search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு
    • கரூர் மாநகராட்சி கமிஷனர் புகார் கொடுத்ததன் பேரில் நடவடிக்கை

    கரூர்,

    ராமநாதபுரம் மாவட்டம், குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காந்திகிராமம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் பேருந்து நிலையம் செல்வதற்காக அவசர கதியில் அலட்சியமாக பேருந்தை இயக்கி, சாலையின் குறுக்கே அமைந்துள்ள சென்டர் மீடியனில் இடித்து விபத்தினை ஏற்படுத்தி உள்ளார். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், சென்டர் மீடியன், எல்.இ.டி. பல்புகள், கேபிள்கள், பவுண்டேஷன் போல்ட்டுகள் உள்ளிட்ட 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.பேருந்தை அவசரகதியில் இயக்கி பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதால் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், தாந்தோணிமலை போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் மதியழகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மைனர் பெண் திருமணம்; 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் சந்தோஷ் கோபி கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    மகபூப்பாளையம் வைத்தியநாதபுரம் கங்கை காலனியை சேர்ந்த கண்ணன் மகன் தினேஷ் பவர்சிங் (23). இவர் கடந்த ஆண்டு மைனர் பெண்ணை திருமணம் செய்தார். அவர் சிறுமியின் எதிர்ப்பையும் மீறி பாலியல் உறவு கொண்டார். இதன் விளைவாக சிறுமி கர்ப்பமானார்.

    அவளுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் தினேஷ்பவர்சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ் கோபி கிருஷ்ணன் (28). இவர் 10 மாதங்களுக்கு முன்பு மைனர் பெண்ணை திருமணம் செய்தார். அந்த சிறுமிக்கும் தற்போது குழந்தை பிறந்தது.

    இது குறித்து திருப்பரங்குன்றம் குழந்தைகள் நல அலுவலர் சுமதி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் சந்தோஷ் கோபி கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.11½ லட்சம் மோசடி செய்த ராணுவ வீரர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
    • ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆத்தங்குடி கிராமத்ைத சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது கப்பலூரில் ஐ.ஓ.சி. நிறுவனத்தில் பணி யாற்றி வருகிறார்.

    இவர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்டுகுளத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது வெளிநாட்டு நிறு வனத்தில் முதலீடு செய்தால் சில மாதங்களில் இருமடங்கு தொகை கிடைக்கும் என சிவக்குமார் கூறினார்.

    இதனை நம்பி பல தவணைகளில் ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்தை சிவக்குமா ரிடம் கொடுத்தேன். பல மாதங்கள் ஆனபின்பும் பணம் கைக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது மோசடி என தெரியவந்தது. இதையடுத்து பணத்ைத திரும்பித்தருமாறு சிவக்குமா ரிடம் கேட்டேன்.ஆனால் அவர் பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறார். எனவே உரிய நடவடிக்ை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படை யில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரை அருகே இளம்பெண் திடீரென மாயமானார்.
    • மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகலை பரும்பு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகள்கள் ராமலட்சுமி(வயது17), விஜயலட்சுமி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். திருவிழாவை முன்னிட்டு ஜோதி தனது மகள்களை பஸ்சில் ஊருக்கு அழைத்துச்சென்றார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கிய அவர்கள் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது ராமலட்சுமி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராமு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தார்
    • ரைஸ் மில் வளாகத்தில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

    கடலூர்:

