search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95440"

    மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் வீரர்களுக்கு உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு நான்கு நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #MI
    உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் தொடரின் 12-சீசன் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. அதன்பின் மே 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. அதற்கு முன் 24-ந்தேதி பயிற்சி ஆட்டங்கள் தொடங்குகிறது.

    ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பைக்கும் இடையில் 12 நாட்களே இடைவெளி இருப்பதால் வீரர்கள் ‘ஒர்க் லோடு’ குறித்த விவாதம் எழும்பியது. அப்போது ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் எங்களது வீரர்களுக்கு நாங்கள் போதுமான ஓய்வு அளிப்போம் என்று தெரிவித்தது.

    மும்பை அணி நேற்று முன்தினம் சனிக்கிழமை (20-ந்தேதி) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக விளையாடியது. அடுத்த போட்டியில் 26-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு போட்டிக்குமிடையில் ஐந்து நாட்கள் இடைவெளி உள்ளது.



    இந்த குறுகிய இடைவெளியை வீரர்களுக்கு ஓய்வாக அளித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்த நாட்களில் உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களான ரோகித் சர்மா, பும்ரா, டி காக், மலிங்கா போன்ற வீரர்களை அணியில் இருந்து ரிலீஸ் செய்துள்ளது. அவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடாமல் புத்துணர்ச்சி பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    அதன்பின் சென்னை அணிக்கெதிராக விளையாட ஒன்றிணைவார்கள். இதனால் ஐபிஎல் தொடர் முழுவதும் முன்னணி வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி அணி. #IPL2019 #DCvKXIP
    ஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் கெயில் 69 ரன்னும், மன்தீப் சிங் 30 ரன்னும் எடுத்தனர். 
     
    டெல்லி அணி பந்து வீச்சாளர்கள் தரப்பில் சந்தீப் லமிச்சானே 3 விக்கெட்டும், அக்‌ஷர் பட்டேல் மற்றும் ரபடா ஆகியோர் 2 விக்கெட்டும் எடுத்தனர். 

    இதைத்தொடர்ந்து, டெல்லி அணி 164  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியொர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது பிரித்வி ஷா 11 ரன்னில் அவுட்டானார்.  அடுத்து தவானுடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர்.

    தவான் அரை சதமடித்து 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 6 ரன்னில் வெளியேறினார். ஐங்கிராம் 19 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அசத்தினார். இறுதியில் டெல்லி அணி 19.4. ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். #IPL2019 #DCvKXIP
    ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #MIVSRR
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    அதன்படி மும்பை அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டி காக்கும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். ரோகித் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ், டி காக்குடன் ஜோடி சேர்ந்து ஆடினார். டிக் காக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன் அடித்திருந்தபோது எதிர்பாராதவிதமாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா, டி காக்குடன் இணைந்து ஆடினார். அதிரடியாக ஆடி வந்த டி காக் 65 ரன் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 6 பவுண்டரியும், 2 சிக்சரும் அடித்தார். அதன் பின் வந்த பொல்லார்ட் 10 ரன்னில் வெளியேறினார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 161 ரன்களை எடுத்தது. 

    பின்னர் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிக பட்சமாக சாம்சன் 35 ரன்னும், ரீயான் பராக் 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்டீவன் ஸ்மித் 59 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

    மும்பை பந்து வீச்சாளர்கள் தரப்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், பும்ரா 1 விக்கெட்டும் எடுத்தனர். #IPL2019 #MIVSRR
    கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். #IPL2019 #ViratKohli
    ஐபிஎல் கிரிக்கெட்டின் 35-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஆர்சிபி அணி முதலில் களமிறங்கியது.

    மொயீன் அலி ஒத்துழைப்புடன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். கடைசியில் சிக்சர், பவுண்டரியுமாக விளாசினார். விராட் கோலி 56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 ரன்னில் வெளியேறினார். ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள ஐந்தாவது சதம் இதுவாகும்.

    இறுதியில், பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 10 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது.

    ஐபிஎல்லில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்லுக்கு (6 சதம்) அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். #IPL2019 #ViratKohli
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா 150 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். #IPL2019 #AmitMishra
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடும் சுழற்பந்து வீரர் அமித் மிஸ்ரா மும்பைக்கு எதிராக 2 விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் அவர் 150-வது விக்கெட்டை தொட்டார். அமித் மிஸ்ரா 140 ஆட்டங்களில் விளையாடி 150 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். சராசரி 24.18 ஆகும். 17 ரன் கொடுத்து 5 விக்கெட கைப்பற்றியது அவரது சிறப்பு பந்துவீச்சு ஆகும்.

