search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    வெளிநாட்டவரை அதிகம் கவர்ந்த திருத்தலமாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலின் பெருமைகளை அறிந்து ஏராளமான வெளிநாட்டினர் இங்கு வருகை தருகிறார்கள்.
    நாமக்கல் என்றாலே அனைவரது நினைவிற்கு வருவது ஆஞ்சநேயர் திருவுருவமாகும். அத்தகைய சிறப்பு பெற்றவர் ஸ்ரீஆஞ்சநேயர். செந்தமிழ்க் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த ஊர், சிறந்த குடவரைக் கோவில் மும்மூர்த்திகளும் வழிபட்ட புண்ணியத்தலம், வாமன அவதாரச் சிறப்பு, சங்கர நாராயணர் சிறப்பு, அருள் தரும் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு செய்தல் ஆகியவை சிறப்பாகும். நாமகிரி தாயார் கணிதமேதை ராமானுஜருக்கு கனவில் தோன்றி கணிதத்தை எளிதாக்கிய திருத்தலம்.
     
    நாமகிரி குன்றில் நரசிம்மமூர்த்தி ஆஞ்சநேயரால் பிரதிஷ்டை செய்யப் பெற்ற சிறப்புக்குரியது. ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி சனி, ராகு, கேது துன்பங்களிலிருந்து விடுபடலாம்.

    வெளிநாட்டவரை அதிகம் கவர்ந்த திருத்தலமாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலின் பெருமைகளை அறிந்து ஏராளமான வெளிநாட்டினர் இங்கு வருகை தருகிறார்கள்.
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் மற்றும் பூஜையும் நடைபெறுகிறது.
    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் 18 அடி உயரம் கொண்டவர். தினமும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜையும் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதன்பிறகு காலை 9 மணிமுதல் 9.30 மணிவரை காலசந்தி நடைபெறும்.

    9.30 மணிக்கு மேல் அபிஷேகம் நடைபெறும். அதாவது நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் சொர்ண அபிஷேகம் செய்யப்படும். அதன்பிறகு மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதாவது வடைமாலை இருந்தால் அணிவிக்கப்படும் பக்தர்கள் பணம் கட்டி இருந்தால் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்க கவசம் மற்றும் வெள்ளி கவசம் சாத்தப்படும். முத்தங்கி அலங்காரமும் செய்யப்படும்.

    சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த அபிஷேக செலவை ஒருவர் மட்டுமே ஏற்கும் நிலை இருந்தது. தற்போது இதில் கோவில் நிர்வாகம் மாற்றம் செய்து 3 பேர் செலவை ஏற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புஷ்ப அங்கி அலங்காரம், வெண்ணெய் காப்பு மற்றும் சந்தன காப்பு அலங்காரம் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக முன்பதிவு நடந்து வருகிறது.
    இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம்.
    இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம்.

    செந்தாமரை மலர் - செல்வம் பெருகும்

    வெண்தாமரை மலர் - மனக்குறை போக்கும்

    தங்க அரளி - கடன் சுமை குறையும்

    செவ்வரளி - குடும்ப ஒற்றுமை உருவாகும்.

    நீல சங்கு புஷ்பம் - ஆயுள் விருத்திக்கும்

    மனோரஞ்சிதம் - கணவன்-மனைவிக்குள் அன்பை வலுப்படுத்தும்.

    ரோஜா, மல்லிகை, முல்லைப்பூ, பாரிஜாதம், செவ்வந்தி போன்ற வாசமுள்ள மலர்களை இறைவனுக்குச் சூட்டி வழிபட்டால், நேச மனப்பான்மை கொண்டவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
    வைணவ ஆலயங்களில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள்வதைப் பார்க்கலாம். அனுமார் ராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் ராமனின் தொண்டனாக விளங்கியவர்.

    வைணவ ஆலயங்களில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள்வதைப் பார்க்கலாம். ராமாயணத்தில் ராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமாருக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

    அனுமாரின் தாய் அஞ்சனாதேவி, தந்தை வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர். ராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமாரைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமார் ராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் ராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமார் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.

    வட இந்தியாவில் அனுமாரை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு. சமஸ்கிருதத்தில் ஹனு என்பதற்கும் தாடை என்று பொருள். மன் என்பதற்கு பெரிதானது என்று பொருள். அதாவது பெரிய தாடையை உடையவன் என்று பெயர். அனுமனுக்கு தற்பெருமையைக் கொன்றவன் என்ற இன்னொரு பொருளும் உண்டு.
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கமலர்கள் அர்ச்சனை மிகவும் பிரபலம். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 108 தங்கமலர்களால் அர்ச்சனை செய்தால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
    நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 108 தங்கமலர்கள் அர்ச்சனை செய்தால் கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும்.

