search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95834"

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பிரீபெயிட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட சலுகைகளில் கிடைக்கும் கூடுதல் டேட்டா விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ டேட்டா சலுகைகள் இந்த ஆண்டு துவக்கத்தில் மாற்றியமைக்கப்ப்டடன. எனினும் ஏர்டெல் சமீபத்தில் அறிவித்த கூடுதல் சலுகைகளுக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

    ஜியோ டபுள் தமாக்கா என அழைக்கப்படும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் மேற்கொள்ளும் பிரீபெயிட் ரீசார்ஜ்களில் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இந்த சலுகையை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    ஏர்டெல் ரூ.399 மற்றும் ரூ.149 சலுகைகளில் கூடுதல் டேடட்டா வழங்குவதாக அறிவித்த நிலையில், ஜியோ புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜியோ டபுள் தமாக்கா சலுகையுடன் ரூ.499 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கும் அதிக வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோ டபுள் தமாக்கா சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.149, ரூ.349 மற்றும் ரூ.449 சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் தினமும் 3 ஜிபி டேட்டா பெற முடியும்.



    இத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.198, ரூ.398 மற்றும் ரூ.498 சலுகைகளில் தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கபப்டுகிறது. இதேபோன்று ரூ.299 (தினமும் 3 ஜிபி), ரூ.509 (தினமும் 4 ஜிபி) மற்றும் ரூ.799 (தினமும் 5 ஜிபி) சலுகைகளில் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு தினமும் முறையே 4.5 ஜிபி, 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகளின் வேலிடிட்டியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் குறைக்கப்படும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும்.

    ஜியோ அறிவித்து இருக்கும் புதிய ரூ.499 சலுகையில் 91 நாட்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.499 விலையில் அறிவித்த சலுகையின் விலை சமீபத்தில் ரூ.449 ஆக குறைத்தது. முன்னதாக பயனர்கள் பெற்றிருந்த வவுச்சர்களை பயன்படுத்தி புதிய சலுகைகளை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். 

    மேலும் ரூ.300-க்கும் அதிக விலை கொடுத்து மைஜியோ செயலியில் ரீசார்ஜ் செய்து போன்பெ மூலம் பணம் செலுத்தினால் ரூ.100 வரை தள்ளுபடி பெற முடியும். ரூ.300-க்கும் குறைந்த கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கிய நிறுவனம் மற்றும் முன்னணி நிறுவனங்களின் டேட்டா வேகம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் 4ஜி டேட்டா வேகம் மற்றும் அதிவேக டவுன்லோடு வழங்கிய நிறுவனங்களின் சுவாரஸ்ய தகவல்களை ஓபன்சிக்னல் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

    ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஒட்டுமொத்த டவுன்லோடு வேகம், குறிப்பிட்ட டெலிகாம் நிறுவனத்தின் சராசரி 4ஜி வேகம், 3ஜி வேகம், வெவ்வேறு நெட்வொர்க்களில் சிக்னல் பரப்பளவு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    கடந்த மூன்று மாதங்களில் நிறுவனங்கள் வழங்கிய சேவைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், ஏர்டெல், ஐடியா, ஜியோ மற்றும் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஒட்டுமொத்த டேட்டா வேகத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

    அதன்படி செப்டம்பர் 2017 முதல் டவுன்லோடு வேகங்கள் தொடர்ந்து அதிகரித்து இருப்பதோடு ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் சேவை சீராக இருந்ததாக ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் எல்டிஇ நெட்வொர்க் பரப்பளவை அதிகரித்து வருகின்றன, ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களின் டேட்டா வேகம் அதிகரித்த நிலையில், வாடிக்கையாளர்கள் வேகமான எல்டிஇ வசதியை பயன்படுத்த முடிந்தது.

