search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகானே"

    ஐதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 92 ரன்னில் அவுட் ஆகி மீண்டும் சதத்தை தவறவிட்டார். #INDvWI #RishabhPant
    ஐதராபாத்:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

    வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 106 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 52 ரன்னும் எடுத்தனர். உமேஷ் யாதவ் 6 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்து இருந்தது. பிரித்விஷா 70 ரன் எடுத்தார். ரகானே 75 ரன்னும், ரிசப்பந்த் 85 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ரகானேயும், ரி‌ஷப்பந்தும் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.

    ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரில் ரகானே ஆட்டம் இழந்தார். அவர் 183 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 80 ரன்கள் எடுத்தார். ஹோல்டர் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 314 ஆக இருந்தது.

    அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ஹோல்டரின் 30 ஓவரில் ரகானேயும் (முதல் பந்து), ஜடேஜா (3-வது பந்து) பெவிலியன் திரும்பினார்கள்.


    மறுமுனையில் இருந்த இளம் வீரரான ரிசப் பந்த் தனது 2-வது சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 92 ரன் எடுத்து இருந்தபோது கேப்ரியல் பந்தில் ‘அவுட்’ ஆனார். அவர் 134 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

    ரிசப்பந்த் 2-வது முறையாக செஞ்சூரியை தவறவிட்டார். ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டிலும் அவர் 92 ரன்னில் வெளியேறி இருந்தார்.

    அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 322 ஆக இருந்தது. 8 ரன்னில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்தது.

    8-வது விக்கெட்டுக்கு அஸ்வின்- குல்தீப் யாதவ் ஜோடி ஆடியது. #INDvWI  #RishabhPant
    ரகானே மற்றும் ரிஷப் பந்து ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா மிகப்பெரிய முன்னிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரோஸ்டன் சேஸ் (106) சதம் அடிக்கவும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 52 ரன்கள் அடிக்கவும் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுல் 4 ரன்னிலும், புஜாரா 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் முதல் போட்டியில் சதம் அடித்த பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி 53 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 70 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 78 பந்தில் 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார். விராட் கோலி ஆட்டமிழக்கும்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸை விட 149 ரன்கள் பின்தங்கியிருந்தது.



    இந்நிலையில்தான் ரகானே உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்களை தாண்டி வீறுநடை போட்டது. இருவரின் ஆட்டத்தால் இந்தியா முன்னிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இருவரும் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 81 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 75 ரன்னுடனும், ரிஷப் பந்த் 85 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இந்தியா 3 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. நாளை இருவரும் சதம் அடித்தால் இந்தியா மிகப்பெரிய முன்னிலையை பெற வாய்ப்புள்ளது.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. மேலும் ஒரு பெரிய வெற்றிக்கு இந்தியா ஆயத்தமாகிறது. #INDvWI
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை (12-ந்தேதி) தொடங்குகிறது. முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் வென்று இந்தியா தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி பலவீனமான வெஸ்ட் இண்டீஸை எளிதில் மீண்டும் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டை ‘டிரா’ செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றி விடும்.



    2013-ம் ஆண்டில் இருந்து இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இல்லை. அந்த சாதனை வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராகவும் நீடிக்கும். கடந்த டெஸ்டில் கேப்டன் விராட் கோலி, புதுமுக வீரர் பிரித்வி ஷா, ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து முத்திரை பதித்தனர். இதேபோல் புஜாரா, ரி‌ஷப் பந்த் ஆகியோரும் சாதித்தனர். பந்து வீச்சில் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது‌ ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இதற்கிடையே இந்த டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஆடா விட்டால் ரகானே கேப்டனாக பணியாற்றுவார். கோலி இடத்தில் மயாங்க் அகர்வால் இடம் பெறலாம்.  ராஜ்கோட் டெஸ்டை போலவே இந்த போட்டி யிலும் இந்தியா தனது ஆதிக் கத்தை செலுத்தும்.



    வெஸ்ட்இண்டீஸ் அணியை பொறுத்தவரை தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. அனுபவமற்ற அந்த அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடும் சவாலானது. 1994-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவில் டெஸ்டை வென்றது கிடையாது.

    காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ஹோல்டர் இந்த டெஸ்டில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் முன்னேற்றம் அடைவது அவசியம். முதல் டெஸ்டில் ‘பாலோ-ஆன்’ ஆகி தோற்ற அந்த அணி இந்த டெஸ்டில் கடுமையாக போராடுவார்கள்.



