனான யானை துதிக்கையால் குளத்திலுள்ள தாமரையை பறித்து வானை நோக்கி ஆதிமூலமே என பெருமாளை வேண்டி பிளிரி சரணாகதி அடைந்தது. தனது பக்தனின்(யானை) துயர் துடைக்க வானில் கருட வாகனத்தில் தோன்றிய பெருமாள் தனது சக்கர ஆயுதத்தை ஏவி முதலையின் தலையை துண்டித்து யானையை காப்பாற்றி மோட்சம் அளித்தார். இவ்வாறு புராணங்கள் கூறுகின்றன.

    இந்த புராணத்தை நினைவுக்கூரும் விதமாக ஆண்டுதோறும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெறும். நேற்று காலை நரசிங்கம் கோவில் முன்பு அமைந்துள்ள குளக் கரையில் கருட வாகனத்தில் எழுந்தருளிய வழித்துணை பெருமாள் முன்பு யானையின் காலை கவ்வும் முதலை பொம்மைகளை வைத்து கஜேந்திர மோட்ச நிகழ்ச்சியை கோவில் பட்டர்கள் செய்து காட்டினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.
    கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.

    காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது. காரை புதர்கள் நிறைந்து இருந்ததால் புற்களும் நிறைந்து இருந்தது.

    அப்போது எர்ற கொல்ல தொட்டியர்கள் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்த்துவிட்டு பால் கறப்பது வழக்கம். இப்பசுக்களில் பால் கொடுக்கும் காறாம் பசு ஒன்று மாலையில் வீடு திரும்பும்போது மடி வற்றி பால் இல்லாமல் இருப்பதை வெகு நாட்கள் கவனித்து வந்த தொட்டிய நாயக்கர் பசு மீது சந்தேகம் கொண்டு ஒரு நாள் பசு மேய்கிற இடத்திற்கு சென்றார்.

    அந்த பசு காரை புதரில் பாலை சுரந்து கொண்டிருந்தது. பசு புதருக்கு பால் கொடுக்கிறதே என்ன ஆச்சரியம் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கொடுவாளை கொண்டு அவர் புதரை வெட்டினார். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொட்டிய நாயக்கர் மயங்கி கிழே விழுந்து விட்டார். பசுக்கள் மட்டும் வீடு திரும்பி விட்டன.

    காலையில் சென்ற தொட்டிய நாயக்கர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த உறவினர்கள் இருட்டில் போவதற்கு துணிகளை பந்தமாக கட்டி எண்ணை ஊற்றி தீப்பந்தங்களை பற்றவைத்து கொண்டு மிருகங்கள் இருட்டில் பக்கத்தில் வராமல் இருக்க பறையடித்து கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் காரை வனத்திற்குள் தேடினார்கள்.

    அப்போது அங்கு இருந்த புதரில் ரத்தம் பீறிட்ட இடத்தில் சிவப்பாக மடைபோல் காட்சி அளித்தது. மயக்கம் தெளிந்த தொட்டிய நாயக்கர் நடந்தவற்றை எல்லாம் கூறினார். மற்றவர்கள் புதரை விலக்கி, தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த போது சுயம்பு லிங்கம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அப்போது அங்கு இருந்த தொட்டிய நாயக்கர்களில் ஒருவருக்கு அருள் வந்து ஆடி “நான் தான் அரங்கன், எனக்கு தான் பசு பாலை சுரந்து கொடுத்தது. என்னுடைய இடத்தை சுத்தம் செய்து கோவில் கட்டி வணங்குங்கள்” என்று கூற நின்றிருந்த தொட்டிய நாயக்கர்கள் தோல் பைகளில் தண்ணீர் கொண்டு வந்து இறைவன் மீது ஊற்றி பச்சை பந்தல் போட்டு வணங்கினர். வெட்டப்பட்ட அடையாளம் இப்போதும் மூலவரின் மேல் பக்கத்தில் உள்ளதை பார்க்கலாம்.

