search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம்"

    வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு பொருத்தமானது என்பது புரியும்.
    ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பை பார்ப்பது கண் கொள்ளா காட்சியாகும். இன்று ஸ்ரீரங்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். அவர் திருமேனி மீது பனி விழுமே, அதைத் தவிர்ப்பதற்காக துணிக் கூடாரம் பிடித்து வருவார்கள். வழியெங்கும் நிற்கும் அன்பர்களுக்கு அருள்பாலிக்கும் அரங்கன், சேனை முதலியார் சந்நிதிக்கு வந்து நிற்பார்.

    அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியாருக்கு சாத்தப்படும். இதற்கு அரங்கன் மூலஸ்தானத்துக்கு மீண்டும் எழுந்தருளும்வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறார் என்று அர்த்தமாகும். அதைத் தொடர்ந்து அரங்கனின் அழகு நடை ஆரம்பமாகும்.

    நாழி கேட்டால் வாசல், கொடிமரம் கடந்து திரை மண்டபம் வந்து சேர்வார். அங்கே யஜுர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்றுமறையாகும். அதைத் தொடர்ந்து மற்ற வேதங்களையும் சொல்வார்கள். வேதங்களை கேட்டுக் கொண்டே ரங்கநாதர் பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருள்வார்.
    ‘திற’ என்று அரங்கனின் ஆணை பிறக்கும்.

    பரமபத வாசலின் மணிகள் ஒலிக்க, கதவுகள் திறந்து கொள்ளும்.

    ரங்கா... ரங்கா... என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கும். ரங்கநாதர் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிப்பார்.

    பிறகு அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம் வருவார். தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்வார். மீண்டும் அரையர் சேவை நடைபெறும். நள்ளிரவு வரை ரங்கநாதர் அங்கேயே வீற்றிருப்பார்.

    வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும்தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஸ்ரீரங்கத்தில் பரமபத வாசல் திறந்திருக்கும்.

    மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்.

    வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு பொருத்தமானது என்பது புரியும். ஸ்ரீரங்கத்தில் அது தனிச்சிறப்பு வாய்ந்த திருவிழாவாக விளங்குகிறது.
    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
    * ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.

    * ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    * ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம். ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

    * இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது.

    * ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது. துவாதசி அன்று அதி காலையில் உணவு அருந்துவதை பாரணை என அழைக்கிறோம். துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா... என மூன்று முறை_கூறி வாழை இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி வறுத்த சுண்டைக்காய் சாம்பார் ஆகியவை முக்கியமானவை.

    * துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.

    * உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
    இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசி தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்படச்செய்தார். அவர்கள் பிரம்மாவை கொல்ல முயன்ற போது, அவர்களைத் தடுத்த மகாவிஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும் படியும், அவர்கள் கேட்கும் வரத்தை தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.

    மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தை கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக் கொண்டு, ‘பகவானே, ஒரு விண்ணப்பம், தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்’ என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், அவனின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தை கேட்டனர்.

    மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலை (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, பகவானே, தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாக கடைபிடிக்க வேண்டும்.

    விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள்.

    ‘காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ என்று இந்த விரதத்தை மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக்கிறது. இந்த விரதத்தின் சிறப்பு பற்றி சிவபெருமானே, பார்வதி தேவியிடம் எடுத்துக் கூறியுள்ளார் என்பது புராணங்கள் கூறும் தகவல்.

    மாதம் இரு ஏகாதசி என்று 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.

    வைகுண்ட ஏகாதசி அன்று, விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசலில் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழா அதிகாலை வேளையிலேயே நடைபெறும். இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து, சொர்க்க வாசலின் வழியாக வெளியே வருவார்கள்.
    வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள்.
    கயிலை நாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துக் கூறினார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார்.

    உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே அனைத்து ஏகாதசியன்றும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக பலர் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் இருக்கவேண்டும்.

    மறுநாளான துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்தவேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் அதிகம் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்துவிட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு அளவற்ற பலன்களை தருவதால் முக்கோடி ஏகாதசி என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடைவிடாத துன்பத்தை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாளும் இதுவாகும். 
    வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளையும், நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.
    ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றுதான், அர்ஜூனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, கீதா ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைஷ்னவ திவ்ய தேசங்களிலும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

    அதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி திருக்கோவில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் போன்ற வைஷ்னவ ஸ்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.

    எனவே வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயனம் செய்து அந்த பரந்தாமனின் அருளை திருப்பாவையின் நீங்காத செல்வம் நிறைந்தேலொரெம்பாவை என்பதற்கிணங்க நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்க வாசல் வழியாக பிரவேசித்து கோவிந்தா... கோவிந்தா... என்று முழக்கமிட்டனர். #VaikundaEkadasi #Srirangam #Sorgavasal
    பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

    இதில் 8-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார்.



    நேற்று (திங்கட்கிழமை) பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளாகும். இதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பின்னர் அவர் காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு அனுமதி அளிக்கவில்லை.

    இன்று (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் அதிகாலை திறக்கப்பட்டது.



    இதனையொட்டி இன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். அதிகாலை  பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் திருக்கொட்டகையில் பிரவேசமாகினார்.

