search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    சிவபெருமானை தினமும் வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும். எந்த நேரத்தில் சிவ வழிபாடு என்ன பலனைத்தரும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்
    முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்
    மாலை சிவதரிசனம் - விரும்பியதை அளிக்கும்

    இரவு சிவதரிசனம் - ஞானத்தை அளிக்கும்
    பிரதோஷகால சிவதரிசனம் - பிறவாமையைத் தரும்
    கருங்கல் சிலை ஒன்று எவ்வாறு தெய்வீக அருள் தரும் சிலையாக மாறுகிறது என்ற தகவல்களை இங்கே பார்க்கலாம்.
    மனதில் அமைதியை உருவாக்கும் இடங்களாக கோவில்கள் உள்ளன. அங்கே உள்ள சிலைகள் கும்பாபிஷேக சடங்கு மூலம் சக்தி அளிக்கப்பட்டு, அனைவராலும் வழிபடப்படுவதை அனைவரும் அறிவோம். அந்த சிலைகள் ஒரு காலத்தில் கற்களாக இருந்தவைதான். சாதாரண கல் ஒன்று எவ்வாறு வழிபடப்படும் தெய்வீக வடிவத்திற்கு மாற்றப்படுகிறது என்பது பல படிநிலைகள் கொண்ட நீண்ட செயல் திட்டமாகும். அவற்றின் பின்னணியில் பலரது உழைப்பும், தொழில் நுட்பமும், ஆன்மிகம் மற்றும் அறிவியல் காரணங்களும் அடங்கி இருக்கின்றன. கருங்கல் சிலை ஒன்று எவ்வாறு தெய்வீக அருள் தரும் சிலையாக மாறுகிறது என்ற தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    பெரும்பாலான, கோவில்களில் உள்ள வழிபாட்டுக்கு உரிய சிலைகள் கருங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் சுதை என்ற சுண்ணாம்பு கலவை அல்லது மார்பிள் கற்கள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அமைந்த சிலைகளின் அடிப்படை வெறும் கல்தான் என்று நினைத்து விட இயலாது. ஒரு சிலையை வடிப்பதற்கு முன்னர் அதன் தெய்வ அம்சம், உயரம், வடிவம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகம் சம்பந்தமான அடிப்படை கட்டமைப்பு அம்சங்களை தேர்ந்த நிபுணர்கள் முடிவு செய்வார்கள்.

    அதன் பின்னர் தேர்வு செய்த விஷயங்களுக்கு ஏற்ப கருங்கல் அல்லது மார்பிள் வகை கற்கள் உள்ள பகுதிக்கு சென்று தேவையான அளவு கொண்ட கல் தக்க தர நிலையில் உள்ளதா என்று கவனமாக தேர்வு செய்து, சிலையின் உயரம் மற்றும் அகலம் ஆகியவற்றை விடவும் நான்கில் ஒரு பங்கு அளவு அதிகம் கொண்ட கல் தேர்வு செய்யப்பட்டு கோவில் அமைய உள்ள பகுதிக்கு எடுத்து வரப்படும்.

    அதன் பின்னர் சிற்ப சாஸ்திர விதிகளின்படி சிலை முழுமையாக உருவாவது வரை நிறைய ஐதீக நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சிலையை உருவாக்கும் நிலையிலேயே நிறைய விதிமுறைகள் இருப்பது மட்டுமல்லாமல், மூலவராக உருவாக்கப்பட்ட சிலையை அப்படியே கோவிலுக்குள் எடுத்து சென்று பிரதிஷ்டை செய்து விட இயலாது. அதற்கான பிரதிஷ்டா நியமன வழிமுறைகள் அனைத்தும் அறிவியலும், ஆன்மிகமும் இணைந்த நிலையில் செயல் வடிவம் கொண்டவை. அவற்றின் மூலம் சிலைக்குள் இறை அம்சம் வரவழைக்கப்படுகிறது.

