search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95934"

    ஈரோடு அருகே சமையல் தொழிலாளி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி, மாரப்பா வீதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 36). இவரது மனைவி பவித்ரா.

    பிரகாஷ் லஞ்ச்பாக்ஸ் என்ற பெயரில் ஹோம் டெலிவரி சர்வீஸ் வைத்து போன் செய்பவர்களுக்கு சாப்பாடு, டிபன் போன்றவற்றை வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் வேலை பார்த்து வந்ததார்.

    இந்நிலையில் கடந்த 5 -ந் தேதி மதியம் வாடிக்கையாளர் ஒருவர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு பிரகாஷ் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பி வரவில்லை. திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பிரகாஷ் மனைவி பவித்ரா சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மாயமான அன்று பிரகாஷ் வெள்ளை சட்டையும், கருப்பு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். அவரது இடது கால் பாதத்தில் பாம்பு கடித்த தடிப்பு உள்ளது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிரகாசை தேடி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நகை-பணத்துடன் மாயமானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகரில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஜோதி பாசு. இவரது மகள் சரிதா பாரதி (வயது 19). இவர், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி., இறுதியாண்டு படித்து வந்தார்.

    நேற்று வீட்டில் இருந்த சரிதா பாரதி, திடீரென மாயமானார். இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் சரிதா பாரதி மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜோதிபாசு திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்துடன் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    பொன்னேரியில் மணப்பெண் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கள்ளூர் புதுகுப்பம் சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பவுத்ரா (23). இவர் ஆந்திரா தடா அருகில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் பவுத்ராவின் பெற்றோர்கள் சென்னைக்கு துணி மற்றும் பொருட்கள் வாங்க சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பவுத்ராவை காணவில்லை.

    இது குறித்து திருப்பாலை வனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மணப்பெண் காணாமல் போனதால் இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த ரிஷீக் ரெட்டி மாயமானதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து மாணவனை தேடி வருகிறார்கள். #StudentMissing
    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வருபவர் ரிஷீக் ரெட்டி.

    இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 27-ந்தேதி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரிஷீக் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரிஷீக் ரெட்டியின் தந்தை பிரபாகர் ரெட்டி அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஐ.ஐ.டியில் இருந்து புறப்பட்டு சென்ற ரிஷீக் வீட்டுக்கு செல்லவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரிஷீக்கின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்புதுலக்கி வருகிறார்கள். அவர் கடைசியாக யாரிடம் பேசி உள்ளார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காதல் பிரச்சினை காரணமாக அவர் காணாமல் போனாரா? இல்லை வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #StudentMissing
     
    உத்தமபாளையம் அருகே தோழி வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயமானார்.

    தேனி:

    உத்தமபாளையம் அருகே அணைப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி மகள் சுகந்தி (வயது17). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தனது தோழியை பார்க்க செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார்.

    ஆனால் சுகந்தி அங்கு செல்லவில்லை. இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மூர்த்தி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுகந்தி மாயமானாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையை என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் மகள், மகனுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வெரைட்டி ஹால் தாமஸ் வீதி காந்தி சந்து பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி நாகராணி (வயது 25). இவர்களுக்கு அர்ச்சிஷா (5) என்ற மகளும், அபிலாஷ் (4) என்ற மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று நாகராணி மகன், மகளை ஆர்.ஜி. வீதியில் டியூசனுக்கு அழைத்துச்செல்வதாக கணவரிடம் கூறிச்சென்றார். வெகுநேரமாகியும் 3 பேரும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், தோழி வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனையடுத்து செந்தில்குமார் வெரைட்டிஹால் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன், மகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    களக்காடு அருகே மகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள தெற்கு அப்பர்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மூக்காண்டி (வயது 35). இவர் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயா (29). இவர்களுக்கு மகள் ஸ்ரீபிரித்திகா(7). இந்நிலையில் கடந்த 19-ந் தேதி மூக்காண்டி விஜயாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது விஜயா, பீடி சுற்றும் நிறுவன பெண்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்வதாக கூறியுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து ஊருக்கு வந்த மூக்காண்டி பல்வேறு இடங்களில் தேடியும் விஜயா மற்றும் மகள் ஸ்ரீபிரித்திகா கிடைக்கவில்லை.

    இதை தொடர்ந்து மூக்காண்டி களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயா அவரது மகள் ஸ்ரீபிரித்திகா எங்கு சென்றனர் என தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே 2 மகள்களுடன் மாயமான இளம்பெண்னை போலீசார் தேடி வருகின்றன.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 40). ஆட்டோ டிரைவரான இவருக்கு செல்வராணி, கார்த்திக் தேவி(35), என 2 மனைவிகள் உள்ளனர். 2-வது மனைவிக்கு யாசினி(8), தாமரை செல்வி(7) என 2 மகள்.

    கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு கார்த்திகா தேவி, 2 மகள்களுடன் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    பதட்டம் அடைந்த ராஜ்குமார் மனைவி, 2 மகள்களை பல்வேறு இடங்களில் தேடினார்.

    இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வருகிறார்.

    ஆண்டிப்பட்டி அருகே மாயமான நர்சிங் கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே எம்.சுப்புலாபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் திவ்யா (வயது19). தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற திவ்யா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதானல் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கண்டமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடி வருகின்றனர்.

    கோவையில் குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ராம் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவரது மனைவி பிரியா(22). இவர்களது மகன் சைலேஷ்(3). பிரியா கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 27- ந் தேதி தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு குழந்தையுடன் சென்றார்.

    ஆனால் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் பிரியாவை தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து கார்த்திக் காட்டூர் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன தனது மனைவியையும், மகனையும் கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    பொன்னேரி அருகே தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #missing

    பொன்னேரி:

    பொன்னேரி என்.ஜி.ஓ. நகர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்பாபு (55). தொழிலாளி. இவர் கடந்த 15-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உறவினர் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்ட 3 போலீசார் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். #Kashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் சிறப்பு படை பிரிவு போலீஸ் அதிகாரிகள், 3 பேர் மற்றும் ஒரு காவலர் இன்று திடீரென மாயமாகினர்.

    காவல்துறையை சேர்ந்த 4 பேரையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், அவர்களில் 3 போலீசார் அப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 
    ×