    மே 2017 - பிப்ரவரி 2018 வரையிலான காலக்கட்டத்தில் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் அதிகபட்சம் 1MBPS வரை தங்களது டேட்டா வேகத்தை அதிகரித்து இருக்கின்றன. இது ஒட்டுமொத்த டேட்டா வேகம் டிசம்பர் மாத வாக்கில் ஏர்டெல் நிறுவனத்தை முதலிடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ஜியோ இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

    ரிலையன்ஸ் ஜியோவை பொருத்த வரை பயனர்களால் முன்பை விட 96% வரை சீரான எல்டிஇ சிக்னல்களை பெற முடிந்தது. எனினும் ஜியோவின் 4ஜி வேகம் டேட்டா கொள்ளளவு பிரச்சனைகளால் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மே, ஜூன் மற்றும் ஜூலை மாத வாக்கில் ஜியோ டேட்டா வேகம் அதிகரித்து, முதலிடத்தில் இருந்தது.

    வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகளவு டேட்டா பயன்படுத்த துவங்கியிருப்பதால் ஜியோவின் ஒட்டுமொத்த டேட்டா வேகம் குறைய ஆரம்பித்துள்ளது. டேட்டா வேகம் தொடர்ந்து குறைந்ததால் ஜியோ டேட்டா வேகம் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.149 சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.149 சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ரூ.149 சலுகையில் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

    ரூ.149 ஏர்டெல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    முன்னதாக மே மாத வாககில் ரூ.149 சலுகை மாற்றியமைக்கப்பட்டு தினமும் 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்டது. மற்ற சேவைகளில் எவ்விதம மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பை விட புதிய மாற்றம் ஜியோ சலுகைக்கு போட்டியளிக்கும் வகையில் உள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.149 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும்.

    முன்னதாக ரூ.399 விலையில் வழங்கி வந்த சலுகையை ஏர்டெல் மாற்றியமைத்தது. இந்த சலுகையில் தற்சமயம் தினமும் 2.4 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்டெல் டிவி செயிலிக்கான இலவச சந்தா டிசம்பர் 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவனத்தின் டிவி ஆப் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அப்டேட் செய்யப்பட்டு நேரலை தொலைகாட்சி, வட்டாரம் மற்றும் சர்வதேச தகவல்களை பார்க்கும் வழி செய்யும் அப்டேட்-ஐ வெளியிட்டது.

    இத்துடன் ஜூன் 2018 வரை ஏர்டெல் டிவி ஆப் இலவச சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏர்டெல் டிவி செயலியை இதுவரை சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.

    ஆகஸ்டு 2017-இல் ஒரு கோடி வாடிக்கைாயளர்களை கடந்த ஏர்டெல் டிவி செயலியை வெறும் ஒன்பது மாதங்களில் மட்டும் சுமார் நான்கு கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். அந்த வகையில் புதிய மைல்கல் சாதனையை கொண்டாடும் வகையில், ஏர்டெல் டிவி செயலிக்கான இலவச சந்தாவை டிசம்பர் 30, 2018 வரை நீட்டிப்பதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.



    ஜனவரி முதல் மே 2018 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஒடிடி செயலிகளில் ஏர்டெல் டிவி செயலியும் ஒன்று என ஆப் ஆன்னி வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்டெல் டிவி ஆப் தற்சமயம் 375-க்கும் அதிகமான நேரலை தொலைகாட்சி சேனல்களையும், 10,000-க்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் பிரபல நிகழ்ச்சிகளை வழங்குகிறது. 

    ஏர்டெல் டிவி செயலி சார்பில் இரோஸ் நௌ, சோனிலிவ், ஹாட்ஸ்டார், அமேசான் மற்றும் பல்வேறு இதர நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு தரவுகளை வழங்குகிறது. இதேபோன்று மேலும் பல்வேறு நிறுவனங்களுடன் ஏர்டெல் ஒப்பந்தமிட இருப்பதாக கூறப்படுகிறது.
    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ஏப்ரல் 2018-இல் சேர்த்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சார்ந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஏப்ரல் 2018-இல் சேர்த்துள்ளன. இதே காலக்கட்டத்தில் வோடபோன் நிறுவனம் சுமார் 6.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்த தகவல்கள் இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    ஐடியா செல்லுலார் நிறுவனம் அதிகபட்சமாக 55.5 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் ஐடியா செல்லுலார் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 21.67 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மார்ச் 2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் சேவை வழங்கும் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் சுமார் 104.9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், இவற்றில் ஏர்செல், ரிலையன்ஸ் ஜியோ, எம்டிஎன்எல் மற்றும் டெலினார் நிறுவனங்களும் அடங்கும். என செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