    ஆகம விதிமுறைகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதல் கட்டமாக சுத்தம் செய்யப்பட்டு, நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படும். அதாவது, மூன்று புண்ணிய நதிகள், முக்கியமான தீர்த்தங்கள் ஆகியவற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட நீரை சிலை அமைய உள்ள பகுதியின் நீரோடு கலக்கப்படும். அந்த நீரை ஒரு பெரிய தொட்டியில் நிரப்பி புதிய சிலை அதற்குள் நன்றாக மூழ்கும்படி, படுக்கை வசத்தில் ஒரு மண்டலம் என்ற 48 நாட்கள் வைக்கப்படும்.

    ஜலவாசத்தில் இருக்கும் சிலை படிப்படியாக குளிர்ச்சி அடைந்து நாளடைவில் மேலும் உறுதியாக மாறிவிடும். அவ்வாறு 48 நாட்கள் ஜலவாசத்தில் இருக்கும் சிலையில் ஏதாவது துளைகள் அல்லது நுட்பமான பிளவுகள் இருந்தால் நீர் அதற்குள் நுழைவதன் காரணமாக, நீர் குமிழிகள் உருவாகி மேலே வரும். அதன் அடிப்படையில், அது பின்னமான சிலை என்றும், வழிபாட்டுக்கு ஏற்றது அல்ல என்றும் கண்டறியப்படும். அதன் மூலம் குறையுள்ள சிலை கோவிலில் பிரதிஷ்டை செய்யாமல் தவிர்க்கப்படுகிறது. குறை உள்ள சிலையை பிரதிஷ்டை செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட ஊருக்கும், அதில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்புகளை உருவாக்கும் என்பது சாஸ்திர விதியாகும். அந்த நிலையை ஆரம்பத்தியிலேயே தடுக்கும் வழிமுறையாக ஜலவாசம் என்ற நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

    அதன் பின்னர் 48 நாட்கள் கழித்து, நீரில் ஊறிய சிலை எடுக்கப்பட்டு, அடுத்த கட்ட நடைமுறையான தானிய வாசத்தில் வைக்கப்படும். அதன்படி, சிலையை பாதுகாப்பான ஒரு இடத்தில் கிடை மட்டமாக வைத்து, முற்றிலும் மூழ்கும் அளவுக்கு நவ தானியங்கள் கொட்டப்படும். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் ஆகியவற்றையும் சேர்த்தே இந்த தானிய வாசம் வைக்கப்படுவது வழக்கம். சிலையில் தானிய வாசமும் 48 நாட்கள் கொண்டதாகும்.



    இந்த முறை தற்போதைய காலகட்டத்தில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, நீரில் அமிழ்த்தப்படுவதால் ஏதாவது ஓட்டை, விரிசல் இருப்பது தெரியவரும். ஜல வாசத்திற்கு பிறகும், ஏதேனும் குற்றம் குறைகள் இருந்தால் தானிய வாசம் சுட்டிக்காட்டும். அதாவது, நவதானியம் மூலமாக உருவாகும், வெவ்வேறு விதமான வெப்ப நிலைகள் சிலையை சுற்றிலும் 48 நாட்கள் பாதித்தவாறு இருக்கும். அந்த நிலையில் சிலையின் வலிமையற்ற பகுதிகள் உடைந்து விடும்.

    இன்றைய அவசர யுகத்தில் ஜலவாசம் மற்றும் தானிய வாசம் ஆகிய இரு நிலைகள் மட்டும் பரவலாக உள்ளது. தானிய வாசத்தில் நவ தானியங்கள், தங்க காசுகள், நவ ரத்தினங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களால் முடிந்த அளவு சேர்க்கப்படுகிறது.

    ஒரு சில இடங்களில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு வாரம் அல்லது 12 நாட்கள் வரையில் புஷ்பாதி வாசம் என்ற முறையிலும் சிலை வைக்கப்படுகிறது. அதாவது, பல்வேறு விதமான நறுமண மலர்கள் மூலம் சிலை மூழ்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சிலைக்கு வாசனை ஏற்படுகிறது. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு, கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசம் மூலம் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படும். அதன் பின்னர், சிலையின் கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதாவது, தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதி தங்க ஊசி மூலம் சிலையின் கண்ணில் மெல்லிய கீறல் வரைவார். அதன் மூலம் கருவிழி திறக்கப்பட்டு, அந்த தெய்வ சிலைக்கு முழுமையான அழகு வருகிறது.

