search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95440"

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் கிறிஸ் லின், உத்தப்பா, சுனில் நரைன், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸல், குல்தீப் யாதவ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அதிரடி மன்னன் ரஸ்சல் அணிக்கு முதுகெலும்பாக உள்ளார். அவர் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவது அந்த அணிக்கு பலமாக உள்ளது.

    இன்று அவர் சிக்சர் மழையை பார்கக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 108 ரன்னில் சுருண்டது. இதனால் அந்த அணி முன்வரிசை பேட்டிங்கில் கவனம் செலுத்துவது அவசியம்.

    இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் டெல்லி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பழி தீர்க்க கொல்கத்தா தீவிரமாக உள்ளது.



    ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி 6 ஆட்டத்தில் 3 வெற்றி 3 தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரி‌ஷப் பந்த், இங்க்ராம், கிறிஸ் மோரிஸ், அக்சார் பட்டேல், ரபாடா போன்ற வீரர்கள் உள்ளனர்.

    இந்த தொடரில் ஏற்கனவே கொல்கத்தாவை வீழ்த்தி உள்ளதால் டெல்லி நம்பிக்கையுடன் உள்ளது. ஆனாலும் பலம் வாய்ந்த கொல்கத்தாவுக்கு எதிராக டெல்லி முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியம்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக கடைசி பந்தில் வெற்றி பெற்றதன் மூலம், அதிக முறை வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது. #IPL2019
    மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டம் வான்கடேயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் அடித்து வெற்றியை ருசித்தது.

    இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை கடைசி பந்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. நேற்றைய வெற்றியுடன் மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் நான்கு போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளன.
    தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ்-க்குப் பதில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ கெல்லியை தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் #IPl2019 #KKR
    தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ்-யை ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது. இளம் வீரரான இவர் இலங்கை அணிக்கெதிராக விளையாடும்போது காயம் அடைந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.



    அவருக்கு மாற்று வீரரை இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தேர்வு செய்யாமல் இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ கெல்லியை தேர்வு செய்துள்ளது. இவர் ஆஸ்திரேலிய சர்வதேச அணிக்காக விளையாடியது கிடையாது. பிக் பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்காக விளையாடியவர்.
    கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய கையோடு ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற டோனி, அங்கு குட்டித்தூக்கம் போட்டார். #IPL2019
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்கும். போட்டி முடிவடைய 11.30 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் வீடு திரும்ப மிகவும் சிரமப்படுகின்றன.

    ரசிகர்கள் மட்டுமே சிரமப்படுவதில்லை. அணியின் வீரர்களும் சிரமப்படுகின்றனர். அவர்கள் போட்டியை முடித்துக் கொண்டு அடுத்த போட்டிக்காக உடனடியாக விமானம் மூலம் அடுத்த மாநிலத்திற்கு பறக்க வேண்டியுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 6-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பையும், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் எதிர்கொண்டது. இந்த இரண்டு போட்டிகளும் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. நாளை ராஜஸ்தானை ஜெய்ப்பூரில் எதிர்கொள்கிறது.

    நேற்றைய போட்டி நள்ளிரவு 12 மணியளில் முடிவடைந்தது. போட்டி முடிந்ததும் வீரர்கள் உடனடியாக ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றனர். இதனால் தூங்குவதற்குக் கூட சரியாக நேரம் கிடைப்பதில்லை. விடியற்காலையில்தான் விமானம் என்பதால், விமான நிலையத்தில் சென்னை அணி கேப்டன் எம்எஸ் டோனி தரையிலேயே கிடைத்த நேரத்தில் ஒரு குட்டுத்தூக்கம் போட்டார்.

    அவர் தூங்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து ‘‘ஐபிஎல் கால நேரம் பழகினால் அதிகாலையில் விமானத்தை பிடிக்க வேண்டியிருந்தால் இப்படித்தான் நிகழும்’’ பதிவிட்டுள்ளார்.
    சேப்பாக்கம் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் பவுண்டரி, சிக்சர்கள் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். #IPL2019
    ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் பேட்ஸ்மேன்களின் அதிரடியைத்தான் விரும்புவார்கள். பந்துகள் பவுண்டரி, சிக்சர்களாக செல்லும்போது மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள். சேப்பாக்க மைதானத்தில் இதுவரை நடந்த 4 ஆட்டத்திலும் சூப்பர் கிங்ஸ் அணிதான் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் இதில் 2 ஆட்டத்தில் மிகவும் குறைந்த ரன்களே எடுக்கப்பட்டது.

