search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வரி வசூல் செய்து சாமி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிறிய தெருவாக இருந்து வந்ததால் சாமி ஊர்வலம் செல்லவில்லை.
    • இதில் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது‌.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கோவிலுக்கு வரி வசூல் செய்து சாமி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிறிய தெருவாக இருந்து வந்ததால் சாமி ஊர்வலம் செல்லவில்லை. இது குறித்து மணி உள்ளிட்ட நான்கு பேர் கோவில் நிர்வாகி மோகனை கேட்டனர். இதில் மணி தரப்பினருக்கும், மோகன் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில்கோவில் நிர்வாகி மோகன், ராமசாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.                                                                                                                                                                                                                                                                                                                     இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த மணி, மோகன்தாஸ், பரசுராமன், ராஜ் ஆகியோர் மீதும், ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் இளையராஜா, ரமேஷ், முருகன், பாலகிருஷ்ணன் ஆகிய 8 பேர் மீது தனித்தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாகதகவல் வந்தது.
    • , ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், கோட்டுச்சேரி போலீசார், குறிப்பிட்ட மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது, ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் அல்லிராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
    • 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பட்டுக்கோட்டையை சேர்ந்த வீரசேகரன் என்பவர், தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரைக்காலை சேர்ந்த நிரவி சுரேஷ் மற்றும் கம்பெனி சுரேஷ் ஆகியோர் போலி மதுபானம் தயாரித்தனர்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய வீரசேகரன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார்.

    இதை தொடா்ந்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வீரசேகரன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நிரவி சுரேஷ் மற்றும் கம்பெனி சுரேஷ் ஆகிய 2 பேரும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணிவாசகம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
    • வாட்ஸ் அப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் மீது அவதூறாக பேசி வருகிறார்.

    கடலூர்:

    பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணிவாசகம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், குறிஞ்சிப்பாடி சின்ன காட்டுசாகை சேர்ந்தவர் சங்கர். வாட்ஸ் அப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் மீது அவதூறாக தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் பொது அமைதி பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்படி குள்ளஞ்சாவடி போலீசார் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருதரப்பினர் மோதலில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
    • இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த பட்டவையனார் கோவில் அமைந்துள்ளது.இந்த நிலையில் இக்கோவில் வளாகத்தில் கல்வெட்டு வைப்பதென் ஒரு தரப்பினர் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இதனை அறிந்த மற்றொரு தரப்பினர் அதனை தடுத்து நிறுத்தினர்.இதனால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு தரப்பில் இருந்தும் இருவர் காயமடைந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 8 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




    • விவசாய நிலம் சுற்றி உள்ள கம்பி வேலி சேதம்
    • 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பொட்டக்கொல்லை மேல தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் கலைமணி (வயது62). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கண்ணையன், நீலமேகம், பொன்னுசாமி ஆகியோர் கலைமணியை தகாத வார்த்தையால் திட்டி அவரது நிலத்தில் உள்ள கம்பி வேலியை சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கலைமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரசு கலை கல்லூரி வழியாக பேருந்துகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
    • போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

     கிருஷ்ணகிரி, பிப்.27-

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடையை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள குப்பம் வரை மகாராஜாகடை வழியாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களின் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    42 கிலோமீட்டர் தூரமுள்ள வழத்தடத்தில் 40 கிராம மக்கள் பயனடையும் வகையில் மகாராஜாகடை வழியாக பேருந்துகளை இயக்க மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசு கலை கல்லூரி வழியாக பேருந்துகளை இயக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஏறத்தாழ 9 கிலோமீட்டர் தூரம் குறைகிறது என்பதற்காக, 40 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பேருந்து வசதி இல்லாமலும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    அரசிடம் அனுமதி பெற்ற வழித்தடத்தில் பேருந்துகளை இயக்காதது குறித்து அரசு நிர்வாகங்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

    எனவே கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் வரை அரசிடம் அனுமதி வழங்கிய மகாராஜாகடை வழியாக மட்டுமே தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அரசு போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

    • நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்அழகன், தமிழ்ச்செல்வன், தினகரன், அஜித் ஆகிய 4 பேரும் ஜேக்கபை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
    • ஜேக்கப்பின் தாய் தாட்சாயணி கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கனகம்மாசத்திரம்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மாதவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 33). இவர் ஓசூர் பகுதியில் சிமெண்ட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 18-ந்தேதி வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது திருத்தணி அடுத்த நல்லாட்டூர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்படுத்தியதாக கூறி நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்அழகன், தமிழ்ச்செல்வன், தினகரன், அஜித் ஆகிய 4 பேரும் ஜேக்கபை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஜேக்கப் படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து ஜேக்கப்பின் தாய் தாட்சாயணி கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது.
    • கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில் துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன்கள் மைக்கேல் மற்றும் ஞானவேல். இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    • இதில் சம்பந்தப்பட்ட தரகர் நடராஜன், சாந்தலட்சுமி, புவனேஸ்வரி, மணி, கோபி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதி சேர்ந்த பொன்னுசாமி இவரது மகன் அரவிந்த் குமார் வயது 30 பொன்னுசாமி மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அடிக்கடி சேலம் பஜாருக்கு வரும்போது சேலம் நெத்திமேடு கேபி கரடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்ற அரிசி தரகர் அறிமுகம் ஆனார்.நடராஜன் தனக்கு ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் என்பவரை தெரியும் அவர் மூலம் உனது மகனுக்கு அரசு வேலை உடனடியாக வாங்கிக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.