    கோப்பு படம்

    இம்மாதம் மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் வளர்ச்சி ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. டெலிகாம் துறையில் சீரான கனெக்டிவிட்டி நாடு முழுக்க வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக இந்திய செல்லுலார் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் ராஜன் எஸ் மேத்யூ தெரிவித்தார்.

    இந்தியாவில் 30.86 கோடி வாடிக்கையாளர்களுடன் பாரதி ஏர்டெல் நிறுவனம் முன்னணி இடத்தில் உள்ளது. ஏப்ரல் 2018 காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 45 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன் இந்தியா சுமார் 22.2 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள 22 டெலிகாம் வட்டாரங்களில் 12 இடங்களில் வோடபோன் நிறுவனம் சுமார் 6.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் வோடபோன் சேவையை பயன்படுத்தியதில் 2.42 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மகாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், உத்திர பிரதேசம் மேற்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
    பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் உண்மையான அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் உண்மையான அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ரூ.299 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் எல்லையற்ற வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும்.

    இத்துடன் இந்த சலுகையில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 45 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த சலுகையை போன்று ரூ.299 விலையில் ஏர்டெல் மற்றொரு சலுகையை வழங்கி வருகிறது. இந்த சலுகையிலும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1.4 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.


    கோப்பு படம்

    புதிய சலுகை இந்தியா முழுக்க ஓபன் மார்கெட் ஆப்ஷனாக அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. புதிய சலுகையின் விவரங்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியில் குறிப்பிடப்படவில்லை.

    ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு எவ்வித போட்டியும் ஏற்படுத்தவில்லை. டெலிகாம் நிறுவனங்கள் தற்சமயம் அறிவிக்கும் அனைத்து சலுகைகளிலும் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் புதிய சலுகை எந்நேரமும் வாய்ஸ் கால் மேற்கொள்வோருக்கு ஏற்றதாக இருக்கும். எனினும் நாட்டில் டேட்டா போட்டி இன்னமும் தீர்ந்ததாக தெரியவில்லை. முன்னதாக ஏர்டெல் ரூ.449 பிரீபெயிட் சலுகையை அறிவித்து தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கியது. இத்துடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 70 நாட்களுக்கு வழங்கப்பட்டுகிறது.
    ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.449 விலையில் கிடைக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் ரூ.448 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

    ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.449 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஜியோ வழங்கி வரும் ரூ.448 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் ரூ.448 சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா சுமார் 82 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.


    கோப்பு படம்

    முன்னதாக ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆட்-ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. ஒரு சலுகையின் விலை ரூ.193 என்றும் ரூ.49 என நி்ர்ணயம் செய்யப்பட்டது. இதில் ரூ.193 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.49 சலுகையில் 1 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது. 

    இத்துடன் ஏர்டெல் வாடிக்கைாயளர்களுக்கு ரூ.49 விலையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இந்த சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும். இதேபோன்று ரூ.92 விலையில் வாடிக்கையாளர்களுக்கு 6 ஜிபி டேட்டா சுமார் ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஐபிஎல் கிரிகெட் தொடரை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் சிறப்பு டேட்டா சலுகைகளை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையுடன் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு எளிய மாத தவனை முறை வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களுக்கு எளிய மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.

