search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95783"

    நத்தம் மாரியம்மனின் அருளை பெற எந்த பொருளை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
    நத்தம் மாரியம்மனுக்கு எதனை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

    * மஞ்சள்பொடி - ராஜா போன்ற நிலை

    * நெய்-மோட்சம் கிடைக்கும்

    * புஷ்பகவ்யம் - புனித தத்துவங்களின் அடிப்படையில் வாழ்க்கை அமையும்

    * தண்ணீர் - மனஅமைதி தரும்

    * தீர்த்தம் - மன அமைதி தரும்

    * அரிசிமாவு - கடன் நீங்கும்

    * மாதுளைச்சாறு-லாபம் கிடைக்கும்

    * சந்தனம்- பக்தி, ஞானம் பெருகும்

    * வாசனைத் திரவியங்களும், எண்ணெய்காப்பும்- குடும்பத்தினரின் நலன் அதிகரிக்கும்

    * பால் - ஆயுள் விருத்தி

    * கரும்புச்சாறு - உடல்நலம், ஆயுள்பலம்

    * எலுமிச்சைச்சாறு - ஞானம்

    * புஷ்பங்கள் - செல்வம் குவியும்

    * பன்னீர் - திருப்தியான மனநிலை
    கந்தசஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகப்பெருமானுக்கு எதிரே கண்ணாடி ஒன்று வைக்கப்படும். அந்த கண்ணாடிக்கே அபிஷேகம் செய்யப்படும். அதற்கு ‘சாயா அபிஷேகம்’ என்று பெயர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழ்கிறது. மேலும் கடல் அலைகள் தவழும் திருத்தலமாகவும் இது விளங்குகிறது. சூரபத்மனை முருகப்பெருமான் அழித்த திருதலம் இதுவாகும்.

    இந்த ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு 9 கால பூஜைகள் செய்யப்படுகின்றன. மூலவருக்கு சாத்தப்பட்ட மாலைகள் அனைத்தும், அதன் பின்னர் சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கப்படுகிறது. திருச்செந்தூர் திருத்தலத்தில் ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன.

    காயத்ரி மந்திரங்களே இங்கு 24 தீர்த்தங்களாக இருப்பதாக நம்பப்படுகிறது. கந்தசஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெறும். சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகப்பெருமானுக்கு எதிரே கண்ணாடி ஒன்று வைக்கப்படும். அந்த கண்ணாடிக்கே அபிஷேகம் செய்யப்படும். அதற்கு ‘சாயா அபிஷேகம்’ என்று பெயர்.
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் மற்றும் பூஜையும் நடைபெறுகிறது.
    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் 18 அடி உயரம் கொண்டவர். தினமும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜையும் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதன்பிறகு காலை 9 மணிமுதல் 9.30 மணிவரை காலசந்தி நடைபெறும்.

    9.30 மணிக்கு மேல் அபிஷேகம் நடைபெறும். அதாவது நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் சொர்ண அபிஷேகம் செய்யப்படும். அதன்பிறகு மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதாவது வடைமாலை இருந்தால் அணிவிக்கப்படும் பக்தர்கள் பணம் கட்டி இருந்தால் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்க கவசம் மற்றும் வெள்ளி கவசம் சாத்தப்படும். முத்தங்கி அலங்காரமும் செய்யப்படும்.

    சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த அபிஷேக செலவை ஒருவர் மட்டுமே ஏற்கும் நிலை இருந்தது. தற்போது இதில் கோவில் நிர்வாகம் மாற்றம் செய்து 3 பேர் செலவை ஏற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புஷ்ப அங்கி அலங்காரம், வெண்ணெய் காப்பு மற்றும் சந்தன காப்பு அலங்காரம் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக முன்பதிவு நடந்து வருகிறது.
    நாமக்கல் ஆஞ்சநேயரை அபிஷேகம் செய்த வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்கு சாதுர்யம் ஆகிய நன்மைகள் ஏற்படும்.
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் செய்யும் அபிஷேகங்களுக்கு கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

    நல்ல எண்ணெய் அபிஷேகம் - பித்ரு - சனி தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

    பஞ்சாமிர்த அபிஷேகம் - எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

    சந்தன அபிஷேகம் - தீர்வில்லா பொருளாதார ஏற்றம் அடையும், பணம் பெருகும்.

