search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95602"

    சீனாவின் யூலின் நகரில் 21-ம் தேதி தொடங்கும் நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. #YulinDogMeatFestival

    பீஜிங்:

    சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலின் நகரில் ஆண்டுதோறும் நாய்கறி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்த திருவிழாவில் பலியிடப்படும் விலங்குகள் தான். 

    இந்த ஆண்டு யூலின் நாய்கறி திருவிழா வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. சுமார் ஒரு வாரம் இந்த நாய்கறி திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் நாய்கள் உயிருடன் விற்பனை செய்யப்படும். விற்பனை செய்யப்படும் நாய்கள் அங்கேயே வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். 

    கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. சீனாவில் கோடைகாலங்களில் நாய் இறைச்சியை உண்பது உடலுக்கு நல்லது என்பது நம்பப்படுகிறது. அதேபோல் தங்களது பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தும் நாய்களை பலியிடுதலும் அரங்கேறும்.



    ஆனால் இத்திருவிழாவில் விற்பனை செய்வதற்காகவே நாய்கள் திருடப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன் மிக கொடூரமான முறையில் கூண்டுகளில் அடைத்து யூலினுக்கு நாய்கள் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது. நாய்கள் மட்டுமின்றி பூனைக்கறியும் இந்த திருவிழாவில் கிடைக்கும்.

    இத்திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விலங்குகள் நல ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இதைப்பற்றிய கவலைகள் இன்றி நாய்கறி திருவிழாவுக்கு சீனர்கள் தயாராகி வருகின்றனர். #YulinDogMeatFestival
    ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கிய புத்தம் புது பி.எம்.டபிள்யூ கார் ஊதுபத்தி கொளுத்தியதால் எரிந்து எலும்புக்கூடான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்சோய் நகரத்தை சேர்ந்த நபர் இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை வாங்கியுள்ளார். புதிதாக கார் வாங்கியுள்ளதால் மத சம்பிரதாயப்படி காரின் முன்னால் ஊதுபத்தி கொளுத்தி வழிபட முடிவு செய்து காரின் முன் ஊதுபத்தியை வைத்துள்ளார்.

    சீனா உள்ளிட்ட புத்த வழிபாடு உள்ள சில நாடுகளில் ஊதுபத்திகள் பெரிதான ஒன்றாக இருக்கும். காரின் முன் ஊதுபத்தியை வைத்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட, அங்குள்ள நான்கு சிறுவர்கள் ஊதுபத்தியை கொளுத்தியுள்ளனர். திடீரென அணல் கங்குகள் காரின் மீது விழ, யாரும் எதிர்பாராத வகையில் கார் தீப்பிடிக்க தொடங்கியது.

    என்ன நடக்கிறது என அனைவரும் உணர்வதற்கு உள்ளாகவே கார் நன்றாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பலரும் கிண்டலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். வீடியோவை கீழே காணலாம், 

    சீனாவுடனான பனிப்போரை மேலும் மூர்க்கமாக்கும் வகையில் தைவான் தலைநகரில் புதிய தூதரகத்தை அமெரிக்கா இன்று திறந்துள்ளது.
    டாய்பே:

    தைவான் நாட்டை சீனாவின் ஒன்றிணைந்த பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவானுடன் இருந்த தூதரக உறவுகளை கடந்த 1979-ம் ஆண்டில் முறித்துகொண்ட அமெரிக்கா தைவானுக்கு தேவையான போர் ஆயுதங்களை விற்பனை செய்வதில் மட்டும் முதலிடத்தில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், தைவானில் சுமார் 25 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தூதரகத்தை அமெரிக்கா இன்று திறந்துள்ளது. அமெரிக்கா - தைவான் பயிலகம் என இருந்த கட்டிடத்தை சீரமைத்து உருவாக்கப்பட்ட இந்த தூதரகத்துக்கு அமெரிக்க பிரதிநிதிகள் அலுவலகம் என பெயரிடப்பட்டுள்ளது.