    இரு அணிகளும் நாளை மோதுவது 96-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 95 போட்டியில் இந்தியா 19-ல், வெஸ்ட் இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள புதுமுக வீரர்களான மயாங்க் அகர்வால், ப்ரித்வி ஷா மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம் என்று ரகானே தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் இருந்தனர். இந்த நீண்ட கால பட்டியலில் தற்போது வெட்டு விழுந்ததுள்ளது. இங்கிலாந்து தொடரின்போது ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரின்போதே முரளி விஜய் நீக்கப்பட்டார்.

    இருவருக்கும் பதில் உள்ளூர் தொடர் மற்றும் இந்தியா ‘ஏ’ அணியில் சிறப்பாக விளையாடிய மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இருவரில் ஒருவர் லோகேஷ் ராகுல் உடன் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆவது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே அணியில் இடம்பிடிக்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில் இவர்களுக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்யும். இந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை வைத்துதான் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்.



    இந்நிலையில் புதுமுக வீரர்களான மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம் என்று துணைக் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம். அவர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கும். இது அவர்கள் திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு.

    ப்ரித்வி ஷா இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவன் சிறுவனாக இருக்கும்போதே நான் பார்த்திருக்கிறேன். இருவரும் இணைந்து பயிற்சி மேற்கொண்டிருக்கிறோம். உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். உள்ளூர் தொடரிலும், இந்தியா ‘ஏ’ அணிக்காகவும் ப்ரித்வி ஷா விளையாடிய ஆட்டத்தை பார்க்க விரும்புகிறேன். இந்த அணிக்காக சிறப்பாக விளையாடுவார்.



    வெஸ்ட் இண்டீஸ் அணியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். ஆனால், எங்களுடைய ஆட்டம் மேம்படைய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவோம். எதிரணியை பார்ப்பதைவிட எங்களுடைய முக்கிய திட்டம், சிறப்பான கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான்.

    தனிப்பட்ட முறையில் விஜய் ஹசாரே தொடரில் விளையாடியது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான சிறந்த பயிற்சி’’ என்றார்.
    மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இளம் வீரர்களை தேட வேண்டிய நிலை ஏற்படும் என எம்எஸ்கே பிரசாத் எச்சரித்துள்ளார். #BCCI #TeamIndia
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 படுமோசமாக தோற்றது. இதனால் இந்திய அணி மீது விமர்சனம் எழுந்து வருகிறது. விராட் கோலி 593 ரன்கள் குவித்தார். கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்சில் மட்டுமே டக்அவுட் ஆனார். மற்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஆனால் தொடக்க வீரர்கள் மோசமாக விளையாடினார்கள். ரகானே, புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் இளம் வீரர்களை தேடவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது, அவர்களுக்கு மோதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்பின்னர்தான் அவர்களை நீக்குவதும், புதிய வீரர்களை தேடும் வேலைகளில் இறங்க வேண்டும்.

    இங்கிலாந்து தொடரில் தொடக்க வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கனும். இங்கிலாந்து தொடக்க வீரர்கள் கூட பெரிய அளவில் சாதிக்கவில்லை. சூழ்நிலை இரு அணிகளின் தொடக்க வீரர்களுக்கும் மிகவும் கடினமாக இருந்தது.



    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரகானே ஆகியோருக்கு போதுமான அனுபங்கள் உள்ளது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், இன்னும் அதிக அளவில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திருக்கனும்.

    போதுமான அளவிற்கு வாய்ப்புகள் கொடுத்த பிறகு, வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், உள்ளூர் மற்றும் இந்தியா ஏ அணிகளில் விளையாடும் இளம் வீரர்களை தேடவேண்டியது அவசியமானது’’ என்றார்.
    இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். #Rahane #VijayHazareTrophy
    இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இதில் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் பரோடாவை எதிர்கொள்கிறது. இதற்கான மும்பை அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான ப்ரித்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் மும்பை அணிக்காக விளையாடுகிறார்.
    இந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தாததுதான் தொடரை இழக்க காரணம் என்று சேவாக் தெரிவித்துள்ளார். #Sehwag
    இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 இழந்தது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் கடுமையாக போராடிய போதிலும் வெற்றியை பறிக்க முடியவில்லை.

    இந்திய அணி கேப்ட்ன் விராட் கோலி மட்டுமே தொடர் முழுவதும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தவான் 162 ரன்களும், கேஎல் ராகுல் 299 ரன்களும், ரகானே இரண்டு அரைசதத்துடன் 257 ரன்களும், புஜாரா ஒரு சதத்துடன் 278 ரன்களும் அடித்தனர்.