    சீயக்காய் அபிஷேகம் - மனோ சக்தி மேம்படும்.

    பால் அபிஷேகம் - மும்மாரி பொழியும்.

    ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு உளுந்து அளித்தல், அல்லது வடைமாலை அணிவித்தல்- ராகு திசை தோஷம் நிவர்த்தியாகும். சனி மற்றும் கேது தோஷமும் நீங்கும்.

    மொத்தத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்கு சாதுர்யம் ஆகிய நன்மைகள் ஏற்படும்.
    குமட்டகிரியில் உள்ள பாகுபலி சிலைக்கு நேற்று மஸ்தகாபிஷேகம் நடந்தது. இதில் திரளான ஜெயின் துறவிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் ஜெயின் மக்களின் புண்ணிய தலமாக கருதப்படும் கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்டமான பாகுபலி சிலை அமைந்துள்ளது.

    இதேபோல, மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே கிராமத்தின் அருகே உள்ள குமட்டகிரி பகுதியில் 600 ஆண்டுகள் பழமையான கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் பாகுபலி சிலையும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும். இந்த சிலை குமட்டகிரி மலையில் பாறை மீது அமைந்துள்ளது.

    இந்த நிலையில் குமட்டகிரியில் இருக்கும் பாகுபலி சிலைக்கு நேற்று மஸ்தகாபிஷேக விழா நடந்தது. இதில், மடாதிபதி சாருகீர்த்தி பட்டாரக்க சுவாமி தலைமையில் இந்த மஸ்தகாபிஷேகம் நடந்தது. அப்போது பாகுபலிக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம், இளநீர், விபூதி உள்ளிட்ட திவ்ய திரவ பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    இதில் திரளான ஜெயின் மத துறவிகள் கலந்துகொண்டு பாகுபலியை தரிசனம் செய்தனர். இந்த மஸ்தகாபிஷேகத்தையொட்டி நேற்று குமட்டகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    நெல்லை அருகே உள்ள அருகன்குளம் ராமலிங்கசுவாமி கோவிலில் மகாதேவ அஷ்டமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை அருகே உள்ள அருகன்குளம் பழைய கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமலிங்கசுவாமி சமேத பர்வதவர்தினி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் உள்ளது. இந்த கோவில் ராமபிரான் வழிபட்ட கோவிலாகும். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

    இந்த கோவில் நேற்று காலை 10 மணிக்கு மகாதேவ அஷ்டமியையொட்டி ராமலிங்கசுவாமி, சிறப்பு கும்ப பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னாபிஷேகமும், இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள பிண்டம் போட்ட ராமருக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 2 மணிக்கு அன்னதானம் நடந்தது.

    கார்த்திகை மாதம் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமி திதி, மகாதேவ அஷ்டமியாகும். இந்த தேய்பிறை அஷ்டமியில் தான் கால பைரவர் தோன்றினார். இதனால் அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். நெல்லையப்பர் கோவிலில் மகாதேவ அஷ்டமியையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும், காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி காலபைரவருக்கு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் உள்ள மகாதேவருக்கு நேற்று மாலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    மைசூருவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் சாமுண்டி மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் மகா நந்தி உள்ளது. இந்த நந்திக்கு 12-ந்தேதி மகா ருத்ராபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
    மைசூருவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் சாமுண்டி மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் மகா நந்தி உள்ளது. 16 அடி உயரம் கொண்ட இந்த மகா நந்திக்கு மகா ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் நடப்பு ஆண்டில் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) நந்திக்கு மகா ருத்ராபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

    இந்த ருத்ராபிஷேகத்தின் போது 500 லிட்டர் பால், 200 லிட்டர் தயிர், 100 லிட்டர் தேன், திவ்ய, திரவிய பொருட்கள் என 47 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சிறப்பு அலங்காரம், பூஜையும் நடத்தப்படுகிறது.