    திருமாமணி ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார்.

    இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 7 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. பரமபதவாசல் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

    நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.

    இதனால் கோவில் வளாகத்தில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. #VaikundaEkadasi  #Srirangam #Sorgavasal

    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும்.
    எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.

    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். எல்லா வைணவத் தலங்களிலும் பரமபதவாசல் உண்டு.

    ஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்?

    திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு. ஒன்று வைகுண்டம், மற்றது பரமபதம். விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் அணுக்கத் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில்தான். அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல்.

    ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிவிட்ட உலகத்தை மீண்டும் படைத்த திருமால், மற்ற உயிரினங்களை உண்டாக்க பிரம்மாவை படைத்தார். அப்போது பிரம்மாவை வதைக்க 2 அசுரர்கள் வந்தனர். அவர்களை திருமால் அழித்தார். அப்போது அந்த 2 அசுரர்களும் திருமாலிடம், “நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் தர வேண்டும்“ என்றனர். அதை ஏற்றுக் கொண்ட திருமால் அவர்கள் இருவரையும் மார்கழி மாத சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்துக் அனுப்பி வைத்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 அசுரர்களும் எங்களுக்கு அருளிய இந்த பரமபத சொர்க்க வாசலை பூமியில் திருவிழாவாக கொண்டாட வேண்டும். அதோடு இந்த வாசல் வழியாக வரும் உங்களை தரிசிப்பவர்களுக்கும், இவ்வாசல் வழியாக வருபவர்களுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் முக்தி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

    அதை உணர்த்தும் விதமாகத்தான், பெருமான் தானே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே பக்தர்கள் புடைசூழ வருகிறார். “என்னோடிருப்பீர்களாக” என்று பக்தர் களுக்கு அருளை அளிக்கிறார்.

    ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி. ஏகம் என்றால் “ஒன்று” என்று பொருள். தசி என்றால் “பத்து” என்று அர்த்தம்.
    ஏகாதசி- என்றால் பதினொன்று நாள் என்று பொருள். ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் -5, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஒன்று படுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி. இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பதுதான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடை பெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும். மார்கழியில் வரும் வளர் பிறை ஏகாதசி தான் சிறப்பானது. இதை பெரிய ஏகாதசி மற்றும் மோட்ச ஏகாதசி என்பார்கள்.

    பரமபதம்

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு.

    விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும்.ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர்.
    கலியுகத்தில் பக்தி மார்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுயநலமின்றி தர்ம, புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும் என்று அருளினார்.
    மாதங்களில் நான் மார்கழி என்பது கிருஷ்ணரின் அமுதமொழி. வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில் தான்.

    கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் அவன் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார்.

    அதன்படி போர்க்களத்தி லிருந்து விலகி, பத்ரிகா ஆசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்து கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான். அப்போது மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.

    ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், ‘பெண்ணே, உன்னை கொல்ல ஓர் அம்பே போதும்‘ என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்த பெண், ஹூம் என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப்போனான்.

    அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண் விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டினார். ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் என்று அருளினார். மார்கழி மாத தேய் பிறையில் தோன்றிய ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும். மார்கழி மாதம் வளர் பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

    பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்

    கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடுவதைக் கண்ட பெருமாள் காவலர்களிடம்‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்டதால், மக்கள் மனதில் தர்ம சிந்தனை குறைந்து அதர்மம் தலைதூக்கும். பாவங்கள் பலவிதங்களில் பெருகும் சூழலில் மானிடர்கள் யாரும் வைகுண்டத்திற்கு வரமாட்டார்கள்,’’ என்றார்கள்.

    அதற்கு பெருமாள், “கலியுகத்தில் பக்தி மார்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுயநலமின்றி தர்ம, புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்,’’ என்று அருளினார். ஏகாதசி விரதத்தை யார் ஒருவர் சிந்தனையில் பெருமானையும், மனதில் பக்தியையும் நிறுத்தி கடைப்பிடித்து பரமபத வாசலை கடக்கிறார்களோ அவர்களுக்கு வைகுண்ட வாசத்தில் கொடுத்தருளுவார் அரங்கன்.
    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!
    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பக்தர்களின் உற்சாக முழக்கங்கள், வாத்திய இசை எல்லாமாகக் கலந்து தெய்வீக லயத்தை எழுப்பும்.
    ரத்தின அங்கியில் தன் பேரெழில் துலங்குமாறு புறப்பட்டு வருவார் பெருமாள்.

    மார்கழி மாத ஏகாதசி ஆயிற்றே! எம்பெருமான் திருமேனி மீது பனி விழுமே! அதைத் தவிர்ப்பதற்காக துணிக் கூடாரம் பிடித்து வருகிறார்கள். வழியெங்கும் நிற்கும் அன்பர்களுக்கு அருள்பாலித்த அரங்கன், சேனை முதலியார் சன்னதிக்கு வந்து நிற்கிறார். அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியாருக்கு சாத்தப்படுகிறது.

    இதற்கு என்ன பொருள் தெரியுமா?

    அரங்கன் மீண்டும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளும் வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறான். அதைத் தொடர்ந்து அரங்கனின் அழகு நடை ஆரம்பமாகிறது.