    ஐபிஎல் போட்டியில் 150-வது விக்கெட்டை எடுத்த 2-வது வீரர் ஆவார். இலங்கை வேகப்பந்து வீரர் மலிங்கா முதலில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவர் 115 இன்னிங்சில் 162 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 36 வயதான மிஸ்ரா டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசஸ் ஐதராபாத் அணிகளிலும் விளையாடி இருந்தார். 3 முறை ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தி உள்ளார்.



    அவருக்கு அடுத்தப்படியாக பியூஸ் சாவ்லா 146 விக்கெட்டுடன் 3-வது இடத்தில் உள்ளார். பிராவோ 143 விக்கெட்டும். ஹர்பஜன் சிங் 141 விக்கெட்டும் எடுத்து முறையே 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடாத எம்எஸ் டோனி அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார் என்று ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #IPL2019 #CSK #MSDhoni
    ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன் எம்எஸ் டோனி விளையாடமாட்டார். ரெய்னாதான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    பின்னர், முகுது வலி காரணமாக டோனி பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. டோனி இல்லாத இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தது.



    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் டோனி பங்கேற்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘டோனி சிறப்பாக இருப்பதாக உணர்கிறார். அவரது முதுகு வலி சரியாகிவிட்டது. இதனால் அடுத்தப் போட்டியில் அவர் விளையாடுவார்’’ என்றார்.
    ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்த அல்ஜாரி ஜோசப் காயத்தால் விலகியுள்ளார். #IPL2019 #MI
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் அடைந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

    ஐதராபாத் அணிக்கெதிராக அறிமுகம் ஆன ஜோசப், 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றி ஐபிஎல் வரலாற்றுச் சாதனைப் படைத்தார்.

    கடந்த 13-ந்தேதி மும்பையில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த போட்டியில் அதன்பின் பீல்டிங் செய்யவில்லை. இந்நிலையில் தோள்பட்டை காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் வாக்குவாதம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும் என ஷேவாக் சொல்கிறார். #MSDhoni #VirenderSehwag
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4-வது பந்தை ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் புல்டாசாக வீசினார். அப்போது களத்தில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அது ‘நோ-பால்’ என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் ‘நோ-பால்’ இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் வீரர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த சென்னை அணியின் கேப்டன் டோனி மைதானத்துக்குள் நுழைந்து ‘நோ-பாலை’ ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார்.




    டோனியின் இந்த செயலை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய முன்னாள் வீரர் பி‌‌ஷன்சிங் பெடி உள்பட பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவிக்கையில், ‘டோனி எளிதான தண்டனையுடன் விடுவிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். அவருக்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும். ஏனெனில் அவர் செய்ததை போல் நாளை மற்றொரு கேப்டன் செய்யக்கூடும். அப்படியானால் நடுவருக்கு என்ன மரியாதை இருக்கும். அவர் மைதானத்துக்குள் செல்லாமல் 4-வது நடுவருடன் ‘வாக்கி-டாக்கி’ மூலம் பேசி முறையிட்டு இருக்க வேண்டும். டோனி இந்திய அணிக்கு ஏராளமாக பங்களித்து இருக்கிறார். அது மகிழ்ச்சியான வி‌‌ஷயம் தான். அவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த போது கோபப்பட்டதை நான் பார்த்தது இல்லை. சென்னை அணிக்காக அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக நினைக்கிறேன்’ என்றார்.

    இதற்கிடையே டோனிக்கு புகழாரம் சூட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா) அளித்த ஒரு பேட்டியில், ‘டோனி மிகச்சிறந்த கேப்டன். அவர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவக்கூடியவர். இதன் காரணமாகவே நான் டோனி நடத்தும் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டேன். டோனியின் பேச்சும், செயல்பாடும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும்’ என்று தெரிவித்தார்.
    ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினை ஒப்பந்தம் செய்துள்ளது. #IPL2019 #RCB
    ஐபிஎல் 2019 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 போட்டிகளில் விளையாடி ஆறிலும் தோல்வியைச் சந்தித்துள்ளன. அந்த அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான கவுல்டர்-நைல்-ஐ ஏலத்தில் எடுத்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடியதால் ஐபிஎல் தொடக்கத்தில் அவர் விளையாடவில்லை.