    இந்த தகவலை நந்தி மகா ருத்ராபிஷேக குழு தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 
    திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் கோவிலில் கடந்த 13-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் உபயதாரர்களை கொண்டு, மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கு பால கணபதி, நாகாபரண கணபதி, லஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூசிக கணபதி, ராஜ கணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருட கணபதி, சித்தி புத்தி கணபதி அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் 13-ம் நாளான நேற்று பகல் 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கும், மாணிக்க விநாயகர் மூலவருக்கும் திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, நெல்லி முல்லி பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சை பழம், சாத்துக்குடி, கரும்புசாறு, திராட்சை, விளாம்பழம், மாதுளை, அன்னாசிப்பழம், முப்பழம், பழவகைகள், அன்னம், வெந்நீர், இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம், பன்னீர் உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும், அதைத்தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 14-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு திருக்கோவில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனையும் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர். 
    இறைவனுக்கு விருப்பமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் நம் வேண்டுதல்கள் நிறைவேறும். அந்த வகையில் இறைவனுக்கு எந்த பொருளால் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    இறைவனுக்கு விருப்பமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். அந்த வகையில் இறைவனுக்கு எந்ததெந்த  பொருளால் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    சந்தனாதி தைலம் - இன்பம்
    அரிசி மாவு - கடன் விலகும்
    மஞ்சள் தூள் - மங்கலம்
    நெல்லிப்பொடி - பிணிநீக்கம்

    திரவியம் பொடி - இகபர சுகம்
    ரசபஞ்சாமிர்தம் - விவேகம்
    பழபஞ்சாமிர்தம் - முக்தி
    பால் - ஆயுள் விருத்தி

    பஞ்சகவ்யம் - சுத்தம், சகல தோஷ நிவர்த்தி
    இளவெந்நீர் - முக்தி
    தேன் - சுகம், சங்கீத குரல்வளம்
    இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்

    சர்க்கரைச்சாறு - பகைவரை வெல்லலாம்
    கரும்புச்சாறு - ஆரோக்கியம்
    பழச்சாறு - மகிழ்ச்சி தரும்
    எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்

    நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி கொடுக்கும்
    பழச்சாறு - சோகம் போக்கும்
    மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
    அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்



    வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
    தர்ப்பைப்புல் கலந்த நீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
    பன்னீர் - குளிர்ச்சி தரும்
    விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்

    தங்கம் கலந்தநீர்
    ( ஸ்வர்ணோதகம்) - சகல சவுபாக்கியம் கிட்டும்
    ரத்னம் கலந்தநீர்
    ( ரத்னோதகம்) - சகல சவுபாக்கியம் கிட்டும்

    சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
    கோரசணை - சகல ஆரோக்கியம்
    ஜவ்வாது - ஜன வசியம்
    புனுகு - புகழ் கிட்டும்

    பச்சைக் கற்பூரம் - தெய்வ ஆகர்ஷனம்
    குங்குமப்பூ - இஷ்ட சித்தி
    தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
    சங்காபிஷேகம் - சகல காரிய சித்தி
    கலசாபிஷேகம் - இறையருள்

    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன. ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.
    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன. ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன. அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகின்றது.

    பாலபிஷேகம்: வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றிப் பாலபிஷேகம் செய்தால் புத்திரப்பேறு கிடைக்கும்.

    சந்தன அபிஷேகம்: செஞ்சேரிமலை என வழங்கப்பெறும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்குச் சந்தனத்தால் அபிஷேகம் செய்யச் குழந்தை பாக்கியம் ஏற்படும். பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத் திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பைத் தரும்.

    தேனபிஷேகம்:
    திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர். இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக் காணலாம்.

