search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95529"

    லட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால், நீங்கள் சில விரத வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
    லட்சுமி தேவியை வழிபடுவது செல்வத்தை மட்டுமின்றி, வாழ்க்கையில் வெற்றியையும், அமைதியையும் வழங்கும். லட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால், நீங்கள் சில விரத வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

    ‘ஓம் மகாதேவ்யைச வித்மஹே
    விஷ்ணு பத்நீ ச தீமஹி
    தன்னோ லட்சுமி பிரச்சோதயாத்’

    இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வந்தால், லட்சுமி தேவியின் அருள் பூரணமாய் கிடைக்கும்.

    பூஜையறையில் லட்சுமிதேவியின் உருவப்படத்தையோ அல்லது சிலையையோ வைத்து, அதற்கு தினமும் தேங்காய் வைத்து வழிபட வேண்டும். இப்படி தன்னை வழிபடும் வீட்டிற்கு லட்சுமி தேவி உடனடியாக வருவாள்.

    உப்பை நீரில் கலந்து அந்த தண்ணீரை கொண்டு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்யுங்கள். சுத்தம் உள்ள இடத்திற்குத் தான் திருமகள் வருவாள். எனவே இவ்வாறு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்வது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும். மேலும் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளையும் விரட்டும்.

    திருமகளுக்கு பிடித்த மலர் தாமரைதான். வீட்டில் உள்ள லட்சுமியின் சிலைக்கு, தாமரை விதைகளில் மாலை கோர்த்து வழிபடுவது லட்சுமி தேவிக்கு அழைப்பு விடுப்பது போன்றதாகும். சோழிகளை நாம் நிறைய முறை பாத்திருப்போம். ஆனால் அதனை பூஜையறையில் வைப்பது லட்சுமி அருளை பெற்றுத்தரும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சோழிகள் கடலில் இருந்து கிடைக்கும் ஒரு வகை சங்கு ஆகும். லட்சுமி தேவியின் பிறப்பிடமும் கடல்தான். எனவே வீட்டில் சோழிகள் வைத்திருப்பது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

    திருமகளுடன் விநாயகரையும் வழிபடுவது, வீட்டில் செல்வம் கொழிக்கச் செய்யும். எனவே லட்சுமியுடன் விநாயகரின் சிலையையும் சேர்த்து வைத்து வழி படுங்கள். அந்த சிலைகள் வெள்ளியில் இருந்தால் கூடுதல் சிறப்பு.

    துளசி என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. லட்சுமி வசிக்கும் இடமாகவும் துளசி செடி கருதப்படுகிறது. எனவே துளசி செடி முன்பு, நெய் விளக்கேற்றி லட்சுமி மந்திரத்தை சொல்வது உங்கள் வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றித் தரும்.

    சங்கு, திருமகளின் கணவரான திருமாலுக்கு பிடித்த ஒன்றாகும். எனவே வீட்டில் தெற்குப்புறம் நோக்கி சங்கில் நீர் நிறைந்திருக்கும்படி வைப்பது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும்.

    தாமரை லட்சுமிக்கு மிகவும் பிடித்த மலராகும். எனவே தினமும் லட்சுமி சிலைக்கு முன் இரண்டு நெய் விளக்கேற்றி தாமரை பூக்களை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இது அனைத்து வளங்களையும் உங்களுக்கு பெற்று தரும்.

    புல்லாங் குழலில் ஒரு பட்டுநூலை கட்டி, அதனை உங்கள் பூஜையறையில் லட்சுமி சிலைக்கு அருகில் வைத்து வழிபடுங்கள். புல்லாங்குழல் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ஒன்று. இவ்வாறு வழிபடுவது உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலவ செய்யும். அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும். 
    மகாலட்சுமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மங்களம் உண்டாகும்.
    புனிதமே கமல மாதே! புள்ளூர்ந்தான் போற்றும் தேவி!
    இனிய பத்மாசனத்தில் இருப்பவள் நீயே அன்றோ!
    துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே
    அணுகினோம் நோக்கு தாயே! அவதியை நீக்கு தாயே!
    செல்வமென்று சொன்னால் செல்வி நீதான் ஈவாய்!
    வெல்வது நீயே என்றும்! வேறென அனைத்தும் நீயே!
    பல்குணப் பரந்தாமன்பால் பற்றுடை திருவே உன்னை
    பல்கிய மலர்கொண்டேத்திப் பணிந்தனம் காக்க தாயே!
    கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே!
    கண்ணனின் சாயல் பெற்ற காரிகை நீயே தாயே!