    அமெரிக்க கல்வி மற்றும் கலாச்சாரத்துறை துணை மந்திரி மேரி ராய்ஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். இந்த பயணத்தில் பல விவகாரங்களை நாம் சந்தித்துள்ளோம். ஜனநாயகத்தை பாதுகாக்கும் நமது அர்ப்பணிப்பில் ஒவ்வொரு திருப்பத்திலும் புதிய சவால்களை நாம் எதிர்கொண்டு வந்திருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

    இதன் மூலம் தைவான் - அமெரிக்கா இடையிலான நல்லுறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாக தைவான் அதிபர் ட்ஸாய் இங்-வென் குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் இந்த முடிவுக்கு சீனா கண்டனமும் அதிருப்தியும் தெரிவித்துள்ளது. தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு அளித்த வாக்குறுதியை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும். தவறான செயல்பாடுகளை திருத்திகொண்டு, சீன-அமெரிக்க உறவுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அமெரிக்கா நடந்துகொள்ள வேண்டும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #USdefactoembassy #TaiwanChina tensions
    ஷாங்காய் மாநாட்டில் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்தது. #SCOsummit #ModiInChina
    கிங்தாவோ:

    தென் கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை நிலம் மற்றும் கடல் பாதைகளால் ஒருங்கிணைத்து ‘பி.ஆர்.ஐ.’ என்னும் பட்டுப்பாதை திட்டத்தை சீனா நிறைவேற்ற உள்ளது.

    அனைத்து நாடுகளுக்கும் பயன் அளிக்கும் திட்டம் இது என்று சீனா கூறினாலும், ஆசிய பிராந்தியத்தில் அந்த நாடு தன் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கத்தில்தான் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக இந்தியா கருதி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சீனா சுமார் 80 நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு உள்ளது.

    இந்த திட்டம் தொடர்பாக சீனாவில் கிங்தாவோ நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் 2-ம் நாள் நிறைவில் ஒரு பிரகடனம் கொண்டுவரப்பட்டது.

    இதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய பிற நாடுகள் ஒப்புதல் வழங்கி ஆதரவு தெரிவித்த போதும் இந்தியா ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டது.

    இது தொடர்பாக மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “எந்த ஒரு மெகா இணைப்பு திட்டமும், நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும், இதையெல்லாம் உள்ளடக்கிய முயற்சிகளுக்கு இந்தியா தனது ஆதரவை அளிக்கும்” என குறிப்பிட்டார். #SCOsummit #ModiInChina
    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று இரவு சீனாவில் இருந்து டெல்லி திரும்பினார். #SCOsummit #PMModi
    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

    சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டில் தான் முதல் முறையாக பங்கேற்றன.

    இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது சிறப்பு உரையை நிகழ்த்தினார். மேலும், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இந்தியாவுடனான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இன்று நிறைவடைந்தது.

    இந்நிலையில், சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டார். அங்கிருந்து விமானத்தில் வந்த மோடி இரவில் டெல்லி திரும்பினார். அவரை இந்திய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். #SCOsummit #PMModi
    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று சீனாவில் இருந்து தாயகம் புறப்பட்டார்.#SCOsummit #ModiInChina
    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

    சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேசும் இந்த மாநாடு நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டில் தான் முதல்முறையாக இந்த மாநாட்டில் பங்கேற்றன.

    இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது சிறப்பு உரையை நிகழ்த்தினார். மேலும், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இந்தியாவுடனான உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு முடிவடைந்த நிலையில், சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டார்.

    பிரதமர் மோடி கடந்த ஒரு மாத கால இடைவெளியில் தற்போது 2-வது முறையாக சீனா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. #SCOsummit #ModiInChina
    இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்ய குவிங்டாவ் நகரில் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையொப்பமானது. #chinaindiariceexport
    பீஜிங்:

    இந்தியாவில் இருந்து பாசுமதி அல்லாத பிறரகத்தை சேர்ந்த அரிசி வகைகளை இறக்குமதி செய்ய சீன அரசு கடந்த 2006-ம் ஆண்டில் தடை விதித்தது. சர்வதேச தரங்களுக்கு ஏற்ப இந்திய அரிசி வகைகள் இல்லாததால் இந்த தடை விதிக்கப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில். குவிங்டாவ் நகரில் நடைபெறும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்ய இன்று ஒப்பந்தம் கையொப்பமானது.