    பின்னர் கும்பாபிேஷக நடந்த ஆறுகாலம் அல்லது எட்டு காலம் யாகசாலையில் மந்திர உச்சாரணம் செய்யப்பட்டு, அதை ஈர்த்துக்கொண்ட புனித கலச நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்கள் மூலம் சிலைக்கு தெய்வீக தன்மை அளிக்கப்படுகிறது. ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில், கருவறையில் இருக்கும் பிரதான ஆச்சாரியார் மூலம் ஐதீக முறைப்படி சிலையின் ஒன்பது துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு, ஆன்மிக சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்ட பின்னர் சிலை முழுமையான கடவுளாக மாற்றப்படுகிறது. சாதாரண கல்லில் இருந்து உருவான சிலை மேற்கண்ட பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி முழுமையான கடவுள் வடிவமாக மாறுகிறது என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும்.

    மன்னர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஆறு முறைகள்

    மன்னர் ஆட்சி காலங்களில் சிலைகளுக்கு ஆறு வகையான வாசம் என்று மேற்கொள்ளப்பட்டு வந்ததாக ஐதீகம். அதாவது, ஜலவாசம், தானிய வாசம் என்பது முதல் இரு நிலைகள் ஆகும். நவரத்தினங்கள் பயன்படுத்தப்படும் ரத்தின வாசம் என்பது மூன்றாவது நிலை. பொற்காசுகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவது தன வாசம் நான்காவதாகும். வகை வகையான பட்டாடைகள் சிலைக்கு அணிவிக்கப்படும் வஸ்திர வாசம் ஐந்தாவதாகும். கடைசியாக, ஹம்சதூளிகா மஞ்சம் என்ற அன்னத்தின் சிறகுகளால் உருவான படுக்கை மேல் மான் தோல் அல்லது புலித்தோல் விரிக்கப்பட்டு, அதன் மீது அந்த சிலை வழக்கப்படி 48 நாட்களுக்கு வைக்கப்படுவது சயன வாசம் எனப்படுவது ஆறாவதாகும்.

    மேற்கண்ட ஆறு வாசமும் 48 நாட்கள் வைக்கப்படும் என்ற நிலையில், அந்த சிலை மொத்தம் 288 நாட்கள் பல நிலைகளை கடந்து பிரதிஷ்டைக்கு தயாராக இருக்கும். ஜல வாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குறைகள் தெரிந்து விடும். ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெறும். தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெறுகின்றன என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டது.
    விநாயகரை ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம். ஆற்றங்கரையிலும், அரச மரத்தடியிலும் கண்டு வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்தாலும் கைகூப்பித் தொழுபவரை கணபதி காப்பாற்றுவார்.
    உலகத்திலேயே பிள்ளையாருக்காக முதன் முதலில் தனியாக அமைக்கப்பட்ட குடவரைக் கோவில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் உள்ள கோவில்தான். பிள்ளையாரின் பெயரைக் கொண்ட ஊராகவே அது அமைந்திருப்பது இன்னும் விசேஷம்.

    அந்த வகையில் எல்லோருக்குமே பலன் தரும், மூல முதற்கடவுள் பிள்ளையார். அவரை ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம். ஆற்றங்கரையிலும், அரச மரத்தடியிலும் கண்டு வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்தாலும் கைகூப்பித் தொழுபவரை கணபதி காப்பாற்றுவார்.

    திருச்சியில் உச்சிப் பிள்ளையார், மலையின் உச்சியில் இருக்கிறார். காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரில் சொற்கேட்ட விநாயகராக காட்சி தரு கிறார். செல்வ விநாயகர் என்றும், சித்தி விநாயகர் என்றும், வல்வினைகள் போக்கும் வல்லபகணபதி என்றும், லட்சுமியோடு இணைந்து லட்சுமி கணபதி என்றும் அழைக்கப்படுகிறார். இப்படி ஊர் தோறும் உன்னதமாகக் காட்சி தரும் பிள்ளையார் மஞ்சளிலே பிடித்து வைத்தாலும், மண்ணிலே செய்தாலும், சாணத்தில் செய்தாலும், சந்தனத்தில் செய்து வைத்து வணங்கினாலும், அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசச் செய்வார்.

