என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 95509
நீங்கள் தேடியது "slug 95509"
திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது.
இது 108 வைணவ கோவில்களில் 62-வது கோவிலாகும். இங்கு ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடன் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயார் உற்சவர் என பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
திருமண தடை நீக்கம் மற்றும் ராகு, கேது தோஷங்களின் பரிகார கோவிலாகவும் இது விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல்துறை இணைந்து இந்த கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றனர்.
கோவிலில் புதிதாக கொடிமரம் அமைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தது. பணிகள் முழுவதும் முடிந்து இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி பிரதிஷ்டை, யாகம், வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம் சாற்றுதல் வழிபாடுகள் தொடங்கி நடந்தது. காலை 9.45 மணியளவில் வேதபுஷ் பன்னர்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
விழாவில் இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் அசோக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட எம்.பி மரகதம், குமரவேல், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆர்.ஜெயா வேலூர் ஆணையர் அசோக்குமார் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.

திருமண பிரார்த்தனை தலம் என்று புகழ் பெற்றுள்ள திருவிடந்தை அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோக்சணம் (கும்பாபிஷேகம்) இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
திருமணம் கைகூடும் திருத்தலம், திருமண பிரார்த்தனை தலம் என்றெல்லாம் புகழ் பெற்றுள்ள திருவிடந்தை அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோக்சணம் (கும்பாபிஷேகம்) நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் கோவில் இருக்கிறது. இது சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது. கி.பி. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமங்கை யாழ்வார் திருவிடந்தைப் பெருமாளை போற்றி 13 பாசுரங்கள் பாடியுள்ளார். 108 திவ்ய தேசங்களில் 62-வது திவ்ய தேசமாக இந்த தலம் போற்றப்படுகிறது.
இந்த ஊரின் பெயர் நித்யகல்யாணபுரி, கடவுளின் பெயர் நித்யகல்யாணப் பெருமாள் கோவில் விமானம் கல்யாண விமானம், திருக்குளத்தின் பெயர் கல்யாண தீர்த்தம். ஆதிவராகப் பெருமாளும் அகிலவல்லி நாச்சியாரும் ஏன் கோமளவல்லித் தாயாரும் தினசரி காட்சி தருவதும் கல்யாணக் கோலத்தில் தான். ஆலயத்தின் தல மரமாக, மணவிழாவிற்கு உகந்த புன்னை மரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாணங்களின் போது மாப்பிள்ளை, பெண்ணுக்குக் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைப்பார்கள், அதுபோல் இயற்கையாகவே நித்யகல்யாணப் பெருமாளுக்கும், கோமளவல்லித் தாயாருக்கும் திருஷ்டிப் பொட்டு அமைந்திருப்பது இங்கே பேரதிசயம். பெருமாளுக்கு இங்கே தினந்தோறும் கல்யாணம் நடக்கிறது. 108 திவ்ய தேசங்களுள் இத்திவ்ய தேசத்தில் மட்டுமே ஆண்டின் 365 நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. வேறு எந்த திவ்ய தேசத்துக்கும் இந்த சிறப்பு கிடையாது.
இங்குள்ள பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர். 360 கன்னிகள் சேர்ந்து ஒருங்கே உருவானதால், வராகரின் இடபாகத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லித் தாயார் என்றும் வருடம் பூராவும் திருமணம் செய்து கொண்டதால், வராகருக்கு, நித்யகல்யாணப் பெருமாள் என்றும், இந்த தலம் நித்திய கல்யாணபுரி என்றும் பெயர்கள் ஏற்பட்டன. 360 பெண்களில் மூத்தவளின் பெயர் கோமளவல்லி என்பதால், இங்கே தனிக் கோவிலில் காட்சி தரும் தாயாருக்கும் கோமளவல்லி என்றே பெயர்.