    திருநீற்று அபிஷேகம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றா மரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார். அங்கு வரும் பக்தர் கள் அனைவரும் கைகளா லேயே அவருக்கு விபூதி. அபிஷேகம் செய்து வணங்குகின்றனர். மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.
    விநாயகருக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
     
    கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்: மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநா யகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

    அன்ன அபிஷேகம்: பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    சொர்ணாபிஷேகம்: திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.

    நல்லெண்ணெய் அபிஷேகம்: மனதில் தூய்மை யான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.

    தண்ணீர் அபிஷேகம்: மனசாந்தி ஏற்படும்.

    பஞ்சாமிர்த அபிஷேகம்: அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்கும்.

    மஞ்சள் பொடி அபிஷேகம்: அனைவரும் நமக்கு உதவ முன்வருவார்கள். ராஜவசியம் உண்டாகும்.

    தயிர் அபிஷேகம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    இளநீர் அபிஷேகம்: கஷ்டங்கள் நீங்கும். மன அமைதி, புத்தி தெளிவு பெறும்.

    கரும்புச்சாறு அபிஷேகம்: வியாதிகள் நீங்கும், கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாகும்.

    அரிசி மாவுப்பொடி அபிஷேகம்: லட்சுமி வாசம் உண்டாகும். தாராளமாக பணம் புரளும். கடன் தீரும்.

    எலுமிச்சை பழம் அணிவித்தால்: ஜாதகத்தில் இருக்கும் போக்கும், துர்க்கையின் அருளாசி கிடைக்கும். எம பயம் நீங்கும்.

    மலர்களால் அர்ச்சனை செய்தால்: இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வசந்தமான வாழ்க்கை அமையும்.
    அழகர்கோவிலில் நடந்த திருபவுத்திர திருவிழாவில் 108 கலச நூபுர கங்கை தீர்த்தத்தால் கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ளது கள்ளழகர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று திருபவுத்திரவிழா. இந்தவிழா அங்குள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டபத்தில் நேற்று முழங்க தொடங்கியது. இங்கு உற்சவர் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் அங்கு எழுந்தருளினார்.

    அப்போது கீழே தானியங்கள் விரிக்கப்பட்டு அதன்மீது நூபுரகங்கை தீர்த்தம், அபூர்வ மூலிகைகள் அடங்கிய 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப்பட்டு தேங்காய்,வாழைப்பழம், மாவிலை, பூக்கள், மாலைகள் வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து 135 அபூர்வ மூலிகைகள், திரவியங்கள் அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன.

    அப்போது திருப்பட்டு நூல்களால் ஆன வண்ணப்பட்டு மாலைகள் வைத்து பூஜைகள் நடந்தது. பின்னர் தீபதூப ஆராதனைகளும், திருமஞ்சனமும், அலங்காரமும் நடைபெற்றது.அதைதொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட பட்டு நூல் மாலைகளை மூலவர் சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடந்தன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 26-ந்தேதி நிறைவுபெறுகிறது.

    இந்த திருவிழா குறித்து கோவில்பட்டர் சுந்தரநாராயணன் அம்பி கூறியதாவது:- உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் உயரவும், பருவ மழை பெய்து கண்மாய், குளங்கள் நிறையவும் இந்த கலசங்கள் வைத்து அபூர்வ மூலிகைகள் நிறைந்த திரவியத்துடன் அழகர்மலை உச்சியில் இருந்துவரும் நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்த்து கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது இந்த திருபவுத்திர திருவிழாவின் தனிசிறப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். 
    பெங்களூரு சிவகங்கா என்னும் கிராமத்தில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் இன்று நடைபெறுகிறது.
    பெங்களூருவில் இருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார்.

    ஐந்து அடி உயரத்தில் கம்பீரமான சிவலிங்கத் திருமேனி அது. இத்தல இறைவனை அருகில் இருந்து தரிசனம் செய்யலாம். இறைவனின் திருநாமம் ‘கவிகங்காதீஸ்வரர்’ என்பதாகும். இந்தக் கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள்.

    அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார். அப்படி திருப்பித் தரும் அந்த நெய், வெண்ணெயாக மாறி இருக்குமாம். 
    ×