    பொதுப் பொருள்:

    புனிதமான தாமரையில் அமர்ந்தவளே! கருடவாகனன் போற்றும் தேவி! பத்மாசனத்தில் அமர்பவளே! வைஷ்ணவியாய் விளங்கி எம் அல்லல்கள் அகற்று தாயே செல்வம் அருள்பவள், அனைத்தும் நீயாய் விளங்குபவள். பரந்தாமன் மேல் பற்று கொண்டவளே! கண்ணைன் திரு மார்பில் உறைபவளே! தங்களை வணங்குகிறேன். மகாலக்ஷ்மியைப் போற்றும் துதி இது.
    மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதிகளில் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.
    படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும். இவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை ‘ஹரித்ரா குங்குமம்’ என்று சொல்வார்கள். குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது. படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது. தொற்றுநோய்களும் அண்டாது. மூளைக்கு செல்லும் நரம்புகள், அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி ெநற்றியாகும். குங்குமம் அணிவதால், நெற்றியில் சூடு தணிகிறது.

    பெண்களின் தலை வகிட்டின் நுனியை, ‘சீமந்தபிரதேசம்’ என்பார்கள். பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதி ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும். மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.

    நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது. வீட்டிற்கு வரும் சுமங்கலி களுக்கு குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர்- பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும். ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில், குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.



    மகாலட்சுமி 108 இடங்களில் வாசம் செய்கிறார். அவை:- வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரிச்சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக்சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, ஆலவிழுது, தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை, திரு நீற்றுபச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு, நெற் கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானைகொம்பு மண், ஆலஅடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல்இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, கெண்ட, வாசல் நிலை நெற்றி போன்ற இடங் களிலும் லட்சுமி வாசம் செய்கி றாள். ஆனாலும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடி பணிந் தவர்களுக்கே அவள் அருள் புரிகின்றாள்.

    எனினும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடிகளை சரண டைந்தவர்களுக்கே நிரந்தரமாக அருள்புரிகின்றாள். 
    வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களை அருளும் கஜலட்சுமி எண்ணி, இன்று பெண்கள் விரதம் அனுஷ்டிப்பார்கள். இதனால், அவர்களின் செல்வமும் உயரும் என்பது பெரியோர்களின் வாக்கு.
    அஷ்டலட்சுமிகளில் சிறப்பான வடிவமாகப் போற்றப்படுபவள், கஜலட்சுமி. பார்க்கடலைக் கடைந்தபோது வெளியான திருமகளை, அஷ்ட திக்கிலும் இருந்த தேவயானைகள் கூடிவந்து, தங்களது மனைவியரோடு மங்கள நீராட்டி, பிளிறலை எழுப்பி வழிபட்டன என்று புராணங்கள் சொல்கின்றன.

    எனவேதான் ஆதிலட்சுமி, கஜலட்சுமி என்று  போற்றப்படுகிறாள். அஷ்டலட்சுமிகளில், கஜலட்சுமி நடுநாயகமாக வீற்றிருப்பவள். இவள், நம் வீட்டின் நிலைப்படிமேல் அமர்ந்துள்ளதால், திருநிலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தாமரை மலரில் பத்மாசன நிலையில் திருமகள் வீற்றிருக்க, இருபுறமும் தேவ யானைகள் நின்று புனித நீரால் அபிஷேகம் செய்யும் நிலையில் கஜலட்சுமி இருப்பாள். சில படங்களில், யானைகள் லட்சுமிக்கு கவரி வீசுவது போலவும் காணப்படும்.