    அதன்படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்க குறைந்தபட்சம் ரூ.3799 முன்பணமாக செலுத்தினால் போதும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் (www.airtel.in/onlinestore) கிடைக்கிறது. இவற்றுடன் போஸ்ட்பெயிட் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதன் மாத தவனை முறையில் குறைந்தபட்சம் மாதம் ரூ.1499 முதல் துவங்குகிறது.



    3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனினை ஏர்டெல் வலைத்தளத்தில் ரூ.3799 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். இதன் பின் 12 மாதங்களுக்கு ரூ.1,499 மாத தவனையாக செலுத்த வேண்டும். இவற்றுடன் பில்ட்-இன் போஸ்ட்பெயிட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி டேட்டா மற்றும் ரோல்ஓவர் வசதி, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், இலவச ஏர்டெல் டிவி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நோக்கியா 6.1 (4 ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் வாங்க ரூ.5,799 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.1,499 செலுத்த வேண்டும்.

    நோக்கியா 7 பிளஸ் வாங்குவோர் ரூ.5,599 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.2,099 செலுத்த வேண்டும். முந்தைய நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் அதே போஸ்ட்பெயிட் சலுகைகள் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கும் வழங்கப்படுகிறது.



    நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் வாங்க ரூ.8,599 முன்பணம் செலுத்தி, 18 மாதங்களுக்கு ரூ.2,799 செலுத்த வேண்டும். இந்த ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் போஸ்ட்பெயிட் சலுகைகளில் மாதம் 50 ஜிபி டேட்டா, ரோல்ஓவர் சலுகை, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு ஆண்டு அமேசான் பிரைம் சந்தா, இலவச ஏர்டெல் டிவி சந்தா மற்றும் ஏர்டெல் செக்யூர் டிவைஸ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் டிவி செயலிக்கான இலவச சந்தா டிசம்பர் 31, 2018 வரை வழங்கப்படுகிறது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவோர், அதிகாரப்பூர்வ ஏர்டெல் வலைத்தளத்துக்கு சென்று சாதனத்தை தேர்வு செய்து, முன்பணம் செலுத்தலாம். ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு, ஆக்டிவேட் ஆனதும் போஸ்ட்பெயிட் சலுகை தானாக ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ஆட்-ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆட்-ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சலுகையின் விலை ரூ.193 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி கூடுதல் டேட்டா தினமும் பெற முடியும். இதே போன்று ரூ.49 சலுகையிலும் 1 ஜிபி கூடுதல் டேட்டா பெற முடியும். 

    தற்சமயம் ஏர்டெல் அன்லிமிட்டெட் சலுகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆட்-ஆன் சலுகைகளை பெற முடியும். இதன் வேலிடிட்டி அன்லிமிட்டெட் சலுகைகளின் வேலிடிட்டி இருக்கும் வரை செல்லுபடியாகும். ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஐடியா செல்லுலார் ஆட்-ஆன் சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    முதற்கட்டமாக ரூ.193 மற்றும் ரூ.49 சலுகைகள் பஞ்சாப் வட்டாரத்தில் வழங்கப்படும் நிலையில் மற்ற வட்டாரங்களில் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.193 டேட்டா ஆட்-ஆன் சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டா வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அன்லிமிட்டெட் சலுகையின் வேலிடிட்டி முடியும் வரை செல்லுபடியாகும்.

    குறிப்பிட்ட வாடிக்கையாளர் ரூ.349 விலை சலுகையை பயன்படுத்தும் பட்சத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் நிலையில், கூடுதலாக ரூ.193 விலையில் ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி கூடுதல் டேட்டாவும் சேர்த்து தினமும் 3.5 ஜிபி டேட்டா பெற முடியும். இதே சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.199, ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.509 விலை சலுகைகளுக்கும் பொருந்தும்.


    கோப்பு படம்

    ஏர்டெல் சார்பில் ரூ.49 விலையிலும் புதிய ஆட்-ஆன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வழக்கமான அன்லிமிட்டெட் சலுகையுடன் 1 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.349 சலுகையை பயன்படுத்துவோர் கூடுதலாக ரூ.49 சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா கூடுதலாக பெற முடியும்.

