search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    எடப்பாடி அருகே பெற்றோர் எதிர்ப்வை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    எடப்பாடி:

    எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, கூடக்கல் பகுதியை சேர்ந்த அம்மாசி கூலித்தொழிலாளி இவரது மகள் இந்துமதி (20), டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். எடப்பாடியை அடுத்த தேவூர் கோரைக்காடு பகுதியை சேர்ந்த சித்தன் மகன் மோகன்ராஜ்(22). இவர் தேவூர் பேரூராட்சியில் பிலம்பராக பணிசெய்து வருகிறார். 

    இந்நிலையில் கூடக்கல் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த மோகன்ராஜிற்கு, இந்துமதியுடன் நட்பு ஏற்பட்டு அவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்துமதியின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில் அவரை கண்டித்துள்ளனர்.

    இதனை அடுத்து தனது நிலை குறித்து இந்துமதி தனது காதலன் மோகன்ராஜிடம் கூறவே, அவரை மோகன்ராஜ் பவானி பகுதியில் உள்ள ஓர் கோவிலுக்கு அழைத்து சென்று தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அவர்களின் பெற்றோர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர், பாதுகாப்பு கேட்டு பூலாம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து இருவரின் பெற்றோர்களை அழைந்து சமாதானம் செய்த பூலாம்பட்டி போலீசார் அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை யாரும் துன்புறுத்தக்கூடாது என கூறி அனுப்பி வைத்தனர். இளம்ஜோடிகள் இருவரும் காவல்துறை அலுவலர்களிடம் ஆசி பெற்று சென்றனர்.

    வாலாஜா அருகே திருமணத்தை மறைத்து இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    ஆற்காடு தாஜ்புரா பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். ஆற்காடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (26). 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

    இதையடுத்து அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    சில நாட்களுக்கு பிறகு இளம்பெண் ராஜசேகரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயபடுத்தி வந்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணிடம் பேசுவதையும், பார்ப்பதையும் முற்றிலும் தவிர்த்து வந்தார்.இளம்பெண் ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது தான் தெரியவந்தது. ராஜசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி 1 மகன் 2 மகள்கள் உள்ளனர் என்று அதிர்ச்சியடைந்த இளம்பெண்.

    இதுகுறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கர்நாடக மாநிலம் ஹாசனில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் ஒருவர் பி.காம் இறுதி ஆண்டு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Bride #Exam
    ஹாசன்:

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(வயது 25). இவருக்கும் ஹாசன் டவுன் ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த சுவேதா(20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 6-ந் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுடைய திருமணம் நவம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் இவர்களுடைய திருமணம் நவம்பர் மாதம் 18-ந் தேதி(அதாவது நேற்று) அறிவிக்கப்பட்டது.மணமகன் நவீன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மணப்பெண் சுவேதா, ஹாசன் டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இவர்களுடைய திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்தனர். திருமண பத்திரிகைகளை அச்சடித்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்தனர். இந்த நிலையில் சுவேதாவுக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டது.



    அதன்படி திருமண நாளான நவம்பர் 18-ந் தேதி அன்று அவருக்கு வணிக கணக்குப்பதிவியல் மற்றும் சட்டம் ஆகிய பாடத்திற்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. திருமண நாளன்று தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் சுவேதா மனமுடைந்தார். அவர் இதுபற்றி தனது வருங்கால கணவர் நவீன் மற்றும் அவருடைய குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

    அதற்கு நவீனும், அவருடைய குடும்பத்தாரும் சுவேதாவுக்கு ஆறுதல் கூறினர். மேலும் நன்றாக படிக்கும்படியும், தேர்வை கண்டிப்பாக தாங்கள் எழுத வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க, சுவேதா தனது தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று காலையில் ஹாசன் டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நவீன்-சுவேதா ஆகியோரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன. காலை 7.45 மணியில் இருந்து 8.45 மணிக்குள் முகூர்த்த நேரம் ஆகும்.

    அதன்பேரில் நேற்று அதிகாலையிலேயே மணமகன் நவீனும், மணப்பெண் சுவேதாவும் திருமணத்திற்கு தயாரானார்கள். திருமணத்திற்காக வந்தவர்களுக்கு அறுசுவை உணவும் தயார் செய்யப்பட்டது. பின்னர் குறித்த நேரத்தில் மணக்கோலத்தில் நவீனும், சுவேதாவும் வந்து மணமேடையில் அமர்ந்தனர். அதையடுத்து அவசர, அவசரமாக புரோகிதர் வேத, மந்திரங்கள் முழங்க மணமகன் நவீன், மணமகள் சுவேதாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

    மேலும் விரைவாக திருமணச் சடங்குகளும் முடிக்கப்பட்டன. அதையடுத்து மணமகன் நவீனும், மணப்பெண் சுவேதாவும் மணக்கோலத்திலேயே தேர்வு நடைபெறும் அரசு கல்லூரிக்கு வந்தனர். அங்கு நவீன் வெளியில் காத்திருக்க, சுவேதா மணக்கோலத்திலேயே தேர்வு அறைக்கு சென்று தன்னுடைய தேர்வை எழுதினார். அவர் தேர்வை எழுதி முடித்துவிட்டு திரும்பி வரும் வரை மணமகன் நவீனும், திருமண வீட்டாரும் அங்கேயே காத்திருந்தனர். இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மணமகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து மணமகனும், மணப்பெண்ணும் மீண்டும் மண்டபத்திற்கு திரும்பி அங்கு குடும்பத்தினர், உறவினர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.