    கடலூர் புது வண்டிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ராமு ரைஸ் மில் வளாகத்தில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து இறந்த ராமுவின் உறவினர் வாசுதேவன், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், இறந்த ராமுவின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சாவில் மர்மம் உள்ளதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. பிரமுகர் குறித்து அவதூறு பரப்பியதாக புகார்
    • இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்குமலை சொசைட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு துவாக்குடி நகர செயலாளராக இருந்து வருகிறார்.இந்த நிலையில் அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ் அப் மட்டும் முகநூலில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து மேற்கண்ட துவாக்குடி வடக்குமலை அக்பர் சாலை பகுதியைச் சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஜெய்னுதீன், அ.தி.மு.க. பிரமுகர் செந்தில் குமார் மீது துவாக்குடி போலீசில் புகார் செய்தார்.அதில், நான் துவாக்குடி பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி செயலாளராகவும், திருவெறும்பூர் வட்டார ஜமாத் உலமா கௌரவ தலைவராகவும் இருந்து வருகிறேன். இந்த நிலையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செந்தில்குமார், வாட்ஸ்அப்பில் என்னை இஸ்லாமிய துரோகி என்று இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி, துவாக்குடி நகராட்சித் தலைவர் காயம்பின் பினாமியாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.மேலும் இந்து முஸ்லிம் மதக் கலவரத்தினை ஏற்படுத்தும் வகையில் தி.மு.க. கட்சியில் உள்ள இந்து முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் துவாக்குடி போலீசார் செந்தில்குமார் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே பெண்ணை அவதூறாக பேசிய கணவர்-கள்ளக்காதலி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கண்மாய்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 27). இவரது கணவர் பிரவீன் (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 வருடங்களாக கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரவின் அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பிரியா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது தெரிய வந்ததை தொடர்ந்து ராஜ பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் கணவர் மீது பிரியா புகார் கொடுத்தார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்தி ரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தநிலையில் பிரியா தென்காசி ரோட்டில் நடந்து சென்றதாக போது சொக்கர் கோவில் அருகே பிரவீ னும், தங்கப்பி ரியாவும் அவரை வழிமறித்து தகாத வார்த்தை களால் திட்டி அவதூறாக பேசியதாக கூறப்படு கிறது.

    இது குறித்து ராஜபாளை யம் தெற்கு போலீஸ் நிலை யத்தில் பிரியா புகார் செய்தா ர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் வெண்கொடை திருவிழா விவகாரத்தில் மறியலில் ஈடுபட்ட 55 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • 15 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் சித்திரை வெண்குடை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 5 தெருக்களில் வசிக்கும் ஒரு சமூகத்தினர் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான திருவிழாவை நடத்துவது தொடர்பாக தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடப்பட வில்லை எனக்கூறி நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு தெருவைச் சேர்ந்தவர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் 15 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் கலந்துகொண்டனர். ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார்.

    இந்த நிலையில் அவர்கள் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி மாவட்டம் எஸ்.பியும், நகர் போலீசாரும் தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளிடம் விசாரணை நடத்தி புகார் மனு பெற்றனர்.
    • கடந்த ஜனவரி 18-ந்தேதி தாளாளர் அன்பழகன் தன்னையும், சக ஆசிரியையான சுமதியையும் பள்ளியை விட்டு வெளியேறும்படி கொலைமிரட்டல் விடுத்ததாக சென்றாயபெருமாள் குறிப்பிட்டுள்ளார்.

    தேனி:

    தேனி சுப்பன்தெருவில் மகாராஜா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மேல்தளத்தில் செவித்திறன் குறைபாடு உடைய சிறுவர்களுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கான வாடகையை பள்ளி தாளாளர் அன்பழகன்(55) பெற்று வந்துள்ளார்.