    முன்னதாக ஏர்டெல் வாடிக்கைாயளர்களுக்கு ரூ.49 விலையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இந்த சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும். இதேபோன்று ரூ.92 விலையில் வாடிக்கையாளர்களுக்கு 6 ஜிபி டேட்டா சுமார் ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவை பொருத்த வரை ரூ.11 முதல் ரூ.101 விலையில் குறைந்தபட்சம் 400 எம்பி முதல் அதிகபட்சம் 6 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளும் அன்லிமிட்டெட் சேவைவையை வழங்குவதோடு, எவ்வித வேலிடிட்டி எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை.

    சமீபத்தில் ஐடியா செல்லுலார் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆட்-ஆன் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ரூ.92 மற்றும் ரூ.53 விலையில் அறிவிக்கப்பட்ட சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 6 ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கும், 3 ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏர்டெல் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களின் கூட்டணியில் வெளியாகும் முதல் ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் ஆகும். 

    சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருந்த பாரத் 3 ஸ்மார்ட்போன் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் புதிய பாரத் கோ ஸ்மாப்ட்போனில் 5 எம்பி பிரைமரி மற்றும் முன்பக்க கேமரா மற்றும் இரண்டு கேமராக்களிலும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.



    மைக்ரோமேக்ஸ் பாரத் கோ சிறப்பம்சங்கள்:

    - 4.5 இன்ச் 854x480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737M பிராசஸர்
    - மாலி-T720 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா எல்இடி ஃபிளாஷ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் கருப்பு நிறம் கொண்டுள்ளது. இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் விலை ரூ.4399 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை ரூ.2399 விலையில் வாங்கிட முடியும். புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ஏர்டெல் சார்பில் ரூ.2000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவன போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சுனாமி சலுகை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ரூ.499 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 45 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.509 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    மார்ச் மாத வாக்கில் ஏர்டெல் நிறுவனம் ரூ.499 விலையில் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் மாதம் 40 ஜிபி டேட்டா, அனிலிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களும் 40 ஜிபி டேட்டா வழங்குகின்றன. 

    பிஎஸ்என்எல் ரூ.499 போஸ்ட்பெயிட் சலுகையில் டேட்டா ரோல்ஓவர் வசதி வழங்கப்படவில்லை. டேட்டா ரோல்ஓவர் வசதி பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதம் பயன்படுத்த முடியும். பிஎஸ்என்எல் தற்சமயம் அறிவித்துள்ள ரூ.499 சலுகையில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் வழங்குவதை விட அதிகளவு டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.499 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் வாய்ஸ் காலிங் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய சலுகை எந்தெந்த வட்டாரங்களில் வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    முன்னதாக டேட்டா சுனாமி என்ற பெயரில் பிஎஸ்என்எல் ரூ.98 விலையில் சலுகையை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ரூ.98 விலையில் கிடைக்கும் இந்த சலுகையில் 26 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. டேட்டா சுனாமி என அழைக்கப்படும் புதிய சலுகை 26 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    ரூ.98 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் தினமும் 1.5 ஜிபி வீதம் மொத்தம் 39 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிஎஸ்என்எல் சலுகையில் டேட்டா தவிர வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை. இந்த சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் போன்றே ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.98 விலையில் பிரீபெயிட் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.


    கோப்பு படம்

    பாரதி ஏர்டெல் நிறுவனமும் ரூ.92 விலையில் 6 ஜிபி டேட்டா சுமார் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.99 சலுகையில் 26 நாட்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (லோக்கல்/எஸ்டிடி மற்றும் ரோமிங்) வழங்கப்படுகிறது. எனினும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மும்பை மற்றும் டெல்லியில் வழங்கப்படுவதில்லை.

    முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.118 விலையில் பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
    ×