    திருமணம் முடிந்த பிறகு மணப்பெண் சுவேதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இது எனக்கு ஒரு புது அனுபவமாகவும், ஆச்சரியமாகவும் அமைந்தது. என் வாழ்க்கையில் நடந்த ஓர் அதிசயம் இது. இந்த தேர்வை நான் எழுதவில்லை என்றால் மனதளவில் மிகவும் வருத்தம் அடைந்திருப்பேன். ஆனால் எனக்கு எனது கணவரும், அவருடைய குடும்பத்தினரும் மிகவும் ஒத்துழைப்பு தந்தனர். அவர்களால்தான் இந்த தேர்வை நான் மன நிம்மதியோடு எழுத முடிந்தது. கண்டிப்பாக நான் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவேன். நான் தேர்வு எழுத உறுதுணையாக இருந்த என் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Bride #Exam
    பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    தருமபுரி:

    சேலம் மாவட்டம்  ஒமலூர் அடுத்துள்ள தாராபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் மணிகண்டன் (வயது21), கல்லூரி படிப்பு முடித்துவிட்டு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் தேன்மொழி (20). கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகிறார். ஒரே பகுதி என்பதால் மணிகண்டனுக்கும் தேன்மொழிக்கும் இடையே பழக்கும் ஏற்பட்டது. 

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் இந்த காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை மணிகண்டனும் தேன்மொழியும் தருமபுரிக்கு வந்து திருமணம் செய்து கொண்டனர். 

    இது குறித்து தேன்மொழியின் வீட்டார் சேலம் மாவட்டம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த தகவல் மணிகண்டன் மற்றும் தேன்மொழிக்கு தெரியவர தருமபுரி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தனர். இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    பொதுவாகவே திருமணத்திற்கு என்று நாள் குறிக்கும் பொழுது, நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிக்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.


    பொதுவாகவே திருமணத்திற்கு என்று நாள் குறிக்கும் பொழுது, நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிக்க வேண்டும்.

    * மாப்பிள்ளை அழைப்பிற்கான நேரம்

    * பெண் அழைப்பிற்கான நேரம்

    * திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூடும் நேரம்!

    * சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம்!
    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.

    ஈரோடு:

    புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடி தாலுகா, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தவல்லி (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கடந்த 4 வருடமாக பணிபுரிந்து வந்தார்.

    அதே தொழிற்சாலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா தலயநல்லூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவரும் பணிபுரிந்து வந்தார்.

    இருவரும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனிலும் காதலில் உறுதியாக இருந்த ஜோடிகள் கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சிவகிரியில் உள்ள வேலாயுதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இன்று ஆனந்தவல்லி தனது காதல் கணவர் அஜித்குமாருடன் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். 

    திண்டுக்கல் அருகே பாதுகாப்பு கேட்டு காதலியுடன் போலீஸ்காரர் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது35). இவர் திருப்பூர் ஆயுதப்படையில் 2-ம் நிலை போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த தேவிஸ்ரீ(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்தனர். இந்த விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் பகுதியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் இருதரப்பு பெற்றோரை அழைத்து சமரசம் பேசினர். ஆனால் அவர்கள் இதற்கு உடன்படவில்லை. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி போலீசார் அனுப்பி வைத்தனர்.

    திருவொற்றியூர் அருகே திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஜோதி நகர் 5-வது தெருவில் வசித்து வந்தவர் பிரவீன் (வயது 30). பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர், தீவிரமாக பெண் பார்த்து வந்தனர். ஆனால் பிரவீன், திருமணத்துக்கு மறுத்து வந்தார். ஆனாலும் அவரது பெற்றோர், அவரை திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த பிரவீன், வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் தற்கொலை செய்து கொண்ட பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    திருமணத்தின் போது தம்பதிகள் இருவரும் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அக்னியைச் சுற்றி வலம் வருவார்கள். அந்த வலம் 7 என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் இதன் பொருள்.
    திருமணத்தின் போது தம்பதிகள் இருவரும் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அக்னியைச் சுற்றி வலம் வருவார்கள். அந்த வலம் 7 என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் இதன் பொருள்...

    முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

    இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

    மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

    நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

    ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும்.

    ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

    ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
    பெண் பார்த்துவிட்டு சென்ற பிறகு ஜாதகம் சரியில்லை என கூறியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெறும்பூர்

    திருச்சியை அடுத்துள்ள துவாக்குடி அண்ணா வளைவு சொசைட்டி தெருவை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு- நல்லம்மாள் தம்பதியின் மகள் நிவேதா (வயது 22). டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவரது தந்தை வெள்ளைக்கண்ணு இறந்து விட்டார். 

    இந்நிலையில் திருமண வயதை எட்டிய மகள் நிவேதாவுக்கு அவரது தாய் நல்லம்மாள் மாப்பிள்ளை பார்த்து வந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து ஒரு வாலிபர் வந்து நிவேதாவை பெண் பார்த்து விட்டு சென்றார். அதன் தொடர்ச்சியாக இருவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். 

    பின்னர் நல்லம்மாள் மாப்பிள்ளையின் ஜாதகத்தை வாங்கி ஜோசிரியரிடம் காண்பித்தார். அவர் மாப்பிள்ளை ஜாதகம் சரியில்லை என்று கூறியுள்ளார். இதை நல்லம்மாள், மகள் நிவேதாவிடம் கூறினார். ஆனால் நிவேதா அந்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்வதாக கூறினார். இதனால் தாய், மகள் இடையே பிரச்சினை வெடித்தது. இதில் மனமுடைந்த நிவேதா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து தகவல்அறிந்ததும் துவாக்குடி போலீசார் விரைந்து சென்று நிவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகள் திருமணத்துக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் அனுப்பிவரும் அழைப்பிதழ்கள் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. #IshaAmbani #IshaAmbaniWeddingInvitation #SocialMedia
    மும்பை:

    இந்தியாவின் பெரும் கோடீஸ்வரராக உள்ள ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் ஒரே மகள் இஷா அம்பானி. இவருக்கும் பிரபல தொழிலதிபரின் மகனான ஆனந்த் பிரமல் என்பவருக்கும் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பத்திரிகை, வகைவகையான கழுத்து செயின்கள் என 4 பரிசு பெட்டகத்துடன் இந்த திருமணத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள அழைப்பிதழ்கள் ஒவ்வொன்றும் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை என விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    குறைந்தபட்சம் ஆயிரம் அழைப்பிதழ்கள் என்றாலே இதற்கான செலவுத்தொகை சுமார் 30 கோடி ரூபாய் என்ற நிலையில் இப்படி பல்லாயிரம் அழைப்பிதழ்கள் பிரபல தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், மந்திரிகள் மற்றும் முன்னணி நடிகர்-நடிகையர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.

    இந்த அழைப்பிதழின் மாதிரிகள் யூடியூப் உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் வைரலாக பரவி, அடுத்தவேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லாமல் தவிக்கும் பலகோடி மக்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டுள்ளது.

    இப்படி கோடிக்கணக்கான பணத்தை அழைப்பிதழுக்கே செலவிடும் முகேஷ் அம்பானி, தனது செல்ல மகளின் திருமணத்துக்கு எத்தனை நூறு கோடியையும் கரியாக்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. #IshaAmbani #IshaAmbaniWeddingInvitation #SocialMedia

    இப்படி சர்ச்சையை கிளப்பியுள்ள அந்த ஆடம்பர அழைப்பிதழை வீடியோவில் காண..,


    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.
    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். அப்படி ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிப் பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அப்படியே தேடிப் பிடித்தாலும் திருமணத்துக்கு முன்பு இருந்தது போலவே தான் திருமணத்துக்குப் பின்னும் இருப்பார்களா என்று தெரியாது. இப்படி வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன.

    இதுபோன்ற அநாவசியமான பிரச்னைகளைத் தவிர்க்க சிறந்த வழி நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்வது தான்.

    நெருங்கிய நண்பரை விட சிறந்த வாழ்க்கைத் துணை வேறு எதுவும் இருக்காது. அதனால் நெருங்கிய நண்பரைத் திருமணம் செய்துகொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

    இருவருக்குமே உள்ள கெட்ட பழக்கங்கள், குறைகள் ஆகியவை இருவருக்குமே தெரியுமென்பதால் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட முடியும்.

    இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருப்பதால் அளவுக்கதிகமான நம்பிக்கையும் உண்டாகும்.

    ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.

    ஒருவரையொருவர் குறை சொல்லமாட்டார்கள்.

    இருவருக்குமிடையே அதிகபட்ச நேர்மை இருக்கும்.

    ஒருவருக்கொருவர் பழகுவதில் அதிக இணக்கமும் நெருக்கமும் இருக்கும். புதிய ஆளிடம் பழகுகிறோம் என்ற சங்கடம் இருக்காது.

    கடினமான, பிரச்னைக்குரிய சமயங்களில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள்.

    இருவரில் யாருக்கு பிரச்னை என்றாலும் முதல் ஆளாக ஓடிவந்து தன்னுடைய பிரச்னையாக நினைத்து தீர்த்து வைப்பார்கள்.

    அதனால் வெளியில் தேடி அலைவதைக் காட்டிலும் நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.   
    ×