search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95604"

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசின் ஏஜெண்டு என்று தாராபுரத்தில் டிடிவி தினகரன் பேசினார். #dinakaran #opanneerselvam #CentralGovernment

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தாராபும் தொகுதிக்கு உட்பட்ட தளவாய் பட்டினத்தில் திறந்த வேனில் அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களின் நலன் காக்க மத்திய அரசை எதிர்க்கவும் சற்றும் யோசிக்காதவர் ஜெயலலிதா. 2016-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பா. ஜனதா அலை வீசிய போதும் தமிழகத்தில் அம்மாவிற்கு 37 எம்.பி.க்களை வெற்றி பெறச்செய்தவர்கள் நம்தமிழக மக்கள். தமிழக நலனுக்கு எதிரான மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவைகளை எதிர்த்தவர் அம்மா. ஆனால் எட்டு வழிச்சாலை விவசாயிகளை பாதிக்கும் என தெரிந்தும் அதை எதிர்க்க துணிவில்லாமல் மோடி அரசின் ஏஜெண்டாக இந்த அரசு செயல்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பன்னீர்செல்வம் மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்பட்டதால் பொதுச் செயலாளர் சசிகலாவால் அப்புறப்படுத்தப்பட்டார்.

    சசிகலாவால் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டு உண்ட வீட்டிற்கு துரோகம் செய்துள்ளார். 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிக்க வைத்து முதல்வர் ஆனாரா? கொங்கு மண்டலம் எப்போதும் நமக்கு ஆதரவு தரும் பகுதியாகும் 90 சதவீத தொண்டர்கள் நம்முடன் உள்ளனர்.


    ஆர்.கே. நகரில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளை கீழே தள்ளி விட்டு அமோக வெற்றி பெற்றோம். அதனைப் போல திருவாரூர், திருப்பரங்குன்றத்திலும் குக்கர் சின்னம் அமோக வெற்றி பெறும். தமிழக அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தவிக்கின்றனர். கோர்ட்டில் தண்டனை பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகவேல், மாவட்ட அவைத்தலைவர் நரேந்திரன், மாநில வழக்கறிஞர் அணி துணை பொது செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலாராணி உட்பட ஏராளமானேர் கலந்து கொண்டனர். #dinakaran #opanneerselvam #CentralGovernment

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #18mlas #sasikala #hraja #tngovt

    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை கடந்த 31-ந் தேதி முடிவடைந்தது. கோர்ட்டு தினமும் பல வழக்குகளை சந்திக்கிறது. இதனால் தீர்ப்பு எப்போது வரும் என்பதை கூற முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பை கூற வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. இதை கூற யாருக்கும் அதிகாரமும் இல்லை.

    இருப்பினும் 3-வது நீதிபதி வழங்கும் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சசிகலாவுக்கு பெங்களூருவில் நிலவும் சீதோஷ்ண மாற்றம் தொடர்பான சில பாதிப்புகள் இருந்தன. தற்போது அவர் நலமாக உள்ளார். அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் தவறானவை.

    சிறையில் சசிகலா கன்னடம் மற்றும் இந்தி மொழிகளை கற்பது பற்றி நான் எதுவும் அவரிடம் கேட்கவில்லை.


    தூத்துக்குடியில் தூயக்காற்று, குடிநீர் இல்லை என்று கூறி போராடிய பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் யாரும் தீவிரவாதிகள் கிடையாது. இதனால் உணர்ச்சி வசப்பட்டு குரல் எழுப்பிய சோபியாவை கைது செய்ய காட்டிய வேகத்தை எச்.ராஜா விவகாரத்தில் தமிழக போலீசார் காட்டவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் அடிமை அரசு உள்ளது.


    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது தவறான முடிவு. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும்.

    சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு செலவாகும் ரூ. 10 ஆயிரம் கோடியை கொண்டு மாநில சாலைகளை சீர்செய்யலாம். கர்நாடகத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை சேமிப்பதற்கு திட்டங்கள் தீட்டலாம். அத்துடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற செலவிடலாம். தொழிற்சாலைகள் கொண்டு வருவதாக கூறி புதிய திட்டங்களை கொண்டு வந்தால் தமிழகம் சோமாலியாவாக மாறும். ஒவ்வொரு பொழுதும் இன்று என்ன திட்டத்தை அறிவிக்க உள்ளார்கள் என்ற அச்சத்தோடு தான் விடிகிறது.

    தமிழக மக்கள் இயற்கையிலேயே அமைதியானவர்கள். இதனால் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க போலீசார் எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்க வேண்டிய காவல் துறையினரால் தான் பிரச்சினைகள் உருவாகிறது. ஸ்டெர்லைட் போன்ற சம்பவங்கள் இதற்கு உதாரணம். இதில் உளவுத்துறை முற்றிலுமாக செயல் இழந்துள்ளது. இந்தியாவில் எங்கேயும் கேள்விப்படாத வகையில் குட்கா முறைகேடு விவகாரத்தில் காவல் துறை தலைவர் (டி.ஜி.பி.) வீட்டிலேயே சோதனை நடைபெற்றது. இவை அனைத்தும் தவறான நிகழ்வாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக தம்பிதுறை களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 2 மாதங்களாக வருகிற பாராளுமன்ற தேர்தலை நோக்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

    எங்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வயது ஒரு தடை இல்லை.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். அடுத்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதிக்குள் இந்த உறுப்பினர்கள் எண்ணிக் கையை எட்டி விடுவோம்.

    வருகிற 7-ந் தேதி திருப்பரங்குன்றத்திலும், 10-ந் தேதி திருவாரூரிலும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதன் மூலம் சமூக நீதி பாதுகாக்கப்பட்டது. 34 ஆண்டுகளாக பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் படித்து நல்ல நிலையை அடைந்து வருகின்றனர்.

    கல்லூரியில் படித்து மருத்துவர்களான பலர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறுக்கு வழியில் “நீட்” என்ற ஆயுதத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

    தமிழகத்தில் நர்சிங் படிப்புக்கு “நீட்” தேர்வு தேவையற்றது.

    ஆர்.பி. உதய்குமார், பாண்டிய ராஜன் ஆகியோர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏதேதோ பேசுவார்கள். இவர்களின் பேச்சுக்கு மக்களிடம் மரியாதை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #18mlas #sasikala #hraja #tngovt

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். #pugazhenthi #sasikala

    தருமபுரி:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு தண்டனை காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் பாக்கி உள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்ததாகவும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் வதந்தி பரவியது. இது குறித்து கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். கடந்த 2, 3 மாதங்களாகவே அவரது உடல்நிலை குறித்து சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அரசியல் அனாதைகள் தான் இது போன்ற வதந்திகளை பரப்பி வருவது எங்களுக்கு தெரியும்.


    கடந்த மாதம் சசிகலா பிறந்த நாளின் போது எங்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உற்சாகமாக எங்களிடம் பேசினார். இனிமேலாவது அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #pugazhenthi #sasikala

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். #Sasikala #Pugazhendhi
    தருமபுரி:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு தண்டனை காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் பாக்கி உள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்ததாகவும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் வதந்தி பரவியது. இது குறித்து கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-


    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். கடந்த 2, 3 மாதங்களாகவே அவரது உடல்நிலை குறித்து சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

    கடந்த மாதம் சசிகலா பிறந்த நாளின் போது எங்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உற்சாகமாக எங்களிடம் பேசினார். இனிமேலாவது அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #Pugazhendhi
    பதவிக்காக தனது கையை பிடித்து கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி என்று ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார். #TTVDhinakaran #EdappadiPalaniswami
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அம்மா மககள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. குமாரசாமி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி வரவேற்றார்.

    கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எனது சிறிய எதிரி அ.ம.மு.க. என்று தமிழக முதல்வர் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் நடிகர் வடிவேலு இல்லை என்ற குறையைப் போக்கும் அளவுக்கு காமெடி செய்து கொண்டு இருக்கின்றனர். இவர்களை வைத்துக் கொண்டு தங்களது கட்சி பெரிய கட்சி என்கிறார் முதல்வர்.

    அ.ம.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் நீங்கள் இதற்கு முன்பு எங்கே உறுப்பினராக இருந்தீர்கள் என்ற கேள்வி உள்ளது. இதற்கு அ.தி.மு.க.வில் இருந்தேன் எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.

    நாங்கள் குட்டி எதிரி என்றால் கூட்டம் நடத்தக்கூட அனுமதி மறுப்பது ஏன்? எங்களுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து பயந்துதான் அனுமதி மறுக்கிறீர்கள். நீதிமன்றம் சென்ற பிறகே நாங்கள் கூட்டத்துக்கு அனுமதி வாங்க முடிகிறது.

    குழந்தை மண்டியிட்டு வருவது போல் வந்து சசிகலா காலில் விழுந்து வணங்கினார் எடப்பாடி பழனிசாமி.


    பதவிக்காக எனது கையை பிடித்து கெஞ்சிய எடப்பாடி பழனிசாமி இன்று என்னை குட்டி எதிரி என்கிறார். நான் அம்மாவின் குட்டிதான். அம்மா 8 அடி பாய்ந்தால் நான் 16 அடி பாய்வேன். கழுவிய கை காயும் முன் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்வார் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் யார் என்று இந்திய நாடே பார்க்கும் அளவுக்கு செய்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க.வுக்கு காங்கிரசுடன் கூட்டணி இருக்கிறதோ இல்லையோ எடப்பாடியுடன் கூட்டணி இருப்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சொல்லும் நபர்களுக்கு ஒப்பந்தப்பணி கொடுக்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. மாபெரும் வெற்றி பெறும். நீதிமன்றத்தில் வருகிற 31-ந் தேதி வழக்கு வருகிறது. நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

    இந்த ஆட்சி மணல் கொள்ளையால் நடக்கிறது. தமிழகத்தில் மணல் கொள்ளை நிறுத்தப்பட்டால் ஆட்சி முடிவுக்கு வரும். எப்போது தேர்தல் வந்தாலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #EdappadiPalaniswami
    பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை நேற்று சந்தித்த டி.டி.வி. தினகரன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். #Sasikala #TTVDhinakaran #Birthday
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், நேற்று சசிகலாவுக்கு பிறந்தநாள் ஆகும்.

    இதையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் தனது மனைவி அனுராதா மற்றும் குடும்பத்தினருடன் நேற்று பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்தார்.

    பின்னர், அவர்கள் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கினர். இந்த சந்திப்புக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. தமிழகத்தில் ஏரி, குளங்களை தூர்வார தமிழக அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த பணம், தூர்வாரும் பணி என்ற பெயரில் வீணடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். இதற்கு மாறாக, தண்ணீர் திறக்கப்படும் காலங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

    காவிரியில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அரசு ஒருபோதும் செய்யாது.

    ஊழல் செய்வதற்கான ஒரு திட்டம் என்று கூறினால் அது தமிழக அரசின் தூர்வாரும் திட்டம் தான். தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் குக்கர் சின்னம் தான் வெற்றி பெறும். சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு எப்போதோ முடிந்திருக்க வேண்டியது. கால சூழலால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. நீதிமன்ற கருணையால் தமிழகத்தில் இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala #TTVDhinakaran #Birthday 
    சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தீபா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். #JDeepa #Sasikala #TTVDhinakaran
    சென்னை:

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று திடீரென்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    எனது அத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    இதையடுத்து கடந்த பல ஆண்டுகளாக என் அத்தையோடு இருந்து அவரது சொத்துக்களை சுரண்டி வாழ்ந்த சசிகலாவையும், அவரது உறவினர்களையும் எதிர்த்து குரல் கொடுத்தேன்.

