search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95440"

    50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தயாராக ஐபிஎல் மிகவும் உதவிகரமாக இருந்தது என ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். #IPL201 #ஸ்மித்
    ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது.

    இந்த தடையால் ஸ்மித்தால் சரியாக விளையாட முடியவில்லை. வெளிநாடுகளில் நடைபெற்ற பல்வேறு டி20 லீக்கில் விளையாடினார். ஆனால் காயத்தால் தொடர்ச்சியாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடும்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறந்த உடற்தகுதியுடன் விளையாடியதால் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார்.



    இந்நிலையில் ‘‘ஐபிஎல் தொடர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தயாராக உதவிகரமாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘என்னுடைய தனிப்பட்ட முறையில் ஐபிஎல், சிறந்த வீரர்களுக்கு எதிராக மைதானத்தில் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு கொடுத்தது. டி20 கிரிக்கெட் எப்போதுமே 50 ஓவருக்கு தயாராக உதவும் என்று நினைப்பவன் நான். டி20-யின் நீட்டிக்கப்பட்ட ஆட்டம்தான் 50 ஓவர் கிரிக்கெட்’’ என்றார்.
    ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்றும், எனது அழகான மனைவியை கவர்ந்திழுக்க வேண்டும் என்றும் அதிரடியாக ஆட விரும்புவேன் என ரஸ்செல் தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்ற ஆந்த்ரே ரஸ்செல் நள்ளிரவில் தனது 31-வது பிறந்த நாளை மனைவி ஜாசிம் லோராவுடன் கொண்டாடினார். அவரிடம் ஜாசிம் லோரா ஜாலியாக பேட்டி கண்டார்.

    அப்போது ரஸ்செல் கூறுகையில், ‘இன்றைய இரவு எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த வெற்றி எனக்கு பிறந்த நாள் பரிசு. ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்றும், எனது அழகான மனைவியை கவர்ந்திழுக்க வேண்டும் என்றும் அதிரடியாக ஆட விரும்புவேன். அதனால் எனக்கு எப்பொழுதும் நெருக்கடி இருப்பதாக உணர்வேன்’ என்றார். ரஸ்செலின் மனைவி ஜாசிம் கூறுகையில், ரஸ்செலின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து இந்த மாதிரியான பேட்டிங்கை எதிர்பார்த்தேன். ஏனெனில் இந்த சீசனில் உள்ளூரில் (கொல்கத்தா) நடந்த கடைசி ஆட்டம் இதுவாகும். அவர் பந்தை சிக்சருக்கு விரட்டியபோதெல்லாம் என்னை அறியாமலேயே உணர்ச்சிவசப்பட்டு உற்சாகத்தில் திளைத்தேன்’ என்றார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது. #IPL2019 #SRHvKXIP

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டன. எஞ்சிய 2 இடங்களுக்கு 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

    ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், விருத்திமான் சஹா ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த ஆட்டத்துடன் நாடு திரும்பும் டேவிட் வார்னர் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக ரன் கணக்கை தொடங்கினார். விருத்திமான் சஹாவும் பந்தை நாலாபுறமும் விரட்டியடித்தார்.

    பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்து ஐதராபாத் அணி நல்ல தொடக்கம் கண்டது. இந்த சீசனில் பவர்பிளேயில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அணியின் ஸ்கோர் 6.2 ஓவர்களில் 78 ரன்னாக இருந்த போது விருத்திமான் சஹா (28 ரன்கள், 13 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) முருகன் அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சிம்ரன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த மனிஷ் பாண்டேவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9.4 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை தாண்டியது. வேகமாக மட்டையை சுழற்றிய டேவிட் வார்னர் 38 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அணியின் ஸ்கோர் 15.3 ஓவர்களில் 160 ரன்னாக உயர்ந்த போது மனிஷ் பாண்டே (36 ரன், 25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆர்.அஸ்வின் பந்து வீச்சில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் டேவிட் வார்னர் விக்கெட்டையும் ஆர்.அஸ்வின் கைப்பற்றினார்.




