search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுவாமிநாத சுவாமிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும்.
    • கொரோனா காலத்திற்கு பிறகு தெப்பத் திருவிழா நடை பெறுவதை முன்னிட்டு முருக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    சுவாமிமலை:

    தமிழகத்தில் ஆறுபடை வீடுகளின் நான்காம் படை வீடாக திகழக்கூடிய சுவாமிமலை சுவாமிநாத சுவாமிகோவிலில் ஆடி மாதம் கிருத்திகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுவாமிநாத சுவாமிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக இரவு பகல் குழாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொ ரோனா காலத்திற்கு பிறகு தெப்பத் திருவிழா நடை பெறுவதை முன்னிட்டு முருக பக்தர்கள் மகிழ்ச்சி யுடன் திருவிழாவை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    • ராஜீவ்காந்தியை கொலை செய்த குற்றம் மட்டுமல்லாமல், பிற சட்டப்பிரிவுகளின் கீழும் குற்றம் உள்ளதால் அவருக்கு தூக்குத் தண்டனை முதலில் விதிக்கப்பட்டது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் தெரிகிறது.
    • அதனால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை ஜனாதிபதிக்கு தமிழ்நாடு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார்.

    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி அதை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்தார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நளினி, கவர்னர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்த 17-ந்தேதி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

    அந்த தீர்ப்பில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்காத கருத்துக்கள் மட்டும் வாதங்களில் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த பகுதியை நீக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் உள்துறை இணை செயலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ்காந்தியை கொலை செய்த குற்றம் மட்டுமல்லாமல், பிற சட்டப்பிரிவுகளின் கீழும் குற்றம் உள்ளதால் அவருக்கு தூக்குத் தண்டனை முதலில் விதிக்கப்பட்டது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் தெரிகிறது. அதனால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை ஜனாதிபதிக்கு தமிழ்நாடு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். கவர்னரின் இந்த நடவடிக்கை சரியானது என்று அட்வகேட் தன் வாதத்தில் கூறியதாக தீர்ப்பில் உள்ளது. ஆனால் அட்வகேட் ஜெனரல் அப்படி எதுவும் கூறவில்லை.

    மேலும், அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து, கவர்னரோ அல்லது ஜனாதிபதியோ கையெழுத்திடவில்லை என்றால், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று அட்வகேட் ஜெனரல் கூறியதாக தீர்ப்பில் உள்ளது. இந்த கருத்தையும் அட்வகேட் ஜெனரல் கூறவில்லை.

    எனவே, நளினி மனு மீதான தீர்ப்பை மாற்றி அமைக்க வேண்டும். அட்வகேட் ஜெனரல் கூறாத இந்த வாதத்தை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • இந்த ஆண்டுக்கான விழா ஜூலை 21-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
    • சிறந்த முறையில் இந்த விழாவை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கோவிலில் முன் ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோவிலில் நடைபெறும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா 21.7.2022 முதல் 25.7.2022 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

    இந்த 5 நாட்களில் பெரிய அளவிலான கூட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் முன் ஏற்பாடாக முதல் கட்ட நடவடிக்கைகள் என்ற வகையில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், திருத்தணி கோவில் நிர்வாகத்தைச் சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தோம்.

    கடந்த வாரம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எந்த விதமான பிரச்சனையும் இன்றி சுவாமியை தரிசனம் செய்வதற்கும், ஆடி கிருத்திகை திருவிழாவை சரியான முறையில் கொண்டாடுவதற்கும் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும், அரசு துறை சார்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

    இன்றைக்கு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். பக்தர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறைகள், குளியலறைகள், கண்காணிப்பு கேமிராக்கள், மின் இணைப்பு, சுகாதார வசதிகள், அதுமட்டுமின்றி, தீயணைப்பு வசதிகள், தகவல் நிலையம் போன்ற பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    காவல்துறை சார்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளும், வாகனங்களை நிறுத்துவதற்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஏற்கனவே ஒரு முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும், எந்த வகையிலான கூடுதல் பாதுகாப்பு வசதிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிறந்த முறையில் இந்த விழாவை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திருத்தணி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அஸ்வத் பேகம், துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, வேலூர் மண்டல நகைகள் சரி பார்ப்பு துணை ஆணையர் ரமணி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி உடன் இருந்தனர்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
    • உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. திருச்செ–ங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் தலைமையில், கோவில் தக்கார் பிரதிநிதி குகன், கோவில் செயல் அலுவலர் அருள்குமார், பெருந்துறை சரக ஆய்வாளர் ரவிக்குமார் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    இதில், நிரந்தர உண்டியலில் 20 லட்சத்து 72 ஆயிரத்து 546 ரூபாய் பணமும், 34 கிராம் தங்கம் மற்றும் ஆயிரத்து 953 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    அதேபோல் திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 627 ரூபாய் பணம் காணிக்கையாக இருந்தது. இரு உண்டியல் களிலும் சேர்த்து மொத்தம் ரூ.22 லட்சத்து 33 ஆயிரத்து 173 ரூபாயினை பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.

