search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95934"

    கும்பகோணம் அருகே டி.வி.பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கவரத் தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரி (வயது 13). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 17-ந்தேதி யோகேஸ்வரி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அன்று இரவு முழுவதும் யோகேஸ்வரி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று காலை பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் யோகேஸ்வரி கிடைக்கவில்லை.

    இது குறித்து கும்பகோணம் தாலுக்கா போலீசில் யோகேஸ்வரி பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையத்தில் திருட்டு வழக்குகளில் சிறை சென்று திரும்பியவர் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 32), மைக்செட் தொழிலாளி. இவர் திருப்பூரில் வேலை பார்த்தபோது அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

    சில நாட்களில் மாரியப்பனின் நடவடிக்கை பிடிக்காததால், மனைவி பிரிந்து சொந்த ஊர் சென்று விட்டார். அதன் பிறகு கேரளா சென்ற மாரியப்பன் அங்கு பரமேஸ்வரி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து அழைத்து வந்தார். இவர்களுக்கு பெரியசாமி (8), மல்லிகா (5) என 2 குழந்தைகள் உள்ளனர்.

    2 குழந்தைகள் ஆன பிறகும் மாரியப்பனின் நடவடிக்கை சரியில்லை என கூறப்படுகிறது. திருட்டு வழக்குகளில் சிக்கி சிறைக்கும் சென்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த பரமேசுவரி மகனுடன் கேரளா சென்றுவிட்டார்.மகளையும் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து விட்டார்.

    2 மனைவிகள் பிரிந்த நிலையில் மாரியப்பனின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அதன் பின்னர் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் தளவாய்புரம் போலீசில் மாரியப்பனின் தாயார் பஞ்சவர்ணம் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேனி அருகே பள்ளி மாணவி மாயம் ஆனது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    தேனி:

    தேனி அருகே கண்டமனூர் எம். சுப்புலாபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் தயாநிதி (வயது16). ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த தயாநிதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கண்டமனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தயாநிதியை தேடி வருகின்றனர்.

    கூடலூர் கருநாக்கன் முத்தன்பட்டி அரசமரத் தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி மனைவி முருகேஸ்வரி (24). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று முருகேஸ்வரி அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து முருகேஸ்வரியை தேடி வருகின்றனர்.
    மதுரையில் 2 குழந்தைகளின் தாய் உள்பட 2 பேர் மாயமானார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை நாராயணபுரம் பேங்க் காலனி கவிமணி 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவரது மனைவி திவ்யா (வயது 33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    விஜய்ஆனந்த் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற திவ்யா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.

    மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் கற்பகவள்ளி. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கோரிப்பாளையம் பள்ளிவாசலில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று கற்பக வள்ளி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ராஜேந்திர சோழன் நிறுவிய பச்சை மரகத அம்மாள் சிலை மாயமான சம்பவம் தொடர்பாக குறித்து போலீஸ் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. #Statuemissing

    சென்னை:

    திருச்சியை சேர்ந்தவர் எம்.ஆனந்த் மோகன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் என்ற ஊரில் ஹகோகரணேஸ்வரர்-பிரஹதம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன், 3 அடி உயரம் கொண்ட பச்சை மரகத கல்லால் ஆன ஸ்ரீ பிரகதம்பாள் சாமி சிலை செய்து, இந்த கோவிலில் வைத்தார்.

    பின்னர், புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ஸ்ரீ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், இந்த சிலையை எடுத்து விட்டு, அதற்கு பதில் கிரானைட் கற்களால் ஆன மாற்றுச் சிலையை செய்து கோவிலில் வைத்து விட்டார்.

    அதேநேரம், அந்த பச்சை மரகத சிலையை திருச்சியில் உள்ள தொண்டைமான் அரசுகளுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில், ஒரு இடத்தில் புதைத்து வைத்தார். இந்த நிலையில், அந்த விலை மதிக்க முடியாத பச்சை மரகத சிலை, பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு விட்டது. அந்த சிலை புதைக்கப்பட்ட நிலம், தற்போது கார்த்திக் தொண்டைமானுக்கு சொந்தமானதாக உள்ளது.


    எனவே, மாயமான சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் கடந்த 2013ம் ஆண்டு 2 முறையும், கடந்த ஜூன் மாதமும் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்து, விலை மதிக்க முடியாத பச்சை மரகத சாமி சிலையை மீட்கும்படி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கோபால கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து, இந்த மனுவுக்கு சிலைக் கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வருகிற 20ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    திருவள்ளூர் அருகே புதுப்பெண்-மாணவி உள்பட 3 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் இவரது மகள் வெங்கடம்மாள்(30) பிகாம் பட்டதாரி. இவருக்கு வருகிற செப்டம்பர் 12-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. திருமண பத்திரிகை விநியோகம் செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வெங்கடம்மாளை காணவில்லை. அக்கம்பக்கம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுகூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுவேல் இவரது மகள் தமிழரசி(17) கடந்த 17-ம் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் யுகா (19) கடந்த 17-ம் தேதி கடைக்கு சென்ற யுகாவை காணவில்லை . இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் கேட்டரிங் மாணவர் மற்றும் ஆட்டோ டிரைவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ். இவரது மகன் பேட்ரிக் (வயது 19). கேட்டரிங் படித்து வருகிறார்.