    டேவிட் வார்னர் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்து முஜீப் ரகுமானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டேவிட் வார்னர் இந்த சீசனில் 12 ஆட்டத்தில் ஆடி ஒரு சதம், 8 அரை சதம் உள்பட 692 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (14 ரன்), முகமது நபி (20 ரன்), ரஷித் கான் (1 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. விஜய் சங்கர் 7 ரன்னுடனும், அபிஷேக் ஷர்மா 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி, ஆர்.அஸ்வின் தலா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஐதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது, ரஷித் கான் தலா 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


    12-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் அணி சந்தித்த 7-வது தோல்வி இது. இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகி இருக்கிறது.  #IPL2019 #SRHvKXIP
    உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா முகாமுக்குச் செல்வதால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறினார் பெரேண்டர்ப். #IPL2019 #MI
    ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெரேண்டர்ப்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. மலிங்கா இலங்கை சென்றிருந்தபோது இவர்தான் மும்பை அணியில் இடம்பிடித்து விளையாடினார்.

    இவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகக்கோப்பைக்கான முகாமை வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் சொந்த நாடு திரும்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.



    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்த ஸ்டாய்னிஸ் மார்கஸ் ஆஸ்திரேலியா புறப்பட்டுவிட்டார். இந்நிலையில் தற்போது பெரேண்டர்ப் ஆஸ்திரேலியா சென்று விட்டார். இந்த தகவலை மும்பை இந்தியன்ஸ் தெரிவித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    ஐபிஎல் தொடர் தொடங்கும்போது பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று விரும்பினோம். தற்போது அது நடந்து விட்டதால் திருப்தி என டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் தொடரில் கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லி அணி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது கிடையாது. அந்த அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியே இருந்தது.

    இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்று 2-வது அணியாக பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 6 வருடம் கழித்து அந்த அணி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.



    நேற்று ஆர்சிபி-க்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப்ஸ் சுற்றை உறுதி செய்தது. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது குறித்து அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் நாங்கள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று விரும்பினோம். தற்போது அது நடந்துள்ளதால் மிகவும் திருப்தியாக உள்ளோம்.

    பந்து வீச்சாளர்கள் அவர்களின் வேலைகளை சிறப்பாக செய்தது முக்கியமானது. அவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் பேட்ஸ்மேன்களும் எந்தவிட இடர்பாடு இல்லாமல் அவர்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர்’’ என்றார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக அம்பயர் எல்பிடபிள்யூ கொடுத்ததால், கோபத்தில் ஸ்டம்பை பேட்டால் தாக்கிய ரோகித் சர்மாவுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #RohitSharma
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 232 ரன்கள் குவித்தது.

    பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது, டி காக் டக்அவுட் ஆனார். மறுமுனையில் 9 பந்தில் 12 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா, கேரி கர்னி வீசிய 4-வது ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட போது, பந்து அவரது காலை தாக்கியது.

    இதனால் கொல்கத்தா வீரர்கள் எல்பிடபிள்யூ அவுட்டுக்கு அப்பீல் கேட்டனர். நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். இதனால் ரோகித் சர்மா ‘ரிவியூ’ கேட்டார். ரிவியூ-வில பந்து லெக் ஸ்டம்பை லேசாக தாக்கிவிட்டு சென்றது. ‘அம்பயர்ஸ் ஹால்’ முடிவு மூலம் 3-வது நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

    மெயின் அம்பயர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் ரோகித் சர்மாவுக்கு சாதகமாக இருந்திருக்கும். இதனால் கோபம் அடைந்த ரோகித் சர்மா நடுவரை நோக்கி ஏதோ சொல்லிக்கொண்டு வந்தார். நடுவர் அருகில் வந்தபோது கோபத்துடன் ஸ்டம்பை பேட்டால் தாக்கினார்.

    இதுகுறித்து நடுவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது ரோகித் சர்மா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் ஐபிஎல் வீரர்களின் நன்னடத்தையை மீறியதாக போட்டியின் சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக தனது பிறந்த நாள் ஆட்டத்தில் ரசிகர்களுக்கு சிக்சர்கள் மூலம் விருந்து படைத்தார் அந்த்ரே ரஸல் #IPL2019 #KKR #AndreRussell
    ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் நேற்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ஷுப்மான் கில் (76), கிறிஸ் லின் (54) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். வழக்கமாக 15-வது ஓவருக்குப்பிறகு களம் இறங்கும் அந்த்ரே ரஸல், நேற்று 3-வது வீரராக 10-வது ஓவரிலேயே களம் இறக்கப்பட்டார்.



