search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காங்கோவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர். #NorthCarolina #apartmentfire

    வாஷிங்டன்: 

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காங்கோவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர். 
    காங்கோவில் இருந்து அகதிகளாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பம் ஒன்று வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டில் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அந்த தீயில் சிக்கி 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் படுகாயமடைந்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 



    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 5 குழந்தைகளும் 8 வயதுக்கும் குறைவானவர்கள் என்று கூறப்படுகிறது. #NorthCarolina #apartmentfire
    அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் இதரநாடுகளின் துணையுடன் நாங்கள் தொடர்ந்து நீடிப்போம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இன்று அறிவித்துள்ளார். #Rouhani #nuclearaccord
    டெஹ்ரான்:

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. 

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும். 

    இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஈரான் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால், ரஷியா, சீனா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில மேற்கத்திய நாடுகளும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற கூடாது என வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், இன்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சந்தித்த ரவுகானி, இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது தர்மநெறிகளுக்கு எதிரான செயல். அமெரிக்கா விலகினாலும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள ஐந்து நாடுகளின் துணையுடன் நாங்கள் தொடர்ந்து நீடிப்போம் என குறிப்பிட்டுள்ளார். #Rouhani #nuclearaccord
    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் பேரன் ஜாக் ஸ்க்லாஸ்பெர்க் ‘புளூ பிளட்ஸ்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.#jackschlossberg #bluebloods
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் பேரன் ஜாக் ஸ்க்லாஸ்பெர்க் ‘புளூ பிளட்ஸ்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

    இதுகுறித்து, ஜாக் ஸ்க்லாஸ்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தனது நீண்ட நாள் கனவு நனவாகியிருக்கிறது என்றும், புளூ பிளட்ஸ் மிகச்சிறந்த படமாக இருக்கும்’ எனவும் பதிவிட்டுள்ளார்.

    மேலும், அவரது தாயார் கரோலின் கென்னடியுடன் போலீஸ் உடையில் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். #johnkennedy #jackschlossberg #bluebloods

    அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் விளையாடி கொண்டிருந்த எஜமானரை எதிர்பாராதவிதமாக அவரது நாய் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி. இவர் தனது வீட்டில் ‘பாலே’ என்று பெயரிடப்பட்ட செல்ல நாயை வளர்த்து வந்தார்.

    ‘லாப்ராடார்’ இனத்தை சேர்ந்த அந்த நாயுடன் சோபாவில் அமர்ந்தபடி இருந்தார். துள்ளிக் குதித்து விளையாடிய அந்த நாய் திடீரென அவர் இடுப்பு பெல்டில் வைத்திருந்த 9 ‘எம்.எம்.’ ரக துப்பாக்கியை பறித்தது.

    எதிர்பாராதவிதமாக தனது காலால் துப்பாக்கியின் பிஸ்டலை இழுத்தது. அதனால் துப்பாக்கிவெடித்து ரிச்சர்ட் ரெமி உடலில் குண்டு பாய்ந்தது.

    இதனால் குண்டு காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அவசர உதவி மையத்தின் 911 என்ற நம்பருக்கு போன் செய்தார். அப்போது எனது நாய் சுட்டுவிட்டது உதவிக்கு வாருங்கள் என அழைத்தார்.#tamilnews
    நல்லெண்ண அடிப்படையில் வடகொரிய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூன்று அமெரிக்கர்களும் இன்று தாயகம் வந்தடைந்ததை அடுத்து அவர்களை அதிபர் ட்ரம்ப் நேரில் சென்று வரவேற்றுள்ளார். #Trump #NorthKorea
    வாஷிங்டன் :

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேரை வடகொரியா அதிகாரிகள் கைது செய்து வைத்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அறிவிக்கப்படாத திடீர் பயணமாக நேற்று வடகொரியா தலைநகர் பியாங்யாங் சென்றார்.

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை டிரம்ப் சந்தித்துப் பேசப்போகும் இடம் மற்றும் தேதி இந்த சந்திப்பின்போது உறுதிசெய்யப்பட்டது. மேலும், வடகொரியா கைது செய்துள்ள மூன்று அமெரிக்கர்களை விடுவிப்பது தொடர்பாகவும் மைக் பாம்ப்பியோ பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக, அந்த மூன்று அமெரிக்கர்களும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடன் மைக் பாம்ப்பியோ வாஷிங்டன் நகருக்கு புறப்பட்ட தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.


    இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வாஷிங்டன் நகரில் உள்ள ஆண்டுரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்துசேரும் மைக் பாம்ப்பியோவை நேரில் சென்று வரவேற்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்

    இந்நிலையில், இன்று வாஷிங்டன் நகர் ஆண்டுரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்தடைந்த அவர்கள் மூவரையும் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். “எங்களை தாயகம் அழைத்து வர உதவிபுரிந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ மற்றும் அமெரிக்க மக்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என அவர்கள் மூவரும் தெரிவித்தனர்.

    அடுத்ததாக அவர்கள் மூவரும் அமெரிக்க ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இந்த வரவேற்பு நிகழ்சியில் விடுதலை செய்யப்பட்ட மூவரின் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Trump #NorthKorea
    ×