    மேலும், பிரம்மபுத்திரா ஆற்றின் நீர் இருப்பு மற்றும் நீர் அழுத்தம் தொடர்பாக இந்தியா - சீனா இடையே தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் இன்று ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. #tamilnews #chinaindiariceexport
    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தார். #ModimetXiJinping
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

    இந்த அமைப்பில் புதிதாக இணைந்த நாடு என்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலாக இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.

    இந்நிலையில், குவின்காடோ நகரில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ரஷித் அலிமோவ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.


    பின்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    முன்னதாக, இந்த அமைப்பில் உள்ள நாட்டின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற பூர்வாங்க ஆலோசனை கூட்டத்திலும் மோடி கலந்து கொண்டார். #SCO #ModimetXiJinping
    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் சீனா சென்றடைந்தார். எல்லை தாண்டும் பயங்கரவாதம் குறித்து மாநாட்டில் அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #SCOsummit #ModiInChina
    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

    இந்த மாநாட்டில் இந்தியா முதல் முறையாக இந்த ஆண்டுதான் கலந்து கொள்கிறது. இந்தியாவை போன்றே பாகிஸ்தானும் இந்த அமைப்பில் கடந்த ஆண்டுதான் உறுப்பினரானதால் அந்த நாடும் இப்போதுதான் முதல் முறையாக கலந்து கொள்கிறது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை தனி விமானத்தில் சீனா புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். மதியம் சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு கிங்டாவ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.



    பிரதமர் மோடி கடந்த ஒரு மாத கால இடைவெளியில் தற்போது 2-வது முறையாக சீனா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். அவர் எல்லை தாண்டும்  பயங்கரவாதம் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பயணத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். #SCOsummit #ModiInChina
    இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டுச்சென்றார். சீனாவில் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரதமர் சந்தித்து பேசுகிறார். #Modi #PMModi
    புதுடெல்லி:

    ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு சீனாவில் உள்ள குயிங்டோ நகரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா கடந்த ஆண்டுதான் முழு நேர உறுப்பினரானது. இந்தியா இணைந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால், இந்தியா என்னென்ன விஷயங்களை மாநாட்டில் முன்வைக்கப் போகிறது என்பது குறித்து உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.

    இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்து வரும் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் உள்ள நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து, மோடி இந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளித்து கருத்துகளை முன்வைப்பார் என்று தெரிகிறது. இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட தலைவர்களையும் மோடி இந்தப் பயணத்தின்போது சந்தித்துப் பேச இருக்கிறார்.

    அதே நேரத்தில் பாகிஸ்தான் அதிபர் மம்னுன் ஹூசைனை அவர் சந்திக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில், இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

    சுமார் ஒரு மாத கால இடைவேளையில் மோடி இப்போது இரண்டாவது முறையாக சீனா செல்கிறார். முன்னதாக கடந்த ஏப்ரல் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை மோடி சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர். #Modi #PMModi
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிவிதித்தால் வர்த்தக பலன்களை பெற முடியாது என அமெரிக்காவுக்கு, சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. #China #Warns
    பீஜிங்:

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டியதால் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் இருநாடுகளும் பரஸ்பர இறக்குமதியை குறைத்தன.இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக சீன வர்த்தகக்குழு ஒன்று கடந்த மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொண்டு, டிரம்பின் பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ராஸ் நேற்று முன்தினம் பீஜிங் வந்தார். அவர் சீன துணை பிரதமர் லியு ஹியுடன் நேற்று வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் குறிப்பிடத்தக்க வகையிலான புதிய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தானதா? என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

    எனினும் அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்தால் அனைத்து ஒப்பந்தங்களும் செல்லுபடியாகாது என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இது குறித்து சீன அரசின் செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது:-

    விவசாயம், எரிசக்தி, நேர்மறையான முடிவை எட்டுதல் மற்றும் உறுதியான வளர்ச்சி போன்ற துறைகள் தொடர்பாக வாஷிங்டனில் எட்டப்பட்ட உடன்பாட்டை செயல்படுத்துவது குறித்து இரு தரப்பும் நல்ல தொடர்பில் ஈடுபட்டு இருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வது என்ற சீனாவின் நடைமுறையில் மாற்றம் இல்லை.

    அமெரிக்கா மற்றும் சீனா தற்போது ஏற்படுத்தி இருக்கும் உடன்பாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து இருதரப்பும் சந்தித்து பேச வேண்டும். மாறாக வர்த்தக போரில் ஈடுபடக்கூடாது.