    நேற்று அவருக்கு பிறந்த நாள். பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு சிக்சர்கள் மூலம் விருந்து படைக்க விரும்பினார். அவரது விருப்பம் வீணாகவில்லை. மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தார். 40 பந்துகளை சந்தித்த ரஸல் 8 சிக்ஸ், 6 பவுண்டரி விளாசி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அத்துடன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இவரது அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 232 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 198 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. கொல்த்தா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரஸல் பிறந்த நாள் போட்டியில் ஜொலித்ததுடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
    கொல்கத்தாவுக்கு எதிராக 17 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம், இந்த சீசனில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். #IPL2019 #KKRvMI
    கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 232 ரன்கள் குவித்தது. பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது.



    அந்த அணி 8.2 ஓவரில் 58 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார். சுனில் நரைன் வீசிய 14-வது ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 17 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது ஸ்கோரில் ஒரு பவுண்டரி, 7 சிக்சர்கள் அடங்கும். 8 பந்தில் 46 ரன்கள் ஓடாமலேயே வந்தது.



    17 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்த சீசனில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரிஷப் பந்த் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 18 பந்தில் அரைசதம் அடித்ததை தற்போது ஹர்திக் பாண்டியா முந்தியுள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 100-முறையாக கேப்டனாக விளையாடி ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா சாதனைப் படைத்துள்ளார். #IPL2019 #MumbaiIndians #RohitSharma
    ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் பிளே-ஆப்ஸ் சுற்றை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்று மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடஸ் அணியை ஈடன் கார்டனில் எதிர்கொண்டு வருகிறது.



    இந்த போட்டி ரோகித் சர்மாவு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றும் 100-வது போட்டியாகும். இதன்மூலம் ஒரு அணியின் கேப்டனாக 100 போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்குமுன் காம்பீர் (கொல்கத்தா), டோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்), விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) ஆகியோர் 100 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக பணியாற்றியுள்ளனர்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. #IPL2019 #KKRvMI

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு அரங்கேறிய 47-லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் மல்லுகட்டின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மான் கில்லும் களம் புகுந்தனர். பரிந்தர் ஸ்ரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்ட சுப்மான் கில், அதே உத்வேகத்துடன் விடாமல் மட்டையை சுழட்டினார். கிறிஸ் லின்னும் சரவெடியாய் வெடிக்க, ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் ஜோடியாக 96 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கிறிஸ் லின் 54 ரன்களில் (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர் ) கேட்ச் ஆனார். இதன் பின்னர், முந்தைய நாள் கேப்டனின் முடிவுகளை சரமாரியாக விமர்சித்த ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், திடீரென 2-வது விக்கெட்டுக்கு இறக்கப்பட்டார். ஒரு சில ஓவர்கள் நிதானத்துக்கு பிறகு ரஸ்செல் தனது கைவரிசையை காட்டினார். மறுமுனையில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் 76 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர் ) வெளியேறினார்.




    அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் வந்தார். மறுமுனையில் ரஸ்செல் ரன்வேட்டை நடத்தினார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் மும்பை கேப்டன் ரோகித் சர்மா விழிபிதுங்கிப் போனார். அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் பவுலர்கள் திண்டாடினர். ஆப்-சைடுக்கு வெளியே பந்து வீசினாலும் அதையும் நொறுக்கித் தள்ளினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய அவர், பும்ரா, மலிங்காவின் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. அவரது அசுரத்தனமான பேட்டிங்கால் கொல்கத்தா அணி மலைப்பான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.

    20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்சமான ஸ்கோர் இதுதான். அது மட்டுமின்றி மும்பைக்கு எதிராக கொல்கத்தாவின் அதிகபட்சமாகவும் இது பதிவானது. இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 80 ரன்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.





    அடுத்து 233 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. குயின்டான் டி காக் (0), கேப்டன் ரோகித் சர்மா (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் நிலைத்து நின்று வாணவேடிக்கை காட்டினார். அவர் 17 பந்துகளில் 7 சிக்சருடன் அரைசதத்தை கடந்து மிரள வைத்தார். இந்த சீசனில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இது தான்.