திரு (லட்சுமி)வை தனது இடது பக்கத்தில் பெருமாள் வைத்துக் கொண்டதால், இந்த ஊருக்குத் திருஇடவெந்தை என்ற பெயர் ஏற்பட்டது. தேவியைத் தனது இடப்பக்கத்தில் எழுந்தருள வைத்து சரம ஸ்லோகத்தை உலகத்தாருக்கு உபதேசித்து அருளினார். (இதுபோல மனைவியை வலது பக்கத்தில் வைத்துக் கொண்டு, வராகர் காட்சி தரும் திருவலவெந்தை என்ற கோவில் மகாபலிபுரத்தில் இருக்கிறது.) கோமளம் என்ற தாயாரின் பெயர் திரிந்தே கோவளம் என்ற பெயரும் ஏற்பட்டது.
தோரண வாயிலின் மேல் மண்டபத்தில், ஸ்ரீஆதிரராக மூர்த்தி தேவியுடன் இருக்கும் சுதையிலான சிற்பம் எழிலுற அமைக்கப்பட்டுள்ளது. அதை அடுத்துள்ள மண்டபத்தின் கல் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ஸ்ரீ மகாவிஷ்ணு, காளிங்க நர்த்தனார், நரசிம்மர் ஆகியவர்களின் சிற்பங்கள் மிக அற்புதமாக உள்ளன. அதைக் கடந்து சென்றால் ராஜகோபுரம், பலி பீடம், கொடிக் கம்பத்தைக் காணலாம். கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் 6 1/2 அடி உயரம் உள்ள கல் விக்ரகமாக - இடது காலை மடக்கி ஆதிசேஷன் தலை மீது வைத்து, அத்தொடையில் அகிலவல்லித் தாயாரைக் தாங்கி கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின் கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேஷன் உள்ளார்.
உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய சிறப்புடைய இந்த தலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் திருப்பணிகள் அனைத்தும் பார்த்து, பார்த்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கற்களில் எங்கெல்லாம் வெடிப்பு, கீறல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து சீரமைத்துள்ளனர். 1200 ஆண்டுகளுக்கு முன்பே உருவான இந்த கோவிலில் சேர, சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்கள் ஏராளமான திருப்பணிகளை செய்துள்ளனர்.
இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை, இந்த உலகுக்கு எடுத்துக்காட்டும் அற்புத சுரங்கங்களாக உள்ளன. இதனால் அந்த கல்வெட்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதபடி திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இந்த திருப்பணிக்கு மத்திய தொல்லியல் துறை மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும், பக்தர்களும் நிதி உதவி செய்துள்ளனர். என்றாலும் திருப்பணிகள் 4 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில்தான் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த திருப்பணி காரணமாக திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ஆலயம் புத்துணர்ச்சி பெற்று ‘பளிச்’சென மாறி உள்ளது. திருமண பிரார்த்தனைக்காக வருகை தரும் பக்தர்கள் மனதில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று அங்கு யாக சாலை பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் காலை அனுக்ஞையுடன் சிறப்புப் பூஜைகள் நடந்தன. வாஸ்து சாந்தி செய்யப்பட்டு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை இதிகாச புராண திவ்ய பிரபந்தம் தொடங்கப்பட்டது. அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமம் வளர்த்தனர்.
இன்று (புதன்கிழமை) காலை மகாசாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. இன்று மதியம் பிம்பவாஸ்து செய்யப்பட்டு, நவகலச ஸ்தாபனம் நடந்தது. இன்று பிற்பகலில் சர்வதேவார்ச்சனம் நடத்தப்பட்டு பிரதான அதிவாச ஹோமங்கள் செய்யப்படுகிறது.
இன்று (வியாழக்கிழமை) விளம்பி ஆண்டு வளர்பிறை சப்தமி திதியும் உத்திரட்டாதி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா சம்ப்ரோக்சணம் (கும்பாபிஷேகம்) நடைபெற உள்ளது. அப்போது பிரம்மதோஷம், அனுக்கிரகம், வேத பிரபந்தம் சாற்று முறை நடைபெறும்.
அதன் பிறகு தீர்த்தம் வினியோகம் செய்யப்படும். இதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு சுவாமி சர்வ தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நாளை இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும்.