    அவர்கள் மீது போலீசில் புகார் செய்தேன். இதனால் சசிகலா தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியது.

    அவரது தூண்டுதலின் பேரில் சிலர் நள்ளிரவு நேரங்களில் என் வீட்டின் வளாகத்தில் நுழைந்து இடையூறுகள் செய்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்ததும் மேல் மாடியில் இருக்கும் என் தம்பி தீபக்கை பார்க்க வந்ததாக கூறினார்கள். தொடர்ந்து பல வழிகளில் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.


    எனக்கோ, என் கணவர் மாதவனின் உயிருக்கோ, உடமைக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு.

    எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கும், என் கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    எனக்கு பலமுறை சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆட்களால் மிரட்டல் வந்துள்ளது. அரசியலில் எனது பெயரை கெடுக்கவும், எனது அரசியல் பணிகளை தடுக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.

    நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன். எனவே தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #JDeepa #Sasikala #TTVDhinakaran
    சசிகலா மற்றும் தினகரனை தாக்கி அ.தி.மு.க. நாளேடான புரட்சித்தலைவி நமது அம்மாவில் கட்டுரை வெளியாகியுள்ளது. #Jayalalithaa #TTVDhinakaran
    சென்னை:

    சசிகலா- தினகரனை தாக்கி அ.தி.மு.க. நாளேடான புரட்சித்தலைவி நமது அம்மாவில் வெளியாகி உள்ள செய்தி வருமாறு:-

    * ஆர்.கே.நகர் மக்களை
    ஏமாற்ற அல்லக்கையை 
    வைத்து முட்டை 
    போண்டா வெளியிட்ட
    வீடியோ மொத்தமும்
    போலியாம்.... 
    அம்மா சிகிச்சை
    பெறுவது போன்ற
    காட்சிகள்
    அப்பல்லோவில் 
    எடுக்கப்பட்டதல்ல
    என்னும் அதிர்ச்சி தகவல்.
    விசாரணை ஆணைய
    வட்டாரத்திலிருந்து
    பரவுகிறது.

    * அடப்பாவிகளா...
    அன்று அரசு விழாவில்
    அம்மா தடுமாறி
    விழப்போன நிலையிலும்,
    ஆம்புலன்ஸ் ஒன்றை
    போயஸ் தோட்டத்தில்
    நிறுத்தி வைக்காத
    பொறுப்பற்ற கும்பல்.

    * ஐநூறு என்னும் அளவுக்கு
    சுகர் ஏறவும் ஆக்சிஸன்
    அளவு நாற்பதுக்கும்
    கீழே வரும் அளவுக்கு
    வேடிக்கை பார்த்து விட்டு
    நினைவிழந்து
    மயக்கமுற்ற நிலையில்
    அப்பல்லோவில்
    இருந்து வந்த ஆம்புலன்சில்
    ஏற்றி முதலுதவி ஏதும்
    செய்யாமல்
    மருத்துவமனை
    முகப்பிலிருக்கும்
    கண்காணிப்பு
    கேமராக்களை
    அகற்றுவதில் மட்டுமே
    முழுக்கவனம் செலுத்தி...

    * அமைச்சர்களை சந்திக்க
    விடாமலும்
    அடுத்த மேல் சிகிச்சைக்கு
    அயல்நாடு கொண்டு
    செல்ல  அனுமதிக்காமலும்
    ஆக்டோபஸ்
    குடும்பத்தோடு
    அரண் அமைத்து
    கொண்டு
    அம்மா உயிர் பிரியும்
    வரை காத்திருந்து...

