search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95440"

    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வரும் ஆட்டத்தில் ஆர்சிபி-க்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் #IPL2019 #DCvRCB
    ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி டெல்லி அணியின் தவான், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 3.3 ஓவரில் 35 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 10 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    அடுத்து தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 37 பந்தில் 50 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 37 பந்தில் 52 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரிஷப் பந்த் 7 ரன்னிலும், கொலின் இங்க்ராம் 11 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர்.



    6-வது வீரராக களம் இறங்கிய ருதர்போர்டு அதிரடியாக விளையாடினார். கடைசி இரண்டு ஓவர்களில் டெல்லி 36 ரன்கள் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது. ருதர்போர்டு 13 பந்தில் 3 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி அணியில் சாஹல் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஆர்சிபி-க்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்ற பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #DCvRCB
    ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. பிரித்வி ஷா, 2. தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. ரூதர்போர்டு, 6. கொலின் இங்க்ராம், 7. அக்சார் பட்டேல், 8. ரபாடா, 9. சந்தீப் லாமிச்சேனே, 10. அமித் மிஸ்ரா, 11. இசாந்த் சர்மா

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-

    1. பார்தீவ் பட்டேல், 2. விராட் கோலி, 3. ஏபி டி வில்லியர்ஸ், 4. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 5. கிளாசன், 6. ஷிவன் டுபே, 7. குர்கீரத் சிங் மான், 8. வாஷிங்டன் சுந்தர், 9. சைனி, 10. உமேஷ் யாதவ், 11. சாஹல்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு சீனியர்களின் ஆதரவு தேவை என முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். #IPL2019 #KKR
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் உள்ளார். கடந்த சீசனில் இருந்து தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.

    இந்த சீசனில் முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அதன்பின் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கேப்டனுக்கு சீனியர் வீரர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற முன்னாள் கேப்டனான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘வீரர்கள் அறையில் யாராவது ஒரு வீரர் கேப்டனிடம், அணியின் வெற்றிக்காக சில விஷயங்களை சொல்ல விரும்புவார்கள். அது நடக்கும் என்று நம்புகிறேன்.

    இந்த ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இதுவரை சிஎஸ்கே அணியைத் தவிர மற்ற அணிகள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறவில்லை. 7 அணிகள் இதுவரை போட்டியில் இருக்கின்றன’’ என்றார்.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுப் போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019
    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் மாலை 4 மணி, இரவு 8 மணி என்று இரண்டு நேரங்களில் தொடங்கி நடக்கிறது. லீக் சுற்று முடிந்ததும் 3 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி நடக்கிறது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று சென்னையில் மே 7-ம் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 8-ம் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 10-ம் தேதியும், இறுதிப்போட்டி ஐதராபாத்தில் மே 12-ம் தேதியும் நடக்கிறது. 

    தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர ஒரு ஆட்டம் அதிகபட்சமாக 3 மணி 20 நிமிடங்களில் நிறைவடைய வேண்டும் என்பது ஐ.பி.எல். விதிமுறையாகும். ஆனால் இந்த சீசனில் பல ஆட்டங்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து இருக்கிறது.

    முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் அரை மணி நேரம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதே போல் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் பெண்கள் ஐ.பி.எல். ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிகிறது. #IPL2019
    ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. #ipl2019 #rrvssrh

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் 45-வது ‘லீக்’ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    அந்த அணி ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது.

    அந்த அணியின் பேட்டிங்கில் ரகானே (352 ரன்), கேப்டன் சுமித் (297 ரன்), சஞ்சு சாம்சன் (261 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் ஷிரேயாஸ் கோபாலும் (13 விக்கெட்), நல்ல நிலையில் உள்ளனர். பட்லர், பென்ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் இங்கிலாந்து திரும்பி இருப்பது அந்த அணிக்கு பாதிப்பே.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

    ராஜஸ்தானை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது. இதனால் அந்த அணியை மீண்டும் தோற்கடித்து 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் ஐதராபாத் அணி உள்ளது.

    அந்த அணியின் பேட்டிங்கில் வார்னர் (574 ரன்), பேர்ஸ்டோவ் (445) ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். பேர்ஸ்டோவ் நாடு திரும்பியது பேட்டிங்கில் பலவீனத்தை காட்டும்.

    ஏற்கனவே அந்த அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக இருக்கிறது. பந்துவீச்சில் ரஷீத்கான், சந்தீப் சர்மா (தலா 10 விக்கெட்), தற்காலிக கேப்டன் புவனேஷ்வர்குமார் (8 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #ipl2019 #rrvssrh 

    டோனி ஆடாதது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்தது என்று வெற்றி குறித்து ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். #rohitsharma #dhoni #ipl2019

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையிடம் மீண்டும் சரண்டர் ஆனது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது.