    தயாலக்ஷ்மி, சாந்தலக்ஷ்மி என அழைக்கப்படும் இந்த கஜலட்சுமியே நிலங்களை அளிப்பவள். வீட்டின் அமைதிக்கும் இவளையே வணங்க வேண்டும். இரு கைகளில் தாமரை மலர்களை ஏந்தியும் மற்ற இரு கரங்களில் அபய, வர முத்திரை காட்டியும் அருளும் இந்த கஜலட்சுமி தேவியின் 'கஜலட்சுமி விரதம்' இன்றுதான் அனுஷ்டிக்கப்படுகிறது.

    வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களை அருளும் இந்தத் தாயாரை எண்ணி, இந்த நாளில் பெண்கள் விரதம் இருப்பார்கள். கஜலட்சுமியை விரதம் இருந்து வழிபடும் ஒருவருக்கு கருணையும், கொடுக்கும் எண்ணமும் வளரும். இதனால், அவர்களின் செல்வமும் உயரும் என்பது பெரியோர்களின் வாக்கு. கஜலட்சுமி விரத நாளான இன்று, இந்த லட்சுமி தேவியை வணங்கி, அருளைப் பெறுவோம்.
    ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.
    விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம்.

    சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும். “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.

    இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.

    ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.
    விரதங்களும் பலன்களும்

    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

    திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவான் பரிபூர அன்பைப் பெறலாம்.

    செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.

    புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.

    வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.

    வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

    சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

    ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.
    வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். எந்த மாதிரியான வீடுகளை தேடி மகாலட்சுமி வருவாள் என்று பார்க்கலாம்.
    ஒருசமயம் லட்சுமிதேவி எந்த வீட்டிலும் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

    இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது.

    மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

    நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.

    வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள். மனையை போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த சுமங்கலி இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடந்தது. அதாவது லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்.

    வீட்டில் லட்சுமி பூஜை செய்வது எப்படி?

    வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
    மகாலட்சுமியின் அவதாரம் குறித்து ஆனந்த் ராமாயணத்தில் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அவதார கதையை அறிந்து கொள்ளலாம்.
    மகாலட்சுமியின் அவதாரம் குறித்து ஆனந்த் ராமாயணத்தில் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    முன்காலத்தில் பத்மாட்சன் என்ற மன்னன் நீதிநெறி தவறாமல் நாட்டை ஆண்டு வந்தான். செல்வத்தின் தேவதையாகிய லட்சுமியை தன் பெண்ணாக அடைய வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் உண்டானது. அப்போதே காட்டுக்குள் சென்று லட்சுமிதேவியை நினைத்து குறித்துக் கடும் தவம் செய்தான்.
    லட்சுமிதேவி பத்மாட்சன் முன் தோன்றி, 'நீ வேண்டும் வரம் யாது?' என்று கேட்டாள்.

    பத்மாட்சன் மகாலட் சுமியை போற்றி துதித்து, 'தாயே! இந்த உலகில் எனக்கு எந்தவிதக் குறையும் இல்லை. எனக்குள்ள ஒரே மனக்குறை ஒரு குழந்தை இல்லையே என்பது தான். தாயே! தாங்களே எனக்கு மகளாக வந்து என்னை ஆட்கொள்ள வேண்டும் என்பதுதான் எனக்குள்ள விருப்பம். அதற்கு அருள்பாலிக்கவேண்டும்' என்று கேட்டுக் கொண்டான்.

    புன்னகை புரிந்த மகாலட்சுமி 'பத்மாட்சனே! நீ விரும்பும் வரத்தை அளிக்கும் உரிமை மட்டுமே எனக்கு இருக்கிறது. நானே உன் மகளாகப் பிறக்க வேண்டுமென்று விரும்பியதால் உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் சக்தி என் நாயகரான மகாவிஷ்ணுவிற்குத்தான் உண்டு. அதனால் அவருடைய அருளைக்கோரி தவம் செய்' எனக்கூறி மறைந்தாள்.