    * தொழில் விருத்தி கிடைக்கும்
    * திருமண தடை நீங்கும்
    * கடன் பிரச்சினை தீரும்
    * மாணவ - மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்
     பெறலாம்
    * ஆயுள் விருத்தி கிடைக்கும்
    * செல்வம் பெருகும்
    * துன்பங்கள் நீங்கும்
    * நவக்கிரக தோஷங்கள் விலகும்
    * புத்திர பாக்கியம் கிடைக்கும்

    நாமக்கல் ஆஞ்சநேயர் தலத்திற்கு வரும் பக்தர்கள் மிகவும் பயபக்தியுடன் ஸ்ரீஆஞ்சநேயரிடம் தமது குறைகளை சமர்ப்பித்து தம்மால் செய்ய முடியாத செயல்களையும் ஸ்ரீஆஞ்சநேயர் உதவியால் நிறைவேற்றுகிறார்கள்.
    நாமக்கல் நகரில் நடுநாயகமாக விளங்கும் மலையான சாளக்கிராமத்தை நேபாள தேசத்திலிருந்து எடுத்து வந்து ஸ்ரீநரசிம்ம மூர்த்தி திருஉளப்படி இந்நகரில் ஸ்தாபனம் செய்து ‘ஸ்ரீநாமகிரி’ நாமக்கல் என்னும் பெயரை நிலை நாட்டிய பெருமை ஸ்ரீஆஞ்சநேயரையே சார்ந்தது.

    நமது ஐயப்பாடு நீங்கவே விஸ்வரூபத் கோலத்துடன் நிமிர்ந்து கைகூப்பி நிற்கிறார். மேலே விதானம் இன்றி திறந்த வெளியில் காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு கம்பீரமாக தரிசனம் கொடுக்கிறார்.

    இன்னமும் வளர்ந்து கொண்டிருப்பதால் மேல்விதானம் கட்டப்படவில்லை. இதைத் தவிர லோகநாயகனான ஸ்ரீநரசிம்மரே கிரி உருவில் மேல்விதானமின்றியிருப்பதால் தாசனான தனக்கும் அது தேவையில்லை என்று முன்னோர்கள் விதானம் கட்ட முயற்சித்தபோது ஸ்ரீ ஆஞ்சநேயர் சொப்பனத்தில் அருளியதாக சொல்லப்படுகிறது. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் மிகவும் பயபக்தியுடன் ஸ்ரீஆஞ்சநேயரிடம் தமது குறைகளை சமர்ப்பித்து தம்மால் செய்ய முடியாத செயல்களையும் ஸ்ரீஆஞ்சநேயர் உதவியால் சாதித்து கொண்டு தங்களால் இயன்ற வழிபாடுகளை நிறைவேற்றுகிறார்கள்.

    நவக்கிரகங்களில் குரூரமான சனி, ராகு, இவர்கள் பிரீதிக்காக விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணையில் செய்த உளுந்துவடைகளால் செய்த மாலைகள் சாற்றியும், விசேஷ திரவியங்களால் அபிஷேகங்கள் செய்வித்தும், புஷ்பங்களாலும் வாசனை சந்தனத்தாலும் அலங்காரம் செய்து மகிழ்ந்தும் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள்.

    ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்கு சாதூர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும்.
    இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இன்று ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
    இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 5 மணிமுதல் காலை 10 மணி வரை ஆஞ்சநேயர் 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் வருமாறு:-

    குபேர லட்சுமி அருள் கிடைக்கும். செல்வம் பெருகும்.

    நவக்கிரக தோஷங்கள் நீங்கி பல நன்மைகள் கிடைக்கும்.

    மாணவ, மாணவிகள் தரிசனம் செய்தால் அவர்களது வித்யா பலம் (கல்வி) பல மடங்கு அதிகமாகும். ஞாபக சக்தி பெருகும். தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள்.

    சர்வ மனோபலம் (தைரியம்) அபிவிருத்தியாகும்.

    எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்.

    பேரும், புகழும் பெருகும்.

    நாமக்கல் ஆஞ்சநேயரை அபிஷேகம் செய்த வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்கு சாதுர்யம் ஆகிய நன்மைகள் ஏற்படும்.
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் செய்யும் அபிஷேகங்களுக்கு கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

    நல்ல எண்ணெய் அபிஷேகம் - பித்ரு - சனி தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

    பஞ்சாமிர்த அபிஷேகம் - எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

    சந்தன அபிஷேகம் - தீர்வில்லா பொருளாதார ஏற்றம் அடையும், பணம் பெருகும்.

    சீயக்காய் அபிஷேகம் - மனோ சக்தி மேம்படும்.