இன்று கும்பாபிஷேக விழாவில் திருமலை, திருப்பதி ஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் சுவாமிகளும் சிறிய ஜீயர் சுவாமிகளும் கலந்து கொண்டு நித்ய கல்யாண பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

எலவத்தடி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி அருகே உள்ள எலவத்தடி கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் விநாயகர், முருகன், தட்சணாமூர்த்தி, பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து தினசரி யாக சாலை பூஜை நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, விநாயகர் பூஜை, வருண பூஜை நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பத்ரகாளியம்மன் கோவில் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் எலவத்தடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரியகொரமத்தி படையாட்சி வகையறாக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

புதுவை மாநிலம் ஏம்பலத்தை அடுத்த தமிழக பகுதியான நல்லாத்தூர் கிராமத்தில் சிவப் பிரகாஷ சுவாமிகள் கோவிலில் முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது.
புதுவை மாநிலம் ஏம்பலத்தை அடுத்த தமிழக பகுதியான நல்லாத்தூர் கிராமத்தில் சிவப் பிரகாஷ சுவாமிகள் கோவில் உள்ளது. இது மயிலம் பொம்மபுர ஆதீனத்துக்கு உட்பட்டதாகும். இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது.
நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜையும், காலை 8 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலசாமிகள் தலைமையில் இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கல்வி கடவுள் சரஸ்வதிக்கு இந்தியாவிலேயே திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கூத்தனூரில் தனி கோவில் உள்ளது. இக்கோவிலில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு சுவாமி வழிபாடு செய்து பேனா, பென்சில், நோட்டு, புத்தகம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்து பள்ளியில் சேர்க்கிறார்கள். .
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் திருப்பணி வேலைகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றதையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 24-ந் தேதி முதல் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தியும் 30-ந் தேதி வரை 7 கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 6 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் கங்கை, யமுனை, காவிரி, பிரம்மபுத்திரா ஆகிய புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்கள் அடங்கிய கடங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் கணேசன், பிச்சை, ஜெயலட்சுமி, செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்து இருந்தனர்.

நாகர்கோவில் கோட்டார் கோதண்டராமசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில் கோட்டார், வாகையடி கீழரதவீதியில் சவுராஷ்டிரா சமுதாய பதினொன்று குடும்பத்தினருக்கான கோதண்டராமசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் திருமுறை சாத்துதல், யானை மீது புனித நீர் கொண்டு வருதல், யாக கால வேள்வி பூஜை, 108 கலச பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தன.
விழாவில் நேற்று காலையில் கோவில் ராஜகோபுரம், விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோதண்ட ராமசாமி, சீதா, லட்சுமணர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றன. பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., சவுராஷ்டிரா மத்திய சபா தலைவர் டாக்டர் ஸ்ரீராம்சேகர், பொது செயலாளர் சாந்தராம், சவுராஷ்டிரா முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ், கோட்டார் இந்து வாணியர் சமுதாய சங்கரபாண்டியன், செங்குந்தர் சமுதாய வள்ளியானந்தம், இசங்கன்விளை இந்து நாடார் சமுதாய மகேஷ்வரன், கோட்டார் இந்து வெள்ளாளர் சமுதாய மாதவன்,சுப்புலெட்சுமி சில்க்ஸ் புத்தாராம் மற்றும் பல்வேறு சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் கோதண்டராமர், சீதா பிராட்டி திருக்கல்யாணம், சாமி திருவீதி உலா வருதல் போன்றவை நடந்தது.
விழா ஏற்பாடுகளை தலைவர் புசட்டி சங்கரன், செயலாளர் காசிராஜாராம், பொருளாளர் தஸ்மா ஸ்ரீதர், துணை தலைவர் குஜூலுவாசுவாமி அய்யனார், துணை செயலாளர் சித்தா ரெங்கநாதன் மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்கள், கோட்டார் சவுராஷ்டிரா சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.