    • நளினி விடுதலை தொடர்பான மனுவை இன்று சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
    • நளினி விடுதலை மனுவை தள்ளுபடி செய்த நிலையில் முருகனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி தற்போது பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

    15 நாட்களுக்கு ஒரு முறை இருவரும் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வேலூர் ஜெயிலில் முருகனை நளினி சந்தித்துப் பேசினார். இதற்காக காலை 10 மணிக்கு பிரம்மபுரத்திலிருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் நளினியை வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு 10.50 மணி முதல் 11.20 மணி வரை நளினி முருகன் இருவரும் சந்தித்து பேசினர். நளினி விடுதலை தொடர்பான மனுவை இன்று சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    சந்திப்பு முடிந்ததும் மீண்டும் நளினி பிரம்மபுரத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    நளினி விடுதலை மனுவை தள்ளுபடி செய்த நிலையில் முருகனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வைகாசி விசாக விழா சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை வைகாசி விசாக விழா நடந்தது. முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    66 வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து கொண்டு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.

    தொடர்ந்து நேற்று மதியம் கணபதி ேஹாமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. இதை யடுத்து முருகன் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி, தீர்த்த குடங்கள் எடுத்து வந்து முருகப்பெருமான வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர். 

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு விஜயகிரி பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விஜயகிரி வடபழனி ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர்.

    நன்செய் இடையாறு திருவல்லீஸ்வரர் கோவில் உள்ள முருகன், காவிரி ஆற்றங்கரை அருகேயுள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோயில், ராஜா சாமி கோவில், பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன், மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் உள்ள முருகப்பெருமானுக்கும் வைகாசி விசாகத்தில் முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சென்னிமலை முருகன் கோவிலில் இன்று மாலை வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கர் மலை மீது குவிந்தனர்.
    • அதிகாலை காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி தீர்த்த குடங்களுடன் வருகை தந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று மாலை வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கர் மலை மீது குவிந்தனர். 'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை முருகன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை விசாக திருவிழா நடக்கிறது.

    முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 66-வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்தது இன்று காலை 11 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.

    மலை மீது முருகன் கோவிலில் மதியம் 3 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து மாலை 6.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.

    அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழு அன்பர்கள் செய்து வருகின்றனர்.

    வைகாசி விசாகத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை கோவிலில் குவிய தொடங்கினர். அதிகாலை காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி தீர்த்த குடங்களுடன் வருகை தந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீப ஆராதனைகள் நடைபெற்றன.

    வைகாசி விசாகம் விழாவையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருத்தணிகோவிலில் வைகாசி விழா வழிபாட்டு க்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோவில் நிரம்பி வழிந்தது. அரோகரா கோஷமிட்டபடி அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணிநேரத்துக்கும மேல் ஆனது.

    திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    வைகாசி விசாகத்தை யொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த கோவிலை கடந்த 17-ஆம் நூற்றாண்டு ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் கட்டிய தாக வரலாறு உள்ளது. அவர், திருப்போரூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்ணகப்பட்டு என்ற இடத்தில் மடம் ஒன்றை நிறுவி அங்கிருந்தபடியே மடாதிபதியாக விளங்கி முருகப்பெருமானை நித்திய வழிபாடு செய்து வந்தார்.

    பின்னர் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வைகாசி விசாக நாளில் இறைவனோடு ஜோதிமயமாக இரண்டறக் கலந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாகத்தில் கண்ணகப்பட்டில் உள்ள சிதம்பர சுவாமிகள் மடத்திலும் குருபூஜை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி மடத்தில் உள்ள சிதம்பர சுவாமிகள் சன்னிதியில் மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீப ஆராதனை கள் நடைபெற்றது.

    இதே போல் கந்தசாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சிதம்பர சுவாமிகள் சந்நிதியிலும் அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க் கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்களில் தொடர்ந்து 6 வாரங்கள் வழிபாடு செய்தால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும்.

    மேலும் ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.இந்த நிலையில்இன்று வைகாசி விசாகம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதேபோல் வல்லக்கோட்டை முருகன் கோவிலிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முருகப்பெருமானுக்கு காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரா கிராமகள், வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து திரளானா பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிர மணியசுவாமி கோயில் மற்றும் பெரும்பேடு முத்துக் குமாரசாமி கோவிலில் பிரதோஷம் மற்றும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

    • பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும்.
    • எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும்.

    விசாக நட்சத்திரமன்று முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லனயாவும் நடைபெறும். பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி, வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

    பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம் வெற்றி யாகம்.

    சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்களெல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறகும். எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும். மாம்பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வ நிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

    அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்த னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அததனையும் தீர்ந்தும் போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார் போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும். சங்காலே அபிஷேகம் செய்து பார்த்தால் சகலவித பாக்யமும் நமக்கு கிடைக்கும்.

    • சைவமக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.
    • ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமானதால் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

    அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்ட னர்.

    சிவபெருமான் அசுரர்களுடைய கொடு மையை களைந்து அவர்களைத் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

    புராணங்களின்படி, சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார்.

    முருகப்பெருமானின் ஆறு திருமுகங்களும் முற்றறிவு, அளவற்ற இன்பம், வரம்பில்லாத ஆற்றல், தன் வயமுடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு என்னும் ஆறு குணங்களாகின. இவை தவிர இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன.

    ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமானதால் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.

    ஜம்பூதமும் உயிருமாகிய ஆறினையும் திருமுகங்களாக உருவகித்துக் கூறி, எங்கும் நிறைந்த கடவுள் தன்மையை மக்களுக்கு நினைவூட்டக் கருதிய பண்டைப் பெரியோர் இறைவனை ஆறுமுகப்பெருமான் என்றனர்.

    எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவமக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

    இத்தினத்தில் கோவில்களில் வசந்தோற்சவமும், பிரம்மோற்சவமும் நடைபெறும். இத்தினம் பல சமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.

    ×