    பத்மாட்சன் பகவான் விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.

    விஷ்ணு பகவான் பத்மாட்சன் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.

    பத்மாட்சன், மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்ற தன் ஆசையை வெளியிட்டான்.

    'உன் எண்ணம் உடனே நிறைவேறும்' என மகாவிஷ்ணு வரம் கொடுத்தார்.

    அடுத்த கணம் பத்மாட்சனின் முன்னால் எரிந்து கொண்டிருந்த யாக அக்னியில் இனிய குரலெடுத்து குழந்தை ஒன்று அழும் ஒலி கேட்டது.

    திடுக்கிட்டு யாக அக்கினியை கவனித்த பத்மாட்சன், அக்கினிக்கு மத்தியில் அழகிய பெண் குழந்தை ஒன்று கை, கால்களை உதைத்து விளையாடியவாறு கிடப்பதை கண்டான்.

    பிரமிப்படைந்த பத்மாட்சன் யாக அக்கினிக்குள் கை நீட்டி குழந்தையை வாரி எடுத்தான்.

    யாக அக்கினி அவனைத் சுடவில்லை.

    பத்மாட்சனின் மகளாக வளர்ந்த மகாலட்சுமி பல திருவிளையாடல்களை செய்த பின்னர் மகாவிஷ்ணுவை சென்றடைந்தாள் என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாறு ஆகும்.

    மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும்.
    மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும்.

    தெய்வ மலர் என்று தாமரை மலருக்கு பெயருண்டு. மகாலட்சுமி மட்டுமின்றி, கலை மகளாம் சரஸ்வதி தேவியும் தாமரை மலரில் தான் வீற்றிருக்கிறாள்.

    தாமரை மலருக்கு வேதங்களுக்கு உள்ள பெருமையும் மகிமையும் உண்டு என்ற கருத்தில் கம்பர் தாமரை மலரை ‘மறை’ மலர் என்று குறிப்பிடுகிறார்.தாமரை மலர் இறைவனைப் பூசிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை.

    திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரை என்று சொல்வார்கள்.

    இந்த மகாலட்சுமி மந்திரத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான சாபமும் நிவர்த்தியாகும்.
    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
    மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

    இது பலிச்சக்ரவர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் முறை ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன் இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் சித்தியாகவும் ஊருக்கு வெளியே உள்ள கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள் போட்டு வரவும்.
    தைரிய லட்சுமி எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில் தான் மற்ற ஏழு லட்சுமிகளும் இருப்பார்கள் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    அஷ்ட லட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி தான். இதை விளக்குவதற்கு ஒரு கதை. போஜ மகாராஜாவிற்கு அஷ்டலட்சுமிகளின் பாக்கியம் இருந்து வந்தது. அவன் அவர்களை தினம் பூஜித்து வந்தான். ஒருநாள் பூஜையின் போது அவர்களின் முகம் வாடியிருப்பதை கண்டு காரணம் கேட்டான். அவர்கள் நாளையுடன் உன்னுடன் எங்களுக்கு தொடர்பு அறுபடுகிறது. நாளை நாங்கள் உன்னை விட்டுப் போகிறோம். நீ இத்தனை நாட்கள் எங்களை வழிபட்டு வந்ததற்காக நீ கேட்கும் வரத்தை தருகிறோம் என்றார்கள்.

    சரி நாளை நீங்கள் போகும் போது அவ்வரத்தை கேட்கிறேன் என்று போஜன் கூறிவிட்டான்.

    மறுநாள் வந்தது, ஒவ்வொரு லட்சுமியாக அவனிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். அவன் யாரிடமும் எவ்வரமும் கேட்கவில்லை. ஏழு லட்சுமிகள் போன பின்பு கடைசியாக தைரிய லஷ்மி வந்தாள். அம்மா நான் கேட்கும் வரம் நீ மட்டும் என்னிடம் தங்க வேண்டும் என்பதே என்றான் போஜன். பக்தன் கேட்ட வரத்தின்படி தைரியலட்சுமி மட்டும் அங்கேயே தங்கி விட்டாள்.