    ஆலயங்களில் உள்ள பிள்ளையார்கள் பெரும்பாலும் மரங்களின் கீழே வீற்றிருப்பதை நாம் காண முடியும். அந்தப் பிள்ளையாரை எல்லாம், அரச மரத்தடிப் பிள்ளையார், வேப்ப மரத்தடி பிள்ளையார், வன்னி மரத்தடிப் பிள்ளையார் என்றெல்லாம் சொல்லி அழைத்து வழிபாடு செய்வார்கள். தாவரங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையாரிடம், “தா! வரம்” என்று கேட்டால், உடனடியாக தந்து விடுவார். நாவால் பாடி துதித்தால் நற்பலன்களை அள்ளி வழங்குவார். மரத்தடி விநாயகருக்குப் பொங்கல் வைத்து (சர்க்கரைப் பொங்கல்), அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்தால், இல்லத்தில் அன்பு பொங்கும், ஆற்றல் பொங்கும், இன்பம் பொங்கும்.

    எந்த மரத்தடியில் பிள்ளையார் இருக்கின்றாரோ, அந்த மரத்திற்குரிய நட்சத்திரம், நாள் பார்த்து அன்றைய தினம் யோகபலம் பெற்ற நேரத்தில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு வஸ்திரமும், மாலையும் அணிவித்து, அவல், பொரி, கடலை, அப்பம், மோதகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறும்.

    அரச மரத்தடிப் பிள்ளையாரை எப்பொழுது வணங்கினாலும் உடனடியாக நற்பலன் கிடைக்கும். மேலும் மூல நட்சத்திரமன்று மோதகம் படைத்து, குறிப்பிட்ட அளவில் வலம் வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும். சந்தோஷங்கள் வந்துசேரும்.

    வேப்ப மரத்தடிப் பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் கன்னிப் பெண்ளுக்கு கவலை தீரும். வணிகர் களுக்கு வளர்ச்சி கூடும். தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து, பக்தர் களுக்கு வழங்கினால் கடன் தொல்லை அகலும்.

    வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். ஆலமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்வு அமையும். பரணி நட்சத்திரம் அன்று நெல்லி மரத்தடிப் பிள்ளையாரை வழிபட்டால் நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும்.

    நாவல் மரத்தடி விநாயகரை வழிபாடு செய்தால் குடும்ப ஒற்றுமை கூடும். மகிழ மரத்தடிப் பிள்ளையார் வெளிநாட்டுத் தொடர்புக்கு வித்திட்டவர். அருகம்புல் மாலையை ஆனைமுகனுக்குச் சாத்தி வழிபட்டால் பொன், பொருள் பெருகும் என்பதை அனுபவித்தில் அறிந்து கொள்ளலாம். மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை மனமுருகி வழிபட்டால் மகிழ்ச்சி பெருகும். மன அமைதி கூடும்.

    “அருகம் புல்லையள்ளி ஆனைமுகன் உனக்களிக்கப்

    பெருகும் பொன்னையள்ளிப் பெருமையுடன் தருபவன் நீ!

    உருகி மனமுருகி உனைத்தொழுது போற்றுகின்றேன்!

    அருகில் வந்தெம்மை ஆதரிப்பாய் கற்பகமே!”

    என்ற பாடலை பாராயணம் செய்து, விநாயகரை வழி படுங்கள். அவர் உங்களுக்கு உன்னதமான வாழ்வைத் தருவார்.
    சிவபெருமானுக்கு உகந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.

    சுத்தமான பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

    சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால்  இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.

    எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.

    சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.

    இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

    பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

    தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

    கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.

    மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

    திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.

    அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

    அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்கஸ்வரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.

    தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி , பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

    சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.

    ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.

    ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்க போகம் கிடைக்கும்.
    சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்யும் போது அவருக்கு உகந்த மலர்களால் அர்ச்சனை செய்ய செய்யவேண்டும். எந்த மலர் வழிபாடு என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
    செந்தாமரை - தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி
    மனோரஞ்சிதம், பாரிஜாதம் - பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி
    வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி - மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.

    மாசிப்பச்சை, மரிக்கொழுந்து - நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.
    மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி - கடன்நீங்கும், கன்னியருக்கு விவாகப்ராபதி ஏற்படும்.
    செம்பருத்தி, அடுக்கு அரளி, தெத்திப்பூஞானம் நல்கும், புகழ், தொழில் விருத்தி.

    நீலச்சங்கு - அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.
    வில்வம் கருந்துளசி, மகிழம்பூ - சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைகூடும்.
    தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.

    குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல. கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.

    மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக்கூடாது.
     
    தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன்கோவில் பூச்சொரிதல் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடக்கிறது. அப்போது அம்மனுக்கு காப்பு கட்டப்படும். கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கூடைகளில் பூக்களை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு சாற்றுவார்கள்.

    நாளை நடப்பது போல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு வாரமும் திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் மின் அலங்கார ஊர்திகளில் அம்மன் படத்துடன் பூக்களை கொண்டு வந்து சாற்றுவார்கள். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு எந்த விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்கவேண்டும் என்பதற்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பதும் நாளை தொடங்குகிறது.

    பச்சை பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானம், இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    மனித உடலும், சிங்கமுகமும் கொண்டு மகா விஷ்ணு எடுத்த அவதாரம் ‘நரசிம்ம அவதாரம்.’ இந்த அவதாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
    மனித உடலும், சிங்கமுகமும் கொண்டு மகா விஷ்ணு எடுத்த அவதாரம் ‘நரசிம்ம அவதாரம்.’ இரண்யாசுரனை வராக அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு வதம் செய்தார்.

    அந்த இரண்யாசுரனின் சகோதரன் இரண்யகசிபு. தன் சகோதரனைக் கொன்றதால், மகாவிஷ்ணுவின் மீது தீராத பகை கொண்டிருந்தான். தன்னையே கடவுளாக அனைவரும் வழிபட வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவனது மகனான பிரகலாதன், நாராயணரின் நாமங்களைச் சொல்லி, அவரையே இறைவனாக பாவித்து வழிபட்டான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இரண்யகசிபு, மகன் என்றும் பாராமல் பிரகலாதனைக் கொல்ல பலமுறை முயற்சித்தான். ஆனால் பிரகலாதனின் பக்தி, அவனை ஒவ்வொரு முறையும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக் கொண்டே இருந்தது. ஒரு முறை இரண்யகசிபு தன் மகன் பிரகலாதனிடம், “உன் இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பதை நிரூபித்துக் காட்டு” என்று சவால் விடுத்தான்.

    பக்தனுக்காக தூணில் இருந்து நரசிம்ம அவதாரத்தில் வெளிப்பட்டார், மகா விஷ்ணு. பின்னர் இரண்யகசிபுவை வதம் செய்து, பிரகலாதனை ஆட்சியில் அமர்த்தினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது. சுமார் 118 கிலோமீட்டர் தூரம் கொண்டது, சிவாலய ஓட்டம். சிவராத்திரி அன்று அதிகாலை 3 மணி அளவில் காவி வேட்டி, காவித்துண்டு, ருத்ராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் இந்த ஓட்டத்தை சிவ பக்தர்கள் தொடங்குவார்கள். 12 சிவாலயங்களில் முதல் ஆலயமான முஞ்சிறை என்ற திருமலையில் இருந்து இந்த ஓட்டம் தொடங்கும். 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தை தரிசிக்கும் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெறும்.

    முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்' ஆகியவை அந்த 12 ஆலயங்கள் ஆகும்.