பூதங்குடியில் உள்ள தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, கடந்த 28-ந்தேதி அனுக்ஞை, வாஸ்து யாகம், கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
இதை தொடர்ந்து 29-ந்தேதி காலை முதல் கால யாகசாலை பூஜையும், மாலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பூர்ணாகுதி, திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணிக்கு திவார பூஜை, சதுஸ்தான அர்ச்சனம், பூர்ணாகுதி, சாற்றுமுறை நடைபெற்றது.
நேற்று காலை 8.30 மணிக்கு விஸ்வரூபம், பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு மேல் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இதையடுத்து கோவில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, 9.30 மணிக்கு அங்கிருந்த கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து பரிவார தெய்வமான சுதர்சனர், யோக நரசிம்மர், அய்யப்பன், ராமபாதம், நவகிரகங்கள் மற்றும் நாக கண்ணி, தும்பிகை ஆழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. யாகசாலை பூஜையை ஆச்சாரியார் பாபு தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் நடத்தினர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை மறைந்த பி.டி. ஜெயராமன் குடும்பத்தை சேர்ந்த டாக்டர் மோகன், என்ஜினீயர் மனோகரன், கலையரசன் ஆகியோர் தலைமையில் ராசகண்ணு, ஆத்மநாபான், சுந்தரவதனம், பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் கோவில் சிற்ப வடிவமைப்பு மற்றும் சிற்பகலை ஏற்பாடுகளை அரங்கப்பன் செய்திருந்தார்.
விழாவில் அருண்மொழி தேவன் எம்.பி., பாண்டியன் எம்.எல்.ஏ., ஜோதி பிரகாஷ், விநாயகம், ஜெயசீலன், சேத்தியாத்தோப்பு வியாபாரி சங்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மணிமாறன், மகாலிங்கம், ஆனந்தபாபு, குஞ்சிதபாதம், கலைவாணன், மணிகண்டன், நன்மாறன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினர், பி.டி. ஜெயராமன் ஐ.டி.ஐ. மாணவர்கள், ஆர்.கே. செக்யூரிட்டி சர்வீசை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 4-ம் நிலை கட்டுமான பணி தொடங்கியது.
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டுமென்பது இந்து கோவில்களின் ஆகம விதியாகும். அதன்படி இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விரைவில் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர்.
இதைதொடர்ந்து பரமத்தி வேலூரைச் சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதையொட்டி திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது தரை மட்டத்தில் இருந்து 103 அடி உயரம் கொண்டதாக இந்த ராஜகோபுரம் அமைய உள்ளது. இந்நிலையில் ராஜகோபுரத்தின் மூன்று நிலைகள் கட்டுமான பணி நிறைவு பெற்றது.
இதைத் தொடர்ந்து 4-ம் நிலை கட்டுவதற்காக சாரம் அமைக்கும் பணியும், கீழே இருந்து கட்டுமான பொருட்களை மேலே எடுத்து செல்ல வசதியாக புதிதாக லிப்ட் அமைக்கும் பணியும் கடந்த சில நாட்களாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று நான்காம் நிலை கட்டுவதற்கான பணி தொடங்கியது.
கட்டுமானப் பணியில் மேற்பார்வையாளர் முருகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கட்டுமான பணிகளுக்கு தடையில்லாமல் தேவையான சவுக்கு கம்புகள், செங்கல், மணல், ஜல்லி, சிமெண்டு போன்ற பொருட்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளன.

நாகர்கோவில், வடசேரி டிஸ்டிலரி ரோட்டில் மிகவும் பழமையான பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. காலை 6 மணிக்கு விக்னேஷ்வரர் பூஜை, 9.30 மணிக்கு சுதர்சன ஹோமம், மாலை 3.45 மணிக்கு ஒழுகினசேரி ஆறாட்டு துறையில் இருந்து புனித நீர் எடுத்து, யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து 6.30 மணிக்கு வாஸ்து ஹோமம், இரவு 8 மணிக்கு முதலாம் கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, நள்ளிரவு 11 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெறுகிறது.