    * பிறகென்ன முப்பது நாள்
    முடிவதற்குள் தங்களுக்கு
    முடிசூட்டு விழா நடத்த
    முகூர்த்தம் குறித்தவர்கள்
    அம்மா போலவே
    ஆடை  உடுத்தி
    கொண்டைதரித்து
    ஆயத்தமானவர்கள்....
    ஆட்சியை பிடிக்க

    * மக்கள் திலகமும்
    மகராசி அம்மாவும்
    கண் இமையாய்
    கட்டிக்காத்த கழகத்தை
    கழகத்தின் ஆட்சியை
    கைப்பற்றிக் கொண்டு
    மஞ்சள் குளிக்கலாம் என
    மனக்கணக்கு
    போட்டதெல்லாம்
    மண்ணாகிப் போனாலும்.

    * அடித்த பணத்தை வைத்து
    அத்தனையும் பிடிப்போம்
    என அகங்காரம்
    கொண்டலையும் மாபியா
    கும்பலின் முகமூடிகள்
    ஒவ்வொன்றாய் கிழிகிறது.
    அதில் போலி வீடியோவும்
    ஒன்றென்பது புரிகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #Jayalalithaa  #Sasikala #TTVDhinakaran

    2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? என்பது குறித்து சசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளதால் உச்சகட்ட குழப்பத்தில் ஆணையம் திணறி வருகிறது. #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? என்பது குறித்து சசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளது. இதேபோன்று மருத்துவர் சிவக்குமாரின் வாக்குமூலத்திலும் முரண்பாடு இருப்பதால் உச்சகட்ட குழப்பத்தால் ஆணையம் திணறி வருகிறது.

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் நேற்று ஆணையத்தில் ஆஜரானார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இரவு நான் பணியில் இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனவே, உடனடியாக போயஸ்கார்டனுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி உடனடியாக அங்கு சென்றேன். என்னுடன் மருத்துவர் சினேகாஸ்ரீ, ஆண் செவிலியர் அனீஸ் ஆகியோர் உடன் வந்தனர்.

    அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து 4 நிமிடத்துக்குள் போயஸ்கார்டன் சென்றேன். மருத்துவர், ஆண் செவிலியரும் ஜெயலலிதா இருந்த அறைக்கு சென்றனர். இதன்பின்பு வெளியே வந்த ஆண் செவிலியர், ஸ்ட்ரெச்சரை எடுத்துவரும்படி கூறினார். அதன்படி நான், ஸ்ட்ரெச்சருடன் உள்ளே சென்றேன். அப்போது ஜெயலலிதா கண்களை மூடியநிலையில் ஷோபாவில் அமர்ந்து இருந்தார். நானும், ஆண் செவிலியரும் ஜெயலலிதாவை ஷோபாவில் இருந்து தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்தோம்.

    சுமார் 15 நிமிடங்களில் மாடியில் இருந்து ஜெயலலிதாவை படிக்கட்டு வழியாக கீழே இறக்கி ஆம்புலன்சில் ஏற்றினோம். ஆம்புலன்சுக்குள் சசிகலா, மருத்துவர்கள் சிவக்குமார், சினேகாஸ்ரீ, பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், ஆண் செவிலியர் ஆகியோர் இருந்தனர். நான் ஜெயலலிதா இருந்த அறைக்குள் செல்வதற்கு முன்பு அவருக்கு முதல் உதவி செய்தார்களா? என்பது எனக்கு தெரியாது.

    இரவு 10.10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றடைந்தேன். ஜெயலலிதாவை வேனில் ஏற்றும் வரையிலும், வேனில் இருந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லும் வரையிலும் அவர் கண்களை மூடியபடி தான் இருந்தார். ஜெயலலிதாவை ஸ்ட்ரெச்சரில் வைத்துக்கொண்டு அவரது வீட்டு படிக்கட்டில் செல்லும்போது மருத்துவர் சிவக்குமார் ஜெயலலிதாவிடம், ‘மருத்துவமனைக்கு போகிறோம்’ என சொல்ல அதற்கு ஜெயலலிதா தலையை மட்டும் அசைத்தார்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    சசிகலா தனது வாக்குமூலத்தில், ‘2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அன்று போயஸ்கார்டனில் மயக்கநிலையில் ஜெயலலிதா கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். ஆம்புலன்சில் சென்றபோது கண்ணை விழித்த ஜெயலலிதா எங்கே செல்கிறோம் என்று என்னிடம் கேட்டார்’ என்று கூறி உள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ்குமார், ஜெயலலிதா கண்களை மூடியபடி ஷோபாவில் அமர்ந்து இருந்தார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள ஜெயலலிதா கார் டிரைவர் கண்ணன், ஆம்புலன்ஸ் வேனில் இருந்த மருத்துவர் சினேகாஸ்ரீ ஆகியோர் தங்களது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா மயக்கநிலையில் நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார்’ என்று கூறியிருந்தனர்.