    பாண்டவர்களின் மூத்தவரான தருமர், ராஜ குரு யாகம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு, புருஷா மிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. வியாக்ரபாத மகரிஷிக்கு, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த நினைத்தார், மகாவிஷ்ணு. அதன்படி பீமனிடம், புருஷா மிருகத்தின் பால் கொண்டுவர கட்டளையிட்டார். கூடவே 12 ருத்ராட்சங்களை பீமனின் கையில் கொடுத்தார். “உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால், இதில் ஒன்றை கீழே போட்டுவிடு” என்று சொல்லியும் அனுப்பினார்.

    பீமன் புருஷா மிருகத்தை தேடி கானகம் வந்தான். அன்று மகாசிவராத்திரி நன்னாள். அங்கே புருஷா மிருகம் சிவ தவத்தில் முஞ்சிறை திருமலையில் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அங்கு பீமன் சென்று, “கோபாலா.. கோவிந்தா...'' என்று கூறி புருஷா மிருகத்தை சுற்றி வந்தான். திருமாலின் திருநாமத்தைக் கேட்டதும், புருஷா மிருகம் மிகவும் கோபம் அடைந்து, பீமனை விரட்ட ஆரம்பித்தது. உடனே பீமன் அந்த இடத்தில் ஒரு ருத்ராட்சத்தைப் போட்டான். கீழே விழுந்த ருத்ராட்சம், ஒரு சிவலிங்கமாக மாறியது. இதைப் பார்த்ததும் புருஷா மிருகம் சிவலிங்க பூஜை செய்யத் தொடங்கி விட்டது.

    சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி, பால் பெற முயன்றான். புருஷா மிருகம் மீண்டும் பீமனைப் பிடிக்க துரத்தியது. சிறிது தூரம் ஓடிய பீமன் மீண்டும் ஒரு ருத்ராட்சத்தை கீழே போட்டான். அதுவும் சிவலிங்கமாக மாறியது. அதைப் பார்த்து மீண்டும் புருஷா மிருகம் சிவ பூஜை செய்யத் தொடங்கியது.

    இப்படியே 12 ருத்ராட்சங்களும் 12 சிவ தலங்களாக உருவாகி நின்றன. 12-வது ருத்ராட்சம் விழுந்த இடத்தில் ஈசனுடன் மகாவிஷ்ணு இணைந்து, சங்கர நாராயணனாக காட்சி தந்தனர். அதைக் கண்ட புருஷா மிருகம் அரியும், அரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டது. கடைசி தலமான திருநட்டாலத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோலத்திலும் ஈசன் காட்சி தந்தார்.

    அந்த மகிழ்ச்சியில் தருமரின் யாகத்திற்கு பால் கொடுக்க புருஷா மிருகம் ஒப்புக் கொண்டது. இதை மெய்ப்பிக்கும் வகையில் திருநட்டாலத்தில் இன்னும் இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்றில் ஈசன், அர்த்தநாரீஸ்வரராகவும், மற்றொரு ஆலயத்தில் சங்கரநாராயணராகவும் அருள்பாலிக்கிறார். சிவாலய ஓட்டம் தொடர்பான திருக்கோவில்களின் தூண்கள், புருஷா மிருகம் மற்றும் பீமனின் சிற்பங்களை நாம் பார்க்க முடியும்.

    மேற்கண்ட புராண நிகழ்வின் அடிப்படையில்தான் ஆண்டுதோறும் சிவராத்திரி நன்னாளில் அடியவர்கள் சிவாலய ஓட்டம் சென்று, வேண்டியதை பெறுகிறார்கள். சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அடியவர்களுக்கு ஆங்காங்கே மோர், பழரசம், பானகம், கிழங்கு, கஞ்சி போன்றவற்றைக் கொடுத்து பக்தர்கள் பலரும் மகேஸ்வர பூஜை செய்கிறார்கள்.