நாளை காலை 6 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9 மணிக்கு பிம்ப சுத்தி, தீபாராதனை, கடப்பிரதஷனம் ஆகியவை நடைபெறுகிறது. 9.15 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகள், பரிவார தேவதை விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10.30 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, 11.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அதிகாரிகள் உதவியுடன் பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோவில் திருப்பணிக்குழு மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் கோவில். இந்த கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், நாளை(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, கணபதி ஹோமத்துட விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பூர்ணா குதி நடந்தது. பின்னர் மாலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பூர்ணாகுதி, திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு திவார பூஜை, சதுஸ்தான அர்ச்சனம், பூர்ணாகுதி, சாற்று முறை நடக்கிறது.
நாளை காலை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு விஸ்வரூபம், பூர்ணாகுதி நடந்து, காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கோபுரத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் குடும்பத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் 108 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலும் ஒன்றாகும். பழமையும், பெருமையும் வாய்ந்த இக்கோவிலில் தை அமாவாசையையொட்டி எண்ணெய் காப்பு திருவிழா, பங்குனி மாத தேரோட்டம், சித்திரை மாத தேரோட்டம் ஆகிய திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும்.
இக்கோவில் 108 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்தது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 23-ந் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. முன்னதாக யானை மீது கும்பத்தில் புனிதநீர் எடுத்துவந்து மாடவீதிகளில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
விழா நாட்களில் தினமும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜையில் இருந்து புனிதநீர் கும்பம் மேளதாளங்கள் முழங்க கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தது. பின்னர் புனிதநீர் கோபுர விமான கலசத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, 9 மணி அளவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா, கோபாலா என பக்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கோவில் உள்மாட வீதிகள் மற்றும் தெருக்களில் ஏராளமான பக்தர்கள் தங்களது வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்று கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.
இதையொட்டி கோவில் சன்னதி தெருவில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விழாவில் வசந்தகுமார் எம்.எல்.ஏ., ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. மாசானமுத்து, நாங்குநேரி தாசில்தார் வர்கீஸ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் மடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு அஜித் ராவத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலிலும் அதனை சார்ந்த மற்ற சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலிலும் அதனை சார்ந்த மற்ற சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஆனந்த நிலையம், கருடாழ்வார் சன்னதி, தாயார் சன்னதி, வரதராஜர், யோக நரசிம்மர், ஆஞ்சநேய சுவாமி சன்னதிகளிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி ஆகஸ்ட் 11-ந்தேதி இரவு 9 மணி முதல் 10 மணிக்கிடையே அங்குரார்ப்பணம் நடக்கிறது. 12-ந்தேதி பாலாலயம் மற்றும் முதல் யாக சாலையில் உற்சவமூர்த்திகள் கருவறையில் இருந்து யாக சாலைக்கு கொண்டு வரப்பட உள்ளனர்.
தொடர்ந்து 13-ந்தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரையும், இரவு 7 மணி முதல் 10 மணி வரை 9 மணி நேரம் யாக சாலையில் பூஜைகள் நடக்கிறது.
14-ந்தேதி யாக சாலையில் சிறப்பு பூஜைகளும், 15-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மூலவருக்கு மகா சாந்தி திருமஞ்சனமும் நடக்கிறது.
இரவு யாக சாலையில் மகா பூரணாஹூதி நடக்கிறது. 16-ந்தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதன்படி ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பக்தர்கள் மட்டும் பூஜை நேரங்கள் அல்லாத நேரத்தில் சாமியை தரிசனம் செய்ய முடியும்.
இதனால் அனைத்து ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனம், ரூ.300-க்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
தொடர்ந்து அக்டோபர் 3-ந்தேதி வரை 45 நாட்களுக்கு சிறப்பு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும் 16-ந்தேதி மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்கிடையே கருட வாகனத்திலும், இரவு 9.30 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது.
எனவே ஆஸ்கட் 11-ந்தேதி வரை 6 நாட்களுக்கு குறைந்த அளவு மட்டும் நேரம் ஒதுக்கப்படுவதால் பக்தர்கள் அதற்கேற்ப தங்கள் திருமலை பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

×

X