    இவர்கள் அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவே தோல்விக்கு முதன்மையான காரணம் என்று முன்னாள் தொடக்க வீரரும் அதிரடி பேட்ஸ்மேனும் ஆன சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இங்கிலாந்து தொடரை 4-1 என கைப்பற்றியதற்கு வாழ்த்துக்கள். இந்தியா சிறப்பாக விளையாடியது. ஆனால், நிலையான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தவில்லை. ரிஷப் பந்த், லோகுஷ் ராகுல் கடைசி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.



    இந்த தொடர் முழுவதும் விராட் கோலி, பந்து வீச்சாளர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்ரகள். வெளிநாட்டு தொடரில் சிறப்பாக விளையாட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்’’ என்று பதவிட்டுள்ளார்.
    ஓவல் டெஸ்டில் லோகேஷ் ராகுலின் சதத்தால் இந்தியா கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

    464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0)  அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

    அடுத்து 4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். லோகேஷ் ராகுல் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 46 ரன்னுடனும், ரகானே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவு செய்தனர். லோகேஷ் ராகுல் 57 பந்தில் 9 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய ரகானே 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த விஹாரி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். 6-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார்.



    ஒருபக்கம் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் லோகேஷ் ராகுல் 118 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். இது சர்வதேச அளவில் அவரின் ஐந்தாவது சதமாகும்.

    லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்துள்ளது. லோகேஷ் ராகுல் 108 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால் எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள் என ரகானே தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு டெஸ்டில் இந்தியா மூன்றில் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

    இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டியது. துரதிருஷ்டவசமாக தோல்வியை சந்தித்தது. கடைசி டெஸ்ட் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.



    இந்த டெஸ்ட் குறித்து இந்திய துணைக் கேப்டன் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘நான்கள் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகத்தான் விளையாடினோம். ஆனால் எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்’’ என்றார்.
    டிரென்ட் பிரிட்ஜ் 3-வது டெஸ்டில் 84 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி (103), புஜாரா (72), ஹர்திக் பாண்டியா (52 நாட்அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இதன் மூலம் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா ஒட்டுமொத்தமாக 520 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. குக் 9 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் நேற்றைய 13 ரன்னிலேயே இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். குக் 17 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்தில் வெளியேறினார்.

    அடுத்து வந்த ஜோ ரூட் 13 ரன்னில் பும்ரா பந்திலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இவர்களை லோகேஷ் ராகுல், விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்கள்.



    5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 19 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    விராட் கோலியை போன்று மற்ற பேட்ஸ்மேன்கள் கவர் டிரைவ் ஷாட் அடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை என்று புஜாரா புகழாரம் சூட்டியுள்ளார். #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை.

    இந்திய அணியின் ஸ்கோர் 224 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா 208 பந்தில் 72 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.



    புஜாரா எதிர்முனையில் விளையாடிய விராட் கோலியின் ஆட்டத்தை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் விராட் கோலியை போன்று மற்ற வீரர்கள் ‘கவர் டிரைவ்’ ஷாட் ஆடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் கடினம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.



    மேலும் சிறப்பாக விளையாடியது குறித்து புஜாரா கூறுகையில் ‘‘கவுன்ட்டி போட்டியில் விளையாடிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் உதவியது. கவுன்ட்டி போட்டி மூலம் அதிக அளவில் கற்றுக் கொண்டேன். கவுன்ட்டி போட்டியில் அதிக அளவில் ரன்கள் குவிக்காவிடிலும், சவாலான ஆடுகளத்தில் விளையாடினேன். அது எனக்கு மிகவும் உறுதியை அளித்தது’’ என்றார்.
    டிரென்ட் பிரிட்ஜ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 521 என்ற இமாலய ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND #ViratKohli

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை. இருவரும் 3-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்னுடனும், புஜாரா 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. புஜாரா 208 பந்தில் 72 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இவர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி சிறப்பாக விளையாடி 191 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 197 பந்தில் 103 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். விராட் கோலி அவுட்டாகும்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் சேர்த்திருந்தது. 449 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.



    கோலி ஆட்டமிழந்த பிறகு அதிரடியாக ரன்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஷப் பந்தை இந்தியா களம் இறக்கியது. அவர் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் ரகானே உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். 

    ரஹானே 29 ரன்களும், அடுத்து களமிறங்கிய சமி 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 110 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 352 ரன்களை எட்டிய போது, இந்திய அணி டிக்ளேர் செய்தது. பாண்டியா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    இதன் மூலம் இந்திய அணி 520 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை முடித்துக்கொண்டது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 
    ×