    பின் பட்டர் வம்சத்தினர் தொட்டிய நாயக்கர்களுக்கு உதவியாய் இருந்து அரங்கனின் பெருமையை கூறினர். அதன் பின்னர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு பல கல்கார வேலைகளிலும், இத்திருக்கோவிலுக்கான மண்டபங்களிலும், தெப்பக்குள படிக்கட்டுகளிலும் மீன் சிற்பங்கள் இருப்பது மதுரை மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கு சாட்சியாகும்.
    திருமலையில் ரத சப்தமி விழா கோலாகலமாக நடந்தது. ஒரேநாளில் 7 வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. அதிகாலை 5.30 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தியை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து, கோவிலின் கிழக்கு மாட வீதியில் பிரதான நுழைவு வாயில் எதிரே கொண்டு வந்து நிறுத்தினர். சூரியன் உதயமான நேரத்தில் சூரியக்கதிர்கள் உற்சவரின் பாதத்தில் விழுந்தபோது, அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்தனர்.

    இதையடுத்து சூரிய பிரபை வாகன உலா காலை 8 மணிவரை நான்கு மாடவீதிகளில் வலம் வந்தது. வேத பண்டிதர்கள், வேத மந்திரங்களை ஓதினர். வேத மாணவர்கள் சூரியாஷ்டகம் ஷோத்திரத்தைப் பாராயணம் செய்தனர். வாகன வீதிஉலா முன்னால் கோலாட்டம், பஜனை கோஷ்டிகளின் பக்தி பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகனம், பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கருட வாகனம் (கருட சேவை), மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை அனுமந்த வாகனம், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி), மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கல்ப விருட்ச வாகனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சர்வ பூபால வாகனம், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திரபிரபை வாகனம் நடந்தன.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ரத சப்தமி விழாவால் நேற்று கோவிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வரும் பெண் பக்தர்கள் ஆகியோருக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், டோலோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை மற்றும் வாரத்தில் ஒருநாள் நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

    சுப்ர பாதம், தோமாலா, அர்ச்சனை ஆகியவை பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்காமல் ஏகாந்தமாக நடந்தது. நேற்று சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல் இன்றும் (புதன்கிழமை) சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன. வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்களுக்கு மட்டும் தரிசன அனுமதி வழங்கப்பட்டது. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் குறைந்த எண்ணிக்கையில் சாமி தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுப்பப்பட்டனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியுள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று ஒரேநாளில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்கள் வீதிஉலா நடக்கின்றன.

    அனைத்து வாகனங்களிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். எனவே இதுஒரு ‘‘மினி பிரம்மோற்சவ விழா’’ என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள்.

    முதலில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதயமாகும் நேரத்தில், ‘‘சூரிய ஜெயந்தி விழா’’ நடக்கிறது. சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து, கோவிலின் பிரதான நுழைவு வாயிலின் எதிரே கொண்டு வந்து நிறுத்தப்படுவார்.

    சூரியக்கதிர்கள் உற்சவர் மீது விழும். அந்த நேரத்தில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். இதையடுத்து சூரிய பிரபை வாகன உலா நான்கு மாடவீதிகளில் வலம் வரத் தொடங்கும். மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோ‌ஷத்துடன் வழிபடுவர்.

    வாகன வீதிஉலாவை பார்க்க லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் நான்கு மாடவீதிகளில் 175 கேலரிகளை சீரமைத்து, தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. கேலரிகளில் அமர்ந்து காலை முதல், இரவு வரை வாகன வீதிஉலாவை பார்த்து வழிபடும் பக்தர்களுக்குச் சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாடவீதிகளில் 55 உணவுக்கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அங்கிருந்து கேலரிகளில் அமர்ந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம், குடிநீர் ஆகியவை வினியோகம் செய்யப்படும். பனி மற்றும் வெயிலுக்காக பக்தர்களின் நலன் கருதி தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் நேரத்தில் பக்தர்கள் மாடவீதிகளில் நடக்கும்போது, தரை சுடாமல் இருக்க, ‘கூல் பெயிண்ட்’ அடிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களை கவரும் வகையில் மாடவீதிகளில் பல்வேறு இடங்களில், ‘ரங்கோலி கோலம்’ வரையப்பட்டுள்ளது. வாகன வீதிஉலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள் வரிசையாக கொண்டு செல்லப்படும். திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரி‌ஷத் திட்டம் சார்பில் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடக்கின்றன.

    ஐதராபாத் டிரம்ஸ், கேரள செண்டை மேளம் ஆகியவை இசைக்கப்படும். பல்வேறு பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடி செல்வார்கள். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்குச் சேவை செய்வார்கள். ரத சப்தமி விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு, பக்தர்களின் வருகைக்காக தயார் நிலையில் உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சூரிய பிரபை வாகனம் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணிவரை, சிறிய சே‌ஷ வாகனம் காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை, கருட வாகனம் பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை, அனுமந்த வாகனம் மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை நடக்கின்றன.

