search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • சேர்ந்தவர் காசிவேல் (வயது 40). கொத்தனார். இவரது மகன் ருத்திரபதி (18) வீட்டில் இருந்த போது, பக்கத்து வீட்டிலுள்ள கருப்பன் மகன் பாலு, இந்திரா ஆகியோர் வந்து, எனது வாத்தினை கொன்று போட்டுவிட்டு, பணத்தை தி ருடிவி ட்டாய் என திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
    • அவர்கள் தொடர்ந்து, வாய்கூசாமல் திட்டியதால், வீட்டின் படுக்கை அறையில் புடவையின் மூலம் ருத்திரபதி தூக்கு மாட்டிகொண்டார்.

    கள்ளக்குறிச்சி, மே.5-

    தியாகதுருகம் அருகே குரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவேல் (வயது 40). கொத்தனார். இவரது மனைவி லட்சுமி அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் வேலைக்குச் சென்றார். அப்பொழுது இவரது மகன் ருத்திரபதி (18) வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள கருப்பன் மகன் பாலு, இவரது மனைவி இந்திரா ஆகியோர் மாட்டுக் கொட்டகையில் இருந்த ருத்திரபதியிடம் எனது வாத்தினை கொன்று போட்டுவிட்டு, பணத்தை திருடி சென்று விட்டதாக கூறி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்த லட்சுமி விரைந்து வந்து தனது மகனை சமாதானம் செய்ததாகவும், அப்போது பாலுவும் அவரது மனைவியும் ருத்திரபதியை பார்த்து வாய் கூசாமல் பொய் பேசுறியே, நீ எல்லாம் செத்து தொலைய வேண்டியது தானே என கூறி மீண்டும் திட்டியதாகவும் கூறப்படுகிறது.  இதனை கேட்ட ருத்திரபதி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து லட்சுமி மீண்டும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்குச் சென்று வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் புடவையின் மூலம் ருத்திரபதி தூக்கு மாட்டி தொங்கியபடி இருந்தார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் மாணவனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து அவரது தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் பாலு அவரது மனைவி இந்திரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த மாணவன் ருத்திரபதி விருகாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் - 2 படித்தார். வருகின்ற 8-ந் தேதி தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் மாணவன் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நான் 10 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக அண்ணாமலை பேசியுள்ளார்.
    • தி.மு.க.வை அசைத்து பார்க்க யாராலும் முடியாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மத்திய மாவட்ட, மாநகர திமுக சார்பில், காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி, விவசாயிகளை காப்பாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்று தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு வந்தவ ர்களை மாநகர செயலாளர் சண்.ராமநாதன் வரவேற்றார். மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், டிகேஜி.நீலமேகம் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திமுக பொருளாளரும், பாராளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பேசியதாவது:-

    பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஏலம் அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக தமிழக முதல்வர் டெல்லியில் உள்ள என்னை தொடர்பு கொண்டு விவரத்தை எடுத்துக்கூறி, துறை அமைச்சரிடம் பேசி, கடிதம் அனுப்பி அந்த ஏலத்தை நிறுத்த வைத்தோம். நான் 10 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக அண்ணாமலை பேசியுள்ளார்.

    என் மீது கிரிமினல் வழக்கு தொடராத காரணத்தால் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என முடிவு செய்துவிட்டேன்.

    வரும் 8-ம் தேதி சைதாபேட்டை நீதிமன்றத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கை தொடர உள்ளேன்.

    அதற்கு மேல் அண்ணாமலை மீது 100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன். சிவில் வழக்கு பின்னர் தொடரப்படும்.

    திமுக தலைவரின் பெயரையும், புகழையும் கெடுக்க ஏதோ ஒரு சதி நடக்கிறது.

    அதை நீங்கள் செய்தால் இங்குள்ள ஒவ்வொரு தொண்டனும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நாங்கள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட சக்தி.

    திமுகவை அசைத்து பார்க்கவோ, தொட்டுப் பார்க்கவோ யாராலும் முடியாது.