    படிப்பில் போதிய திறன் இல்லாததால் ஆங்கில திறனை வளர்த்துக் கொள்வதற்காக பேட்ரிக், மதுரை எஸ்.எஸ்காலனி நாவலர் நகரில் உள்ள தனது தாத்தா சாம்சன் வீட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் தங்கி இருந்து படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி தாத்தாவிடம் சொல்லிக்கொள்ளாமல் பேட்ரிக் வீட்டை விட்டு வெளியேறினார்.

    அவரது தாயார் சுக்கேஷினி போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, திண்டுக்கல்லில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். அதன்பிறகு 19-ந் தேதி முதல் பேட்ரிக்கின் செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    அவர் எங்கே சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து பேட்ரிக்கின் தாயார் சுக்கேஷினியும், தாத்தா சாம்சனும் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    மதுரை சோலையழகுபுரம், மகாலட்சுமி கோவில் 3-வது சந்து, அன்னமுத்து காம்பவுண்டைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மகன் மணிகண்டன் (வயது 34). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆக வில்லை.

    கடந்த 24-ந் தேதி இரவு மணிகண்டன் வெளியே சென்று வருவதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தாயார் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் ஜெய் ஹிந்துபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கதிரியக்க இரிடியம் மாயமான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Radioactive #Malaysia
    கோலாலம்பூர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே ஷா ஆலம் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்காக செரம்பன் பகுதியில் இருந்து கதிரியக்க தன்மை வாய்ந்த இரிடியத்தை எடுத்துக்கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கோலாலம்பூர் அருகே சென்றபோது இந்த பொருள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    23 கிலோ எடை கொண்ட இந்த இரிடியம், ரேடியோகிராபி தொழில்துறையில் பயன்படுத்தக்கூடியது ஆகும். கதிரியக்க தன்மை கொண்ட இந்த பொருள் பயங்கரவாதிகள் கையில் கிடைத்தால், தவறான வழிக்கு பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

    எனவே இரிடியம் மாயமான சம்பவம், மலேசிய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வரை அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

    மிகவும் ஆபத்தான இரிடியம் மாயமான தகவலை அறிந்த ஐ.நா. அணுசக்தி நிறுவனம், ‘கதிரியக்க பொருள் மாயமாகி அல்லது திருடப்பட்டு பயங்கரவாதிகளின் கையில் சிக்கிவிட்டால், அணுகுண்டு அல்லது பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை உருவாக்க வழிவகுத்துவிடும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.  #Radioactive #Malaysia  #tamilnews 
    சுற்றுலா வந்த இடத்தில் மாயமான தனது மகனை கண்டுபிடித்து மீட்ட தந்தை, 9 ஆண்டுகளுக்கு பிறகு அவரை இலங்கைக்கு அழைத்து சென்றார்.
    கூடலூர்:

    இலங்கையை சேர்ந்தவர் சத்தியவான்(வயது 74). இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள். அதில் 2-வது மகன் சுதர்சன் (வயது 31). இவர் கடந்த 30-9-2009-ம் அன்று இலங்கையில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை.

    இதையடுத்து இந்தியாவிற்கு சென்ற தனது மகன் காணாமல் போய்விட்டதாக சத்தியவான் தூதரகத்தில் புகார் செய்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சத்தியவான் இந்தியாவுக்கு அடிக்கடி வந்து தனது மகனை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் மகனை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் இலங்கைக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு சத்தியவான் வந்தார். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் அதிகளவு வசிப்பதால், இங்கு தனது மகன் இருக்கலாம் என தேடும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது பந்தலூர் பஸ் நிலையத்தில் மனநலம் பாதித்த நிலையில் தனது மகன் சுதர்சன் இருப்பதை கண்டு சத்தியவான் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் மகனை மீட்டு அவருக்கு புதிய ஆடைகள் வாங்கி கொடுத்த சத்தியவான், மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கேரளாவுக்கு அழைத்து சென்றார். அங்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக் கப்பட்டது. பின்னர் இலங்கைக்கு மகனை அழைத்து செல்ல சத்தியவான் முயன்றார். இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டார். ஆனால் பாஸ்போர்ட் இல்லாததால் சுதர்சனை இலங்கைக்கு அழைத்து செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தேவாலாவில் உள்ள உறவினர் வீட்டில் மகன் சுதர்சனை ஒப்படைத்து விட்டு சத்தியவான் மீண்டும் இலங்கைக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் இலங்கையில் இருந்து சத்தியவான் மீண்டும் தேவாலா வந்தார். பின்னர் ஏ.ஐ.டி.யூ.சி. கட்சி மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டார். இதுகுறித்து மறுவாழ்வுத்துறை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஒலிவர் ஐருளு கவனத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் கொண்டு சென்றது.