    சீன பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிமுகம் செய்தால், வர்த்தக பலன்கள் எதையும் பெற முடியாது. இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் செயலற்றதாகி விடும்.

    இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் கூறியிருந்தது.

    முன்னதாக பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த வில்பர் ராஸ் கூறுகையில், ‘எங்கள் சந்திப்புகள் இதுவரை நட்பு ரீதியாகவும், வெளிப்படையாகவும் அமைந்து இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட ஏற்றுமதி பொருட்கள் தொடர்பாக சில பயனுள்ள தலைப்புகளும் இதில் இடம்பெற்று இருந்தன’ என்று தெரிவித்தார்.  #China #Warns #Tamilnews
    சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி வைத்து, சீனா அண்டை நாடுகளை மிரட்டுகிறது என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.
    சிங்கப்பூர்:

    சீனாவின் தென்பகுதியில் அமைந்து இருப்பது தென்சீனக்கடல். பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக திகழ்கிற தென்சீனக்கடல், 35 லட்சம் ச.கி.மீ. பரப்பளவிலானது. உலகின் 3-ல் ஒரு பங்கு கப்பல் போக்குவரத்து இந்தக் கடல் வழியே நடைபெறுகிறது. அது மாத்திரம் அல்லாமல், இந்தக் கடலின் அடியில் ஏராளமான எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் உள்ளது.

    இதன் காரணமாக இந்த கடல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. இருப்பினும் இந்த கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகள் மீது சீனாவுடன் வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.

    ஆனால் சீனா அதில் செயற்கை தீவுகளை அமைத்து, அதை ராணுவமயமாக்கி வருவதாக பரவலாக ஒரு சர்ச்சை உள்ளது. சமீபத்தில் அங்கு உள்ள பராசல் தீவின் அங்கமான ஊடி தீவில் சீனா கனரக போர் விமானங்களை நிறுத்தியது. இதை சீனா ஒப்புக்கொண்டது. ஆனால் சீனா அந்தப் பிராந்தியத்தை சீர்குலைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

    இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ், சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான ஒரு மாநாட்டில் பேசினார். அதில் அவர் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார்.

    அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    தென் சீனக்கடல் பகுதியில் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள், தரையில் இருந்து வானுக்கு சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணைகள், மின்கருவிகளை செயலிழக்க செய்கிற ஜாமர் கருவிகளை சீனா ஏராளமாக நிறுத்தி வைத்து உள்ளது.

    இவற்றை சீனா நிறுத்தி வைத்து இருப்பதின் நோக்கம், அண்டை நாடுகளை மிரட்டுவதும் அச்சுறுத்துவதும்தான்.

    சீனாவின் நடவடிக்கைகள் அதன் பரந்த நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.

    சீனாவுடன் அமெரிக்கா ஆக்கப்பூர்வமான உறவைப் பராமரிக்கத்தான் விரும்புகிறது. அதே நேரத்தில் தேவைப்பட்டால் அந்த நாட்டுடன் தீவிரமாக போட்டியிடுவோம். இந்த பிராந்தியத்தில் சீனா முக்கிய பங்கு ஆற்ற வேண்டும் என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென்சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதிகளை ராணுவ மயமாக்க மாட்டோம் என்று 2015-ம் ஆண்டு, சீன அதிபர் ஜின்பிங் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அளித்த வாக்குறுதியை காப்பாற்றத்தவறி விட்டது என்றும் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சாடினார்.

    இந்த மாநாட்டில் ஜேம்ஸ் மேட்டிஸ் பேசும்போது, டிரம்ப், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை.

    இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஜனாதிபதி டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் சிங்கப்பூரில் 12-ந் தேதி சந்தித்து நடத்த உள்ள பேச்சு வார்த்தையில் தென்கொரியாவில் அமெரிக்க ராணுவத்தை நிறுத்தி உள்ள விவகாரம் இடம் பெறாது. (தென் கொரியாவில் அமெரிக்கா 28 ஆயிரத்து 500 துருப்புகளை நிறுத்தி வைத்து இருக்கிறது). கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்கள் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்” என்று குறிப்பிட்டார். 
    ×