    இதை தொடர்ந்து அரவிந்த் குமார் இடம் சசிகுமார் அறிமுகப்ப டுத்தப்பட்டார். உடனடியாக அரசு வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் அளித்ததன் பேரில் அரவிந்த் குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் ரூபாய் 2 கோடியே 83 லட்சத்தை வசூலித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    பேசியபடி யாருக்கும் வேலை கிடைக்காததால் சந்தேகம் இருந்த அரவிந்த் குமார், சசிகுமார் பற்றி விசாரித்த போது அவர் ஒரு போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் மற்றும் முகமது உஸ்மான் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட தரகர் நடராஜன், சாந்தலட்சுமி, புவனேஸ்வரி, மணி, கோபி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் புவனேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் நேற்று இரவு மாவட்ட குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நடராஜனை கைது செய்து இன்று அதிகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மணி, கோபி மற்றும் சாந்தலட்சுமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.
    • இதைக் கண்ட ஜெகநாதன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரில் ஒருவர், கத்தியால் ஜெகநாதனை தலையில் வெட்டினார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே உள்ள கல்யாணசுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 37). இவர் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது வீட்டிற்கு அருகில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.

    இதைக் கண்ட ஜெகநாதன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரில் ஒருவர், கத்தியால் ஜெகநாதனை தலையில் வெட்டினார்.இதில் படுகாயம் அடைந்த ஜெகநாதன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்னம்மாபாளையம் வீரபாண்டியார் நகரை சேர்ந்த தி.மு.க பிரமுகரான பாண்டியன் (31) என்பவரை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய செல்வகு மார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • துவரங்குறிச்சி அருகே குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியில் வந்தவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது
    • ஊராட்சி தலைவரை தாக்க முயன்றதாக அளித்த புகாரில் நடவடிக்கை

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், துவ–ரங்குறிச்சியை அடுத்த கஞ்ச–நாயக்கன்பட்டி ஊராட்சி–யில் செட்டியபட்டி பஞ்சா–யத்து உள்ளது. இந்த ஊரின் மையப்பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதில் நீர் ஏற்றப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடிநீர் தொட்டியில் விஷம் கலக் கப்பட்டுள்ளாதாக வந்த தகவலால் கிராமமே பரப–ரப்புக்கு உள்ளானது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வருவாய் துறையினர், சுகா–தாரதுறை அதிகாரிகள் செட்டியபட்டிக்கு விரைந்து சென்றனர்.மேலும் சம்மந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த குடிநீர் மற்றும் அந்த பகுதியில் குடிநீருக்காக பயன் ப–டுத்தப்பட்டுவரும் சில சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி–களில் இருந்த நீர் சேக–ரிக்கப்பட்டு ஆய் வ–கத்திற்கு அனுப்பி வைக் கப்பட்டது. அத்துடன் குடிநீர் தொட்டிகளில் இருந்த நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. தற்காலிகமாக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சி நிர்வா–கத்தின் சார்பில் மாற்று ஏற் பாடும் செய்யப்பட்டது.இதற்கிடையே பணப் பிரச்சினையில் செட்டிய–பட்டியை சேர்ந்த சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமரா–வதி அருகே உள்ள மதி–யாணி என்ற பகுதியை சேர்ந்த பச்சமுத்து (வயது 43) மற்றும் செட்டியபட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள் ஆகிய இருவர் மீதும் துவ–ரங்குறிச்சி போலீசார் கொலை உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இந்நிலையில் இருவர் மீதும் கடந்த ஆண்டு குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அதன் பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்த பச்சமுத்து ஊரின் குடி–நீர் தொட்டியில் விஷம் கலந்து கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே தான் சம்பவதன்று பச்சமுத்து குடிநீர் தொட்டியின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது கஞ்சநாயக்கன் ட்டி ஊராட்சி தலைவர் பழனிசாமி (64) என்பவர் குடிநீர் தொட்டி அருகே தேவையின்றி நின்று கொண்டிருந்தது தொடர் பாக கேட்டுள்ளார். அதற்கு ஊராட்சி தலைவரை தகாத வார்த்தைகளால் திட்டி பச்சமுத்து தாக்க முயற்சி செய்துள்ளார்.இது தொடர்பாக ஊராட்சி தலைவர் பழனி–சாமி அளித்த புகாரின் பேரில் பச்சமுத்து மீது கொலை முயற்சி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்ப–வத்தில் பச்சமுத்து ஏற்க–னவே விஷம் கலப்பதாக சொல்லி இருந்ததால் சந்தே–கத்தின் பேரில் குடிநீர் ஆய் வுக்கு அனுப்பட்டது குறிப்பிடத் தக்கது.

    ×