    மேலும் மறுவாழ்வுத்துறை இயக்குனரிடம் தனது மகனை இலங்கைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி சத்தியவான் கோரிக்கை மனு அளித்தார். இதைத்தொடர்ந்து சுதர்சன் இலங்கை செல்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அனுமதி இன்றி இந்தியாவில் இவ்வளவு நாட்கள் இருந்ததற்காக சுதர்சனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை அவரது தந்தை சத்தியவான் உடனடியாக செலுத்தினார். பின்னர் தூதரகம் மூலம் சுதர்சனுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த சத்தியவான் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகன் சுதர்சனை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்து சென்றார். சட்ட ரீதியாக பல்வேறு தடைகள் இருந்த நிலையில், பல கட்டங்களாக போராடி தனது மகனை இலங்கைக்கு மீண்டும் தந்தை அழைத்து சென்ற பாச போராட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
    கோபியில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு சென்ற மாணவர்கள் 2 பேர் மீட்கப்பட்டனர்.
    கோபி:

    கோபியில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் திடீரென மாயமானார்கள். இவர்கள் பள்ளி கூடம் போவதாக சொல்லிவிட்டு ஈரோடு வந்தனர்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்களான இவர்கள் ஈரோடு ரெயில் நிலையம் வந்தனர். பிறகு இருவரும் சென்னை செல்லும் ரெயிலில் ஏறினர். நேற்று அதிகாலை சென்னை ரெயில் நிலையத்தில் இறங்கி எங்கே செல்வது? என தவித்தப்படி இருந்தனர்.

    இதற்கிடையே மாணவர்கள் மாயமானது பற்றி கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவர்களை பல இடங்களில் தேடி வந்தனர். மேலும் செல்போன், வாட்ஸ்அப் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

    சென்னை ரெயில் நிலையத்தில் தவித்த 2 மாணவர்களை கண்டு போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் வந்த போட்டோகளை வைத்து பார்த்த போது மாயமான கோபியை சேர்ந்த மாணவர்கள் தான் இவர்கள் என தெரிய வந்தது.

    உடனே சென்னை போலீசார் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கோபி போலீசார் சென்னை சென்று மாணவர்களை மீட்டு வந்தனர். அவர்களிடம் போலீசார், ‘‘ஏன் சொல்லி கொள்ளாமல் சென்னை போனீர்கள்?’’ என்று கேட்டனர். அதற்கு மாணவர்கள் ‘‘பரீட்சையில் நாங்கள் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தோம். இதனால் வீட்டில் திட்டுவார்கள் என பயந்த போய் விட்டோம்’’ என்று கூறினர்.

    பிறகு மாணவர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
    ஆந்திர மாநிலம் கவுதமி ஆற்றில் பயணிகள் படகு நீர்ச்சுழலில் சிக்கி பாலத்தின் தூணில் மோதிய விபத்தில் படகில் இருந்த 30 பேர் ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் 7 பேர் காணவில்லை. #AndhraPradesh #EastGodavri
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவுல்லங்கா என்னும் இடத்தில் இருந்து சலாதிவரி பாலெம் என்னும் இடம் நோக்கி பயணிகள் ஒரு படகு நேற்று மாலை கவுதமி ஆற்றில் சென்று கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.

    இந்த நிலையில் நீர்ச்சுழலில் சிக்கிய அந்த படகு ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 30 பேரும் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதையடுத்து விசாகப்பட்டினம் மற்றும் ராஜமகேந்திரவரம் நகரங்களில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    எனினும் மற்ற 7 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. அவர்களை தேடும்பணி தொடர்ந்து நீடித்து வருவதாக மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.  #AndhraPradesh #EastGodavri
    வடுவூர் அருகே இளம்பெண் மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
     வடுவூர்:

    திருவாரூர் மாவட்டம் வடுவூர் வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகள் சுகல்யா(வயது 21). இவர் கல்லூரி படிப்பு முடித்து வீட்டில் இருந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சுரேஷ்(24). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சுகல்யாவும், சுரேசும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் சுரேஷ் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் வெளிநாடு சென்று விட்டார்.

    சுகல்யாவும், சுரேசும் காதலித்ததை சுகல்யாவின் பெற்றோர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. சுரேஷ் வெளிநாட்டுக்கு சென்றவுடன் சுகல்யாவின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளிநாட்டில் இருக்கும் சுரேசுக்கு தெரிந்தவுடன் அவர் தனது அக்கா கணவர் வடுவூர் வடபாதியை சேர்ந்த சுரேசிடம் இந்த பிரச்சினை குறித்து கூறினார். இந்தநிலையில் வீட்டில் இருந்த சுகல்யா மாயமானார். இதுகுறித்து சுகல்யாவின் தாயார் சுதா நேற்று வடுவூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் தனது மகளை, வடுவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (47) கடத்தி சென்று விட்டதாக கூறிஉள்ளார். அதன் பேரில் வடுவூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகல்யாவை தேடி வருகின்றனர். 
    ×