    கேப்டன் ரோகித்சர்மா 48 பந்தில் 67 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), லீவிஸ் 32 ரன்னும் எடுத்தனர். சான்ட்னெர் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், இம்ரான்தாகீர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    156 ரன் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவர்களில் 109 ரன்னில் சுருண்டு 46 ரன்னில் தோற்றது.

    முரளி விஜய் அதிகபட்சமாக 35 ரன்னும், சான்ட்னெர் 22 ரன்னும் எடுத்தனர். மலிங்கா 4 விக்கெட்டும், பும்ரா, குணால் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, அங்குல் ராய் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையிடம் மீண்டும் வீழ்ந்தது. ஏற்கனவே வான்கடே மைதானத்தில் 37 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. ஓட்டு மொத்தத்தில் 4-வது தோல்வி ஏற்பட்டது. கேப்டன் டோனி ஆடாதது அணிக்கு பாதிப்பு என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகி உள்ளது.

    தோல்வி குறித்து சூப்பர் கிங்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் சுரேஷ்ரெய்னா கூறியதாவது:-


    நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. 156 ரன் எடுக்க கூடிய இலக்குதான். பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஒவ்வொரு 2 முதல் 3 ஓவர்களுக்கு இடையே விக்கெட்டுகளை பறி கொடுத்தோம். இதனால் தோல்விக்கு பேட்ஸ் மேன்களே பொறுப்பு.

    ஆனால் எங்களது பந்து வீச்சு நன்றாகவே இருந்தது. எங்கள் அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களும் அனுபவம் வாய்ந்தவர்களும் இருந்தும் சாதிக்க இயலவில்லை. அனைத்துமே தவறாக அமைந்தது. பேட்டிங் மீண்டும் பலம் பெறுவது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற 7-வது வெற்றியாகும். 3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அந்த அணி இந்த சீசனில் 3 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்சை 2 முறையும் வீழ்த்தியது. ‘பிளே ஆப்’ சுற்றில் இரு அணிகளும் மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

    வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    டாஸ் தோற்றும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் முதல் பேட்டிங் செய்வதா? அல்லது பந்து வீசுவதா? என்பதை அறிந்து இருந்தோம். நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.

    டோனி ஆடாதது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்தது. எந்த ஒரு அணிக்கும் எதிராகவும் அவர் இல்லாமல் இருந்தால் அந்த அணிக்கு சாதகமானதே. சேசிங்கில் அவரை கட்டுப்படுத்துவது சவாலானதே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை மே 1-ந்தேதி சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ் 12-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை நாளை எதிர் கொள்கிறது. #rohitsharma #dhoni #ipl2019

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #CSKvMI
    ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் சுரெஷ் ரெய்னா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்

    அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது டி காக் 15 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய எவின் லெவிஸ் 32 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.



    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 48 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 67 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா 23 ரன்னுடனும், பொல்லார்டு 13 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. முரளி விஜய், வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் ஓவரிலேயே சிஎஸ்கே ரசிர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த வாட்சன் 8 ரன்னில் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

    அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா பந்தில் ரெய்னா 2 ரன்களிலும், அம்பதி ராயுடு ரன்ஏதும் எடுக்காமலும் குருணால் பாண்டியா பந்திலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் முரளி விஜய் நிலைத்து நிற்க மறுபக்கம் விக்கெட் வீழந்த வண்ணமே இருந்தது.

    கேதர் ஜாதவ் 6 ரன்னிலும், ஷொரே 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து விளையாடிய முரளி விஜய் 38 ரன்னில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே 11.4 ஓவரில் 66 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு பிராவோ உடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 99 ரன்கள் இருந்த போது மலிங்கா பந்து வீச்சில் பிராவோ வெளியேற அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 109 ரன்களில் ஆல் அவுட் ஆகி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #IPL2019 #CSKvMI
    கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற வருண் ஆரோன், மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். #IPL2019 #KKRvRR
    கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியால் 175 ரன்களே எடுக்க முடிந்தது. இதற்கு முக்கிய காரணம் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன்தான்.

    அவர் நான்கு ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். தொடக்க பேட்ஸ்மேன்களான கிறிஸ் லின் (0), ஷுப்மான கில் (14) ஆகியோரை அவுட்டாக்கியதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் ஏற்கனவே இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார். மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.



    இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள வருண் ஆரோன் இதுகுறித்து கூறுகையில் ‘‘எல்லாமே சிறப்பாக உள்ளது. நான் எப்போதுமே என் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த போட்டிக்கு முந்தைய போட்டியில் ஒரு ஓவர்தான் வீசினேன். அதில் நான் தவறு ஏதும் செய்ததாக உணரவில்லை. எப்போதுமே சிறந்ததாகவே உணர்கிறேன். நான் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதே எனது விருப்பம்’’ என்றார்.