    பீமன் ஒரே சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களுக்கும் ஓடியதால், இந்த ஆலயங்கள் ‘சிவாலய ஓட்டத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்களில் மகா சிவராத்திரி மட்டுமின்றி, மாதாந்திர சிவராத்திரி நாட்களிலும் சிவராத்திரி ஓட்டம் நடக்கிறது.
    நத்தம் மாரியம்மனின் அருளை பெற எந்த பொருளை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
    நத்தம் மாரியம்மனுக்கு எதனை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

    * மஞ்சள்பொடி - ராஜா போன்ற நிலை

    * நெய்-மோட்சம் கிடைக்கும்

    * புஷ்பகவ்யம் - புனித தத்துவங்களின் அடிப்படையில் வாழ்க்கை அமையும்

    * தண்ணீர் - மனஅமைதி தரும்

    * தீர்த்தம் - மன அமைதி தரும்

    * அரிசிமாவு - கடன் நீங்கும்

    * மாதுளைச்சாறு-லாபம் கிடைக்கும்

    * சந்தனம்- பக்தி, ஞானம் பெருகும்

    * வாசனைத் திரவியங்களும், எண்ணெய்காப்பும்- குடும்பத்தினரின் நலன் அதிகரிக்கும்

    * பால் - ஆயுள் விருத்தி

    * கரும்புச்சாறு - உடல்நலம், ஆயுள்பலம்

    * எலுமிச்சைச்சாறு - ஞானம்

    * புஷ்பங்கள் - செல்வம் குவியும்

    * பன்னீர் - திருப்தியான மனநிலை
    சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெறும் சிவாலய ஓட்டம் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விரதம் மேற்கொள்வார்கள்.
    குமரி மாவட்டத்தில் கல்குளத்தை சுற்றி 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் காவி உடை அணிந்து “கோபாலா... கோவிந்தா...” என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து புறப்படும் பக்தர்கள் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு செல்வர்.

    பின்னர் அருமனை, களியல் வழியாக 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவில், அதைத்தொடர்ந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவிலை அடைவார்கள். பின்னர் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் சென்று வழிபடுவார்கள். இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.

    அதன்பிறகு மேலாங்கோடு சிவன் கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், கோழிப்போர் விளை பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று விட்டு, இறுதியாக நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்டத்தின் போது பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான சிவாலய ஓட்டம் மார்ச் 3-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி முடிவடைகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விரதம் மேற்கொள்வார்கள். விரதத்தின் போது, முதல் 5 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்து, காலை, மாலை நேரங்களில் குளித்து, சாமி கும்பிடுவார்கள். சிவாலய ஓட்டம் தொடங்கும் 3-ந் தேதி தீயில் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். 
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    நகுலன்


    பாண்டவர்களில் நான்காவதாக பிறந்தவன் நகுலன். பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரிக்கு, அஸ்வினி குமாரர்களின் அம்சமாக பிறந்த இரட்டையர்களில் ஒருவன். இவன் வில் எய்தல் மற்றும் வாள் சண்டையில் சிறப்பு பெற்றவன். பாண்டவர்கள் 5 பேரில் மிகவும் அழகானவனாக நகுலன் கருதப்படுகிறான். இவன் வனவாசத்தின் இறுதி காலத்தில், விரத தேசத்தில் இருந்தான். அப்போது அந்த நாட்டு மன்னனின் குதிரைகளை மேற்பார்வையிடுபவனாக பணியாற்றினான். குதிரைகளோடு பேசும் திறமை படைத்தவனாக இருந்தான். மகாபாரத யுத்தத்தின் போது, கர்ணனின் மகன்களான சித்திரசேனன், சத்தியசேனன், சுஷேனன் ஆகியோரை கொன்றான். கர்ணனுடன் போரிட்டபோது, அவனுக்கு ஈடுகொடுத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினான். இருந்தாலும் நகுலனின் தேரையும், படைகளையும் சிதறடித்தான் கர்ணன்.