    நாங்கள் எமர்ஜென்சி, மிசாவெல்லாம் பார்த்தவர்கள். அண்ணா மலையை பற்றி யாரும் பேச வேண்டாம் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் எல் ஜி அண்ணா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்திமாநில தீர்மானம் செயலாளர் ஒரத்தநாடு தொகுதி பார்வையாளர் அக்ரி கணேசன் தஞ்சை தொகுதி பார்வையாளர் சங்கர் திருவையாறு தொகுதி பார்வையாளர் வீர கணேசன் ஒன்றிய செயலாளர் முரசொலி செல்வகுமார் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மாவட்ட துணை செயலாளர் பாலாஜி கனகவல்லி மணிமாறன் பகுதி செயலாளர்கள்மேத்தா நீலகண்டன் கார்த்திக் சதாசிவம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார்.
    • அவர் 2 லாரி ட்யூப்களில் சுமார் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் மதுகடத்தல் சம்பந்தமாக சிறுபாக்கம் ஒரங்கூரிலிருந்து ஓலக்கூர் செல்லும் பாதையில் மா.கொத்தனூரில் சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார். அவர் 2 லாரி ட்யூப்களில் சுமார் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஒலங்கூர் சேர்ந்த சுதாகர் (வயது 39) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது விருத்தாச்சலம் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் 9 சாராய வழக்குகள் உள்ளன.

    இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் விதமாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    • 600 மது பாட்டில்கள் பறிமுதல்
    • நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை

    நாகர்கோவில் :

    தொழிலாளர் தினத்தை யொட்டி டாஸ்மாக் கடை கள் நேற்று மூடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அனுமதி இன்றி குமரி மாவட்டத்தில் மது விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ராஜாக்கமங்கலம் பகுதி யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அனுமதி இன்றி மது விற்பனை செய்து கொண்டி ருந்த பரமார்த்தலிங்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலங்கோட்டை பகுதியில் மது விற்ற நாகராஜன் என்பவரை கைது செய்த வுடன் அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களையும், ஈத்தங்காடு பகுதியில் மது விற்ற நாகராஜன் என்ப வரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 111 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீ சார் என்.ஜி.ஓ.காலனி ஒத்தக்கடை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த கன்னியாகுமரி குண்டலை சேர்ந்த சண்முகசுந்தரம் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசாரின் அதிரடி சோதனை நடத்தினர்.

    அனுமதியின்றி மது விற்பனை செய்த 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 600 மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

    • 5 பேரும் துரை, ஸ்ரீதரை சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
    • 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அடுத்துள்ள பையர்நாயக்கனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் துரை. இந்த நிலையில் துரையும்,

    இவரது உறவினர் ஸ்ரீதர் ஆகியோர் இருவரும் பையர்நாயக்கனப்பள்ளி சந்திப்பு பகுதியில் நேற்று டீ குடித்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மாரியம்மன்கோவில் அருகில் வந்த போது அந்த வழியாக வந்த ஹரிபிரசாத், முருகன், ஆறுமுகம், அருண், ராஜ்குமார் ஆகிய 5 பேரும் துரை, ஸ்ரீதரை சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் ஹரிபிரசாத், முருகன், ஆறுமுகம், அருண், ராஜ்குமார் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
    • 2 வாலிபர்கள் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் வழக்கு

    கன்னியாகுமரி:

    ஈத்தாமொழி அருகே வடக்கு சூரங்குடி தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 30).வியாபாரி இவர் ராமன் புதூர் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். கடந்த 28-ந்தேதி பிரேம் ஆனந்த் மற்றும் அவரது அக்காவின் கணவர் ஆனந்த் இருவரும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்வதற்கு தயாரானார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தட்டான்விளை பார்க் ரோட்டை சேர்ந்த சஞ்சய், புன்னைநகர் ஹோலி கிராஸ் ரோட்டை சேர்ந்த நவீன்குமார் ஆகியோர் பழம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த நவீன்குமார், சஞ்சய் இருவரும் பிரேம் ஆனந்த், ஆனந்த் இருவரையும் தாக்கினார்கள். மேலும் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை பிரேம் ஆனந்த் மீது ஊற்றி தீ வைத்தனர். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தீக்காயம் அடைந்த பிரேம் ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து நேசமணிநகர் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். நவீன் குமார், சஞ்சய் இருவர் மீதும் கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    இருவரையும் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில் நவீன்குமார், சஞ்சய் இரு வரும் தலை மறைவாகி விட்டனர்.