    வருண் ஆரோன் கடைசியாக 2014-ல் இலங்கைக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ராஜஸ்தான் அணியிடம் கொல்கத்தா வீழ்ந்தது ஏமாற்றம் அளிக்கிறது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். #DineshKarthik #ipl2019 #kkrvrr

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று கொல்கத்தாவில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 50 பந்தில் 97 ரன் எடுத்தார். அவர் 7 பவுண்டரி 9 சிக்சர் அடித்தார்.

    பின்னர் விளையாடிய ராஜஸ்தான் 6 விக்கெட்டுக்கு 123 (15.2 ஓவர்) எடுத்து இருந்தது. அதன்பின் இளம் வீரர் ரியான் பராக்சம்- ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

    கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. அதில் ஆர்ச்சர் முதல் பந்தில் பவுண்டரியும், 2-வது பந்தில் சிக்சரும் அடித்தார்.

    ராஜஸ்தான் 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. பராக் 31 பந்தில் 47 ரன்னும், ஆர்ச்சர் 12 பந்தில் 27 ரன்னும் எடுத்தனர்.

    கொல்கத்தா தொடர்ந்து 6 தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    இந்த தோல்வி சிறிது ஏமாற்றம் அளிக்கிறது. வெற்றி பெற முடியும் என்று நினைத்தேன். ஆனால் எங்களது நாளாக அமையவில்லை. வெற்றி பெறும்போது எப்போதுமே நல்ல உணர்வை அளிக்கும். ஆனால் வெற்றிக்கு அருகில் வந்து தோற்கும்போது ஏமாற்றம் அளிக்கும்.


    கடைசி ஓவரில் 2-வது பந்தில் ஆர்ச்சர் நல்ல ஷாட் அடித்தார். ஆனால் முதல் பந்தில் எட்ஜ் ஆகி பவுண்டரி சென்று விட்டது. இதனால் இலக்கை எட்டுவது அவர்களுக்கு எளிதாகி விட்டது.

    பந்து வீச்சாளர்கள் மீது அதிக நெருக்கடியை திணிக்க முடியாது. பனியின் தாக்கத்தால் பந்து ஈரபதமானது.

    எங்களது அணி வீரர்கள் போராடிய விதத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் முடிவை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை.

    டிரெசிங் அறையில் நல்ல சூழ்நிலையை வைத்திருப்பது முக்கியது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வெற்றி எல்லையை அடைய முடியாதது எங்களுக்கு நல்ல உணர்வை அளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறும்போது, “இளம் வீரர் ரியான் பராக் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். மேலும் அவரிடம் பந்து வீச்சு திறமையும் நன்றாக இருக்கிறது” என்றார்.

    கொல்கத்தா 11 ஆட்டத்தில் 7-வது தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் 4-வது வெற்றியை (11 ஆட்டம்) பெற்றது. #DineshKarthik #ipl2019 #kkrvrr

    கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. #IPL2019 #KKRvRR

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் சந்தித்தன. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. 3-வது பந்திலேயே கிறிஸ் லின் (0), வருண் ஆரோனின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லும் (14 ரன்) அவரது பந்து வீச்சிலேயே விக்கெட்டை தாரைவார்த்தார். இதனால் கொல்கத்தாவின் ரன்வேகம் மந்தமானது. அடுத்து வந்த நிதிஷ் ராணாவும் (21 ரன்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. முதல் 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்களுடன் மோசமான நிலையில் தத்தளித்தது.

    4-வது வரிசையில் களம் கண்ட கேப்டன் தினேஷ் கார்த்திக், பிற்பகுதியில் மின்னல் வேகத்தில் ஆடி அதிர வைத்தார். அவர் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் துரத்தியடித்தார். இன்னொரு பக்கம் சுனில் நரின் (11 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (14 ரன்), கார்லஸ் பிராத்வெய்ட் (5 ரன்) கைகொடுக்க தவறினாலும் தினேஷ் கார்த்திக் தனி வீரராக போராடி அணியை தூக்கி நிறுத்தினார். ஜோப்ரா ஆர்ச்சரின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்ட தினேஷ் கார்த்திக், கடைசி ஓவரிலும் பவுண்டரி, சிக்சர்கள் நொறுக்கி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். செஞ்சுரியை எட்ட அவருக்கு கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.




    20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் 75 ரன்களை திரட்டினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் 97 ரன்களுடன் (50 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    அடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் ரஹானேவும், சஞ்சு சாம்சனும் முதல் 5 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்து அட்டகாசமான தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது. ரஹானே 34 ரன்களிலும் (21 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), சாம்சன் 22 ரன்னிலும் வெளியேறினர். இந்த சீசனில் தனது கடைசி ஐ.பி.எல். ஆட்டத்தில் ஆடிய பென் ஸ்டோக்ஸ் (11 ரன்) ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ஸ்டீவன் சுமித் (2 ரன்), ஸ்டூவர்ட் பின்னி (11 ரன்) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. இவர்கள் 5 பேரையும் சுழற்பந்து வீச்சாளர்கள் பியூஸ் சாவ்லாவும், சுனில் நரினும் இணைந்து காலி செய்தனர்.