    பாண்டவர்கள்

    அஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்த பாண்டுவிற்கு குந்தி, மாத்ரி என இரண்டு மனைவிகள். இவர்கள் இருவருக்கும் பல தேவர்களின் அம்சமாக ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். பாண்டுவின் மகன்கள் என்பதால் இவர்கள் 5 பேரும் ‘பாண்டவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். பாண்டவர்களின் மூத்தவர் யுதிஷ்டிரர், அடுத்ததாக பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன். பாண்டவர்களுடன், கவுரவர்களான துரியோதனன் உள்ளிட்ட 100 சகோதரர்களுக்கும் பொறாமை உணர்வு ஏற்பட்டது. அதன் காரணமாகவே மகாபாரத யுத்தம் உருவானது. யுத்தத்தில் பாண்டவர்கள், கவுரவர்கள் இருவரின் தரப்பிலும் பல இழப்புகள் ஏற்பட்டன.
    குமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்று மையை வலியுறுத்தி நடைபெறும் சிவாலய ஓட்டம் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது.
    குமரி மாவட்டத்தில் கல்குளத்தை சுற்றி 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் காவி உடை அணிந்து “கோபாலா... கோவிந்தா...” என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து புறப்படும் பக்தர்கள் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு செல்வர்.

    பின்னர் அருமனை, களியல் வழியாக 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவில், அதைத்தொடர்ந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவிலை அடைவார்கள். பின்னர் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் சென்று வழிபடுவார்கள். இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.

    அதன்பிறகு மேலாங்கோடு சிவன் கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், கோழிப்போர் விளை பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று விட்டு, இறுதியாக நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்டத்தின் போது பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.

    இந்த ஆண்டு சிவாலய ஓட்டம் மார்ச் 3-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி முடிவடைகிறது.

    இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விரதம் மேற்கொள்வார்கள். விரதத்தின் போது, முதல் 5 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்து, காலை, மாலை நேரங்களில் குளித்து, சாமி கும்பிடுவார்கள். சிவாலய ஓட்டம் தொடங்கும் 3-ந் தேதி தீயில் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.

    சிவாலய ஓட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் 2 விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவற்றில் பீமன் கதை தான் ஏராளமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

    பாண்டவர்களில் முதல்வரான தர்மபுத்திரனின் ராஜகுரு வியாச மகரிசி யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷ மிருகத்தின் பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. பீமனின் அகந்தையை அடக்கவும், வியாச மகரிசிக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என பாடம் புகட்டவும் நினைத்த மகா விஷ்ணு, பீமனிடம் பால் கொண்டு வர கட்டளையிட்டார்.

    அத்துடன் 12 உத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒன்றை கீழே போட்டுவிடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் தயக்கத்துடன் உத்திராட்சங்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும் போது அங்கு புருஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது.

    அப்போது பீமன், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பியபடி பால்பெற முயற்சி செய்தார். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவுடன் புருஷமிருகத்துக்கு சிவலிங்கம், விஷ்ணுவாக தெரிய, தவம் கலைந்து விடுகிறது. சிவபூஜையில் புகுந்த பீமனை அது கோபத்துடன் துரத்தி சென்று பிடித்துக்கொண்டது. உடனே பீமன் ஒரு உத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் சிவலிங்கம் உருவாகியது. புருஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் லிங்கபூஜையை தொடங்கி விடுகிறது.

    சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும் ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி பால் பெற முயன்ற போது புருஷ மிருகம் மீண்டும் துரத்தி சென்று பீமனை பற்றிக்கொள்ள அடுத்த உத்திராட்சத்தை அங்கு போட்டு விட்டு ஓடி விட்டார். இவ்வாறு 12 உத்திராட்சங்களும் 12 சைவதலங்களை உருவாக்கி விடுகிறது. 12-வது உத்திராட்சம் போடும் போது பீமனின் ஒரு கால் வியாச மகரிசிக்கு சொந்தமான இடத்திலும், மறுகால் வெளியிலும் இருந்தது.

    உடனே பீமன் அதனுடன் வாதம் செய்தான். இந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன், தனது தம்பி என்றும் பாராமல் புருஷமிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார். பீமனுடைய உடலில் பாதி புருஷமிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியில் யாகம் நிறைவேற புருஷமிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புருஷமிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது. இவ்வாறு பீமன் ஓடியதை நினைவு கூறும் வகையில், இன்றும் பக்தர்கள் கோவில்களுக்கு ஓடிச்சென்று வழிபடுகிறார் கள் என்று கூறப்படுகிறது.
    ×