    பின்னர் அணியில் இணைய இருந்த நேரத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயினை தேர்வு செய்துள்ளது.
    கேப்டன் பதவியில் டோனி 50-வது வெற்றியை பெற்ற போட்டியில் பிராவோ சிக்ஸ் அடித்தும், 100-வது வெற்றியை பெற்ற போட்டியில் சான்ட்னெர் சிக்ஸ் அடித்தும் அசத்தியுள்ளனர். #IPL2019 #MSDhoni
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை ருசித்தது. எம்எஸ் டோனிக்கு கேப்டனாக இது 100-வது வெற்றியாகும்.

    எம்எஸ் டோனிக்கு சாதனையான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை ருசித்துள்ளது. கடந்த 2012 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.



    கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. ராஜட் பாட்டியா பந்து வீச வெயின் பிராவோ கடைசி பந்தை சந்தித்தார். லோ புல்டாஸ்-ஆக வீசப்பட்ட பந்தை சிக்சருக்கு தூக்கி வெயின் பிராவோ வெற்றி பெற வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றி ஐபிஎல் தொடரில் டோனிக்கு கேப்டனாக 50-வது வெற்றியாகும்.

    அதேபோல் நேற்று சான்ட்னெர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 3 ரன்கள் தேவை என்ற நிலையில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றி டோனிக்கு கேப்டனாக 100-வது வெற்றியாகும். இதன்மூலம் டோனி முக்கியமான சாதனை வெற்றிகளை ருசித்த போட்டிகளில் சென்னை அணிக்கு கடைசி பந்தில் சிக்ஸ் மூலமே வெற்றி கிடைத்துள்ளது.
    ராஜஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 வெற்றிகளை ருசித்த முதல் கேப்டன் என்ற சாதனையை எம்எஸ் டோனி படைத்துள்ளார். #IPL2019 #MSDhoni
    ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிராக சென்னை வெற்றி பெற்றது. இது கேப்டனாக டோனிக்கு கிடைத்த 100-வது வெற்றி ஆகும். இதன் மூலம் 100 போட்டிகளை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை டோனி பெற்றார். அவர் 166 ஆட்டங்களில் கேப்டனாக இருந்து 100-வது வெற்றியை சுவைத்துள்ளார்.65 ஆட்டத்தில் தோல்வி கிடைத்தது. 1 ஆட்டம் முடிவு இல்லை.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 95 வெற்றியையும், புனே அணிக்கு 5 வெற்றியும் பெற்று கொடுத்துள்ளார். டோனிக்கு அடுத்த படியாக டெல்லி மற்றும் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்த கவுதம் காம்பிர் 71 வெற்றியுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினார். இதில் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய போது 100-வது விக்கெட்டை அவர் தொட்டார். ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 13-வது வீரர் ஜடேஜா ஆவார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 58 ரன்கள் குவித்த எம்எஸ் டோனி, எனது சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று என தெரிவித்துள்ளார். #IPL2019 #RRvCSK
    12-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது. பட்லர் 23 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 28 ரன்னும், கோபால் 19 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னைக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தது. 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டை (5.5 ஓவர்) இழந்தது. அதன்பின் டோனி - அம்பதி ராயுடு ஜோடி சிறப்பாக விளையாடியது.

    அம்பதி ராயுடு 57 ரன்னில் அவுட் ஆனார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்தது. கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரில் 3-வது பந்தில் டோனி (58 ரன்) அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



    கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்ட நிலையில் சான்ட்னெர் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 6-வது வெற்றி (7 ஆட்டம்) இதுவாகும். ராஜஸ்தான் 5-வது தோல்வியை (6 ஆட்டம்) சந்தித்தது.

    வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    கடைசி கட்டத்தில் எங்களுக்கு அவர்கள் (ராஜஸ்தான்) நெருக்கடியை உருவாக்கினர். இதுபோன்ற வெற்றியை பெறும்போது நிறைய வி‌ஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். இந்த வெற்றியை கொண்டாடும்போது எதிர்மறை சம்பவங்களில் இருந்து நாம் வெளிவருவது முக்கியம். இல்லாவிட்டால் பின்னர் அது எங்களுக்கு போட்டி தொடரில் காயத்தை ஏற்படுத்தி விடும். கடைசி 2 ஓவர்களில் இரண்டு பெரிய ஷாட் அடிக்க வேண்டும் என்று கருதினேன்.

    இங்கு (ஜெய்ப்பூர்) எங்களுக்கு ரசிகர்கள் அதிகளவு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு நன்றி. எனது சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று என்பதை மறக்கமாட்டேன். அதனால் இந்த மைதானம் எனக்கு சிறப்பு வாய்ந்தது. இந்த வெற்றி மூலம் அடுத்த ஆட்டங்களில் சில புதிய பந்து வீச்சாளர்களை பரிசோதித்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×