    கடந்த 23-ந்தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 70 ரன்களே எடுக்க முடிந்தது. நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியால் 108 ரன்களே எடுக்க முடிந்தது. சேப்பாக்கம் ஆடுகளம் மோசமாக இருந்தது.

    சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றாலும் அதிரடியான ஆட்டத்தை காண இயலாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான ஆட்டத்திலும் ஸ்கோர் 180 ரன்னுக்கு செல்லவில்லை. பொதுவாக ரன் குவிப்புக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தால்தான் ரசிகர்களுக்கு உற்சாகம் இருக்கும்.

    சென்னையில் இன்னும் 3 ‘லீக்’ ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ஐதராபாத்துடன் 23-ந்தேதியும், மும்பையுடன் 26-ந்தேதியும், டெல்லியுடன் மே மாதம் 1-ந்தேதியும் மோதுகிறது. இந்த ஆட்டங்களிலாவது ரன் குவிப்புக்கு ஏற்ற வகையில் ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.



    இந்த ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு மைதானத்திலும் எடுக்கப்பட்ட ரன்களின் சராசரி (ஓவர்) வருமாறு:-

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம்- 9.69, பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம்-9.15, மும்பை வான்கடே மைதானம்-8.72, ஜெய்ப்பூர் மான்சிங் ஸ்டேடியம்-8.40, ஐதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியம்- 8.36, மொகாலி மைதானம்- 8.24, டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம்- 7.84, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம்- 6.57.
    வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோத உள்ளது. #mivskxip #rohitsharma #ipl2019

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியின் 24-வது ‘லீக்’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோற்றது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த அணி தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

    பஞ்சாப்பை பழி தீர்த்து 4-வது வெற்றி ஆர்வத்தில் மும்பை அணி இருக்கிறது.

    கடந்த ஐ.பி.எல். ஆட்டத்தில் மும்பை அணியில் அறிமுகமான அல்ஜாரி ஜோசப் பந்து வீச்சில் முது கெலும்பாக உள்ளார். அவர் ஐதராபாத்துக்கு எதிராக 12 ரன் கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். பஞ்சாப்புக்கு எதிராகவும் அவர் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர ஹர்த்திக் பாண்ட்யா, போல்லார்ட், கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, கர்ணல் பாண்ட்யா போன்ற சிறந்த வீரர்கள் மும்பை அணியில் உள்ளனர்.

    பஞ்சாப் அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணி மும்பையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஏற்கனவே தோற்கடித்து இருந்ததால் நம்பிக்கையுடன் உள்ளது.

    பஞ்சாப் அணியில் ராகுல், மான்யக் அகர்வால், டேவிட் மில்லர், சாம்கரண் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். #mivskxip #rohitsharma #ipl2019

    சேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து டோனி மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். #IPL2019 #CSKvKKR #dhoni

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்னே எடுக்க முடிந்தது.

    பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த மோசமான ஆடு களத்தில் ஆந்த்ரே ரஸ்சல் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 16 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 109 ரன் இலக்கை எடுத்தது. 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 43 ரன்னும், அம்பதிராயுடு 21 ரன்னும் எடுத்தனர். சுனில் நரீன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

    மிகவும் குறைந்த ரன்னே எடுக்க முடிந்ததால் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணியால் 70 ரன்னே எடுக்க முடிந்தது. இந்த ரன்னை எடுக்க சூப்பர் கிங்சுக்கு 18 ஓவர் வரை தேவைப்பட்டது. நேற்றைய போட்டியிலும் இதே நிலைமைதான்

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, சேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    முதல் போட்டியில் இருந்த ஆடுகளம் போலவே இந்த ஆட்டத்திலும் இருந்தது. பிட்ச் குறித்து புகார் கூறிக் கொண்டே நாங்கள் வெற்றி பெற்று விடுகிறோம். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பிவில்லை. ஏனென்றால் மிகவும் குறைந்த ஸ்கோர் தான் எடுக்க முடிகிறது.

    எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது கடினமாக இருக்கிறது. அதுவும் முதலில் பேட்டி செய்தால் மிகவும் கடினமாக உள்ளது. பனி பொழிவினால் 2-வது பகுதி ஆட்டத்துக்கு ஆடுகளம் கொஞ்சம் பரவாயில்லை. இது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்தால் நாங்கள் சரியான அணி சேர்க்கையை சேர்த்தாக வேண்டும். என்னை பொறுத்தவரை திட்டமிடுதல் எதுவுமில்லை.