    ஹர்திக் பாண்ட்யா மிரட்டினாலும் ரன்தேவை அதிகமாக இருந்ததால் கொல்கத்தா அணியின் கையே ஓங்கி இருந்தது. பாண்ட்யா 91 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.




    தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்று இருந்த கொல்கத்தா அணி ஒரு வழியாக தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. மேலும் கொல்கத்தா அணி 4 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது தொடர்ந்து 8 தோல்விக்கு பிறகு) மும்பையை சாய்த்து இருக்கிறது.

    கொல்கத்தா தரப்பில் ரஸ்செல், நரின், குர்னே தலா 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பியூஸ் சாவ்லாவுக்கு ஐ.பி.எல்.-ல் இது 150-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 3-வது பவுலர் ஆவார்.  #IPL2019 #KKRvsMI

    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ் #IPL2019 #DCvRCB
    ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் தவான் (50), ஷ்ரேயாஸ் அய்யர் (52), ரூதர்போர்டு (13 பந்தில் 28 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களம் இறங்கியது. விராட் கோலி நிதானமாக விளையாட பார்தீவ் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    அணியின் ஸ்கோர் 5.5 ஓவரில் 63 ரன்னாக இருக்கும்போது பார்தீவ் பட்டேல் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 17 ரனனில் ஆட்டமிழந்தார்.



    ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்ததும் ஆர்சிபி-யின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. அதன்பின் வந்த டுபே 16 பந்தில் 24 ரன்கள் அடித்தார். இவரையும், கிளாசனையும் அமித் மிஸ்ரா ஒரே ஓவரில் வீழ்த்தினார். அத்துடன் ஆர்சிபி தோல்வி உறுதியானது.

    கடைசி 7 ஓவரில் 77 ரன்கள் வேண்டும் நிலையில் குர்கீரத் சிங் மான், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியின் வெற்றிக்காக போரடினார்கள். இசாந்த சர்மா வீசிய 17-வது ஓவரில் 16 ரன்கள் அடித்தனர். இதனால் சற்று நம்பிக்கை இருந்தது. ஆனால் ரபாடா 18-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி இரண்டு ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது.



    இசாந்த் சர்மா வீசிய 19-வது ஓவரில் குர்கீரத் மான் சிங் 19 பந்தில் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் இசாந்த் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    ரபாடா வீசிய கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வெற்றிகளுடன் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது.
    ஐபிஎல் சீசன் 2019-ல் 9-வது முறையாக டாஸ் தோற்றதை, சைகை மூலம் சக வீரர்களுக்கு ஆர்சிபி கேப்டன் விராட் கோலி காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
    டாஸ் வெல்வதில் அதிர்ஷ்டம் இல்லாத கேப்டன் விராட் கோலி என்றால் அது மிகையாகாது. சர்வதேச போட்டி என்றாலும், ஐபிஎல் என்றாலும் அவருக்கும் டாஸுக்கும் எப்போதுமே பொருந்தாத கூட்டணியாகவே திகழ்கிறது.

    இன்றைய போட்டிக்கு முன் ஆர்சிபி 11 ஆட்டத்தில் 8 முறை டாஸ் தோற்றுள்ளது. பெங்களூர், வான்கடே, சென்னை போன்ற மைதானத்தில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. அதில் டாஸ் தோற்றது அணியில் தோல்விக்கு முக்கிய பங்கு வகித்தது. தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் நான்கு போட்டிகளில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.

    டெல்லிக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி மோதும் பெரோஸ் ஷா கோட்லா மைதானம் 2-வது பேட்டிங் செய்யும்போது ‘ஸ்லோ’ ஆகிவிடும். இதனால் டாஸ் வெல்லும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும் என கணிக்கப்பட்டது.

    இன்றைய போட்டியில் டாஸ் சுண்டப்பட்டபோது டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்றார். உடனே, விராட் கோலி ஆர்சிபி வீரர்களை நோக்கி 9-வது முறையாக டாஸ் தோற்றுள்ளோம் என்பதை சைகை மூலம் காண்பித்தார்.

    இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதை நீங்களும் காணுங்கள்....
    ×