    அதேபோன்று ஆம்புலன்ஸ் வேனுக்குள், சசிகலா, மருத்துவர்கள் சிவக்குமார், சினேகாஸ்ரீ, பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், ஆண் செவிலியர் அனீஸ் ஆகியோர் இருந்ததாக டிரைவர் சுரேஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் சசிகலா, சிவக்குமார் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் ஆம்புலன்ஸ் வேனுக்குள் அவர்கள் இருவர் மட்டும் இருந்ததாக கூறி உள்ளனர்.

    போயஸ்கார்டனில் நடந்தது குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாக்குமூலம் அளித்திருப்பது ஆணையத்துக்கு உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.



    துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக ஏற்கனவே ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அப்போது அவர் ஆஜராகவில்லை. கடிதம் மூலம் தனது விளக்கத்தை அளித்திருந்தார். இந்தநிலையில் நேற்று மீண்டும் ஆஜராக அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. நேற்றும் அவர் ஆணையத்தில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

    குருமூர்த்தி அந்த மனுவில் ‘என்னிடம் விசாரணை நடத்த தேவையில்லை. எனக்கும், ஜெயலலிதா மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று ஆணையம் எனது தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொள்ளலாம். எனவே, ஆணையத்தில் ஆஜராக எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். எனக்கு அனுப்பிய சம்மனை திரும்ப பெற வேண்டும்’ என்று கூறி உள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஆணையம் 20-ந் தேதி(நாளை) தள்ளிவைத்துள்ளது. #JayalalithaaDeath #InquiryCommission
    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சந்தித்து பேசினர்.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி. தினகரன், இளவரசியின் மகன் விவேக், விவேக்கின் மனைவி மற்றும் உறவினர் ராஜராஜன் ஆகியோர் நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்.

    பின்னர், அவர்கள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை நடந்தது. பின்னர் சிறை முன்பு டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு நிச்சயம் வரும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படும். 18 பேரும் முதல்-அமைச்சரை மாற்ற கோருவார்கள். நான் ஆட்சி வேண்டாம் என சொல்கிறேன். துரோகத்தை கருவோடு அறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இதை கூறுகிறேன். தியாகம், தர்மம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு இயற்கையும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஆட்சியை கைப்பற்ற வெறிபிடித்து அலைந்ததாக சசிகலா, தினகரன் மீது அ.தி.மு.க. நாளேட்டில் விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. #ADMK #Sasikala #TTVDhinakaran
    சென்னை:

    அ.தி.மு.க. நாளேடான ‘நமது அம்மா’ நாளேட்டில் சசிகலா மற்றும் தினகரனை விமர்சித்து வெளியான செய்தி வருமாறு:-

    அன்னமிட்டு வளர்த்த இயக்கத்துக்கு கன்னமிட்டு கொழுத்த கும்பல்.. ஆற்றிய தொண்டு தான் என்ன...?

    மக்கள் திலகத்தால் மலர்ந்த மாசற்ற இயக்கத்திற்கு மாபியா கும்பல் செய்திட்ட மகத்தான சேவை தான் என்ன?

    பதவிகள் தருவதாக பணப் பறிப்பு... பணம் தர மறுப்போருக்கு பதவி பறிப்பு..

