search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95381"

    • வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

     

    இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் ஆகியோர் இந்த பரிசீலனையில் உள்ளனர்.

     

    தமிழில் இருந்து அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.

     

    மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இன்னொரு நாயகியாக சமந்தா பெயர் அடிபடுகிறது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்.
    • தற்போது இவர் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

    நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

    இதன்படி, வருகிற 13-ந் தேதி முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.


    விஜய்

    மேலும் தனது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை உடனே அவர் பதிவேற்றம் செய்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள், பா.ஜ.க. உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேபோல் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டின் முன்பு தேசியக் கொடி ஏற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. வாரிசு திரைப்படத்தில் 'விஜய் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.


    விஜய் - பிரகாஷ் ராஜ்

    இந்நிலையில், வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாரிசு படத்தில் உங்கள் காதாபாத்திரம் என்ன என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ், "செல்லத்தோட வேலை பார்த்து கிட்டத்தட்ட 15 வருடம் ஆகிவிட்டது. இது ஒரு நல்ல படம். கதையை சொல்லனுமா? வேண்டாமா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நானும் செல்லமும் திரும்ப சேர்ந்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மட்டும் தான் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
    • தமிழக அரசியல் களம் எத்தகைய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை நடிகர் விஜய் கவனித்து வருகிறாராம்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மட்டும் தான் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்று நினைக்காதீர்கள். நடிகர் விஜய்யும் ஓசையின்றி தயாராகி வருகிறார். இதற்காக அவர் தமிழ்நாடு முழுவதும் ரகசிய சர்வே ஒன்றும் நடத்தி உள்ளார். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் காய்களை நகர்த்துவார் என்கிறார்கள்.

    குறிப்பாக அ.தி.மு.க.வில் பதவி சண்டை ஏற்பட்டு எடப்பாடி-ஓ.பி.எஸ் என இரு அணிகளாக பிரிந்த பிறகு, தமிழக அரசியல் களம் எத்தகைய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதையே நடிகர் விஜய் உன்னிப்பாக கவனித்து வருகிறாராம். அதற்கு ஏற்பவும் அவரது முடிவுகள் இருக்கலாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


    விக்ரம்

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் விக்ரம் படத்தை பார்த்து விட்டு நடிகர் விஜய் என்ன கூறினார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ், "படம் வெளியான போது இணையத் தொடர்பு இல்லாத இடத்தில் இருந்தேன். மாலை வந்து பார்த்த போது மிகவும் அருமை என்று விஜய் சாரிடம் இருந்து செய்தி வந்திருந்தது.

    அதன் பின்னர் தொலைபேசியில் அவரை அழைத்து பேசினேன். விஜய் இருமுறை "விக்ரம்" படத்தை பார்த்துவிட்டார்" என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 67-யை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் 6 வில்லன்கள் என்றும் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் உள்ளிட்ட பலரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

     

    இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது. இதற்குமுன்பு திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்து இருந்தார்.

     

    13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரிஷா தற்போது மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்து வருகிறார்.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.

    வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் வாரிசு என்ற படத்திலும், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் வாத்தி என்ற படத்திலும் நடித்து வருகின்றனர். இந்த இரு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

    வாரிசு படப்பிடிப்பு விசாகபட்டினத்திலும், வாத்தி படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடந்து வருகிறது. இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளையும் நிறுத்தும்படி தெலுங்கு பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர். தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி, தயாரிப்பாளர்கள் தெலுங்கு படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்துள்ளனர். கொரோனா பரவலுக்கு பிறகு தியேட்டர்களுக்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்து சினிமா தொழில் நசிந்துள்ளது. ஆனாலும் தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் தெலுங்கு படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

     

    வாரிசு - வாத்தி

    வாரிசு - வாத்தி

    இந்த நிலையில் விஜய், தனுஷ் படங்களின் படப்பிடிப்புகளை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்துவதாக சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். விஜய்யை வைத்து தமிழில் வாரிசு, தெலுங்கில் வாரிசுடு என்ற பெயர்களில் புதிய படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜுவும், தனுசை வைத்து தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என்ற பெயர்களில் தயாராகும் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் நாக வம்சியும் தயாரிக்கிறார்கள்.

    இது பற்றி தயாரிப்பாளர் தில்ராஜு கூறும்போது, "ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க நான் தயாரிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி விட்டேன். ஆனால் விஜய் நடிக்கும் வாரிசு தமிழ் படம் என்பதால் படப்பிடிப்பை நிறுத்தவில்லை" என்றார்.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. வாரிசு திரைப்படத்தில் 'விஜய் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.


    விஜய்

    இந்நிலையில் வாரிசு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று (31.7.2022) சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்றதாக கூறப்படுகிறது.  மேலும், அவர் சென்னை விமான நிலையம் வந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    வாரிசு - விஜய்

    வாரிசு - விஜய்

    வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. வாரிசு திரைப்படத்தில் 'விஜய் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் பரவிவருகிறது.


    இந்நிலையில் வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது போன்ற வீடியோ ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். விஜய் மாஸாக நடந்து வருவது போன்று இடம்பெற்றிருக்கும் அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.


    வாரிசு

    மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரிசு திரைப்படத்தில் 'விஜய் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக நடிகர் விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது.

    விஜய் - சமந்தா

    விஜய் - சமந்தா

    இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து லோகேஷ் இயக்கவிருக்கும் விஜய் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்த்து எழுந்திருக்கிறது.

    விஜய் - சமந்தா

    விஜய் - சமந்தா

    இந்த படத்தில் விஜய்க்கு எதிராக ஒரு வில்லி கதாப்பாத்திரம் இடம் பெற்றிருப்பதாகவும், இதற்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் முன்னணி நடிகை ஒருவர் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில் சமந்தா தான் விஜய்க்கு வில்லியாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    சமந்தா இதற்குமுன்பு விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் படங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    • அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு முடித்து வைத்துள்ளது.

    நடிகர் விஜய் கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது. இதற்கிடையே, விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆகவே அபராதம் விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார்.

    விஜய் 

    விஜய் 

    இந்த மனு மார்ச் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என வணிகவரித்துறை கூறியது. இது குறித்து மேலும் சில விபரங்களைக் கேட்ட நீதிபதி, நடிகர் விஜய் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

    விஜய் 

    விஜய் 

    இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சொகுசு கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது சென்னை ஐகோர்ட்டு இன்று (15.07.2022) தீர்ப்பளித்துள்ளது. நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது என்றும் 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என்றும் வணிக வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

    ஹாரீஷ் ஜெயராஜ் 

    ஹாரீஷ் ஜெயராஜ் 

    அதேப்போன்று இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என கூறிய உயர்நீதிமன்றம், நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளையும் முடித்து வைத்தது. 

    ×