    மறுநாள் போஜன் பூஜைக்கு புறப்படும் போது தினம் எட்டு லட்சுமிகளை பூஜிப்பேன், இன்று ஒரு லட்சுமியை மட்டுமே பூஜிக்க போகிறேன் என்று நினைத்துக்கொண்டு பூஜைக்கு போனான். அங்கு பூஜாக்கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருக்கக்கண்டு ஆச்சரியம் அடைந்தான். நீங்கள் ஏழு பேரும் நேற்று போய்விட்டீர்களே, இப்போது இங்கு இருக்கிறீர்களே என்று கேட்டான் போஜன்.

    எங்கள் தலையில் தைரிய லட்சுமி எங்கு இருக்கிறாளோ அங்கு நாங்கள் ஏழு பேரும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது. நீ தைரிய லட்சுமியை உன்னுடனேயே இருத்திக்கொண்டதால் நாங்கள் மீண்டும் இங்கேயே வந்து தங்க நேர்ந்தது என்றார்கள் அந்த ஏழு லட்சுமிகள்.

    மகாலட்சுமியை வணங்கிய பக்தர்கள் அன்னையே, தங்களை சிரமமின்றி தரிசித்து தங்கள் அருளைப்பெற வழி என்ன? பொதுவாக தாங்கள் இருக்கும் இடம் எது, என்று கேட்தற்கு மகாலட்சுமி கூறியவை..
    பூஜை நடக்கும் இடங்கள், சங்கு நாதம் கேட்கும் இடம், சிவநாமம் கேட்கும் இடம், அன்னதானம் வழங்கப்படும் இடம் ஆகிய இடங்களில் லட்சுமி தங்கும் இடங்கள் ஆகும்.

    அடக்கமான பெண்கள், கணவனுக்கு கட்டுப்பட்ட மனைவி, மனைவியை காப்பாற்றும் கணவன், தானியவகை இரக்க குணம் கொண்டவர்கள், சுறு சுறுப்பாக இருப்பவர்கள் அகங்காரம் இல்லாதவர்கள், சாப்பிடும்போது ஈரக்காலுடன் அமர்பவர்கள், படுக்க செல்லும்போது உலர்ந்த காலுடன் படுப்பவர்கள், தூய்மையன வெள்ளை ஆடை அணிபவர்கள், துணிவு மிக்க பெண்கள் ஆகியோரிடம் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

    மகாலட்சுமியின் அருட்பார்வைக்கு இலக்காக...

    மகாலட்சுமியை வணங்கிய பக்தர்கள் அன்னையே, தங்களை சிரமமின்றி தரிசித்து தங்கள் அருளைப்பெற வழி என்ன? பொதுவாக தாங்கள் இருக்கும் இடம் எது, என கேட்டனர்.

    மகாலட்சுமி கூறுகையில்,

    எந்த இல்லத்தில் அதிகாலையில் விழித்தெழுந்து, நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டு என்னுடைய நாமங்களைச் சொல்லி வழிபடுகின்றனரோ, எந்த இல்லத்தின் முன் அதிகாலையில் பசுஞ்சாணம் தெளித்து தரையை சுத்தம் செய்து கோலம் போட்டு திருவிளக்கு ஏற்றி வைக்கிறார்களா, எந்த குடும்பத்தில் கணவனும், மனைவியும் நியம நிஷ்டைகளை முறைப்படி அனுஷ்டித்து தங்களுக்குள் சிறு மனவேறுபாடும் இல்லாமல் என்னை வழிபடுகிறார்களோ, எங்கு ஆசாரம் குறை இல்லாமல் கடைப்பிடிக்கப்படுகிறதோ, எங்கு தர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ, எங்கு பூஜை, நடக்கின்றனவோ, எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும், தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ, எங்கு கோபூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அங்கு நான் எப்போதும் இருப்பேன் என்றாள்.
    ×