    பிராவோ காயம் அடைந்த பிறகே அணி சேர்க்கை எங்களுக்கு கடினமாக உள்ளது. ஆல்ரவுண்டர் இல்லை. டேவிட் வில்லேயும் இல்லை

    ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் ஆகியோரை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. இருவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள். பழைய ஒயின் போன்றவர்கள். இருவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். நான் என்ன விரும்புகிறேனோ அதற்கு ஏற்றவாறு நல்ல திறமையுடன் இம்ரான்தாகீர் வீசுகிறார். ஒட்டு மொத்தத்தில் பந்து வீச்சு துறை நன்றாக இருக்கிறது.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை நாளை மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    கொல்கத்தா நைட்ரை டர்ஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லியை வருகிற 12-ந்தேதி எதிர்கொள்கிறது. #IPL2019 #CSKvKKR #dhoni

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னையில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 108 ரன்னில் சுருட்டி அட்டகாசப்படுத்திய சென்னை அணி 5-வது வெற்றியை ருசித்தது. #IPL2019 #CSKvKKR

    8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, பனிப்பொழிவை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து முதலில் மட்டையை பிடித்த கொல்கத்தாவுக்கு ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து பேரிடி விழுந்தது. அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின் (0) வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரின் (6) ஹர்பஜன்சிங்கின் சுழலில் சிக்கினார்.


    இந்த சறுக்கலில் இருந்து கொல்கத்தா அணியினரால் மீள முடியவில்லை. சென்னை கேப்டன் டோனி, வேகம்-சுழல் இரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி குடைச்சல் கொடுத்தார். அவரின் வியூகத்தை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. ராபின் உத்தப்பா (11 ரன்), நிதிஷ் ராணா (0) ஆகியோரை தீபக் சாஹர் வெளியேற்ற, அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் பிடியை பலமாக இறுக்கினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் (19 ரன்), சுப்மான் கில் (9 ரன்) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை.

    இதற்கு மத்தியில், இந்த ஐ.பி.எல்.-ன் அபாயகரமான ஆட்டக்காரர் என்று வர்ணிக்கப்படும் ஆந்த்ரே ரஸ்செல் 8 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை ஹர்பஜன்சிங் நழுவ விட்டார். இதே போல் அவர் 19 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, எல்.பி.டபிள்யூ. கேட்டு டி.ஆர்.எஸ் முறைப்படி அப்பீல் செய்த போதும் பலன் கிட்டவில்லை.

    ஒரு கட்டத்தில் 79 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் ஊசலாடிய கொல்கத்தா அணியை மூன்று இலக்கத்தை எட்ட வைக்க கடைசி விக்கெட்டுக்கு வந்த ஹாரி குர்னேவின் துணையுடன் ரஸ்செல் தனி வீரராக போராடினார். இதனால் ஒற்றை ரன் எடுப்பதை தவிர்த்த அவர் 19-வது ஓவரில் ஒரு சிக்சரும், 20-வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியும் விரட்டி கவுரவமான நிலையாக தங்கள் அணியை 100 ரன்களை கடக்க வைத்தார். அத்துடன் தனது அரைசதத்தையும் அவர் நிறைவு செய்தார்.

    20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சீசனில் கொல்கத்தா அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அது மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக கொல்கத்தாவின் குறைந்த ஸ்கோராகவும் இது அமைந்தது. தனது 6-வது ஐ.பி.எல். அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 50 ரன்களுடன் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    சென்னை தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தீபக் சாஹர் வீசிய 4 ஓவர்களில் 20 பந்தில் ரன்னே அடிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

    பின்னர் எளிய இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. குறுகிய நேரமே நின்ற தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 17 ரன்னும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்), அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 14 ரன்னும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து நடையை கட்டினர்.

    அடுத்து வந்த வீரர்கள்நிதானமாக செயல்பட்டனர். அதே சமயம் பனிப்பொழிவின் காரணமாக கொல்கத்தா பவுலர்கள் தடுமாற்றத்துடன் பந்து வீசினர். அணியின் ஸ்கோர் 81 ரன்களை எட்டிய போது, அம்பத்தி ராயுடு 21 ரன்னில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பாப் டு பிளிஸ்சிஸ் நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு இழப்புக்கு 111 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிளிஸ்சிஸ் 43 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 8 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

    6-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தா அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

    சென்னை அணி ஜெய்ப்பூரில் நாளை (வியாழக்கிழமை) நடக்கும் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.

     #IPL2019 #CSKvKKR
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 62 பந்தில் 70 ரன்கள் அடித்த டேவிட் வார்னர் ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையைப் படைத்துள்ளார். #IPL2019 #KXIPvSRH
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மொகாலியில் நடைபெற்றது. முதலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களே சேர்த்தது.