    பால் அபிஷேகம் - மும்மாரி பொழியும்.

    ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு உளுந்து அளித்தல், அல்லது வடைமாலை அணிவித்தல்- ராகு திசை தோஷம் நிவர்த்தியாகும். சனி மற்றும் கேது தோஷமும் நீங்கும்.

    மொத்தத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்கு சாதுர்யம் ஆகிய நன்மைகள் ஏற்படும்.
    ராமநாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் வந்து அந்த நாமத்தை கேட்டு மகிழ்ந்து தாரக மந்திரத்தை உச்சரிப்பவர்களை காப்பார்.
    ராமநாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் வந்து அந்த நாமத்தை கேட்டு மகிழ்ந்து தாரக மந்திரத்தை உச்சரிப்பவர்களை காப்பார். அசாத்தியமான செயலைக்கூட ஆஞ்சநேயர் மிக எளிதில் செய்து முடிப்பவர்.

    இதனால் தான் அவர் கடலை தாண்டிச்சென்று சீதையை கண்டுபிடித்தார். ஞானம், பலம், வீரம், பக்தி, சேவை, பிரம்மச்சர்யம் ஆகிய அனைத்திலுமே ஆஞ்சநேயர் உச்சரித்த நிலையில் உள்ளார்.

    ராமர் வைகுண்டத்துக்கு சென்றபோதும் இந்த உலகில் சிரஞ்சீவியாய் இருந்து நம்மை காத்து வருகிறார்.
    அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். #NamakkalAnjaneyar #HanumanJayanti
    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேரம் ஆக, ஆக பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தார்கள்.

    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்கள் சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெறுவது போல் பிரமாண்டமான மலர் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. சுமார் ரூ. 3.5 லட்சம் செலவில் 1½ டன் எடையுள்ள ரோஜா, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.



    இதேபோல் சாமிக்கு இடது புறம் மற்றும் வலது புறத்தில் யானை உருவத்தை மலர்களால் அலங்காரம் செய்து இருந்தனர். இது மிகவும் தத்ரூபமாக இருந்தது.

    அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி நாமக்கல் பஸ்நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, ராசிபுரம், கோவை உள்ளிட்ட மார்க்கமாக செல்லும் பஸ்கள் மணிக்கூண்டில் இருந்து பரமத்தி சாலை வழியாக வள்ளிபுரம் பை-பாஸ் சென்று, அங்கிருந்து நல்லிபாளையம் பை-பாஸ் வழியாக சென்றது.

    நகருக்குள் வரும் பஸ்கள் வழக்கமான மார்க்கத்தில் வந்து சென்றன. கோட்டை சாலையில் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. #NamakkalAnjaneyar #HanumanJayanti
    அனுமனை விரதம் இருந்து வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும்.
    மகாவிஷ்ணு, ராமனாக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்தவர்கள் பலர். அப்படி உதவி செய்தவர்களில் முதன்மையானவராக இருந்து, ராமனுடனேயே தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவர் அனுமன். அவரது பிறப்பும், வாழ்வும், ராமன் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியுமே அவரை வழிபாட்டுக்கு உரியவராக மாற்றின.

    ‘ஹனுமான்’ என்ற வடமொழிப் பெயரில், ‘ஹனு’ என்பது ‘தாடை’ என்றும், ‘மன்’ என்பது ‘பெரியது’ என்றும் பொருள்படும். தாடை பெரிதான தோற்றம் கொண்டவர் என்பதால் ‘ஹனுமான்’ என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயரில் தமிழ் வடிவமே ‘அனுமன்.’ வானர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘மாருதி’ என்றும், அஞ்சனை-கேசரி மகன் என்பதால் ‘ஆஞ்சநேயர்’ என்றும் பெயர் பெற்றார்.

    ராமாவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு, அனைத்து ஜீவராசிகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதைப் பார்த்த சிவபெருமான், தன் பங்குக்கும் ஏதாவது செய்ய நினைத்தார். அதன்படி தன்னுடைய சக்தியை எடுத்துச் சென்று ஒரு பெண்ணிடம் தருமாறு வாயுதேவனை பணித்தார். அந்த நேரத்தில் தான் அஞ்சனை தனக்கு பார் போற்றும் மைந்தன் வேண்டும் என்று இறைவனை நினைத்து தவம் செய்தாள். அவளிடம் அந்த சக்தியைச் சேர்த்தார் வாயுதேவன். அதன்படி சிவபெருமானின் சக்தியாக அவ தரித்தவரே ஆஞ்சநேயர் என்ற கூற்று ஒன்று உள்ளது.

    மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன்- கிருஷ்ணனின் நட்பைப் போன்றது, ராமாயணத்தில் வரும் அனுமன்- ராமரின் நட்பு. ராமரின் மூலமாக வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்குக் கொண்டு வந்தார். இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை கண்டு வந்து ராமருக்கு ஆறுதல் அளித்தார். அசோக வனத்தில் இருந்த சீதையால் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று ஆசீர்வதிக்கப்பட்டவர் அனுமன்.

    ராவணனுடனான யுத்தத்தில் இந்திரஜித் செலுத்தி அம்பு பட்டு மூர்ச்சையான லட்சுமணனை காப்பாற்றுவதற்காக சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தார். 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர் வர தாமதமானதால், தீக்குளிக்கச் சென்ற பரதனை காற்றை விட வேகமாக சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினார். ராமாயணம் முடிந்து மகாபாரத காலம் வந்தது. அப்போது நடந்த குருசேத்திர யுத்தத்தில் கிருஷ்ணர் ஓட்டிய தேரின் மேல் கொடியாக இருந்து அனைத்து பாரங்களையும் தாங்கிக்கொண்டிருந்தவர் அனுமன்.

    இப்படி பல பெருமைகளை கொண்ட அனுமனை, மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார். அதனால் இவரை மகாவிஷ்ணுவின் சிறிய திருவடியாக கூறுவர். அதே சமயம் கருடாழ்வாருக்கு கிடைக்காத ஒரு பெருமையும் அனுமனுக்கு கிடைத்தது. அதாவது பெரிய திருவடியான கருடனுக்கு இல்லாத அளவில் தனிக் கோவில்கள் அனுமனுக்கு பல அமைந்திருக்கின்றன.

    அனுமன் வழிபாடும், அவருக்கு தனி கோவில்கள் எழுப்புவதும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்து தொடங்கியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அனுமனுக்கான ஆலயங்களில் வீரக் கோலம், நின்றகோலம், யோகக் கோலம் என மூன்று நிலைகளில் அனுமன் அருள்பாலிப்பார். அனுமன் ‘சிரஞ்சீவி’ என்ற பட்டத்தைக் கொண்ட எழுவரில் ஒருவர்.

    அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. அனுமன் வழிபாட்டினால் அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும். தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும்.

    உடல் மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி சூனியம் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், ஊழ்வினையால் துன்புறுகிறவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, எலுமிச்சைப்பழ மாலை, துளசி மாலை சாத்தி வழிபட்டால் மேன்மை பெறுவார்கள். வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நம் துன்பங்கள் அனைத்தும் வெப்பம் பட்ட வெண்ணெய் போல கரைந்து போகும் என்பது நம்பிக்கை.

    தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். இந்த கோவில் பற்றிய 15 சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.
    1) மார்கழி மாதம் மூலம் நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கொண்டாடப்படுகிறது.

    2) தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.

    3) ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.

    4) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்படும். சந்தனக்காப்பு, வெண்ணை காப்பு செய்யப்படுகிறது. வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும். விஷேச மலர் அலங்காரம் செய்யப்படும். முத்தங்கி அலங்காரம் செய்யப்படுகிறது. தங்க கவசம் மற்றும் வெள்ளிக் கவசம் சாத்தப்படுகிறது.

    5) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருட திருவிழா பங்குனி மாதம் 15 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதம் வரும் ஹஸ்த நட்சத்திரத்தில் 3 திருத்தேர்கள் திருவீதி உலா வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    6) நாமக்கல் ஆஞ்ச நேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள், கட்டண விவரங்கள் டிஜிட்டல் «பார்டு (எல்.இ.டி) மூலம் பக்தர்கள் பார்க்கும் அளவுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.

    7) ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது. நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    8) ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள், ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.

    9) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலின் முன்பகுதியில் வினாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

    10) ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே, கோவிலுக்குள் நுழையும் வாசலில் பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள்.

    11) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூ மாலைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    12) 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    13) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் மற்றும் வெள்ளிக்கவசம் சாத்துதல் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்வதற்கான கட்டளை பதிவு செய்யலாம்.

    14) தினமும் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் கட்டணம் செலுத்தி தங்க ரதத்தை புறப்பாடு செய்யலாம்.

    15) குழந்தைகள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு அறிவு, வீரம், தைரியம், வலிமை, பயமின்மை, ஞாபகசக்தி, சுறுசுறுப்பு, விடா முயற்சி, நல்ல ஒழுக்கம், அடக்கம், நேர்மை, நோயின்மை, தேர்ச்சி பெறுதல், உண்மை பேசுதல், நாவன்மை, புகழ், நற்பண்புகள் ஆகியவற்றை வழங்குகிறார்.
    ×