search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    தஞ்சையில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி அருள்பிரகாஷ் நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது மகள் ராகப்பிரியா (வயது 25). இவர் எம்.எஸ்சி, எம்.பில் படித்துள்ளார்.

    இந்த நிலையில் ராகப்பிரியாவுக்கும், தஞ்சை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் பேசி நிச்சயத்தார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் இன்று தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    இதனால் இருவீட்டார் குடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று புதுப்பெண் ராகப்பிரியா, தனது தாய் பிரேமலதாவிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் பிரேமலதா, மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். எந்த தகவலும் இல்லாததால் , தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகள் ராகப்பிரியா, திருமணத்தில் விருப்பம் இல்லாமல் மாயமாகி விட்டாரா? அல்லது காதல் விவகாரத்தில் சென்று விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மணமகள் திடீரென மாயமாகி விட்டதால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றுபோனது. இதனால் இருவீட்டார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

    வருகிற 12-ந்தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் நகை, பணத்துடன் புதுப்பெண் மாயமான சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகள் கார்த்திகை ஜோதி. பட்டதாரி. இவருக்கும் சிவகாசி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 12-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந் நிலையில் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வடிவேலு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் கார்த்திகை ஜோதி மட்டும் இருந்தார். பின்னர் அழைப்பிதழை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கார்த்திகை ஜோதியை காணவில்லை.

    மேலும் வீட்டில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகள், ரூ.48 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் துணிமணிகள் ஆகியவையும் மாயமாகி இருந்தன. அக்கம்பக்கம் உள்ளிட்ட உறவினர் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேலு இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை குமந்தாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வம், அவரது மனைவி சிவகாமி, அவர்களது மகன் சூர்யா (23) ஆகியோர் சேர்ந்து கடத்தி உள்ளதாக தெரிகிறது என கூறியிருந்தார்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புதுப்பெண் கடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பிரபாசும், அனுஷ்காவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்த நிலையில், பிரபாசின் திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர்கள் தீவிரப்படுத்தி இருப்பதாகவும், மணப்பெண்ணை தேர்வு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Prabhas
    பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறினர்.

    திரையில் இருவரும் பொருத்தமான ஜோடியாக வலம் வந்ததால் இருவருரையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கேற்றாற் போல், பாகுபலி படமும் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது. பிரபாஸ் ரசிகர்கள் அனுஷ்காவை அண்ணி என்றே அழைத்தனர். 

    முன்னதாக பாகுபலி படம் ரிலீசுக்கு பிறகு, பிரபாசை திருமணம் செய்துகொள்ள 6 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்தனர். ஆனால் அனுஷ்காவை மணக்க எல்லா விண்ணப்பங்களையும் அவர் நிராகரித்ததாக கூறப்பட்டது. அனுஷ்கா சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி வந்தார். ஜாதகத்தில் தோ‌ஷம் இருப்பதாகவும் திருமண தடை நீங்க அவர் பரிகாரங்கள் செய்ததாகவும் கூறப்பட்டது. 



    இந்த நிலையில், பிரபாசின் திருமணத்தை விரைவில் முடிக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகளை கவனித்து வருவதாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். மணமகளை முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

    இதனால் தெலுங்கு பட உலகினரும், ரசிகர்களும் மணமகள் யார்? என்ற கேள்விகளை எழுப்பிய வண்ணமாக இருக்கிறார்கள். அனுஷ்காவைத் தான் அவர் திருமணம் செய்து கொள்வார் என்றும் பேச்சு உள்ளது. பிரபாஸ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் `சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் அவரது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. #Prabhas #Anushka

    கும்மிடிப்பூண்டி அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் குடும்பத்துடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையத்தை சேர்ந்தவர் புதுமை வேந்தன். இவருக்கும் பொன்னேரி என்.ஜி.ஓ. நகரில் வசித்து வந்த இளம் பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்களது திருமணம் செங்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது.

    இரு வீட்டாரும் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் புதுப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் திடீரென மாயமானார்கள். அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

    இதனை அறிந்த மணமகன் வீட்டார், மணமகள் தரப்பினரின் செல்போன்களில் தொடர்பு கொண்ட போது அவை ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் இதுபற்றி கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில் “நிச்சயதார்த்தம் நடந்த போது புதுப்பெண்ணுக்கு 4 பவுன் நகை, ரூ.2½ லட்சம் ரொக்கப் பணம் கொடுத்தோம்“ என்று தெரிவித்து உள்ளனர்.

    நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் குடும்பத்துடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுப் பெண்ணின் சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லாததால் குடும்பத்துடன் மாயமானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவதானப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணி மகள் ரம்யா என்ற மலர்விழி (வயது 16). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்துமணி மகன் சிவரங்கராஜ் (24). கடந்த சில நாட்களாக ஏ.வாடிப்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரம்யா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதே போல் சிவரங்கராஜூம் மாயமாகி இருந்தார். இதனால் சந்தேகமடைந்த ரம்யாவின் தாய் வேல்மணி ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரில் தனது மகளை சிவரங்கராஜ்தான் கடத்தி சென்றிருக்க கூடும் என தெரிவித்ததின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். #tamilnews
    காதலியை திருமணம் செய்ய பெற்றோர் காலம் தாழ்த்தி வந்ததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெகன் அய்யம்பெருமாள். இவரது மகன் சாமிநாதன் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு இளம்பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்கும் படி கடந்த 2 வருடங்களாக கூறி வந்தார்.

    அதற்கு அவரது பெற்றோர் வயது 25 தான் ஆகிறது. இன்னும் 1 வருடம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியதாக தெரிகிறது. பெற்றோர் திருமணம் செய்து வைக்க காலம் தாழ்த்தி வந்ததால் கடந்த சில நாட்களாக சாமிநாதன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரத்தி அடைந்து வி‌ஷத்தை குடித்தார்.

    பின்னர் தனது நண்பர்களுக்கு போன் செய்து வி‌ஷம் குடித்து விட்டதாக கூறி உள்ளார். அவர்கள் உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்து சாமிநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க வேண்டும் என்று மத்திய சட்ட கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    நமது நாட்டில் இப்போது ஆண்களின் திருமண வயது 21, பெண்களின் திருமண வயது 18.

    இந்த நிலையில், குடும்ப சட்டத்தில் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மத்திய சட்ட கமிஷன் சில சிபாரிசுகளை செய்து உள்ளது. அந்த வகையில் ஆண்களின் திருமண வயதையும், பெண்கள் திருமண வயதைப் போன்று 18 ஆக குறைக்க வேண்டும் என்று கூறி உள்ளது.

    இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், “பெரும்பான்மைக்கான உலகளாவிய வயது 18 என அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அனைத்து குடிமக்களும் தங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கும் உரிமை அந்த வயதில் வழங்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கிற போது, அவர்களுக்கு தங்கள் மனைவியை தேர்ந்தெடுக்கும் திறனும் அந்த வயதில் வந்து விடுகிறது என்று கருத வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.

    திருமணத்துக்கு பெண்ணுக்கு 18 வயது, ஆணுக்கு 21 வயது என மாறுபட்ட வயது வரையறை இருப்பது, மனைவியானவள் கணவனை விட இளமையாக இருக்க வேண்டும் என்ற ஒரே மாதிரியான பங்களிப்புக்குத்தான் வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

    மேலும், குடும்பத்தின் பெண்களின் பங்கை அங்கீகரிப்பது அவசியம்; அவர்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து தந்து இருக்கிறார்களா என பார்க்காமல், அவர்கள் விவாகரத்து செய்திருந்தாலும், திருமணத்துக்கு பின் வாங்கிய சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டும் எனவும் சட்ட கமிஷன் பரிந்துரை செய்து உள்ளது.
    இளம்பெண்கள் அதிகளவில் காதலனுடன் ஓட்டம் பிடிப்பதால் வேலைக்கு அனுப்ப பெற்றோர் தயங்கி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. இங்கு கிராமங்களை சேர்ந்த இளம்பெண்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். மில்லில் வேலை பார்க்கும் வாலிபர்கள் மற்றும் வேன் டிரைவர்கள் இளம்பெண்களிடம் ஆசைவார்த்தை காதல் வலை வீசுகின்றனர்.

    பருவவயது என்பதால் பெண்களும் இளைஞர்களின் காதல் வலையில் விழுந்துவிடுகின்றனர். இதேபோல் அய்யலூர் பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து மாணவிகள் அதிகளவில் மாயமாகின்றனர். பின்பு காதலனுடன் திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைகின்றனர். இளம் வயது என்பதால் எதிர்கால வாழ்க் கைப்பற்றி சிந்திக்காமல் காதல் வயப்படுகின்றனர்.