    அதைத்தொடர்ந்து சக்கர ஸ்நானம் மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை, கல்ப விருட்ச வாகனம் மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை, சர்வ பூபால வாகனம் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை, சந்திரபிரபை வாகனம் இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை நடக்கின்றன.
    காரைக்கால் நித்திய கல்யாணப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    காரைக்காலில் உள்ள பிரசித்திபெற்ற நித்திய கல்யாணப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை நித்திய கல்யாணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கொடிகம்பம் அருகில் எழுந்தருளினார். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவில் கைலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ், முன்னாள் தனி அதிகாரி ஆசைதம்பி, முன்னாள் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் நேற்று மாலை 6.30 மணிக்கு சூரிய பிரபை வீதி உலா நடைபெற்றது. பிரம்மோற்சவ விழா நாட்களில் சந்திரபிரபா, சேஷ, கருட, அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாளின் வீதிஉலா நடக்கிறது.

    விழாவில் வருகிற 15-ந் தேதி திருக்கல்யாணம், 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 19-ந் தேதி பெருமாள் பல்லக்கில் ஊர்வலமாக சென்று திரு-பட்டினத்தில் நடைபெறும் மாசிமகத்தில் கலந்து கொள்கிறார். 21-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.
    அகத்தியர் மாற்றிய கோவில் தான் குற்றாலத்தின் பெரிய அருவி அருகிலுள்ள திருகுற்றால நாதர் கோவில். தென் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற 14 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று.
    கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்தபோது அநேகம் பேர் அங்கு கூடியிருந்தபடியால், பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம். இதனை சரிசெய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் கேட்டுக்கொள்ள, அகத்தியரும் தென் பகுதிக்கு நடந்துவந்து உலகம் சமநிலை அடையச் செய்தார் என்பது புராணம்.

    அப்படி அகத்தியர் தென் பகுதி நடந்து வந்தபோது, குற்றாலம் பகுதியில் ஒரு கோவில் முதலில் விஷ்ணு கோவிலாக இருந்ததைப் பார்த்தாராம் அகத்தியர். பின்பு அதனை சிவன் கோவிலாக மாற்றினார். அப்படி அகத்தியர் மாற்றிய கோவில் தான் குற்றாலத்தின் பெரிய அருவி அருகிலுள்ள திருகுற்றால நாதர் கோவில்.

    தென் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற 14 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள சித்திர சபையில் தான் சிவன் நடனமாடினார் என்று கூறப்படுகிறது. மற்ற கோவில்கள் எல்லாம் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ தான் இருக்கும். இக்கோவிலின் வடிவம் மட்டும் சங்கு வடிவில் இருப்பது தான் இதன் சிறப்பு.
    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாங்குநேரியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வானமாமலை பெருமாள் கோவில் உள்ளது.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள வானமாமலை பெருமாள் சுயம்பாக தோன்றியவர் ஆவார். பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். இதன் படி இந்தாண்டு தெப்பத் திருவிழா நேற்று இரவில் நடைபெற்றது.

    இதையொட்டி வான மாமலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து இரவில் பெருமாள் தெப்ப உற்சவத்திற்கு புறப்பட்டார். ரதவீதிகள் வழியாக தெப்ப குளத்திற்கு வந்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வானமாமலை பெருமாள் வரமங்கை நாச்சியாருடன் எழுந்தருளி சுற்றி வந்தார். விழாவை மதுரகவி வானமாமலை மடத்தின் ஜீயர் தொடங்கி வைத்தார்.

    விழாவை முன்னிட்டு தெப்பம் பல வண்ண மின் விளக்குகளாலும், மலர் களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் நாங்குநேரி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழா கடந்த 31-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனத்தில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ம் நாளான இன்று வீரராகவர் கோயிலில் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட தேரோட்டம் நடைபெற்றது.

    திருத்தேரில் காலை 7மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 8-ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. விழாவின் கடைசி நாளான 9ம் தேதி இரவு 8மணிக்கு வெட்டிவேர் சப்பரம் வீதி உலா நடைபெற உள்ளது.

    துணை சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ×