search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    நியூயார்க் நகருக்கு வந்துள்ள வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியான கிம் யோங்-சோல், அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். #NorthKoreaOfficialinUSA #TrumpKimsummit #KimYongchol

    நியூயார்க்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகளை பியாங்யாங் நகருக்கு அனுப்பி வைத்தார். 



    இந்நிலையில், வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியும், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மிகவும் நெருக்கமானவருமான கிம் யோங்-சோல் நேற்று அமெரிக்காவுக்கு வந்தார். கடந்த 20 ஆண்டுகளில் முக்கிய வடகொரிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்கு வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். நியூயார்க் நகருக்கு வருகை தந்துள்ள அவர் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

    இந்த பேச்சுவார்த்தையில், டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #NorthKoreaOfficialinUSA #TrumpKimsummit #KimYongchol
    அமெரிக்காவில் 9 வயது சிறுவன், தன் தம்பியின் மருத்துவச் செலவுக்காக ஜூஸ் மற்றும் டிஷர்ட் விற்பனை செய்து 4 லட்சம் ரூபாய் திரட்டியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கலிபோர்னியா:

    கலிபோர்னியாவின் கிரீன்வுட் பகுதியைச் சேர்ந்த மெலிஸ்சா-மேட் தம்பதியருக்கு 9 வயதில் ஆண்ட்ரூ மெரி என்ற மகன் இருக்கிறான். சமீபத்தில் இந்த தம்பதியருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்தது முதலே அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தையை பிட்ஸ்பர்க் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


    சிகிச்சைகான மருத்துவ பில்லை கட்ட முடியாமல் பெற்றோர் மிகவும் சிரமப்பட்ட வேளையில், தம்பியின் மருத்துவ செலவுக்காக தானே பணம் திரட்ட முடிவு செய்தான் ஆண்ட்ரூ.


    இதற்காக வித்தியாசமாக முயற்சி செய்த ஆண்ட்ரூ, எலுமிச்சம்பழ ஜூஸ் தயாரித்து அதை உள்ளூர் நெடுஞ்சாலையோரம் விற்பனை செய்தான். அத்துடன் தன் தம்பியின் பெயர் அச்சிடப்பட்ட டிஷர்ட்டுகளையும் விற்பனை செய்தான்.  ஆண்ட்ரூவின் இந்த முயற்சிக்கு குடும்பத்தினர் அனைவரும் உதவி செய்தனர். இதன்மூலம் 2 மணி நேரத்தில் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் பணம் திரட்டினான் ஆண்ட்ரூ. அதை அவனது தம்பியின் மருத்துவ செலவுக்கு பயன்படுத்தினான். அவனது பாசம் மிகவும் பாராட்டுக்குரியது என அனைவரும் வியந்தனர். #LemonadeStand #FundRaiseForBrother #PrayForDylan
    வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர். #TrumpKimsummit #Trump #ShinzoAabe
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் நேற்று தொலைபேசியில் பேசினர். வட கொரியாவுடனான சந்திப்பு குறித்து இருவரும் ஆலோசித்தனர். அப்போது, வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது. #TrumpKimsummit #Trump #ShinzoAabe
    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய வெப்பமண்டல புயல் காரணமாக அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். #Tropicalstorm #Alberto
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஆண்டு தோறும் புளோரிடா மாகாணத்தில் ஜூன் மாதம் புயல் சீசன் துவங்கும். இந்த ஆண்டு தற்போது ஆல்பர்டோ என்ற சூறாவளி புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. பனாமா நகரத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் பலத்த மழையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆல்பர்டோ புயல் வடக்கு நோக்கி நகரும்போது வலுவடைந்து வருவதாகவும், வெள்ள அபாயம் ஏற்பட உள்ளதாகவும் மியாமி புயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டில் பெயரிடப்பட்ட முதல் புயல் ஆல்பர்டோ ஆகும். இந்த புயலின் மூலம் மேற்கு ஜியார்ஜியா பகுதிகளில் சுமார் 30 செ.மீ அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் 60 முதல் 120 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tropicalstorm #Alberto

    அமெரிக்காவில் கொள்ளையனால் சுடப்பட்ட சீக்கிய டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார். இதை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் ஒகியோவை சேர்ந்தவர் ஜஸ்பிரீத் சிங் (32). சீக்கியரான இவர் லாரி டிரைவராக இருந்தார்.

    கடந்த 12-ந்தேதி அதாவது 2 வாரத்துக்கு முன்பு பிராடரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் என்பவன் ஜஸ்பிரீத் சிங்கை துப்பாக்கியால் சுட்டான். இவரிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிக்க இத்தகைய தாக்குதலை நடத்தினான்.

    இதனால் படுகாயம் அடைந்த அவர் ஒகியோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தற்போது இதை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். #tamilnews
    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் எச். புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #GeorgeHWBush
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச். புஷ் (93).  இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் கடந்த மாதம் மரணம் அடைந்தார்.

    அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையை பெற்ற இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் எச். புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக, ஜார்ஜ் புஷ்ஷின் அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்றும் புஷ்ஷுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மைனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார். #GeorgeHWBush
    அமெரிக்காவில் டிரைவராக பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்பிரீத் சிங் என்ற சீக்கியர் துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Sikhkilled
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தின் மான்ரோ பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக ஜஸ்பிரீத் சிங் என்ற சீக்கியர் வாழ்ந்து வந்துள்ளார், இவர் அப்பகுதியில் சரக்கு லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், மே 12-ம் தேதி புரோடெரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் என்ற வாலிபர் இவரிடம் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அப்போது, ராபர்ட் வைத்திருந்த துப்பாக்கியால் சுடப்பட்ட ஜஸ்பிரீத் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    இதையடுத்து கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜஸ்பிரீத் சிங், சிகிச்சை பலனின்றி கடந்த 21-ம் தேதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

    இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள புரோடெரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் மீது கொடூரமான கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றபிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. #Sikhkilled
    பாகிஸ்தானுக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு நிதி அடுத்த ஆண்டு முதல் மிக குறைவான தொகைதான் வழங்கப்படும் என்று அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழுவின் முன் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். #MikePompeo
    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்த நாட்டு அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அது மட்டுமின்றி தலீபான், ஹக்கானி வலைச்சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் சொர்க்கபுரியாக திகழ்கிறது என்றும் கூறுகிறது.

    இதன் காரணமாக அந்த நாட்டுக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு நிதி உதவி 1.15 பில்லியன் டாலரை (சுமார் ரூ.7 ஆயிரத்து 820 கோடி) வழங்காமல் கடந்த ஜனவரியில் அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

    புத்தாண்டில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கான நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று எச்சரித்தார்.

    இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழுவின் முன் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான், அமெரிக்க தூதரக அதிகாரிகளை மோசமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் டானா ரோஹ்ராபச்சர் என்ற எம்.பி.யின் கேள்விக்கு பதில் அளித்த மைக் பாம்பியோ, “2018-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு குறைவான நிதியைத்தான் விடுவித்து உள்ளோம். மீதி தொகையை வழங்குவது பரிசீலனையில் உள்ளது. அடுத்த ஆண்டு மிக குறைவான தொகைதான் வழங்கப்படும் என்று யூகிக்கிறேன்” என்று கூறினார்.  #MikePompeo
    சிங்கப்பூரில் நடைபெறுவதாக இருந்த டொனால்ட் டிரம்ப்- கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #TrumpKimSubmit #KimJongUn #DonaldTrump
    வாஷிங்டன் :

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.



    அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதற்கிடையே, தென்கொரியா உடன் சமீபத்தில் நடக்க இருந்த சந்திப்பை வடகொரியா ரத்து செய்தது. டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

    இதுதொடர்பாக நேற்று வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது சிறப்பான ஒன்றாக இருக்கும். இப்போது அது நடக்கவில்லை என்றாலும், சில காலத்திற்கு பின்னர் நடக்கலாம். சிங்கப்பூர் சந்திப்பு வேலைக்கு ஆகாது என்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் இது வேலை செய்யாது என்பதல்ல. ஆனால், ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில்,  வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்-க்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கடிதம் எழுதியுள்ளளார். அதில், அவர்கள் இருவருக்கும் இடையே ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அவர் குறிப்பிட்டுள்ளார். #TrumpKimSubmit #KimJongUn #DonaldTrump
    அமெரிக்காவில் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 18ந் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி சபிகா உடல், கராச்சி நகருக்கு வந்து சேர்ந்தது. #SchoolShooting #Karachi #StudentSabika
    கராச்சி:

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் பெருநகர பகுதியில் அமைந்து உள்ள சாண்டா பே உயர்நிலைப்பள்ளியில் கடந்த 18-ந் தேதி நடந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

    அவர்களில் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த மாணவி சபிகாவும் (வயது 17) ஒருவர். சபிகா, அங்கு அமெரிக்க வெளியுறவுத்துறை உதவித்தொகை பெற்று படித்து வந்தார்.

    இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த அவரது உடல், கராச்சி நகருக்கு நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தது. அவரது தந்தை அஜீஸ் ஷேக், மகளின் உடலைப் பெற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் அமெரிக்க தூதர் ஜான் வார்னர், கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    சபிகாவின் உடல் விமான நிலையத்தில் இருந்து, குல்ஷான் இ இக்பால் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின்னர் கராச்சி ஹக்கீம் சயீத் மைதானத்தில் காலை 9 மணியளவில் இறுதி தொழுகை நடைபெற்றது. அதில் சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் ஷா, கவர்னர் முகமது ஜபைர், உள்துறை மந்திரி சொகைல் அன்வர் சியால் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறைந்த மாணவி சபிகாவுக்கு அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து ஷா பைசல் காலனியில் உள்ள அஜிம்புரா மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    ஜூன் மாதம் 9-ந் தேதி சபிகா ஊருக்கு வருவார் என குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த நிலையில், அவருக்கு இந்த பரிதாப முடிவு ஏற்பட்டுவிட்டது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.  #SchoolShooting #Karachi #StudentSabika
    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Shooting
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு துப்பாக்கி லைசென்சுகள்  வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர்

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், புளோரிடா மாகாணத்தின் பனாமா சிட்டியில் அமைந்துள்ளது அடுக்குமாடி குடியிருப்பு. இந்த குடியிருப்பில் நேற்று காலை கெவின் ஹல்ரய்டு (49), என்ற ஆசாமி தனது கையில் இருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுடத் தொடங்கினான்.

    இதையடுத்து, அப்பகுதியில் சென்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சிலர் எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடம் வந்த நாங்கள், கெவினை மடக்கிப் பிடிக்க முயன்றோம். அவன் துப்பாக்கி சூட்டை நிறுத்தாததால் சுட்டுக் கொன்றோம். அதற்கு பின்னரே அந்த பகுதியில் சகஜ நிலை திரும்பியது என தெரிவித்துள்ளனர். #Shooting #Tamilnews
    சமீபத்தில் நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வென்ற நிலையில், வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.#trumph #sanctionsagainstVenezuela
    வாஷிங்டன்:

    சமீபத்தில் வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் தில்லு முல்லு நடைபெற்றதாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தல் தொடர்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறுகையில், ‘வெனிசுலா அதிபர் தேர்தல் போலியான ஒன்று. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை. முறைகேடாக நடைபெற்ற இந்த தேர்தல், வெனிசுலாவின் புனிதமிக்க ஜனநாயக கலாச்சாரத்தை தகர்த்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

    முறைகேடான இந்த தேர்தலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்த தேர்தல் அரசியலமைப்பின் ஒழுங்கை குலைப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவிலிருந்து வெனிசுலாவுக்கான பொருளாதார பரிவர்த்தனைகள் மற்றும் இதர ஒப்பந்தங்களுக்கும் தடை விதித்து வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்துள்ளார்.

    மேலும், அமெரிக்க நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான வெனிசுலா அரசின் பங்குகள், விற்பனை, பரிமாற்றங்கள், போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். #trumph #sanctionsagainstVenezuela
    ×