    இந்தநிலையில் இந்த மாதத்திற்கான வாடகை பணத்தை தருமாறு தாளாளர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளிடம் கேட்டுள்ளார். வாடகை பணத்தை பள்ளியின் மின்சார கட்டணத்திற்கு பயன்படுத்தி விட்டதாக தலைமை ஆசிரியர் பதில் அளித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் தலைமை ஆசிரியரை பள்ளி தாளாளர் மாணவ-மாணவிகள் முன்பு தாக்கினார். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் தேனி மாவட்டம் எஸ்.பியும், நகர் போலீசாரும் தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளிடம் விசாரணை நடத்தி புகார் மனு பெற்றனர். அதில் கடந்த ஜனவரி 18-ந்தேதி தாளாளர் அன்பழகன் தன்னையும், சக ஆசிரியையான சுமதியையும் பள்ளியை விட்டு வெளியேறும்படி கொலைமிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்பழகன் சென்றாயபெருமாளை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். மேலும் பள்ளிக்கு பூட்டுபோட்டுவிட்டு அங்கிருந்து சென்றார். போலீசார் வழக்குபதிவு செய்ததை தொடர்ந்து அன்பழகன் தலைமறைவாகிவிட்டார். இந்த பள்ளி மாணவர்களை தேனி பங்களாமேடு அருகே பழைய உதவி தொடக்க கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள அரசு பள்ளியில் வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாணவர்கள் முழுஆண்டு தேர்வை எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியை மூடச்சொல்லி ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பள்ளிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வேறு பள்ளியில் பணி வழங்கப்படும். மாணவர்களை அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழரசன் (வயது 31). இவர் நேற்று தனது குழந்தையை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • தன்ராஜ் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பாட்டை தெரு கலியமூர்த்தி மகன் தமிழரசன் (வயது 31). இவர் நேற்று தனது மாமியார் வீட்டில் இருந்து தனது குழந்தையை அழைத்து வர பணப்பாக்கம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பனப்பாக்கம் காலணியை சேர்ந்த தன்ராஜ் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார். இரவு நேரத்தில் எதற்கு இவ்வளவு வேகமா போறீங்க என தமிழரசன் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குதம் தகராறாக மாறியது. இதில் தன்ராஜ், பாலமுருகன், சூர்யா ஆகியோர் தமிழரசன் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தமிழரசன் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணின் காதல் விவகாரத்தில் மிரட்டல் விடுத்த மைத்துனர், மருமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • ஆனந்த் மிரட்டியதை குறித்து அவரது தந்தை ராமச்சந்திரனிடம், சுப்பிரமணியன் புகார் கூறியுள்ளார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது53). இவரது மகளும், தங்கை மகன் ஆனந்த்தும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனந்த்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால் ஆனந்த்துடன் பழகுவதை சுப்பிரமணியனின் மகள் நிறுத்திவிட்டார்.

    இந்தநிலையில் சுப்பிரமணியன், தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். இதையறிந்த ஆனந்த் ஆபாச போட்டோக்களை அனுப்பி தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த பெண்ணிடம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனந்த் மிரட்டியதை குறித்து அவரது தந்தை ராமச்சந்திரனிடம், சுப்பிரமணியன் புகார் கூறியுள்ளார். ஆனால் அவரும் ஆனந்த்துக்குதான் சுப்பிரமணியனின் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினாராம்.

    இதுகுறித்து சுப்பிரமணியன் தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் -புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்டு சாலையில் தனியார் மெடிக்கல் இயங்கி வருகிறது
    • இந்த தனியார் மெடிக்கலை சம்சுதீன் என்பவரின் மகன் சாதிக்பாஷா நடத்தி வருகிறார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்டு சாலையில் தனியார் மெடிக்கல் இயங்கி வருகிறது. இந்த தனியார் மெடிக்கலை திண்டிவனம் ஆர்.எஸ் பிள்ளை வீதியைச் சேர்ந்த சம்சுதீன் என்பவரின் மகன் சாதிக்பாஷா நடத்தி வருகிறார்  இந்த மெடிக்கல் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், திண்டிவனம் முதன்மை மருத்துவர் சாந்தகுமாரி கொடுத்த புகாரின் பெயரில் திண்டி வனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, ஒலக்கூர் சப்- இன்ஸ்பெக்டர் சசி குமார் மற்றும் போலீசார் தனியார் மெடிக்கலில் விசா ரணை மேற்கொண்டனர்.

    மேலும், கடையில் சோதனை செய்ய போலீசார் முயற்சித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் கடையை மூடிவிட்டு சாதிக் பாஷா தப்பிவிட்டார். விசாரணையில் அவர் 10-ம் படித்து விட்டு பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள சாதிக் பாஷாவை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×