    இதனைபயன்படுத்தி ஒரு சில வாலிபர்கள் தங்களின் ஆசை தீர்ந்தவுடன் அப்பெண்களை ஏமாற்றிச்செல்கின்றனர். இதனால் விரக்கியடைந்து தற்கொலை முடிவுக்கும் பெண்கள் செல்கின்றனர்.

    இளம்பெண்கள் மாயமாவதும், பின்பு காதலனுடன் தஞ்சமடைவதும் தொடர்கதையாகி வருவதால் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் பெண்களை ஒருசில வாலிபர்கள் ஏமாற்றிச் செல்கின்றனர். எனவே வேலைக்கு செல்லும் இடங்களில் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான், இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.
    திருமணம் எனும் பந்தத்தில் இருமனம் இணைத்து உருவாக்கப்படும் பயணம் தான் நாம் வாழ்கை. ஒருவரின் மீது ஒருவர் அக்கறை செலுத்துவது, அன்பு செலுத்துவது என அனைத்தையும் இந்த உறவில் மிகவும் சாதாரணமான ஒன்று. முற்காலத்தில் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறும் வழக்கம் கூட இருந்தது. ஆனால் வேறு எந்த உறவோ அல்லது நட்போ அப்படி உடன்கட்டை ஏறவில்லை. இதிலிருந்தே கணவன் மனைவியின் அன்பின் இலக்கணம் அனைவர்க்கும் புரிய வைக்கும்.

    ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை. ஆண் தான் மல்லிகைப்பூ, அல்வா வாங்கி செல்வார், ஆண் தான் திரைப்படத்திற்கு அழைத்து செல்வார். பெண்கள் சும்மாவே இருப்பார்கள். உண்மையில் பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான், இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.

    திருமணத்திற்கு முன் அம்மா எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பதில் அக்கறையும், பாசமும் இருக்கும். திருமணத்திற்கு பிறகு மனைவி குளிப்பாட்டி விடுவதில் எல்லாமும் இருக்கும். கணவன் - மனைவியின் இல்லற வாழ்க்கையில் மிக ரொமாண்டிக்கான விஷயம் என இதை எளிதாக குறிப்பிடலாம்.



    கணவன் ஆய்ந்து ஒய்ந்து வேலைகளை முடித்து வீடு திரும்பும் போது, அவனை கேட்காமலேயே அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறுவது அல்லது ஊட்டிவிடுவது.

    வீட்டு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் நிகழ்வில் மற்றவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென கணவன் மீது கண்களை திருப்பி சிறு புன்னகையுடன் ஜாடை காண்பிப்பது.

    காலையில் கணவர் அலுவலகம் கிளம்பியதில் இருந்து மதியம் சாப்பிட்டாச்சா என்று கேட்பதில் தொடங்கி, மாலையில் வர தாமதம் ஆனால் எப்போது வீட்டிற்கு வருவீங்க என்று போனில் கேட்பது வரை எப்போது உங்களையே நினைத்து கொண்டிருக்றேன் என்பதை கணவருக்கு எளிய முறையில் ரொமாண்டிக்காக புரியவைக்க மனைவியால் மட்டுமே முடியும்.

    டென்சன், கோபம், கவலையில் இருக்கும் கணவரை தனது கண் அசைவின் மூலம் ரொமாண்டிக் மூடிற்கு கொண்டு செல்ல மனைவியால் மட்டுமே முடியும். ஒரு சில விஷயங்கள், பொருட்கள் கணவனுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதை அவரே கூட மறந்திருப்பார். என்றோ கூறியதை நினைவில் வைத்து அதை தகுந்த தருணத்தில் வாங்கி வந்து பரிசளித்து கணவரை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்து விடுவார்கள் பெண்கள். 
    திண்டுக்கல் பொறியாளருக்கும் ஜெர்மனி ஆசிரியைக்கும் காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் ராஜசேகரன். இவரது மகன் நவீன் சேகரன். என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் ஜெர்மனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணான தெரஸா ஹாபர்ள் என்பவருடன் காதல் ஏற்பட்டது.

    இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலை பெண் வீட்டார் ஏற்றுக் கொள்வார்களா? என தயக்கம் இருந்தது. இருந்த போதும் நவீன் சேகரன் தனது காதலியின் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கினார்.

    அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடனே இந்த திருமணம் நடக்க வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

    அதன்படி திண்டுக்கல் வந்த நவீன் சேகரன் தனது பெற்றோரிடம் ஜெர்மன் பெண்ணுடனான காதலை தெரிவித்தார். அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மாப்பிள்ளை காசி யாத்திரை செல்வது, பெண்ணுக்கு காலில் மெட்டி அணிவிப்பது, பெற்ற தாய் தந்தைக்கு கால்களை கழுவி பாத பூஜை செய்வது, சம்மந்திகள் மாலை மாற்றிக் கொள்வது போன்ற சடங்குகள் நடந்தது.

    அதன் பின் வேத மந்திரங்கள் முழங்க தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்காக ஜெர்மனியில் இருந்து 70-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இந்து முறைப்படி ஆண்கள் வேஷ்டி சட்டையுடனும், பெண்கள் பட்டுப்புடவையுடன் தலையில் பூ வைத்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.

    கர்நாடகாவில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் இருந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. அவர் கேரளாவை சேர்ந்தவரை கரம் பிடித்தார். #KarnatakaFloods #Marriage
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் எம்மேட்டு பகுதியை சேர்ந்த மஞ்சுளாவுக்கு கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ராஜீஷ் என்பவருடன் 26-ந்தேதி (அதாவது நேற்று) திருமணம் செய்ய ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் குடகில் ஏற்பட்ட மழை வெள்ளம், நிலச்சரிவால், மஞ்சுளாவின் வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மஞ்சுளா மற்றும் அவருடைய பெற்றோர் உயிர் தப்பினர். தற்போது அவர்கள் மக்கந்தூரில் உள்ள நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகை-பணம், பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி திருமணம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்தநிலையில் நிவாரண முகாமில் இருந்தவர்களும், தன்னார்வ தொண்டு அமைப்பினரும், மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து மஞ்சுளாவின் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி, மஞ்சுளாவின் திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்தநிலையில் திட்டமிட்டபடி நேற்று மடிகேரி ஓம்காரேஸ்வரா கோவிலில் மஞ்சுளா-ராஜீஷ் திருமணம் நடந்தது. இதில் நிவாரண முகாமில் இருந்த மக்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு புதுமண ஜோடியை வாழ்த்தினர்.

    இந்த திருமணத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா கலந்து கொண்டு புதுமண தம்பதிக்கு அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 
    தக்கலையில் பரிகார பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவியை கடத்தி 2-வது திருமணம் செய்த பூசாரி, போலீசார் தேடி வருவதை அறிந்து சரணடைந்தார்.
    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    அவரது தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. டாக்டர்களிடம் சென்று சிகிச்சை அளித்தபோதும் அவர் குணமடையவில்லை.

    இதற்கிடையில் உறவினர்கள் சிலர் கோவில்களுக்கு அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்தால் மாணவியின் உடல்நலம் சீராகும் என்று கூறினர். இதனால் அவரது தந்தை பல கோவில்களுக்கும் அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்து வந்தார். அவர்கள் வீடு அருகே உள்ள ஒரு கோவிலுக்கும் மாணவியை அடிக்கடி பரிகார பூஜைக்காக அழைத்துச் சென்றனர்.

    இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி தனது வீட்டில் இருந்த மாணவி திடீரென்று மாயமாகிவிட்டார். வீட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் மாயமானது பற்றி கொற்றிக்கோடு போலீசில் தந்தை புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி கூறியிருந்தார்.

    போலீசாரும் மாயமான மாணவி பற்றி தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அப்போது அந்த மாணவியை அவரது வீடு அருகே உள்ள கோவிலில் பூஜைகள் செய்யும் பூசாரியே கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் பூசாரியும், மாணவியும் போலீசில் நேற்று மாலை தஞ்சம் அடைந்தனர்.

    அந்த பூசாரியும் தானும் 3 வருடங்களாக காதலித்து வருவதாகவும், தனது படிப்பு முடியும் நிலையில் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் பூசாரியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு சித்திரங்கோடு பகுதியில் வசித்து வந்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.

    பூசாரியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளதும், மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அது பற்றி மாணவியிடம் போலீசார் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்கள். மேலும் அவர்களின் பெற்றோரையும் போலீஸ் நிலையம் வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் பூசாரியுடன்தான் வாழ்வேன் என்று மாணவி பிடிவாதமாக கூறிவிட்டார். பெற்றோர் அவரை தங்களுடன் வரும்படி கண்ணீருடன் கேட்டுக்கொண்ட போதும் மாணவி தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவர் மேஜர் என்பதால் அவரை பூசாரியுடன் போலீசார் அனுப்பிவைத்தனர். முறைப்படி திருமணம் செய்து கொண்டு அதை பதிவு செய்து தங்களிடம் காட்ட வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
    ×