    வேட்பாளர் தேர்வுக்கு கையூட்டு.. வேட்பாளருக்கு கொடுக்கும் பணத்தில் கை வைப்பு. புகாருக்கு உள்ளானவரை புனிதராக்க ஒரு ரேட்டு. புரட்சித்தாயின் பார்வைக்கு ஒருவரை கொண்டு சேர்க்க தனி ரேட்டு.

    தாய் தேர்வு செய்வதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தாங்கள் பரிந்துரை செய்ததாக அறிவிப்பு வரும் முன்னே அறுவடை நடத்துவது. அம்மா விரும்புவோர் மீது அடுக்காத பழி போட்டு அழித்தும் ஒழிப்பது.

    கப்பம் கட்டுவோரை அடைக்காத்து நிற்பது. அனுசரிக்க மறுப்போரை கட்டம் கட்டி அழிப்பது.

    மண்ணுளி பாம்புகளாய் மறைந்திருந்து திருடியதை வெள்ளையாக்க மதுபான ஆலைகள் நடத்துவது.

    மக்கள் செல்வத்தை திருடித்தான் கொழுத்தோம் என்பதை ‘மக்கள் செல்வர்’ என வெட்கமின்றி பட்டமிட்டு வெளிப்படையாய் சிரிப்பது.

    ஒப்பில்லாத்தாயின் அதிகாரத்தை உறிஞ்சி கொழுத்தது. ஒரு நூறு தலைமுறைக்கும் எங்களிடம் ஏழை இல்லை என்பதை ஜாஸ் சினிமா வழியே சகலருக்கும் உரைப்பது.


    மருத்துவமனையில் அம்மாவை வைத்து மர்மக் கதை புனைந்தது. மருத்துவ மேல் சிகிச்சைக்கு விடாமல் அரண் அமைத்து தடுத்தது.

    ‘முடியும் வரை காத்திருந்து’ தாங்கள் முடிசூடிக் கொள்வதற்கு முகூர்த்தம் குறித்தது. கட்சி-ஆட்சியை கைப்பற்ற அதிகார வெறி பிடித்து அலைந்தது. இப்படி வாரிக்கொடுத்த வள்ளல்களின் இயக்கத்திற்கு வழிப்பறிக் கும்பல் செய்ததெல்லாம் திருட்டும், புரட்டும், மிரட்டும், சுருட்டும் தானே.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #Sasikala #TTVDhinakaran
    சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின்னர் டிடிவி தினகரன், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தினால் ஆளும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறையில் சசிகலாவை அவருடைய உறவினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தினால் ஆளும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். அதனால் இந்த தேர்தலை தள்ளிவைத்துவிட்டு அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பண பலம் மற்றும் போலீஸ் பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.


    ஆனால் தமிழக மக்கள் இந்த அரசை ஏற்க தயாராக இல்லை. அ.தி.மு.க. அரசு வீட்டுக்கு செல்வது உறுதி. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் துரோகம் செய்தவர்கள். அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கத்தை போன்றவர்கள். இந்த ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    கர்நாடகத்தில் எந்த கட்சியின் ஆட்சி வந்தாலும், தமிழகத்திற்கு தண்ணீர் தருவது இல்லை என்பது தான் கர்நாடகத்தின் நிலைப்பாடாக உள்ளது. கர்நாடக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை அரசியலாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று கேட்டு நாங்கள் மனு தாக்கல் செய்தோம். ஆனால் 3-வதாக ஒரு நீதிபதியை நியமித்து அவர் இந்த வழக்கை சரியான முறையில் விசாரிப்பார் என்று நீதிபதிகள் கூறி இருக்கிறார்கள். அதனால் இந்த விசாரணையில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    சிறையில் லஞ்சப்புகார் தொடர்பாக எனது ஆதரவாளர் புகழேந்திக்கு கர்நாடக ஊழல் தடுப்பு படை சம்மன் அனுப்பியது. எப்படியாவது சதி செய்து என்னை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவை நான் பார்த்தது கூட கிடையாது. எனக்கு சம்மன் வந்தால் நானும் ஆஜராக தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
    ×