    நாழி கேட்டால் வாசல், கொடி மரம் கடந்து திரை மண்டபம் வந்து சேர்கிறார். அங்கே யஜூர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்று மறையாகிறது.

    அதைத் தொடர்ந்து மற்ற வேதங் களையும் சொல்கிறார்கள். வேதங்களை சுவாசமாகக் கொண்ட பகவான், பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருளிவிட்டார். இதோ, ‘திற’ என்று அரங்கனின் ஆணை பிறக்கிறது. பரமபத வாசலின் மணிகள் ஒலிக்கின் றன. கதவுகள் திறந்து கொள்கின்றன.ரங்கா ரங்கா என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கிறது. பக்தவத்சலனான பரமன், தன் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிக்கிறான்.

    அதிகாலை வேளையில் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிதல் வேண்டும் என்ற கருணையின் வடிவாக வீற்றிருக்கிறான் அரங்கநாதன். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் பெறுகிறார்கள்.

    அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம், தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்கிறான் பெருமான். மீண்டும் அரையர் சேவை நடைபெறும் அன்று நள்ளிரவு வரை ரங்கநாதர் இங்கே வீற்றிருப்பார். எப்போது யோக நித்திரையிலேயே காட்சி தருபவர், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் ஓய்வில்லாமல் வீற்றிருந்து தரிசனம் அருள்வார். அதன் பிறகு மூலஸ்தானத்தை சென்று சேர்வார்.

    வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். இந்த ஏகாதசி நாளிலும், அதையடுத்தும் மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!

    வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரியும். 
    வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.
    வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு.

    வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி விழாவில் நாளை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.
    பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

    இதில் 8-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான நேற்று நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

    இன்று (திங்கட்கிழமை) பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளாகும். இதனையொட்டி இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். பின்னர் அவர்காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளுகிறார். காலை 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவையுடன் பொது ஜன சேவை நடைபெறும். காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை ராவணவதம் அரையர் இரண்டாம் சேவை நடைபெறும். பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படும்.

    மாலை 3.30 மணி முதல் 4 மணி வரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜன சேவை நடைபெறும். மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு ஆர்யபடாள் வாசல் அடைந்து இரவு 7 மணிக்கு திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருடமண்டபம் சேருகிறார். இரவு 8.30 மணிக்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    இன்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு அனுமதி கிடையாது.

    மார்கழி மாத பிறப்பையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாவை நோன்பின் முதல் நாளான நேற்று பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் ஆண்டாள், நந்தகோபன் குமரன் அலங்காரத்தில் காட்சியளித்ததை படத்தில் காணலாம்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

    இதனையொட்டி நாளை அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்படுகிறார். அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் 5.45 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசமாகி காலை 7 மணிக்கு சாதரா மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    8 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார்.

    நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 7 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. பரமபதவாசல் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

    நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் கோவில் வளாகத்தில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்காக சவுக்கு கம்புகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவான் தலைமையில் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர். 
    நாளை காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் செல்லலாம். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று என்னென்ன நடக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    நாளை காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் செல்லலாம். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று என்னென்ன நடக்கும் என்ற விவரம் வருமாறு:-

    ஸ்ரீநம்பெருமாள் ரத்னங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பாடு- அதிகாலை 4.15 மணி
    பரமபதவாசல் திறப்பு(லக்னப்படி)-காலை 5.30 மணி
    திருக்கொட்டகை பிரவேசம்-காலை 5.45 மணி
    சாதரா மரியாதை-காலை 7 மணி
    திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்-காலை 8 மணி
    அலங்காரம் அமுது செய்ய திரை-காலை 8-8.45 மணி
    பொதுஜன சேவை-காலை 8.45 மாலை 6 மணி
    அரையர் சேவை (பொதுஜன சேவையுடன்)-மாலை 4.15-5 மணி
    உபயக்காரர் மரியாதை (பொதுஜன சேவையுடன்)- மாலை 6-8 மணி
    திருப்பாவாடை கோஷ்டி-இரவு 8-9 மணி
    வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை-இரவு 9-10 மணி
    உபயக்காரர் மரியாதை (பொதுஜன சேவையுடன்)-இரவு 10.30-11 மணி
    புறப்பாட்டுக்கு திரை-இரவு 11.30-12 மணி
    திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு-இரவு 12 மணி
    வீணை வாத்யத்துடன் மூலஸ்தானம் சேருதல்- 19.12.2018 அதிகாலை 1.15 மணி
    அரையர் சேவை
    உயர்வற பாசுரம், அபிநயம், வியாக்யானம் திருவாய்மொழி முதல் பத்து 110 பாசுரங்கள்.
    மூலவர் முத்தங்கி சேவை
    சேவை நேரம்-காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
    இரவு 7 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.
    பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை.

    ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் 8-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பகல் பத்து நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். இதனால் அந்த 10 நாட்களும் இரவு 9 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசி. அன்று முதல் 27-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த 10 நாட்களும் பரமபரவாசல் திறந்திருக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் தான் பரமபதவாசல் வழியாக சென்று வர முடியும்.
    ×