    • கரூர் மாவட்டத்தில் சிறப்பு ரோந்தில் 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. தெரிவித்துள்ளார்
    • லாட்டரி சீட்டு விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர்:


    கரூர் எஸ்.பி. சுந்தரவதனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகன சோதனையின் போது 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நம்பர் பிளேட் இல்லாத 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 20 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    லாட்டரி சீட்டு விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் குழந்தைகளை நீர் நிலைகள் அருகில் செல்வதையும், சிறார்களை இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவதை அனுமதிக்காமல் ெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


    • மோகன் (வயது 40). மீனவர். இவரது மனைவி மீனா (வயது 37). அதே பகுதியை சேர்ந்தவர் பூவராகவன். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோத தகராறு இருந்து வந்தது.
    • இதில் பலத்த காயமடைந்த மோகன், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் சேர்ந்தவர் மோகன் (வயது 40). மீனவர். இவரது மனைவி மீனா (வயது 37). அதே பகுதியை சேர்ந்தவர் பூவராகவன். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மோகன் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பூவராகவன், ராமதாஸ் ஆகியோர் மோகனை வழிமறித்து இரும்பு கம்பி யால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த மோகன், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் முது நகர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 65). இவர் தனது வீட்டின் அருகே சிறிய கோவில் கட்டி வருகிறார்.அப்போது இவரது தம்பி கண்ணன், பொது பாதையில் ஏன் கோவில் கட்டுகிறார்கள் என கேட்டபோது, 2 தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஜெயபால், செல்வமூர்த்தி, சிவமூர்த்தி, சுந்தரமூர்த்தி, கண்ணன், கருணாமூர்த்தி, கார்த்தி, நந்தகோபால் ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் கண்ணன், நந்தகோபால், கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி, ஆகியோர் மீதும், கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயபால், செல்வமூர்த்தி, ஜெயமூர்த்தி, சுந்தரமூர்த்தி, சிவமூர்த்தி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • அரிகிருஷ்ணன் மற்றும் வைத்தியநாதன் ஆகியோருக்கிடையே நிலப்பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்தது.
    • வைத்தியநாதன் மனைவி மற்றும் மகளை பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த ஆத்திரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அரிகிருஷ்ணன்.  சொக்கலிங்கம் மகன் வைத்தியநாதன். இருவரும் உறவினர்கள். இவர்களுக்குள் நிலப் பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வருகிறது.நேற்று இரவு அரிகிருஷ்ணன் குடிபோதையில் வைத்தியநாதன் வீட்டில் இல்லாதபோது அவரைப்பற்றி அசிங்கமாக திட்டிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை தட்டிக்கேட்ட வைத்தியநாதன் மனைவி மற்றும் மகளை பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தினார்.   

    இதில் வைத்தியநாதன் மனைவி சண்முகவள்ளிக்கு முதுகு, தலை, இடுப்பு ஆகிய இடங்களில் பாட்டில் குத்து விழுந்தது. வைத்தியநாதன் மகள் சண்முகப்பிரியாவின் முதுகில் சரமாரியாக பாட்டிலால் குத்தினார்.

    படுகாயம் அடைந்த இருவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்னகாரன்குப்பம் அரிகிருஷ்ணனை (36) கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    • வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கிறிஸ்டோபர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • தாயிடம் சிறுமி தனக்கு 4 மாதங்களாக வயிற்றில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தார்.
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் சிக்கனூரில் உள்ள அருந்ததியர் தெருவைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக சிறுமி உள்பட 3 குழந்தைகளையும் பாட்டி வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி சொந்த ஊருக்கு கணவன், மனைவியும் வந்தனர்.

    அப்போது தாயிடம் சிறுமி தனக்கு 4 மாதங்களாக வயிற்றில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தார்.

    உடனே அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தார்.

    சிறைவார்டன்

    இதில் அதே ஊரைச் சேர்ந்த லெனின்குமார் என்கிற பார்த்திபன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. லெனின்குமார் நீலகிரி மாவட்டம், குன்னூரில் சிறை வார்டனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வழக்கு

    இதுகுறித்து சிறுமியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×