    இந்த சிக்கலுக்கு மத்தியில் இறங்கிய 17 வயதான ரியான் பராக், ராஜஸ்தான் அணியை காப்பாற்றினார். அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பிய ரியான் பராக் 47 ரன்களில் (31 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ‘ஹிட் விக்கெட்’ ஆனார். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரை எதிர்கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் முதல் பந்தை பவுண்டரிக்கும், அடுத்த பந்தை சிக்சருக்கும் அனுப்பி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் தனது 4-வது வெற்றியை ருசித்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி 6 ஆட்டங்களில் வரிசையாக தோற்றுள்ள கொல்கத்தாவுக்கு மொத்தத்தில் இது 7-வது தோல்வியாகும்.

     #IPL2019 #KKRvRR
    பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பெங்களூரு அணி. #IPL2019 #RCBvKXIP

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் தோள்பட்டை வலியால் அவதிப்படும் ஸ்டெயினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு டிம் சவுதி சேர்க்கப்பட்டார். இதே போல் பவான் நெகி நீக்கப்பட்டு இந்த சீசனில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார்.

    ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான விராட் கோலி 3 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய கோலி 13 ரன்களில், முகமது ஷமி வீசிய ஷாட்பிட்ச் பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களிலும் (24 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த மொயீன் அலி 4 ரன்னிலும், அக்‌ஷ்தீப் நாத் 3 ரன்னிலும் வெளியேறினர். அப்போது பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 81 ரன்களுடன் திண்டாடியது. சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வினும், முருகன் அஸ்வினும் ரன்வேகத்துக்கு அணை போட்டனர்.


     

    இதைத் தொடர்ந்து டிவில்லியர்சும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அவசரமின்றி விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 13.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. அதன் பிறகு ரன்ரேட்டை உயர்த்த அதிரடி வேட்டை நடத்தினர். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. முகமது ஷமியின் ஓவரில் டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். வில்ஜோனின் இறுதி ஓவரில் இருவரும் இணைந்து 3 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்தனர். இவர்களின் வாண வேடிக்கையால் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.

    20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. தனது 33-வது அரைசதத்தை எட்டிய டிவில்லியர்ஸ் 82 ரன்களுடனும் (44 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 46 ரன்களுடனும் (34 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 64 ரன்கள் திரட்டினர். தனது பந்து வீச்சில் பவுண்டரி, சிக்சர் எதுவும் அடிக்க விடாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 ஓவரில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். முருகன் அஸ்வின், முகமது ஷமி, வில்ஜோன் ஆகியோருக்கும் தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

    அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியில் மிரட்டியது. கிறிஸ் கெய்ல் 23 ரன்களும் (10 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மயங்க் அகர்வால் 35 ரன்களும், லோகேஷ் ராகுல் 42 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு நிகோலஸ் பூரனும், டேவிட் மில்லரும் சிறிது நேரம் அச்சுறுத்தினர். 17-வது ஓவர் வரை (3 விக்கெட்டுக்கு 167 ரன்) பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது.

    ஆனால் இறுதி கட்டத்தில் அபாரமாக பந்து வீசிய பெங்களூரு பவுலர்கள் மேலும் 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கு 185 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 24 ரன்னிலும், பூரன் 46 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். பஞ்சாப் அணிக்கு 6-வது தோல்வியாகும்.

    #IPL2019 #RCBvKXIP
    சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனையின் போது கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ChepaukStadium #CSKvsMI
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 7 லீக் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதில் 5 போட்டிகள் முடிந்து விட்டன.

    6-வது ஐ.பி.எல். லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது.

    இதற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் இன்று நடந்தது. குறைந்த டிக்கெட் ரூ.1300. இந்த டிக்கெட்டை வாங்குவதற்கு இன்று காலையிலேயே ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்களிடையே நெரிசல் ஏற்படாமல் இருக்க சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தது.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க முண்டியடித்தனர். இதில் தடுப்பு கட்டைகள் முறிந்து விழுந்தது. இதனால் ரசிகர்களும் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் போலீசார் அவர்களை தள்ளி விட்டனர்.

    ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தள்ளி விட்டனர். ஆனாலும் கூட்டம் கலையவில்லை.

    இதற்கிடையில் சாலையிலும் ஏராளமானவர்கள் திரண்டு நின்றதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தும் கலையவில்லை. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.

    இதனால் சேப்பாக்கம் ஸ்டேடியம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து சீரானது. #ChepaukStadium #CSKvsMI
    ×