    டேவிட் வார்னர் கடைசி வரை களத்தில் நின்று 62 பந்துகள் சந்தித்தார். இதில் 70 ரன்களே அடித்தார். இதன்மூலம் அதிக பந்துகளை சந்தித்து குறைவான ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஜேபி டுமினி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 63 பந்தில் 59 ரன்களும், ஆரோன் பிஞ்ச் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 62 பந்தில் 68 ரன்களும் எடுத்து முதல் மற்றும் 2-வது இடத்தில் உள்ளனர்.
    கொல்கத்தா அணிக்காக விளையாட முடியாமல் போனதால் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 10.6 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஸ்டார்க் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவரை கடந்த 2018 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

    ஐபிஎல் தொடரில் விளையாடும்போது காயம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் இன்சூரன்ஸ் செய்திருந்தார். இதற்காக அவர் பிப்ரவரி 27-ந்தேதி முதல் மார்ச் 31 2018 வரை கவர் ஆகும் வகையில் பிரிமீயர் செலுத்தியுள்ளார். அவருடைய இன்சூரன்ஸ் மதிப்பு சுமார் 10 கோடியே 60 லட்சம் ரூபாய் ஆகும்.

    தற்போது இந்த ரூபாயை வழங்க உத்தரவிடும்படி ஆஸ்திரேலியாவில் உள்ள நீதிமன்றத்தை அணுகியுள்ளார் மிட்செல் ஸ்டார்க்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி மன்னன் அந்த்ரே ரஸல் மீது அதிக கவனம் செலுத்த மாட்டோம் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார். #IPL2019 #CSK
    ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அந்த்ரே ரஸலின் அதிரடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ரஸலை பற்றி அதிக அளவில் கவனம் செலுத்த மாட்டோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியளார் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்த வரையில் இரண்டு மூன்று சவால்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மற்ற ஆறு பேட்ஸ்மேன்கள் நிராகரித்து விடுவது. அந்த அணியில் கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக், உத்தப்பா போன்றோரும் உள்ளனர். இதை நாங்கள் கவனித்தில் எடுத்துக்கொள்வோம். ரஸல் மீது அதிக கவனம் செலுத்தமாட்டோம்.

    ரஸல் சிறப்பாக விளையாடி வருகிறார். இருந்தாலும் எங்களுடைய திட்டம் ஒன்று அல்லது இரண்டு வீரர்களுக்கு எதிராக என மாறாது. ஆனால் கொல்கத்தா வீரர்கள் அபாயகரமானவர்கள் என்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் குகையிலேயே வீழ்த்துவோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐந்து போட்டியில் நான்கில் வெற்றியை ருசித்துள்ளது. டெல்லிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்துள்ளது.

    அந்த அணியின் அந்த்ரே ரஸல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். நான்கு போட்டிகளில் 22 சிக்சர்கள் விளாசியுள்ளார். அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்பதைதான் எதிரணிகள் முழு குறிக்கோளாக வைத்துள்ளது.

    கேகேஆர் அதன் சொந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடக்கூடியது. குறிப்பாக சேஸிங்கில் புகுந்து விளையாடும். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் குகையிலேயே வீழ்த்துவோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிறிஸ் மோரிஸ் கூறுகையில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தற்போது அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அவர்கள் அணியில் தலைசிறந்த மேட்ச் வின்னர்கள் இடம்பிடித்துள்ளனர். மற்ற வீரர்களும் முக்கிய காரணிகளாக விளங்கி வருகிறார்கள். எங்களுக்கு சில நாட்கள் ஓய்வு உள்ளது. அதன்பின் விளையாட இருக்கிறோம். இதனால் எங்களுடைய உடல் புத்துணர்வுடனும், வலிமையாக இருக்கும்.



    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் வெளியில் இருந்து செல்லும் அணிக்கு மிகவும் கடினமானதாக விளங்கி வருகிறது. ஆனால் எங்கள் அணி ஒரு குழுவாக இணைந்து, போட்டியை எதிர்கொள்ள இருக்கிறோம். வெள்ளிக்கிழமை அவர்களை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    சூப்பர் ஓவரில் கொல்கத்தாவை வீழ்த்திய போட்டியின் முழுவதையும் ஆராய்ந்து, என்ன தவறு செய்தோம் என்பதை பார்ப்போம். நாங்கள் எந்த இடத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமோ? அந்த இடத்தில் கவனம் செலுத்தி, போட்டிக்கு தயார் என்பதை உறுதி செய்து கொள்வோம்’’ என்றார்.
    ×